எம்மைக் கடந்து சென்ற நூற்றாண்டின் முதற் காற்கூறின் இறுதியிலிருந்து முஸ்லிம் உலகில் ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை மேற்கு நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வந்துள்ளன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளிலும், மிக வேகமாகப் பரவி வருகின்ற இஸ்லாமிய எழுச்சி, மேற்குலகைப் பொறுத்தவரையில் தற்கொலைப் போராளி ஊடுருவியிருப்பதைப் போன்று, எப்போது? எங்கே? வெடிக்கும் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Latest Post
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
அதிர்வு,
நிகழ்வுகள்
கடல் அலை போல பரவி வரும் புற்றுநோய்
புற்றுநோய் "அலை": உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கடல் அலை போல
புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால்
இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24
மில்லியனாக உயரும்
என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.
உலகைப் பாதிக்கும்
புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன்
தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார
நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளது.
Labels:
அதிர்வு,
நிகழ்வுகள்
நிகழ்வுகள்,
மத ஒப்பீட்டாய்வு
மீலாதும் மவ்லிதும்
இஸ்லாம்
என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். நூல்: அஹ்மத் (16519)
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். நூல்: அஹ்மத் (16519)
Labels:
நிகழ்வுகள்,
மத ஒப்பீட்டாய்வு
ஆய்வுகள்,
கொள்கை,
நிகழ்வுகள்
அநியாயக்காரன் பிர்ஆவ்ன் அழிக்கப்ட்ட மாதம்
முஹர்ரம் மாதத்தின் பத்தாம்
நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா
வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும்
நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை
(கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும்
விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான்
அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று
தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை
இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி) நூல்: புகாரி 3397
இந்தச் சம்பவம் நமக்கு
முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?
Labels:
ஆய்வுகள்,
கொள்கை,
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!
மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது.
பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை
பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப்
பற்றியும்
கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத
இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக
அனுபவிக்கின்றான்.
அதற்குப் பின்னர்,
அது வரை
ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம்,
வீம்பு, வீராப்பு, திமிர்,
துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.
தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.
Labels:
நிகழ்வுகள்
குர்ஆன் விரிவுரை,
நிகழ்வுகள்
பொறாமையால் ஏற்படும் தீங்குகள்
ஃபலக்
அத்தியாயத்தின்
விரிவுரை தொடர் : 07
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும்
பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இறுதி வசனத்தின் விளக்கத்தைக்
காண்போம்.
ஒரு
மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில்
பொறாமை இருக்கும்.
அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு
மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை. நீங்கள் யார்? என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்று உங்களுக்குத்
தெரியவில்லையென்றால் நீங்கள் எனக்கு எந்தக் கேடும் செய்ய மாட்டீர்கள்.
நானும் உங்களுக்கு எந்தக் கேடும் செய்யமாட்டேன். நீங்கள் உங்களது வேலையை
மட்டுமே செய்துகொண்டிருப்பீர்கள். நான் எனது வேலையை மட்டுமே செய்து
கொண்டிருப்பேன்.
ஒருவருக்கொருவர்
பழகிக் கொள்கின்ற இருவர் டீக்கடையில் வேலை பார்க்கிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். அவ்விருவரில் ஒருவர் கோடீஸ்வரனாக ஆகிவிட்டால், நம்மோடு
வேலைக்குச் சேர்ந்தவன் கோடிஸ்வரனாகி விட்டானே என்று தன்னைத் தானே அங்கலாய்த்துக்
கொண்டு அவன் மீது பொறாமை கொள்கிறான்.
இவனைத் தவிர இன்னும் பல பேர்
அடித்தட்டில் இருந்து முன்னேறி கோடிஸ்வர்ர்களாக ஆகியிருப்பார்கள். அவர்களைப்
பார்த்து பொறாமை கொள்ள மாட்டோம். நம்மோடு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்தவன். நாம் 100 மதிப்பெண் வாங்கும்போது இவன்
60 மதிப்பெண்தான்
வாங்கினான். ஆனால் இன்று கலெக்டராக (மாவட்ட ஆட்சியர்) ஆகிவிட்டானே என்று மனம்தாங்கிக் கொள்ளாமல்
பொறுக்காமல்
அவன் மீது பொறாமை
கொண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளக்கூடியவனையெல்லாம் நாம் உலகத்தில்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி இதுபோன்று பிறர் மீது பொறாமை கொள்பவன் பொறாமை கொண்டு, மற்றவன் மீது தவறான வதந்திகளைப்
பரப்புவது, அவனுக்கு ஏதேனும்
கேடுசெய்வது, அல்லது வேறெதாவது ஒன்றின்
மூலம் பொறாமையினால் இடைஞ்சல்கள் கொடுத்துக் கொண்டே இருப்பது என
பொறாமையால் பல விதமான கேடுகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒருமனிதனின்
வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவன் மீது பொறாமை கொள்பவனின் கெடுதலும்
இருக்கும். பெரியளவுக்கு உங்களது வளர்ச்சி இருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவன்
அதற்குத் தகுந்தமாதிரி பெரியளவுக்கு இடைஞ்சல்களையும் கேடுகளையும்
செய்வான். உங்களது வளர்ச்சி சிறியளவுக்கு இருக்குமானால் பொறாமைக்காரனின்
தீங்கும் அந்த வளர்ச்சிக்குத் தகுந்த மாதிரி இருக்கும். நீங்கள்
பத்தாயிரம் ரூபாய்க்கு முதலாளியாக இருந்தால் உங்களைத் திட்டும் அளவுக்கு அல்லது
ஏதேனும் அவதூறு சொல்லும் அளவுக்கு உங்களது பொறாமைக்காரன் கெடுதல் செய்வான். ஆனாலும் அடிக்கிற
அளவுக்கு போகமாட்டான். நீங்கள் மென்மேலும் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி
பயணித்துக் கொண்டிருந்தால் உங்கள் மீது பொறாமை கொள்பவனின்
பொறாமையின் கேடும் வளர்ந்து கொண்டே போகும்.
Labels:
குர்ஆன் விரிவுரை,
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
திருட்டு வீடியோ சீடி மூலம் விஷம் கக்கும் வதந்தி
ஏகத்துவக்
கொள்கையை பிரசாரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் அவர்களின்
குடும்பத்திலிருந்தே எதிரிகள் கிளம்புவார்கள். அந்தவகையில் இப்ராஹிம்
நபிக்கு தந்தை ஆஸர்.நுhஹ் நபிக்கு மகன், மனைவி. லுhத் நபிக்கு மனைவி. அன்னை
ஆசியாவுக்கு கணவன் (பிர்ஆவ்ன்) நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அபு+ஜஹ்ல்
அபு+லஹப் அவனது மனைவி போன்று இன்று நமக்கும் குடும்பத்தில் இத்தகையவர்களின்
மறுவடிவங்களாக சில எதிர்ப்புகள் அவதூறுகளாக பரப்பப்பட்டு உலாவர
ஆரம்பித்துள்ளது.
இனவாதிகள் போன்று முன்னோர்களின் மூடத்தனத்தில்
மூழ்கிக்கிடப்போரால் தனித்துவமான தூய ஏகத்தவ நிலைநாட்டலை அவர்களால்
ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இன்று அவர்கள் கையில் எடுத்திருக்கும்
ஆயுதம் அவதூறுகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதாகும்.
நேரில் வாய் மொழியாகவும், மறைமுகமாக
எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாகவும், கள்ள வெப்சைட் - திருட்டு வீடியோ சீடி மூலமாகவும் அவதூறுகளை,
வதந்திகளைப் பரப்புவதைப் பகுதி நேரப் பணியாக அல்ல, முழு நேரத் தொழிலாகச்
செய்து வருகின்றார்கள். இவ்வாறு களமிறங்கிய இவர்களுக்கு மார்க்கமோ,
மறுமையோ கிடையாது. அதனால் அவர்கள் இதையும் செய்வார்கள், இதற்கு மேலும்
செய்வார்கள். இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம்
கவலைப்படுவதெல்லாம் அப்பாவிகள் பற்றித்தான். சிந்திக்கத்தெரியாத சிலர்
அவர்கள் விரிக்கும் ” வதந் தீ வலைத் தளத்தில்’ வீழ்ந்து, அதை உடனே நம்பி
விடுகின்றனர்.
உதாரணத்திற்கு, அப்துல் ஹபீழ் ஊரைப்
பிரிப்பதாக எப்பவோ சொன்னார் என்று ஒருவர் காழ்ப்புணர்வு அவதூறு
பரப்புகிறார். இதை சிலர் ஊர் முழுக்கப்; பரப்புகின்றனர். அவர்கள் பரப்பிய
செய்திக்குத் தக்கவாறு, சிலா; தாளம் போடவும் ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு
சொன்னவன் பொய்யன் என்பதை அறிந்து கொள்ள கொஞ்சம் மூளையை செலவிட்டிருந்தால்
உண்மை விளங்கியிருக்கும். மூளையை செலவிட கஞ்சத்தனப்பட்டோர் வந்தி வலையில்
சிக்கிக் கொண்டனர்.
Labels:
நிகழ்வுகள்
அதிர்வு,
நிகழ்வுகள்
முஸ்லிம் மாணவிக்கு 17 மாதங்கள் பாலியல் கொடுமை
முஸ்லிம் என்ற காரணத்தினால்
மீடியாக்களினால் மூடி மறைக்கப்பட்டஉண்மை
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்......ஹைதராபா த் பாலிடெக்னிக்
கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி (பெயர் வெளியிடப்படவில்லை) காவல்
துறையிடம் வாக்குமூலம் (19.09.2013)
பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…
ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்......ஹைதராபா
பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…
ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…
Labels:
அதிர்வு,
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
இறையில்ல நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்
தொடர்-1
உலகத்தில் அல்லாஹ்வுக்கு உவப்பான இடம் பள்ளிவாசலாகும்.அதனை நிர்வகிப்பவர்களும் அவனுக்கு உவப்பானவர்களாக இருக்கவேண்டும்.இறை உவப்பைப் பெறவேண்டுமானால் அவன் எதைத் தடுத்துள்ளான் எதை ஏவியுள்ளான் என்ற அறிவு வேண்டும். ஆனால், இன்று எத்தகைய அறிவும் அற்றவர்களிடம் பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டு அல்லாஹ்வின் அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.
Labels:
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
உழைத்து வாழவேண்டும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
'உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துச் சென்று> ஒரு கட்டு விறகை தனது முதுகில் சுமந்து வந்து> விற்பது மக்களிடம் யாசகம் கேட்பதை விட மேலான காரியமாகும்'
மனிதன் சிறப்புறவும் நல்வாழ்க்கை வாழவும் உழைப்பு அவசியமாகிறது. எனவே> மனிதன் உழைத்து வாழ வேண்டும்; அவன் தன்னுடைய ஜீவனோபாயங்களைப் பிறரிடம் கைய்யேந்திப்
பெறாது>
சுயமாக உழைத்து உண்ண வேண்டும்
என்று இஸ்லாம் வலியுறுத்துவதோடு> உழைக்கும் வர்க்கத்தை மிக உயர்வான இடத்தில் வைத்து மதிக்கிறது
என்பதையும் இந்த ஹதீஸ் மிக அழகாகத் தெளிவுபடுத்துகிறது.
Labels:
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
இஸ்லாமிய எழுச்சியுடன் இணைத்துப் பேசப்படும் அடிப்படை வாதம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அறிமுகம்
உலகளாவிய ஓர் இஸ்லாமிய எழுச்சிக கடல் அலையென ஆர்ப்பரித்து எழுந்து வருகிறது. இந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை கொச்சைபடுத்துவதற்காக “இஸ்லாமிய அடிப்படை வாதம்” (Islamic fundamentalism ) என்ற சொற்பிரயோகத்தை இஸ்லாத்தின் எதிரிகள் பரவலாக்கியுள்ளனர்.
“இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்ற சொற்பிரயோகத்தை எதற்காகப் பயன்படுத்துகின்றார்கள்? என்பதை அறியாத, புரிந்துகொள்ளாத முஸ்லிம்களில் கணிசமான ஒரு பகுதியினார் “இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்று ஒன்று உண்டு, இஸ்லாமிய அடிப்படை வாதம் ஆதிக்க வெறியை அடிப்படையாகக் கொண்டது என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்
ஆர்த்தெழுந்து வரும் இஸ்லாமிய விழிப்புணர்வையும், எழுச்சியையும் கண்டு கிலிகொண்ட யூத கிறிஸ்தவர்களும் இன்னும் சிலரும் இந்த மறுமலர்ச்சியை கொச்சைப்படுத்த முனைந்தனர். அதன் வெளிப்பாடே இந்த வர்த்தைப் பிரயோகமாகும்.
அடிப்படையற்ற அடிப்படைவாதம்
இஸ்லாமிய எழுச்சியை தவறாகச் சித்தரித்து வன்செயலோடும், ஆக்கிரமிப்போடும், பயங்கரவாதத்தோடும் அதனைத் தொடர்புபடுத்தி, உலக அபிப்பிராயத்தை அதற்கெதிராகத் தூண்டிவிட்டு, உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு மேற்கத்திய உலகம் கட்டவிழ்த்துவிட்ட பிரசாரப் போரின் (Propaganda War) ஓர் ஆயுதமே இந்த (Islamic fundamentalism) “இஸ்லாமிய அடிப்படை வாதம்” என்ற பதப்பிரயோகமாகும்.
மேற்கத்திய பிரசார சாதனங்கள் அனைத்தும் அண்மைக் காலத்தில் உருவாக்கிய இச்சொற்றொடரின் வரலாற்றையும் அது குறித்து நிற்கும் விளக்கத்தையும் எதற்காக இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது என்பதையும் நோக்குவோம்.
சொற்பிரயோகத்தின் வரலாற்றுப் பின்னணி
1920ம் ஆண்டுகளில் அமரிக்காவில் தோன்றிய பழமை வாய்ந்த, ஆனால் புரட்சிவாத புரட்டஸ்தாந்திய இயக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதே “அடிப்படை வாதம்” என்ற பதப் பிரயோகமாகும்.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பிரிவில் அமரிக்காவின் ‘புரட்டஸ்தாந்து’ பிரிவை சார்ந்த கிறிஸ்தவ கோயில்கள் அடிப்படைவாதிகள், ((Fundamentalist camp) நவீனத்துவவாதிகள் ((Modernists)) என இரு பிரிவுகளாகப் பிளவுபட்டன.
நவீனத்துவவாதிகள் பைபிளின் (Bible) வசனங்களுக்கு கால வளர்ச்சிக்கு ஏற்ப நவீன விளக்கங்களையளிக்க முற்பட, அடிப்படை வாதிகள் பைபிளின் வசனங்கள், கருத்துக்களை அப்படியே உள்ளவாறு முழுக்க முழுக்க மேலெழுந்த வாரியாக விளங்கி, விசுவாசித்து, ஏற்றுக் கொள்ள வேண்டுமென நவீனத்துவ வாதிகளுக்கு எதிரான கருத்ததை முன்வைத்தனர்.இன்று அல்குர்ஆனுக்கு முரண்பட்டு நபியை மனநோயாளி என்று கொச்சைப்படுத்தம் கட்டுக்கதைகளை மறுத்தால் சில இஸ்லாமிய திருச்சபைகள் கொதித்தெழுகின்றன.இந்த அடிப்படைவாதிகள் இன்றும் உள்ளனர்.
உதாரணமாக பழைய ஆகமத்தின் (Old testament) ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய (Pentateuch) எனும் பகுதி மூஸா (அலை) (மோஸஸ்) அவர்களினாலே எழுதப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்
எனவே கிறிஸ்தவ அடிப்படை வாதிகள் பைபிளின் சொற்கள் வசனங்களுக்கு நவீன ரீதியான விளக்கம் அளிக்க முயல்வோருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.
1919ம் ஆண்டு அமொரிக்காவில் உலக கிறிஸ்தவ அடிப்படைவாத சங்கம் (World`s Christian Fundamental Association ) பலம் பெற்றது.
மிகக் குறுகிய காலங்களில் “அடிப்படை வாதி” என்ற பதம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகளுக்காகப் போராடுவதைக் குறித்தது.
உலக கிறிஸ்தவ அடிப்படைவாத சங்கம் 1920ம் ஆண்டுகளில் டார்வினின் பரிணாமவாத சித்தாந்தம் பாடசாலைகளில் போதிக்கப்படுவதற்கு மிக வன்மையான எதிh;ப்பைத் தரிவித்தது.
1920ம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இயக்கத்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. எனவே, அடிப்படை வாதம் என்பது அமொரிக்க கிறிஸ்தவக் கோயிலின் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பிரிவில் தோன்றிய ஓர் இயக்கம் என்பது தெளிவாகிறது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அகராதி அர்த்தம்:
ஒக்ஸ்போட் அகராதி ( Shorter Oxford Dictionary ) Fundamentalism எனும் பதத்திற்கு கிறிஸ்தவ அடிப்படை வாதப் போராட்ட பின்னணியையே அர்த்தப்படுத்தியுள்ளது.
“Strict adherence to orthodox tenets held to be Fundamental to the Christian Faith” “கிறிஸ்தவ வாசகத்தின் அடிப்படையான, பழமையான பாரம்பரிய கொள்கைகளை முற்றிலும் ஏற்றுக் கொண்டு பின்பற்றல்” என்றே ஒக்ஸ்போர்ட் அகராதி (Fundamentalism) என்ற பதத்திற்கு வரைவிலக்கணம் கூறுகிறது.
ஐரோப்பாவிலே உருவான அகராதியின் அர்த்தத்தை நோக்கும் போது Fundamentalism என்பது ‘Liberalism , Modernism’ ஆகியவற்றுக்கு எதிரானது என இந்த அகராதியே சாட்சி சொல்கிறது.
எனவே, அடிப்படை வாதம் என்பது பைபிளின் ஒவ்வொரு சொல்லும் முற்றிலும் சரியானது, பிழையற்றது(?) எனவே அதனை எத்தகைய விளக்கமும் அளிக்க முயலாது அப்படியே உள்ளதை உள்ளபடியே வியாக்கியானப்படுத்தாது ஏற்றுக்கொண்டு பின்பற்றுதல் வேண்டும் என்ற கோட்பாட்டைக் குறிக்கின்றது என்பது தெளிவாகிறது.
இஸ்லாமிய அடிப்படை வாதம்.
ஈரானில் மன்னர் ஷாவின் கொடுங்கோன்மையை எதிர்த்து, பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு ஈரான் நாட்டு மக்களை எழுச்சி கொள்ளச் செய்து ஒரு புரட்சியை ‘கொமைனி’என்ற ஷீஆ மேற்கொண்டார்.
இப்புரட்சி ஈரானின் இஸ்லாமியப்(?) புரட்சி என்று அழைக்கப்படுகிறது. (இப்புரட்சிக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை.இது இஸ்லாத்திற்கு எதிரானது.)
ஈரானியப் புரட்சி
1979ம் ஆண்டு பொங்கிப் பிரவாகித்து வெடித்த ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் மேற்கத்தியவாதிகளால் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் மூலமாக பிரபல்யப்படுத்தப்பட்டதே ‘Islamic Fundamentalism’ “அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற சொற்பிரயோகமாகும்.
ஈரானியப் புரட்சியைத் தொடந்து உலக இஸ்லாமிய நாடுகளில் அதிகமான இடங்களில் ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சித் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
மேற்கத்திய ஆதிக்கத்திற்குட்பட்டு அடிமைப்பட்டிருந்த இஸ்லாமிய நாடுகள் சுதந்திர விடுதலை காண்கின்ற இலட்சியப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.
முஸ்லிம் உலகில் ஏற்பட்டு வரும் இந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை மேற்கத்திய நாடுகள் மிகக் கூர்ந்து அவதானித்து வருகின்றன.
இஸ்லாமிய நாடுகளில் பரவிவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி மேற்குலகினால் இருமுனையும் கூராகிய வாளைப் போன்று கிலிகொள்ளச் செய்தது. அது இருமுனையாலும் ஆபத்தைக் காண்பித்தது.
ஒரு முனையில் மத்திய கிழக்கையும், இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளையும் தங்களது அதிகாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் உட்படுத்தும் நவீன ஏகாதிபத்தியத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக அது அமைந்தது.
இன்னொரு வகையில் அது மேற்கத்திய கிறிஸ்தவ மயமாக்கலுக்கு ஒரு பாரிய சவால்களிலிருந்து தனது அரசியல் பொருளாதார நலன்களைத் தக்கவைத்துப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு யுக்திகள், எதிர்நடவடிக்கைகள், அணுகுமுறைகள், திட்டங்கள், நாசகார அழிவு வேலைகள், உளவுப் பணிகள் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் துல்லிய வெளிப்பாடே இன்று செச்னியா, கஷ்மீர் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், பலஸ்தீன், சிரியா, லெபனான், ஜோர்தான், ஈராக்,எகிப்து,லிபியா போன்ற இன்னோரன்ன முஸ்லிம் நாடுகளுக்கு எகதிரான போராட்டங்கள்.
கிறிஸ்தவ மத வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளின் பயனாகத் தோன்றிய ஒரு சொற்றொடரே அடிப்படைவாதம். இன்று இஸ்லாமிய உலகில் காணப்படும் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்குமிடையில் எந்த ஒருமைப்பாட்டையும் நாம் காணவே முடியாது.
இஸ்லாமிய எழுச்சியைப் பயங்கரவாதத்தோடும் வன்செயலோடும் தொடார்புபடுத்தி, அதன் யதார்த்த தன்மையையும், இஸ்லாமிய வரலாற்றுண்மைகளையும் மறைக்கவும், சிதைக்கவும் மேற்கத்திய ஆய்வாளர்களின் துணையுடன் உருவாக்கப்பட்டு, மேற்கத்திய பிசாரங்களின் மூலமாக பிரபல்யப்படுத்தப்பட்ட ஒரு சொற்பிரயோகமே அடிப்படைவாதம்.
இச்சொற்பிரயோகம் எமது நாட்டில் வெளிவருகின்ற சில நாளிதழ்களிலும், வானொலிகளிலும் எதிரொலிப்பதைக் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. செய்திகளை வாசிக்கின்ற முஸ்லிம்களில் சிலரும் “இஸ்லாமிய அடிப்படைவாதிகள்” என்று நாக்கூசாமல் உரத்துச் சொல்கின்றனர். இது உண்மையில் வேதனைக்குரிய விடயமாகும்.
இப்பதம் வரலாற்றில் யாருக்காகப் பிரயோகிக்கப்பட்டதோ அவர்களே எமக்குத் திருப்பிவருகின்றனர். இதற்கு முஸ்லிம்களாகிய நாமும் துணைபோவதா?
உண்மையில் இது இஸலாத்தை உலகமயமாக்குவதற்கான இலட்சியக் கனவுகளுடன் உயிரை அர்ப்பணிக்கின்ற தியாகிகளையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக இஸலாமிய எதிரிகள் முடுக்கிவிட்ட ஒரு சதி என்பதை உணார்ந்து, அடிப்படைவாதத்தை இஸ்லாத்துடன் இணைத்துக் கூறுபவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.
இஸ்லாத்தின் சமாதானச் செய்தியை அதன் உயிரோட்டமுள்ள நித்திய விழுமிய கருத்துக்களை உலகமயமாக்க நாம் ஆவண செய்யவேண்டும்.
எமது உயார்ந்த பண்புகளினாலும், நற்செயல்களினாலும், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. உலகிற்கே சமாதானச் செய்தி எம்மிடம்தான் உள்ளது, அதனை அமுல் நடத்தினால் உலகம் உடனே அமைதிகாணும் என்பதை அறிவார்ந்த முறையில் அறிமுகப்படுத்த அயராது பாடுபட வேண்டும்.
எதிரிகளின் கொச்சைப்படுத்தல்களினால் துவண்டுவிடாது தொடார்ந்து செல்வோம், வெற்றி நமக்கே!
“ (ஏக இறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள். என்று நீர் நினைக்காதீர்! அவர்களின் புகழிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம். அல்குர்ஆன்.(24:57)
(எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்களால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சஞ்சிகையில் எழுதப்பட்ட கட்டுரை சிறு மாற்றத்துடன் இங்கு மீள்யிடுகையிடப்பட்டுள்ளது.அந்த சஞ்சிகைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.)
Labels:
நிகழ்வுகள்














