Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

பலோப்பியன் குழாயில் கரு தங்கும் நிலையில் என்ன நடைபெறும்

கேள்வி- கருத்தரிக்கும் போது சிலவேளைகளில் கருவானது கர்ப்பப்பையினுள் தங்காது பலோப்பியன் குழாயினுள் தங்குகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இக் கருவை தக்க வைத்து ஆரோக்கியமான சிசுவாக வளர்க்க முடியுமா?
0 comments

ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?


அபூ அனூத் ஸலபி
   எமது அன்றாட வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மென்மையான உறவே நட்பு. இந்த நட்பு ஆண்-பெண் இருபாலாரிடத்தில் மலர முடியுமா? என்ற கேள்வி எழுகின்ற போது, இதற்கு பலர் கூடும் என்றும், சிலர் கூடாது என்றும் கூறுவர். இரு பாலாரிடத்தில்
0 comments

ஹிஜாபும் அதன் அவசியமும்




0 comments

மாறிவரும் உலகில் முஸ்லிம் பெண்களின் சமூக உறவு - 3


                      எம்.ஏ.ஹபீழ் ஸலபி
பிராசரப் பணி
நாம் முந்தைய தலைப்பில் பெண் கல்வியை நோக்கினோம். இஸ்லாம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதை இருபாலாரின் சமூகக் கடமை என்பதினூடாக மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்துகிறது. பிரசாரப் பணிக்காக ஒரு பெண் களத்தில் நுழையும்போது, அது பற்றிய அறிவு அவளுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே, அவளுக்கு மார்க்கக் கல்வி அவசியமாகின்றது.
“முஃமினான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள்…” (அல்குர்ஆன்: 9:97)
இஸ்லாம் இன்று இறுக்கமான நெருக்குதலுக்கு உட்பட்டு முழு முஸ்லிம் உம்மத்தும் அபாயத்தில் வாழ்கிறது. இந்நிலையில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து இஸ்லாமிய ‘தஃவத்தில்-அழைப்பில்’ அர்ப்பணத்தோடும் தியாக மனப்பான்மையுடனும் ஈடுபட்டு இஸ்லாமிய ‘ஷரீஅத்’ வாழ்க்கை முறையை மீண்டும் இஸ்லாமிய வீடுகளில் தோற்றுவிப்பது இன்றைய நிலையில் ஆண்கள் - பெண்கள் இருசாரார் மீதுள்ள பெரும் கடமையாகும். இதில் பெண்ணுக்கு ஒரு பெரும் பங்களிப்பு உள்ளது.
எனவே, அவள் வீட்டை விட்டு வெளியேறி இஸ்லாமிய தஃவா-அழைப்பில் ஈடுபடுவது அவளது கடமையாகிறது. இதற்காக கணவன் அவளை அனுமதிப்பது அவனுக்குக் கடமையாகிறது. அப்போது தான் முழுமையான இஸ்லாமிய சமூகத்தின் அடுத்த ஒரு பகுதியாக விளங்கும் பெண்கள்சமூகமொன்றை தோற்றுவிப்பது சாத்தியமாகும்.
இஸ்லாமிய தஃவா என்ற முக்கிய இஸ்லாமிய கடமைக்காக வீட்டை விட்டு பெண் வெளியேறிச் செல்வது அவசியமாகின்றது என்பதை இஸ்லாமிய வராலாற்றினூடாக அறிய முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கையிலும் பெண்கள் அழைப்புப் பணி செய்துள்ள பங்களிப்புகளை இஸ்லாமிய வரலாற்றில் நிறைய காணலாம். அந்த வகையில் அன்னவர்களது அன்பு மனைவியான அன்னை கதீஜா (ரழி) அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஏனையவர்களின் பணியும் நிறையவே உண்டு என்பதும் நன்றியோடு நினைவுகூறத்தக்கது.
அதேபோல், மதீனாவில் கல்வி ஆளுமையுடனும், வீர உணர்வுடனும் பெண்கள் வளர்க்கப்பட்டார்கள். அங்கே பெண்கள் கலந்து கொள்ளாத, பங்களிப்புச் செய்யாத எந்தப் போரும் இருக்காது என்று கூறுமளவு அவர்களது பங்களிப்பு இருந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மின்னிடும் தாரகைகளாக மங்கையர்களின் பங்களிப்பு இன்று வரை தொடர்கின்றது. நமது சமகாலத்தில் எகிப்தின் ஆயிஷா அப்துர் ரஹ்மான் பின்து ஷாதிஈ என்ற பெண்மனி தப்ஸீர் துறையில் பங்களிப்புச் செய்துள்ளார். இதேபோல் ஏனைய பல துறைகளிலும் பல பெண்கள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
எனினும், இஸ்லாமியப் பணி என்ற போர்வையில் புறமும், அர்த்தமற்ற பேச்சுக்கள் நிறைந்த கூட்டங்களுக்காக வீட்டிலிருந்து வெளியேறுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் தேவையற்ற கேளிக்கைகளுக்காக வெளியேறுவது கண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அழைப்புப் பணி ஓர் அமானிதம். ஒரு தூதைச் சுமந்து செல்கின்ற மகத்தான பணி என்பது உணரப்பட வேண்டும். இந்த தூதை சுமக்கின்ற தகுதியும் பண்பட்ட உள்ளமும் பெண்களிடம் காணப்பட வேண்டும்.
பெண், தனது முதற்பணி வீட்டுக் கடமைகள் என்பதை மனத்திருப்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் போது, அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் இன்னொரு கடமையை நிறைவேற்றவே செல்கின்றேன் என்ற மன உணர்வோடு அவள் வெளியேறிச் செல்ல வேண்டும். அவ்வாறு அவள் வெளியேற அனுமதிப்பது உரிமை உடையவர்களின் கடமையும் கூட என்பதை எமது சமூகம் உணர்ந்து கொள்ளுமா? இதை உணரச் செய்ய எமது பங்களிப்பு மிக அவசியமாகும்.

0 comments

மாறிவரும் உலகில் முஸ்லிம் பெண்களின் சமூக உறவு - 2



பெண்களும் கல்வியும்
றிவீனத்தை இஸ்லாம் பெண்ணின் மீது திணிக்கவில்லை. அறிவு தேடுவதைப் பொறுத்தவரை அது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமையாகும். ஆண்கள், பெண்களிடம் சென்று கல்வி கற்ற வரலாற்றுக் காலமொன்று இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆண்கள் அன்னை ஆயிஷா (ரழி) அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் போன்று அறிவிற் சிறந்த பெண்களிடம் சென்று நபிமொழிகளை கேட்டறிந்து கொண்டனர்.
இஸ்லாத்துடன் தொடர்பான பல அம்சங்களை அவர்களிடம் கற்றனர். பெரிய ஸஹாபாக்களும் தாபியீன்களும் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு கச்சிதமாக பதிலளித்ததோடு மூத்த ஸஹாபாக்களில் சிலர் தவறிய இடங்களை சுட்டிக்காட்டித் திருத்தியும் உள்ளார்கள். இவ்வாறான நிலைகளை இன்று காண்பது அரிதிலும் அரிது. ஏகத்து எழுச்சி ஏற்பட்ட பின்னா; பெண்கள் கல்லுhரிகளின் உதயம் இந்நிலையை மாற்றி வருவதை நாம் மறுக்க முடியாது. அதேபோல், அண்மைக் காலங்களில் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்து, பல்கலைக்கழகங்கள் வரை அவர்களின் படிப்பை தொடர்ந்து, வைத்தியத்துறையிலும் கூட பங்களிப்பு செய்கின்றார்கள்.
 எனினும், 'பெண் என்பவள் சமூகக் காரியங்களில் ஈடுபடத் தகுதியற்றவள்,பலவீனமான உள்ளம் படைத்தவள்' என்ற ஆழ்மனப் பதிவு படித்த பல பெண்களிடம் கூட மண்டிக் கிடக்கிறது. அதிகமான பெண்கள் தமது பாடங்கள், தேர்வு, குடும்பம், தொழில் இவற்றுக்கு வெளியில் எதுவுமே தெரியாத நிலையில் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் எத்தகைய சமூச பிரக்ஞையும் அற்றவர்களாகவே உள்ளனர். அதனால், பல பெண்கள் இலகுவில் ஏமாற்றப்படுகிறார்கள்.
இந்திய இலங்கை பெண் சமூகத்தைப் பொருத்தவரை முன்னுக்குப் பின் முரண்பட்ட வாழ்க்கை முறை ஒன்றை அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. உலக வாழ்வு, ஆன்மீக வாழ்வு என்ற அர்த்தமற்ற பிரிவுக்குள் பெண் அவஸ்தைப்படுகிறாள். இதனால், பெண்ணை ஒரு பக்கத்தால் திறந்து விட்டு, இன்னொரு பக்கத்தால் முழுமையாக இறுக்கி மூடியும் பூட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
எமது பெண் சமூகத் தளத்தை கூர்ந்து அவதானிக்கும் போது, பல மேட்டுக் குடிக் குடும்பங்களில் உலகக் கல்வி, உலகின் ஏனைய செயல்கள் அனைத்தையும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அங்கு பெண் பிள்ளைகளுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குமர்ப் பெண்கள் பாடசாலைக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பர்தா அணிந்தோ அணியாமலோ செல்லலாம். அங்கு அந்நிய ஆண்களுடன் எப்படியும் பேசலாம், பழகலாம், சிரிக்கலாம், கும்மாளமடிக்கலாம். ஆண்-பெண் இருசாராரும் கலந்து சுற்றுலா செல்லலாம். அதேபோல் தொழிக்கு எப்படியும் போகலாம்.
ஆனால், துர்பாக்கியம் என்னவென்றால் அவள் 'மஸ்ஜித்' படிக்கட்டை மிதிக்கக் கூடாது என்ற குறுகிய சிந்தனைக்குள் சிறைப்பட்டுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதித்துள்ளது என்பதை இவர்கள் உணரத் தவறியுள்ளனர்;. அதனால், பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள். ஆனால், ஆண்களும் பெண்களும்; சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல இஸ்லாம்  அனுமதிக்கிறது.  நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.
 நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்ப ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா-பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (578)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது, (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமிருக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரி (707)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்கல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில் 'அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்' என்றார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : புகாரி (837)
தொழுகையில் இமாமின் தவறைச் சுட்டிக் காட்டவும் இஸ்லாம் அனுமதித்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். றிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (1203)
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள், அவர்களை அழைத்து '(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என்று கூறியதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிருந்து) புறப்பட்டு வந்து 'பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (862)
உமர் (ரலி) அவர்கன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம் ' (உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்க்குச்) செல்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''(என்னைப் பள்க்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது' என்று பதில் வந்தது.
      அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (900)
காஃப் வல்குர்ஆன் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (மனனமாக) நான் எடுத்துக் கொண்டேன். அதை அவர்கள் ஒவ்வொரு வௌ;ளிக்கிழமையும் மிம்பரில் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி நூல் : முஸ்லிம் (1442)
பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்று இஸ்லாம் அவளுக்குத் தேர்;வு உரிமையை வழங்கியுள்ளது.
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது அவர்களின் உரிமை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொண்டு, வீட்டிலேயே தொழுது கொள்வது சிறந்தது. இதனால், பெண்கள் பள்ளிக்குச் செல்வது தவறு என்று எண்ணிவிடக்கூடாது. பள்ளிக்கு வருவதினால் மார்க்க உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. சஹாபிய பெண்கள் நபியவர்களின் காலத்தில் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள்.மார்க்க அறிவை அதன் மூலம் அதிகப்படுத்திக்கொண்டார்கள்.
 உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (480)
பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்ததாகும். வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறைக்குள் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : அபூதாவுத் (483)
ஆண்கள் பள்ளிக்கு வந்து கூட்டுத்தொழுகையில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். பெண்கள் கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். கலந்துகொண்டால் தவறில்லை.
ஏகத்துவ எழுச்சி விரிவடைந்துள்ள இன்றைய காலததில் பெண்கள் பள்ளிக்கு வருவது அதிகர;துள்ளது. அதேவேளை, மார்க்கப் பகுதியில் தஃவா-அழைப்புப் பணியில் பெண்ணின் பங்களிப்பு மிகக் குறைவு. போதுமான அளவு விரிவடையவில்லை. இன்றும் பெண்களுக்கு மத்தியில் தான் மார்க்கம் பற்றிய அறியாமை, மூட நம்பிக்கைகள் என்பன மலிந்து காணப்படுகின்றன என்பது யாரும் இன்று மறுக்க முடியாத உண்மையாகும்.
 பள்ளி என்ற உன்னதமிக்க, மிக உயர்ந்த சமூக நிறுவனத்தோடு எந்த தொடர்பும் முஸ்லிம் பெண்களில் பெரும்பாலோரிடம் கிடையாது. நோன்பு கால இரவுத் தொழுகை, பெருநாள் தொழுகைகள் என்பன பெண்களுக்கு அதிக இடங்களில் தனியாகவே தொழுவிக்கப்படுகிறது.அதுவும் கனத்த திரைகளுக்குப் பின்னால் அவர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். ஒரு மார்க்க உபதேசம்இ மார்க்க வகுப்பு என்பன திரையின்றி நடந்தால் அதைத் தடுக்கவும் எதிர்க்கவும் பலர் உள்ளனர். இப்படி ஓர் அர்த்தமற்ற முரண்பாடான வாழ்வு முறையாகவே பெண்ணின் நிலை காணப்படுகின்றது. இந்நிலையை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாற்றியுள்ளது. அதனால், சமூகத்தளத்தில் அதன் அதிர்வுகளை அவதானிக்கமுடிகிறது.  மாற்றுக கொள்கைத் தளத்திலும் பெண்கள் பற்றிய பழைமைவாத சிந்தனை ஓரளவு மாறி வருகின்றது என்பதும் மறுப்பதறிகில்லை.
 கல்வி ரீதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒழித்து அவர்களுக்கு கல்விச் சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக எமது பங்களிப்பை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பெண்கள் அறிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். பிற்போக்கான வீழ்ச்சிக் காலத்திலே தான் அவள் சமூகக் களத்தில் இருந்து ஒதுக்கப்பட்டாள். 'மேற்குலகப் பெண் ஆய்வு செய்வதற்காக சந்திரனுக்கே சென்று வந்து விட்டாள். ஆனால், நமது ஆலிம்களில் பலரும் சமூகப் பொறுப்புள்ளவர்களில் பலரும் அவள் பள்ளிவாசலுக்குள் செல்வது 'பித்னா' என்று கூறிக் கொள்கின்றார்கள். இதைவிட அவளை ஓர் இருட்டறைக்குள் பூட்டி வைப்பது சிறந்தது. அதேபோல் இந்துப் பெண் கோயிலுக்குச் செல்கின்றாள். பௌத்தப் பெண் விகாரைக்குச் செல்கின்றாள். கிறிஸ்தவப் பெண் தேவாலயங்களுக்குச் செல்கின்றாள். ஆனால், முஸ்லிம் பெண் பள்ளிவாசலுக்கு செல்வதைப் பழமைவாதிகள் அனுமதிப்பதில்லை.ஆனால், இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை என்பதை முன்னர் ஆதாரங்களுடன் நோக்கினோம்.
எனவே, இஸ்லாமியப் பெண்களின் சமூக உறவில் கல்வி ஆளுமை குறைவாக உள்ளது. அதனைப் போக்க அவள் கல்வி கற்க வேண்டும். தனது இயல்பான வரையறைகளையும் தனது தொழிற்பாடடின் வரையறைகளையும் கவனத்தில் கொண்டு, அவள் கல்வித்துறையில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் இஸ்லாமியப் பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கு நான்கு முக்கியப் பணிகள் காத்திருக்கின்றன.
1- ஓர் உண்மையான இறைவிசுவாசியாக - முஃமினாக இறை உவப்பைப் பெற்ற பெண்ணாக வாழ்வதற்குத் தேவையான இஸ்லாமிய அறிவையும் ஆன்மீகப் பயிற்சியையும் அவள் பெற்றுக் கொள்ள வேண்டும், அதற்காக அவள் முழுமையாக உழைக்க வேண்டும்.
2- தான் கற்றவற்றை செயற்படுத்த வேண்டும்.
3- பெண் சமூகத்திற்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்க வேண்டும்  - தஃவாவை மிகச் சரியாகவும், தெளிவாகவும் முன்வைத்து, ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தகுதியுடையவளாக அவள் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
4- பிரசாரப் பணி புரியும் போது ஏற்படும் இன்னல்களை சகித்துக் கொள்ளும் உள்ளத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நான்கு அம்சங்களையும் சூரா அல் அஸ்ர் மிகத் தெளிவாக முன்வைக்கிறது.
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
வளரும்

0 comments

மாறிவரும் உலகில் முஸ்லிம் பெண்களின் சமூக உறவு

எம்..ஹபீழ் ஸலபி
ன்றைய சமூக வாழவில் பெண்களின் வெளித் தொடர்பு என்பது மிக முக்கயமானதொரு விஷயமாகும். 'ஆண்களின் அடுத்த பகுதியினர் - அடுத்த சம பகுதியினர் பெண்கள்' எனும் போது அந்த அடுத்த பகுதியினர் ஒடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு செயலற்றுக் கிடக்குமானால் சமூக எழுச்சியடைவதும் தாமதமாகும். எனவே, ஆணும் - பெண்ணும் சம அந்தஸ்துடையவர்கள் என்ற கோட்பாட்டின் நிழலில் அவள் சமூக உறவை அமைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இஸ்லாம் வாழ்வின் சகல துறைகளுக்குமென மிதமான தீர்வை வழங்கும் மார்க்கம் என்ற அடிப்படையில், பெண்ணின் சமூக உறவு பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகின்றது.
பெண் என்பவள் எதிர்காலப் பரம்பரையை உருவாக்கும் அதி உன்னத பொறுப்பு வாய்ந்தவள். அவளது உடல். உள இயற்கை அமைப்புக்கள் அனைத்தும் மகத்தான பணிக்கு ஏற்ப அல்லாஹ்வினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவள் வீட்டில் அடைபட்டு ஓர் அடிமையாக முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதல்ல. அவள் வீட்டை விட்டு வெளியேறி சமூகக் களம், ஏன்? போர்க் களங்கள் வரை கூட செல்வதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஆனால்இ அவளது வீட்டுப் பணிக்கு அது பாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இஸ்லாம் போதனை வழங்குகின்றது.
சமூகக் களம் ஆணின் முதன்மையான பகுதி. வீடு, குடும்பம் என்பன அவனது இரண்டாவது பகுதி. பெண்ணின் முதன்மையான பகுதி வீடும் குடும்பமுமாகும். சமூகக் களம் அவளின் இரண்டாவது பகுதி. இவ்வாறு இஸ்லாம் ஆணின் மீதும் பெண்ணின் மீதும் விதித்துள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் ஆழ்ந்து நோக்கும் போது, மிக அற்புதமானதொரு சமநிலையை ஆண்-பெண், குடும்பம்-சமூகம் என்ற இருவகை அலகுகளுக்கும் இடையே பேணியுள்ளமையைக் காண முடியும்.
சமூக சீர்திருத்த முயற்சியிலும் உழைப்பிலும் பெண்ணின் பங்கைப் பொறுத்தவரை மிக அவசியமானது. அந்நியர்கள் இஸ்லாமிய நாட்டின் மீது படையெடுத்து நாட்டுக்குள் நுழைந்து விட்டால் அனைவர் மீதும் (ஆண்-பெண் சிறுவர்-பெரியவர்) 'ஜிஹாத்' கடமையாகின்றது.
எனினும், சமூகத் தீமைகளுக்கு எதிராக பாடுபடுதல், உழைத்தல் என்பது பெண்களுக்கு கடமையல்ல என்ற மனப்பதிவு பரவலாகக் காணப்படுவதோடு மட்டுமல்லாது அவ்வாறு உழைத்தல் பெண்களுக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற எண்ணமும் சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. இது பற்றி சிந்திப்பதும் இதற்கான இஸ்லாமிய தீர்வு தேடுதலும் அவசியமாகும்.
முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையோடு, அவர்களது சீர்திருத்தம், இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் மாற்றுமத பெண்களோடு முஸ்லிம் பெண்களின் நிலை எவ்வாறு வேறுபட்டது, அதிலும் அதிக உரிமைகள் உடையது என்பதையும் ஆணும் பெண்ணும் சமம் எனும் கோட்பாட்டிற்கான இஸ்லாமிய வரையறை பற்றியும் இன்னும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், சமூக ஆதாரவின்றி அவற்றை அவர்களால் நிறைவேற்ற இயலாது என்பதையும் இங்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.

பன்மை சமூகங்களில் பெண்களின் பரிதாப நிலை
இஸ்லாத்தின் நிழலில் பெண்களின் சமூக உறவை ஆய்வுக்கு உட்படுத்த முன்னர் பெண்களை மற்ற சமூகத்தினர் எவ்வாறு நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று புரிந்து கொள்வது இஸ்லாத்தில் பெண்களின் மாண்பை மட்டிட இலகுவாக இருக்கும். அதனால் உலக சமூகங்களில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை முதலில் நோக்குவோம்.
கிரேக்கர்கள்:
கிரேக்கர்கள்  பெண்களை விற்பனைப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். அங்கு பெண்களுக்கு சொத்துரிமைஇ கொடுக்கல் வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமிக்க விஞ்ஞானியான சோக்ரடீஸ் என்பவர், 'பெண்கள் இருப்பது உலகின் மிகப் பெரிய அழிவிற்கு மூல காரணம். நிச்சியமாக பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கிறது என்றும், அதிலுள்ளதை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனேயே மரணித்து விடுகின்றன' என்றார்.
இந்தியர்கள்:
 பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் இவ்வாறு தான் இருந்தது. கணவன் மரணித்து விட்டால் அவனோடு சேர்ந்து அவனது மனைவியும் எரித்து விடுவார்கள். இதற்கு 'உடன்கட்டை' ஏறுதல் எனப்படுகிறது.
சீனர்கள்:
பண்டைய கால சீனர்கள் பெண்களை விற்கவும், உயிரோடு எரிக்கவும் செய்தனர்.
யூதர்கள்:
 யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர்.இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.
கிறிஸ்தவர்கள்:
 கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் Agent எனக் கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர், 'பெண் மனித இனத்தைச் சேராதவள்' எனக் கூறினார். செம்பூனா பென்தாரா என்ற கிறிஸ்தவன் 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதாதீர்கள். நிச்சியமாக நீங்கள் காண்பது ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் சீற்றம் தான்' என்றான்.
ஆங்கிலேயர்:
 19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.
ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம்:
 1567ம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது என்று சட்டமியற்றியது. இவ்வாறே 8வது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமான இருப்பதர் பிஞ்சிலே படிப்பது கூடாது என்று சட்டமியற்றியது.
பிரஞ்சு நாட்டவர்:
பிரஞ்சு நாட்டவர் 1586ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்றே உள்ளது. மேலும்இ மனைவியின் விலையை 6 பென்ஷிஇ அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள்.
இஸ்லாம்:
இஸ்லாத்திற்கு முன்பு வரை பெண்கள் புண்களாக எண்ணப்பட்டு இழிவான ஈனப் பிறவிகளாக இதயமற்ற மாமிச பிண்டங்களாக கருதப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். பெண் பிள்ளை பிறந்தால் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். இவ்வாறு அகிலம் முழுவதும் பெண்ணினத்திற்கு அளிக்கப்பட்டு வந்த கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. இவை அனைத்து அநியாயங்களை விட்டும் பெண்களை பாதுகாக்க இஸ்லாம் வருகை தந்தது. பெண் குழந்தை பிறந்ததை இழிவாகக் கருதி உயிரோடு புதைத்துக் கொண்டுரந்ததைக் கண்டித்து, பெண் குழந்தை பிறப்பதை நற்செய்தி என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனினும், அறியாமைக்கால மக்கள் அதனை அபச் செய்தியாகவே கருதினார்கள்.
'அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகின்றது. அவன் கோபமுடையவனாகின்றான்.' (16:58)
பெண்கள் பற்றிய எண்ணக் கரு சமூகநிலை மிகுந்த கருத்து வேறுபாட்டையும் அதி தீவிர கொள்கையையும் அடக்கிய பிரச்சினையாகி, விவாதப் பொருளாகியுள்ளது. எனினும், இஸ்லாம் சமநிலை பண்பு கொண்ட கொள்கை என்ற வகையில் அது தன் அடிப்படைக் கொள்கைகளிலோ சமூக நடைமுறைக்கான சட்டங்களிலோ எத்தகைய தீவிர நிலையையும் பிரதிபலிப்பதில்லை.
பெண்ணை நிச்சியமாக ஆணாகவே பாவிக்கும் சிந்தனையிலும், பெண்ணை அனுபவிக்கும் பொருளாக மட்டும் பார்க்கும் இது போன்ற பல்வேறு தீவிர நிலைகளையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஆனால், நவீன காலப் பிரிவில் பெண்களை ஆணாகவே பாவிக்கும் இயந்திர சிந்தனை வலுப்பெற்று சமூகங்கள் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
உரிமைகளும், சட்டங்களும் இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில விடயங்களில் அவரவர் இயல்பு நிலையை கருத்திற்கொண்டு சலுகையையும் வழங்கியுள்ளது.
ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும் தோன்றினார்கள் என்ற கருத்தை அல்குர்ஆன் மிக அழுத்தமாகப் மனித மனங்களில் பதிவுசெய்கிறது.
 'மனிதர்களே நிச்சியமாக நாமே உங்களை ஓர் ஆண் பெண்ணில் இருந்து படைத்தோம்.' (49:13)
இஸ்லாத்தில் ஆண்-பெண் சமத்துவம் என்பது உண்மை. பெண்ணை எல்லா விதத்திலும் ஆணை விட தாழ்த்திப் பார்ப்பது அவள் மீது இழைக்கப்படும் அநீதி என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, ஆணையும் பெண்ணையும் ஒரே இனமாக பார்க்க முனைந்து. பெண்ணை ஒரு மோகப் பொருளாக நோக்கி போகப் பொருளாக  பார்ப்பது, அல்லது மனித அந்தஸ்த்தை விட்டு தாழ்த்துவது ஒரு பெருங்குற்றம். அவள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மூலமாக அமைவது இதுவே. அதேவேளை ஆணையும் பெண்ணையும் எந்த வித்தியாசமும் அற்ற ஒரே இனமாக காண முனைவதும் பெண் மீது அநியாயங்கள் இழைக்கப்பட காரணமாக அமைந்து விடுகிறது. நவீன கால மேற்கத்திய பெண்களின் வாழ்வு இதற்கு முதன்மையான உதாரணமாகும்.
 இவ்வாறான நிலைகளுக்கிடையே இஸ்லாம் நடுநிலையான சிந்தனையையே முன் வைக்கிறது. இருவருக்கும் சம அந்தஸ்த்தை கொடுக்கும் இஸ்லாம் சமூக வாழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது அவசியம் எனக் காண்கிறது.
'ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி ஈமான கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கின்றார்களோ இவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் கடுகளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.' (4:124)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுத்தஆலா உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கின்றான். (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் நபிமொழியொன்று பின்வருமாறு பேசுகின்றது. முஃமின்களில் பூரண ஈமான் உடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர் உங்களில் சிறந்தவர் தனது மனைவியிடத்தில் சிறந்தவர்கள்.
'உலகம் மிக இன்பமானது. ஆந்த உலகம் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவியாகும்.'
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'மனிதர்களில் நான் அழகிய பண்புடன் நடந்து கொள்ளக் கூடியவர் யார் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாய் என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார். உனது தாய் எனக் கூறினார்கள். பினபு யார் எனக் கேட்டார். உனது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார் எனக் கேட்டார். உனது தந்தை என்றார்கள்.'
இவை, பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும். எனவே, ஒருவரையொருவர் பூரணப்படுத்தும் இரு சமூக அலகுகளே ஆணும் பெண்ணும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.
'கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு.' என்கிறது. கூலி தண்டனை வழங்குவதில் இஸ்லாம் சமமாகவே பார்க்கிறது. ஆணைப் போலவே ஷரீஆ விஷயங்களில் பெண்ணும் பொறுப்புமிக்கவர். செல்வம் சேகரிப்பதற்கு, கொடுக்கல் வாங்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கருத்து வெளியிடவும் அவளுக்குப் பூரண உரிமை உண்டு.
இந்த வகையில், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் போன்று வேறு எந்த மதமோ நாகரிகமோ வழங்கியதை காண முடியாது. வாரிசுச் சொத்தில்இ தனக்கு ஏற்ற கணவனைத் தெரிவு செய்வதில், ஏன் தனக்குப் பொருத்தமின்றேல் கணவனிடத்தில் விவாகரத்து கோருதல் போன்ற அம்சங்களில் அவர்களுக்குரிய உரிமைகள் இஸ்லாம் வழங்குகின்றது. வளரும்
0 comments
 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger