ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைகள்


எம்.ஏ.ஹபீழ் ஸலபி

ண்மைக்காலமாக இந்த நாட்டில் ஷீஆக்களின் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரான் தூதரகத்தினால் வெளியிடப்படும் 'தூது' என்ற காலாண்டு சஞ்சிகை, ஒவ்வொரு பள்ளிக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுவருகிறது. இதனால், இஸ்லாமிய அறிவுப் பின்னணி இல்லாத பல பள்ளி நிருவாகங்கள், இதன் கவர்ச்சிக்கு இலகுவில் ஆளாகி விடுகின்றன. இஸ்லாமிய அகீதாவில் தெளிவில்லாத, இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லாத இவர்கள், இதன் மூலம் சிந்தனைச் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். ஷீஆக்கள் பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள் என்பவற்றிலும் வேகமாக ஊடுருவ ஆரம்பித்துள்ளனர். சமூக நடவடிக்கைகள் மூலம் தமது கொள்கையைப் பரப்ப முனைகின்றனர்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினால், இவ்வுலகிலேயே சுவர்க்கவாதிகள் என்று அடையாளப் படுத்தப்பட்ட, உன்னத இஸ்லாமிய ஆட்சிக் காவலர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற வரலாற்றுப் புருஷர்களைக் காபிர்கள் என்று சொல்கின்ற ஒரு கூட்டம், இந்த நாட்டில் இன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. முதல் மூன்று தூய ஆட்சியாளர்களைக் கேவலப்படுத்தியும்இ நம் தாயை விட மேலாக மதிக்கும் ஆயிஷா ஸித்தீகா (ரலி) அவர்களை ஒழுக்கம் கெட்டவள் என்றும், தரக் குறைவாக குமைனி என்ற ஈரானிய ஷீஆவினால் எழுதப்பட்ட 'இஸ்லாமிய அரசு' என்ற நூல், கிலாபத் கனவில் சஞ்சரிக்கும் இயக்கவாதிகளால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நூலாக அறிமுகப்படுத்தப்பட்டும், சில புத்தக விற்பனை முகவர்களால் முக்கியம் அளிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

அதேபோல், ஒரு பக்கத்தில் 'கிலாபத்' என்றும், 'தூய தேசம் நோக்கி...' என்றும் கோஷமிட்டுக் கொண்டு, மறுபக்கத்தில் பிரதேசவாதத்தை பத்திரிகையில் பக்கம் பக்கமாக கக்கிக் கொண்டும், மிம்பர் மேடையில் தரக்குறைவான வார்த்தைகளை தாராளமாகப் பயன்படுத்தும் ஷீஆ ஆதரவு இயக்கம் தான் இந்த நாட்டிற்குள் வழிகெட்ட ஷீஆ சிந்தனையை அழைத்து வந்து பரப்பியது. இன்னும் ஆதரித்து வருகிறது.
1980களுக்கு முன்னர், இந்த நாட்டில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்றவர்களைக் 'காபிர்' என்று திட்டுபவர்கள் இருக்கவில்லை. ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையைத் தோற்றுவித்தவர்கள் யார்? நவீன கிலாபத்தின் காவலர்கள். இந்த நாட்டில் ஸஹாபாக்களைத் திட்டும் கூட்டத்தை உருவாக்கிய அநியாயத்திற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இதுபற்றியும் கேட்காமல் விடமாட்டான்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட, அனைத்துக் கொள்கைக் குழப்பங்களையும் தற்துணிவாக முறியடித்த மாபெரும் ஆட்சியாளர் அபூபக்கரும், தனது ஆட்சிக் காலத்தில் நேர்மையாலும் நீதத்தாலும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவடையச் செய்த உமர் (ரலி) அவர்களும் காபிர்கள் என்று சொல்லும் சிந்தனை மரபில் தோன்றி, விபச்சாரத்திற்கு அரச அங்கீகாரம் வழங்கிய குமைனியின் புரட்சி பற்றி, இவர்களின் இயக்க ஸ்தாபகர் என்ன சொன்னார் தெரியுமா?
பத்திரிகையாளர் ஜாபிர் ரிஸ்க் என்பவர், மவ்தூதியிடம் 'ஈரானியப் புரட்சியைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?' என்று கேட்டார். அதற்கு மவ்தூதி: 'நிச்சயமாக அது ஓர் இஸ்லாமியப் புரட்சி, அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்' என்றார். 'வாஜிப்' என்ற சொல்லாட்சி இவர்களின் இஸ்லாமிய சட்ட மரபில் வகிக்கும் பங்கு என்ன?
அதிகமான நபி மொழிகளை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்களைத் திட்டிஇ முஃமின்களின் தாயான ஆயிஷா (ரலி)யை வேசி என்று எழுதியவன் சாட்சாத் 'புரட்சித் தலைவன்' குமைனியின் புரட்சியை ஆதரிப்பது வாஜிபாம். இவர்கள்தான் அவரின் வழிநின்று இந்த நாட்டில் நாளைக் கழித்து கிலாபத்தைத் கொண்டுவரப் போகின்றார்களாம். இவர்களின் கிலாபத் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்று கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இவர்களின் ஷீஆவுடனான கள்ளக் காதலுக்கு இதோ இன்னொரு சான்று. சமரசம்-முஜீப் பதில்கள் பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வியையும் அதற்கான பதிலையும் பாருங்கள்.

சவூதியின் புதிய மன்னர் அப்துல்லாஹ்ளூ ஈரானின் புதிய அதிபர் அஹ்மத் நெஜாதி-இந்த இருவரின் ஆட்சியின் அணுகுமுறை எப்படியிருக்கும்இ?
ஏ.எம்.பீ. பைசுர் ஹாதி - நீடூர்.
அடிப்படையிலேயே இரண்டு ஆட்சிகளுக்கும் (ஒன்று மன்ன ராட்சிளூ இன்னொன்று மக்களாட்சி) நிறையவே வேறுபாடு இருப் பதால்இ அணுகுமுறையிலும் அவை வெளிப்படவே செய்யும்...
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். மன்னர் அப்துல்லாஹ் அமெரிக்காவின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.
அதிபர் நெஜாதி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்.
ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைகள் சிலவற்றை இக்கட்டுரையினூடாகக் கண்டு கொள்வீர்கள். ஈரானுடனும், ஈரானிய ஆட்சியாளர்களுடனும் ஒப்பிட்டு நோக்கும் போது, சவூதி அரேபியா எவ்வளவோ நல்லது என்று துணிந்து கூறலாம். இஸ்ரேல், முஸ்லிம்களுக்கு எவ்வளவு பயங்கரமானதோ, அதைவிட இஸ்லாத்திற்கு ஈரான் பயங்கரமானது. நாம் ஷீஆக்களின் புனித நூல்களிலிருந்து தந்திருக்கின்ற தகவல்களைப் படிக்கும் ஒரு நேர்மையான சிந்தனையாளன் நமது இக்கருத்துடன் உடன்படாமலிருக்கவேமாட்டான். ஏனெனில் அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதிகள் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளனர். அதைவிட ஷீஆக்களும் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். சுன்னி முஸ்லிம்களைக் கொன்று குவித்துள்ளனர்.

தெஹ்ரானில் 10க்கும் மேற்பட்ட ஆலையங்கள் கட்டவும் சிலைவைத்து கிறிஸ்தவ வழிபாடு நடாத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை 30வீதத்துக்கும் மேற்பட்ட சுன்னி முஸ்லிம்கள் வாழும் அங்கு ஒரு ஜும்ஆ பள்ளிகூடக் கட்ட இன்றுவரை அவர்களுக்கு அனுமதியில்லை. அஹ்மத் முப்தி ஸதா என்ற மிகப் பெரும் சுன்னிப் பிரிவு மார்க்க அறிஞரை இருட்டு சிறையில் அடைத்துக் கொன்றான் குமைனி. கொடூர புத்திகொண்ட குமைனியின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.
இதோ பாருங்கள் குமைனியின் ஜனாஸா ஊர்வலத்தில் அவன் அவனது பக்தர்களால் நிர்வானமாக்கப்படுகின்றான்.


 நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்பிரகாரம் தொழ அனுமதிக்காமல் கிறிஸ்தவ வழிபாட்டிற்கு அனுமதிப்பதுதான் அல்லாஹ்வின் கட்டளைக்கு முன்னுரிமை அளிக்கும் இலட்சணமா? யூதர்களைவிட மோசமானவர்களை இஸ்லாமிய வாதிகள் என்று புலம்ப எப்படித்தான் உங்களுக்கு மனம் வருகிறது!
அங்கே இஸ்லாமிய முறையில் ஆடை (பர்தா) அணிந்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் விபச்சாரிகள் இருக்கின்றார்கள்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய ஷீஆக்களையும் அதனை ஆதரிப்போரையும் விமர்சிக்கக் கூடாதாம். சுவர்க்கவாதிகளான சிறந்த ஸஹாபாக்களைக் காபிர் என்று திட்டும் கூட்டத்தையும் அச்சீர்கெட்ட சிந்தனையை இஸ்லாமிய அடைமொழியுடன் பரப்பும் இயக்கவாதிகளையும் விமர்சிப்பது பொருத்தமற்றதாம் ஏன்? சுனாமியில் இணைந்து செயற்பட்டார்களாம் என்று நாக்கூசாமல் பகிரங்கமாகக் கூறினாலும் இதற்குப் பின்னால் வேறு காரணங்களும் இருக்கின்றன என்பது தெளிவானதே!
எனினும் சவூதியின் தயவில் வாழுபவர்கள் இனியாவது ஷீஆ பக்தகோடிகளுக்குத் துதிபாடி அவர்களின் மாநாட்டிற்கு ஆள் அனுப்பி பேசவைத்து பரிசு பெறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஏகத்துவ நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன.
இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யாச் சமூகத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள் அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதறிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. நரகின் விளிம்பில் இருந்தார்கள். இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை. (பார்க்க: அல்குர்ஆன் 03:103)
நபி (ஸல்) அர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களும் ஆவார்கள். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரவினரும் கேடு விளைவித்ததில்லை.


இவை முஹர்ம் மாதத்தில் ஷீஆக்களின் அராஜகம்

இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு-வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி (ரலி) அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது. அரசியல் காரணங்களுக்காக அலி (ரலி) அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்குத் தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி (ரலி) அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே 'ஷீஆ' எனப்படுகின்றனர். இவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக 'ஷீஅத்து அலி' என்று அழைக்கப்பட்டனர். 'ஷீஆ' என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி (ரலி) அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரினர் நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும் நபி (ஸல்) அவர்களைவிட உயர்வானவராகவும் கருதலானார்கள். இந்த வெறி முற்றிப் போனபோதுஇ அபூபக்கர் (ரலி)இ உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்றுஇ இவர்கள் பல பிரிவுகளாக பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் இவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட 'ஷீஆக்கள் தான் உண்மை முஸ்லிம்கள்' என்ற பிரசாரம் கூட சில நவீன 'கிலாபத்' கனவுலக இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டுஇ அரசியலுக்கும் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டுஇ 'ஷீஆப் புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு' இஸ்லாமிய சாயம் பூசிக் கொண்டிருக்கின்றனஇ இந்த இயக்கங்கள் இஸ்லாத்தி;ன் சிறப்பை மாசுபடுத்வதற்காக வரலாற்றில் பல வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகள் கொள்கைகள் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றில் இஸ்லாத்தைச் சிதைப்பதில் ஷீஆக்கொள்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் காற்கூறில் ஈரானில் புரட்சி செய்த குமைனியால் அங்கு ஷீஆ அரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியை இஸ்லாமிய அடைமொழியுடன் பலர் நம் நாட்டில் பிரசாரம் செய்து வருகின்றனர். 'சூடான் ஈரான் போன்ற நாடுகளின் இஸ்லாமிய வாதிகள் அதிகாரத்தையும் கைப்பற்றி இஸ்லாமிய மயப்படுத்தும் பாரிய வேலைத்திட்டங்களில் இறங்கி செயற்படுகின்றனர்....' என்று எம்.ஏ.எம். மன்ஸுர் எழுதுகிறார். ஈரானில் விபச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. விபச்சாரமும் இஸ்லாமிய மயமாக்களின் பாரிய வேலைத் திட்டங்களில் ஒன்றா? சிந்திக்கமாட்டீர்களா?
நபி (ஸல்) அவர்களை மட்டுமே வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் அரசுதான் இஸ்லாமிய அரசாக இருக்க முடியும். ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனை அவர்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் நூல்களிலுள்ள செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
 வளரும்

Share this article :

+ comments + 1 comments

Anonymous
December 11, 2011 at 11:21 AM

கேடுகெட்ட இந்த ஆட்சி பேசும், ஈரானுக்கு ஜால்ரா போடும் கூட்டங்கள், ஏகத்துவ பிரச்சாரத்தை கொச்சைப் படுத்துவதில் மிக முனைப்பாக உள்ளனர்.

அமெரிக்காவும், ஈரானும் ஏற்கனவே திட்டமிட்டுக் கொண்டதன் படி, ஆளில்லாத பழைய உளவு விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாக
ஒரு நாடகம் ஆடினார்கள். அமெரிக்காவும், தான் ஏதோ இந்த விவகாரத்தால் அதிர்ந்து போய் இருப்பது போலவும்,அதனை மறைக்க முற்படுவது போலவும் காட்டிக் கொண்டது. அது போதாது என்று விமானத்தின் திறன்கள் குறித்தும்,அந்த விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலால் பறப்பது போலவே ராடரில் காட்டப்பட்டிருந்ததாகவும்,விமானத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்தும்,எப்படி இவ்வளவு திறமையாக ஈரான் அதனை எப்படி தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறித்தும் தாம் குழம்பிப் போயுள்ளதாகவும், அதிர்ச்சியில் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறையே தகவல்களை வெளியிட்டது.

///கேட்பவன் கேனப்பயல் என்றால், கல்லுப் பிள்ளையாரும் பால் குடிக்குமாம்/// என்பதட்கினங்க, ஆட்சி பேசும் இலங்கையின் இரு
இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் இதில் பூரித்துப்போய், தமது முகநூல் பக்கங்களில் இந்த விவகாரத்தை, பெரிய சாதனை போல காட்டியுள்ளனர்.
இதன் மூலம்,அமெரிக்காவை விட ஈரான் சிறந்த வல்லரசாக உருவாகின்றது என்ற மாயையை உருவாக்கி, ஈரானை இஸ்லாமியர்களின் ஹீரோவாக மாற்றி, ஷீயா சிந்தனைகள் ஊடுருவ உதவ முயல்கின்றனர், அறிந்தோ, அறியாமலோ.


Imran Mohamed

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger