எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அறிமுகம்
இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பீஜேவுடைய வாழ்கை வரலாறு பற்றிய ஆய்வு தொடர் இது.
இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில்இ நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போதுஇ பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும்இ சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.
உமர் பின் அப்துல் அஸீஸ்இஇமாம் இப்னுத் தைமிய்யாஇமுஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர்இ அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது சேறு பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.
அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோஇதனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல.குறுட்டு தக்லீதைத் தகர்த்துஇ தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் - சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடுஇ தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.
1992ம் ஆண்டு பீஜே அவர்கள் முதல் தடவையாக இலங்கை வந்தார்கள். அப்போதுஇ நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் இரண்டாம் வருடத்தில் மாணவனாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.அவர் எங்களோடு ஸலபிய்யாக் கலாபீட வளாகத்தில் கழித்த நாட்கள் என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் சந்திக்கத் தவறியதில்லை. 2005ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட காத்தான்குடி மாநாட்டில் எனக்கும் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது. அண்மையில் மூன்று தடவைகள் இந்தியா சென்று அவரோடு நீண்ட நேரம் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதேபோல்இஅவரது உரைகள்இஎழுத்துஇசிந்தனைஇபத்வாக்ள் அனைத்தாலும் நான் தாக்கமுற்றிருக்கின்றேன்.அவற்றைத் துணையாகக் கொண்டு இப்பணியைத் தொடங்குகின்றேன்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும்இ அந்தக் கால சூழ்நிலை சவால்களை முறியடித்துஇ சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்துஇ அதன் போதனைகளைத் தெளிவுபடுத்திஇ செயல்திறன் மிக்க கொள்கைவாதிகளை உருவாக்கிஇ மக்களை மூட நம்பிக்கையிலிருந்து விடுவித்துஇ அனாச்சாரங்களிலிருந்தும் அழிவிலிருந்தும் காத்திடஇ அல்லாஹ் சிலருக்குப் பன்முக ஆளுமை அருளாக வழங்குகின்றான்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதற்காக இந்த உம்மத்திற்குஇ ஒரு சீர்த்திருத்தவாதியை அல்லாஹ் அனுப்புகின்றான் என நபி அவர்கள் கூறிய செய்தி ஒன்று அபூதாவூதில் பதிவாகியிருக்கின்றது.
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (4 ஃ 178)
4293 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِىُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى سَعِيدُ بْنُ أَبِى أَيُّوبَ عَنْ شَرَاحِيلَ بْنِ يَزِيدَ الْمَعَافِرِىِّ عَنْ أَبِى عَلْقَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا ». قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ الإِسْكَنْدَرَانِىُّ لَمْ يَجُزْ بِهِ شَرَاحِيلَ.
அதேபோல், தெளிவான மார்க்க ஞானம் என்பதும் அல்லாஹ்வின் மிகப்பெரிய அருள்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 ஃ 27)
وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 ஃ 94)
2436 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ أَخْبَرَنِى مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ حَدَّثَنِى رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِىُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصَبِىِّ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ إِيَّاكُمْ وَأَحَادِيثَ إِلاَّ حَدِيثًا كَانَ فِى عَهْدِ عُمَرَ فَإِنَّ عُمَرَ كَانَ يُخِيفُ النَّاسَ فِى اللَّهِ عَزَّ وَجَلَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِى الدِّينِ ». وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّمَا أَنَا خَازِنٌ فَمَنْ أَعْطَيْتُهُ عَنْ طِيبِ نَفْسٍ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْتُهُ عَنْ مَسْأَلَةٍ وَشَرَهٍ كَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ يَشْبَعُ ».
'அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ, அவருக்கு மார்க்கத்தில் தெளிவை வழங்குகின்றான்' (புகாரி)
அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாளேயே சமூகத்தில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது. இவர்களால் எத்தகைய கேள்விகளுக்கும் மார்க்கத்தின் மூலாதார நிழலில் பட்டென்று பதில் சொல்ல முடிகிறது. இஸ்லாத்தின் பெயரால் தோன்றும் வழிகேட்டுக் கொள்கைகளுக்கு மறுப்பு அளிக்க முடிகிறது. விவாதிக்க அழைப்புவிடுத்து, அவர்களோடு விவாதித்து, அவர்களின் கொள்கை தவறு என்று நிரூபித்து மக்களுக்குத் தெளிவை வழங்க முடிகிறது. ஏனென்றால், இவை அல்லாஹ்வின் மகத்தான அருளகள்;.
மார்க்கத்தில் தெளிவுபெற்ற சீர்திருத்தவாதிகளின் வரிசையில்இ எழுச்சிமிக்க அறிவு வெடித்துச் சிதறிஇ வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பிரவாகமெடுக்கின்ற நடப்பு நூற்றாண்டின் சீர்திருத்தவாதியாக அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காணப்படுகின்றார்கள்.
எழுத்தாற்றல், பேச்சாற்றல், விவாதத்திறமை, ஆய்வு நுணுக்கம், அரசியல் வியூகம், நவீன விஞ்ஞான அறிவு, பத்திரிகா தர்மம், இதழியல் ஞானம், தலைமைத்துவத் தகைமை போன்ற இன்னோரன்ன பன்முக ஆளுமைப் பண்புகள் அவரிடம் ஒருங்கே ஒன்றிணைந்துள்ளன. இது, வெறும் வீரவணக்கமன்று. அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற, அதே வேளை பொறாமையின் காரணமாக சிலாகித்துச் சொல்ல மனம் வராத விடயங்கள்.எனினும், அவரது தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை மணமங்கொள்ளும் பலரால் ஆங்காங்கே சிலாகிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அவரது தஃவாவின் தொடக்கத்திலிருந்து துணை நின்று இன்றுவரை பீஜேவுடைய மகத்தான பணிகளுக்குப் பக்க துணையாக நிற்கும் எஸ்.ஷம்ஷூல் லுஹா அவர் ஏகத்து எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பை மதிப்பீடு செய்துள்ளார்.இன்னொருவர் தனது கலாநிதிப் பட்டத்திற்கு பீஜேவுடைய வரலாற்றை ஆய்வாக சமர்ப்பித்துள்ளார். நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டப் படிப்பிற்கு சமர்ப்பிக்கும் ஆய்வுக்கு இத்தலைப்பை பெரிதும் ஆசைப்பட்டேன்.எனினும், அதற்கான வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.இப்போது அதைவிட விரிவாக எழுதக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய தஃவாவிலும், ஆய்விலும், எழுத்துப் பணியிலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது மகத்தான பங்களிப்பாற்றிவரும், அறிஞர் பி.ஜைனுலாப்தீன் அவர்களின் ஆழமான இஸ்லாமிய அறிவும் விரிந்த, செழுமையான, சீரிய சிந்தனையும், தர்க்கரீதியான, எளிய இனிய உரையும் தமிழ் கூறும் நல்லுலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திவரும் இற்றை நாளில், பல பரிமாணங்களைக் கொண்ட, பல்வேறு துறைசார்ந்த அன்னாரின் பணிகள் பற்றி எழுந்தமானமாக, தரக்குறைவாக காழ்ப்புணர்வைக் கக்குகின்ற சிலருக்கு,உண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவர் பற்றிய உண்மைகளை ஊர்வலமாக்க வேண்டியது உண்மை அறிந்தவர்களின் கடமையுமாகும். அதனால், அவரது பணிகளை மதிப்பீடு செய்யும் பணியை நான் துவக்கிவைக்கின்றேன்.
அவர் மீது இன்று பலராலும் பரப்படும் வதந்திகள், அவதூறுகள் என்பன பத்திரிகைகள்,மீடியாக்கள்இ மிம்பர் மேடைகள், குறுந்தகடுகள் என பல்வேறு ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைகிறது.இருபக்கங்களையும் பார்ப்பதற்குரிய ஆய்வறிவில்லாத மக்கள் நம்பவும் செய்கின்றனர். எதிர்கால சமூகத்திற்கு இந்த நிலை ஏற்படக் கூடாது என்ற ஆதங்கமும் இதை எழுத என்னைத் தூண்டிய காரணங்களில் ஒன்று.
வளரும்
வளரும்
+ comments + 2 comments
வளரட்டும்
உண்மையில் பிஜே சிறந்த மனிதர் தூய ஸ்லாம் தலைக்க வேண்டும் என்பதற்காக பல தடைகள சந்தித்தவர். எனினும் அவரிடம் மனிதன் என்ற வகையில் அவர் சில தவறுகளை விட்டிருக்கிறார். அதற்காக அவர் குறித்து அநாகரீகமாக கருத்து சொல்வதை தவிர்ப்போமாக, அது பாவமாகும். www.facebook.com/shukry.nasliya
Post a Comment
adhirwugal@gmail.com