இது,முகப்பின் அடையாளம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி

;த்தெழுந்து வரும்
ஜாஹிலியப் புயலை
வான் மறையின்
ஒளிக் கதிர்கள்
தடுத்தி நிறுத்தி
புத்துலகம் படைக்க
எதிர்ப் புயலாய்
எழுந்துவிட்டது.!

பிரபஞ்சத்தின்
மடியில்
பரந்து
விரிந்து கிடக்கும்
அற்புதங்கள்
அனைத்தையும்
தன் இளந் தென்றலால்
ஆகர்ஷித்துச் செல்கிறது!

அல்லாஹ்வின்
வார்த்தைகளுக்குள்
அகிலமே அடக்கம்
உலகின்
உயர்வும்
 உய்வும்
இதன் மூலமே!

சத்திய தாகம் தணித்திட
உலகம்
 மெல்ல மெல்ல
 படையெடுக்கத் துவங்கிவிட்டது
நாளை நமக்கே
 என்பதும் உண்மையாகிவிட்டது

நீ
இன்னுமேன் தாமதிக்கின்றாய்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸால் 2002ல் வெளியிடப்பட்ட அல் இன்ஸிராஹ்  சஞ்சிகைக்காக முன் அட்டைப்படத்தின் அர்;தத்தை வெளிப்படுத்தும் முகமாக  எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்களால் எழுதப்பட்ட கவிதை

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger