Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அதிர்வு. Show all posts
Showing posts with label அதிர்வு. Show all posts

கடல் அலை போல பரவி வரும் புற்றுநோய்

புற்றுநோய் "அலை": உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.
உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
0 comments

தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த உஸ்தாத் மன்சூர்



இந்த ஆக்கம் அழைப்பு மலர் -2 மணம் -1 ல் 2007ல் எழுதப்பட்டது. தற்போது முக்கிய சில திருத்தங்களுடன் இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. 
20-03-2005 அன்று அக்குருணையில் மர்ஹபா வரவேற்பு மண்டபத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிஞர் PJ அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய முஸ்லிம்களின் நிலைஎன்ற தொனிப்பொருளில் அழகான, ஆழமான ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
0 comments

இக்வான்களை JASM தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து நீக்கியது யார்?



பதில்-பள்ளிக்கு வரவேண்டாம் என்று தடுப்பதற்கோ ஊர் நீக்கம் செய்வதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த நாட்டு சட்டப்படி யாரையும் ஊர் நீக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு எந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

பள்ளியை விட்டுத் தடுப்பவனை பெரிய அநியாயக்காரன்  என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
0 comments

JASM தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து இக்வான்களை நீக்கியது யார்?

அண்மைக்காலமாக என்மீது இன்னொரு அவதுாறையும் பரப்பிவருகின்றனர். அதவாவது JASM வுடைய தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து இக்வான்களை சில வருடங்களுக்கு முன்னர் JASM நிர்வாகிகள் நீக்கினர்.இந்த நீக்கத்துடன் என்னைத் தொடர்புபடுத்தி சில இக்வான்களும் மெட்கோ குடும்பத்தினரும் பேசிவருவது   பற்றி ஒரு சகோதரர் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கான பதில் விரைவில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்.
0 comments

ஒருவருக்கு நாய் என்று SMS அனுப்பலாமா?

நீங்கள் உங்களுக்கு படித்துத் தந்த ஒருவருக்கு நாய் என்று SMS அனுப்பியதாகவும் Phone ல் dog என்று Save பண்ணி வைத்ததாகவும் கடந்த பல வருடங்களாக  சொல்லிவருகிறார்களே! இதுபற்றி விளக்கவும்.  அர்ஷட்

வ்வாறு  பலவருடங்களாக பரப்பப்பட்டுவருகிறது. நான் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தேன்.இது இன்னும் தொடர்வதால் இதையும் விளக்கிவிடுகின்றேன்.
தரக்குறைவாக விமர்சனம் செய்வதை ஸித்திக் மதனி கும்பலே  ஆரம்பித்து வைத்தது. இவரது மாணவர்ளும் சகாக்களும் அருவருப்படையும் வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு நான் மறுப்புக் கூறும் - எழுதும் போது மட்டும் அலறுவது இவர்களுக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?
காரண காரியங்களுடன் ஒருவரை நாம் அவ்வாறு  சொல்லலாமா என்று இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் நோக்க வேணடும்.
ஒருவன் செய்த உதவியை சொல்லலிக் காட்டினால் அதை திரும்பப் பெற்றால் அவன் வாந்தி எடுத்ததை உண்ணும் நாய்க்கு சமனானவன் என்று ஹதீஸ் உள்ளது. எனக்குச் செய்யாத உதவிகளை எல்லாம் சொல்லிக் காட்டி பெருமை தேடி என்னை அவமானப்படுத்தினார்கள்.செய்ததைச் சொல்லிக் காட்டுபவன் அதை திரும்பப் பெற்றவன் வாந்தி எடுத்ததை உண்ணும் நாய்க்கு சமனானவன் என்று ஹதீஸ் கூறுகிறது என்றால் செய்யாத உதவிகளை எல்லாம் சொல்லிக் காட்டிவந்தால் இது அநீதியா இல்லையா?
 அல்லாஹ் அல்குர்ஆனில் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் என்கின்றான்.
 பணத்திற்காக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வழிகெட்டுப் போனால் அவன் நாயைவிட கேவலமானவன் என்று சொல்வதில் தவறு இல்லை என்பதை அல்குாஆனின் உதாரணங்கள் உணர்த்துகின்றன.
அதனால், தீய பண்புகளுக்கு எதிராகக் கடும் சொல்லைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான். அது சரியானதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
0 comments

பெயருக்குப் பின்னால் ஸலபி என்று ஏன் போடவேண்டும்?



Q: JASM ன் தவறான கொள்கையை விமர்சிக்கும் நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் ஸலபி என்று ஏன் பட்டம் போட வேண்டும்?
A: ஒரு கல்வி நிறுவனத்தில் படித்து முறைப்படி பட்டம் பெற்று அதனுடன் முரண்பாடு ஏற்பட்டால்  அப்பட்டத்தை பெயருக்குப் பின்னால் போடக் கூடாது என்று சில அறிவிலிகள் வாதிட்டு வருகின்றனர்.இது இவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது.
ஒரு கல்வி நிறுவனத்தில் பணம் கட்டிப் படித்தால் அதிலுள்ள அனைத்துக் கொள்கைக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்திலும் இல்லை.உலக சட்டத்திலும் இல்லை.
JASM வேறு ஸலபிய்யா வேறு. JASM ஒரு நிதி நிறுவனம். ஸலபிய்யா ஒரு கல்வி நிறுவனம். நான் கற்ற என்னை உருவாக்கிய ஸலபிய்யா என்ற கல்லி நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதை தவறாக வழி நடாத்தும் JASM ன் தவறான போக்குகளை விமர்சிக்கின்றேன்.
0 comments

அஸ்மீர் சிந்திய சிவப்புச் சொட்டுக்கள்

  அரபுமூலம்-  பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி
                     தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி

    
அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர்நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு….
                உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இந்த யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்க வில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு துருக்கியிலுள்ள இத்திஹாத் வத்தரக்கிஎன்ற அமைப்பின் தூரநோக்கற்ற சிந்தனைப் போக்கே காரணமாக அமைந்தது. இவ்வியக்கம் மாசோனியாவின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்து, ஜேர்மனிய ஆபாச அயோக்கியத்தனத்திற்குக் கட்டுப்பட்டு,  முதலாம் உலக மகாயுத்தத்தில் எவ்வித  நலனையும் கருத்திற் கொள்ளாது படு பயங்கரமான யுத்தத்தில் ஜேர்மன் பக்கம் தன்னை இணைத்துக் கொண்டது.
0 comments

சருகைக் கொண்டு தணலை மூடலாமா?



ஒரு தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தடம்புரண்டு கொண்டுள்ள ஓர் அமைப்பு எந்தளவு நயவஞ்சகத்தனமாக உள்ளது என்பதை அவர்களின் உ.உதயத்திலிருந்தும் நுால்களிலிருந்தும் பெறப்பட்ட ஆதாரங்களுடன் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. வழிகெட்ட இக்கும்பலை அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும் என்பதால்  மருதுாரான் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் அழைப்பு 2013 ஆகஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையை சில திருத்தங்களுடன் நமது இணையதளத்தில் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தனக்கு படியளக்கும் அமைபபின் மார்க்க விரோதப் போக்குகளையும் தடம் புரண்ட தடையங்களைப் பற்றியும் கிழிகிழி என்று கிழித்ததில் கிலியெடுத்துப்போன இஸ்மாயில் சலபியார் தற்போது, தான் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்வதாக கூறிக்கொண்டு உளறிக்கொட்டுவதிலும், காழ்ப்புணர்ச்சியை கக்குவதிலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாகவும் ஈடுபட்டு வருகின்றார். அதில் தன்னிலை மறந்து தட்டுத்தடுமாறி தட்டழிந்து குதிகால்வழியே குராபாத்தை நோக்கி வேகமாக கூடாரமடிப்பதை கண்கூடாக கண்டுவருகிறோம்.
0 comments

விவாதிக்க வரமாட்டார்கள்



இலங்கையில் அரபு நாட்டு ஏஜண்டுகள் பல தமக்குள் பிரிந்து பல கூறாகி மார்க்கத்தை குராபிகளிடம் அடகு வைத்து விட்டு, அவர்கள் ஆரம்பத்தில் எதிர்த்த அத்தனை பித்அத்களையும் வழிகேட்டையும் செய்வதற்கு பள்ளி கட்டி களம் அமைத்துக் கொடுத்து  தடம் புரண்டு கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் தவ்ஹீதைக் காக்க வேண்டும் என்ற அவாவில் இளைஞர் கூட்டம் ஒன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில் நாடலாவிய ரீதியல் கிளை பரப்பி சத்திய மர்க்கத்தை அதன் துாய வடிவில் தயவு தாட்சண்யமின்றி பிரசாரம் செய்ய களம் இறங்கியது.
அந்தத் தொடரில் குருநாகல் தல்கஸ்பிடியவில் துாய ஏகத்துவ ஏழுச்சி ஏற்பட்டு மார்க்க விடயங்களில் இளைஞர்களிடம் ஒரு தெளிவு பெறப்பட ஆரம்பித்துள்ளது. அவர்கள் அல்குர்ஆன் அதற்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மிகத் தெளிவாக கற்கத்துவங்கிதமது வணக்க வழிபாட்டைக் கூட கலப்படமற்ற துாய நபி வழி முறையில் செய்யது வருகின்றனர்.
இந்த சத்தியப் பிரசாரத்தைத் தடுப்பதற்காக அண்மைக் காலமாக அனைத்து வழிகெட்ட கூட்டங்களும் தமக்குள் நிகழ்த்தி வந்த போட்டி, பொறாமை, பனிப்போரை மறந்து நம்மை  எதிர்க்க ஒன்றிணைந்து அதர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதில், அபூபக்கர் ஸித்தீக் மதனி, அப்துல் வதுாத் ஜிப்ரி, போன்றோரும் அற்ப கிரயத்திற்காய் அல்லாஹ்வின் மார்க்கத்தை  விற்கும் சிலரும் சேர்ந்துள்ளனர்.
0 comments

நயவஞ்சகன் பேசும் நாணயம்


அன்புள்ள உவைஸ் மவ்லவிக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும்
அண்மையில் உங்களை உங்களால் கட்டப்பட்ட பண்டாரவலைப் பள்ளியில் துறத்திவிட்ட ஆத்திரத்தில் நீங்கள் அங்கு போனில் சகோ.நப்லியிடம் என்னைப் பற்றி உங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்ததை அவர் பதிவு செய்து எனக்கு அனுப்பி பதில் அளிக்க வேண்டினார். அதனால் இந்த மடலை எழுதுகின்றேன்.
நான் பள்ளிக்காக வாங்க முயற்சி எடுத்த (தற்போது 20 இலட்சம்) 28 பேச்சர்ஸ் காணியை நான் சவுதியில் இருந்த போது எனக்குச் சொல்லாமல் திருட்டுத் தனமாக உங்கள் பெயரில் எழுதி வைத்துக்கொண்டு, அது பற்றி நான் ஊர் வந்தபோது கேட்ட வேளை அது எனது பிள்ளைக்குரிய வாரிசுச் சொத்து என்று ஆணவம் பேசிய ரெகோட் என்னிடம் பத்திரமாக உள்ளது. நான் இதுவரை அதை வெளியிடவில்லை. இதை மறைப்பதற்காக ஊர் ஊராய் நீங்கள் எனது மாமிசத்தை சாப்பிட்டு வருகின்றீர்கள். என்னை அவமானப்படுத்த சீடி வெளியிடவும் உதவியுள்ளீர்கள்.
உங்களை கள்ளன் என்று சொன்ன அஜ்மல் அஸ்வர்புரோக்கர் ஆகியோர் எடிட் செய்து வெளியிடும் கிளிப்களை தக்க சந்தர்ப்பத்தில் வெளியிடுவோம் என்று அதில் மிரட்டவும் செய்கின்றீர்கள். தாராளமாக சீடி போடுங்கள். மூஸா நபி பிர்அவ்னிய சூனியக்காரக் கூட்டத்திற்கு சொன்ன அதே பதிலை நானும் சொல்கின்றேன். நீங்கள் முதலில் போடுங்கள். அதன் பின்னர் நானும் போடுகின்றேன்.
என்னோடு சம்பந்தமில்லாத ஒன்றை மட்டும்தான் நீங்கள் காட்டுவீர்கள். நீங்கள் நாடு பூராகவும் தவ்ஹீதுக்கு துரோகம் செய்து கட்டிய 350க்கும் அதிகமான பள்ளிகளின்  போட்டோக்கள் வீடியோக்கள் என்னிடம் உள்ளன.
0 comments

முஸ்லிம் மாணவிக்கு 17 மாதங்கள் பாலியல் கொடுமை



முஸ்லிம் என்ற காரணத்தினால் மீடியாக்களினால் மூடி மறைக்கப்பட்டஉண்மை

முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்......ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி (பெயர் வெளியிடப்படவில்லை) காவல் துறையிடம் வாக்குமூலம் (19.09.2013)

பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது

ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு
0 comments

புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகள்

குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (அல்குர்ஆன் 104:1-9)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)
0 comments

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்?



ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை 
 தொடர் : 06 
அடுத்ததாக, ஸிஹ்ர் - சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 2766,6857முஸ்லிம் 451
முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும். ஒன்றிலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றைச் செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
0 comments

காமத் தீயில் கருகிய மலர்

ஒரு பெண் மானத்தோடும் கற்பொழுக்கத்தோடும் வாழவே விரும்புவாள். அவ்வாறு ஒழுக்க வாழ்வை விரும்புபவள்தான் உண்மையான பெண். அப்படிப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடூரத்தைப் பாருங்கள்.
 இப்படி ஒரு கேடுகெட்ட நிகழ்ச்சியை  நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். மானங்கொட்ட அண்ணும் மரியாதை கெட்ட தம்பியும் ஒரு பெண்ணுக்கு இழைத்த  காமக் கொடூரத்தைப் படித்துப் பாருங்கள்.
0 comments

அழியாத சுவடுகள்



அண்மைக்காலமாக என்னைப் பற்றி பல்வேறு அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை முன்வைத்து சிலர் பிரசாரம் செய்து வருகின்றனா். அவை ஒவ்வொன்றுக்கும் இப்பகுதியில் மறுப்பு வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் ஸலபிய்யாவில் இலவசமாகப் படித்துவிட்டு அதற்குத் துரோகம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே! அது உண்மையா?
இது ஓர் அப்பட்டமான பொய். இக்குற்றச்சாட்டு தற்போது பரவலாக பேசப்படுகிறது. தல்கஸ்பிடிய JASM கிளையின் தலைவர்  நிஸார் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யும் போது, மாவத்தகம பொலீஸிலும்  இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். (காசுவாங்காம அபுபக்கர் ஸித்திக் படித்துக் கொடுத்தாராம்.இவர் இயக்கம் மாறிவிட்டாராம் என்று அபுபக்கர் ஸித்திக் மதனி எங்கள் நிர்வாகத்திடம் சொன்னார் என்று அங்கு கூறினார்.)
3 comments

எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்




               நபிகளார் இஸ்லாத்தை எடுத்துரைத்த காலம் முதல் இன்று வரை இஸ்லாத்திற்கு எதிரான சதி நடந்து கொண்டுதான் வருகிறது. அதே நேரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. இஸ்லாத்தை சொன்னவர் மற்றும் அதை ஏற்றவர்களை
  • கொலை செய்தல்
  • கொலை செய்ய முயற்சித்தல்
  • மிரட்டுதல்
  • ஊர் நீக்கம் செய்தல்
  • அவதூறு பரப்புதல்
என்று எண்ணற்ற சதிகளை செய்து இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களின் நோக்கங்கள் இதுவரை நிறைவேறவில்லை. இனியும் நிறைவேறாது. இஸ்லாத்தின் பக்கம் மக்கள் சாரை சாரையாக இணைவதை பொறுத்துக் கொள்ள முடியாத மேலைநாடுகள், இஸ்லாத்தைப்பற்றியும் நபிகளாரைப்பற்றியும் அவர்களின் மனைவியரைப்பற்றியும் அவதூறான அசிங்கமான கருத்துக்களை பரப்பி இஸ்லாமியர்களின் உள்ளங்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளனர்.
                                         இவர்களின் இது போன்ற நடவடிக்கையால் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள், இவர்களின் சதிகளுக்கு எதிராக உலகளாவிய அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி நபிகளாரின் மீது தாங்கள் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்திக்காட்டியுள்ளனர்.
                                    இது போன்ற இணையதள பிரச்சாரத்தினால் இஸ்லாம் இல்லாமல் போய்விடும் என்று பகல் கனவு காண்போர் நிச்சயம் தோல்வியைத்தான் காணப்போகிறார்கள். மேலும் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமான நிலையே தோன்றப் போகிறது. நபிகளாரை இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றவர்களையும் நபிகளாரைப் பற்றி தெரிந்து கொள்ளத் தூண்டியுள்ளது. இதனால் நபிகளாரின் உண்மை நிலையை அறிந்து கொண்டு இஸ்லாத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
                                        அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)

தீன்குலப்பெண்மனி அக்டோபர் 2012




0 comments
 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger