எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அறியாமை காரணமாகவே மக்கள் இறைவனைக் குறித்து விவாதங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபடுகின்றார்கள்; சண்டையிடுகிறார்கள்; பு+மியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். இதளைக் குர்ஆன் தெளிவாக விபரிக்கின்றது.
“மனிதர்களில் சிலர் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றார்கள். எவ்வித ஞானமும் வழிகாட்டலும் அவர்களிடம் இல்லாமலேயே.” (31:20)
இதனால்தான், அறிவுள்ளவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை திருக்குர்ஆன் தெளிவுபடுத்தி, அறிவுள்ளவனும்-அறிவில்லாதவனும் சமமாக மாட்டார்கள் என்று தெரிவிக்கின்றது.
“இவர்களிடம் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியாமா? அறிவுடையவர்கள் தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள். (31:20)
அறிவும் ஆராய்ச்சியும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமையாத கல்வி, ஆக்கத்திற்குப் பதிலாக அழிவிற்கே இட்டுச் செல்லும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இலட்சியமற்ற, குறிக்கோளற்ற கல்வியை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. தார்மீக மதிப்பீடுகளும் ஆத்மீகப் பரிமாணமும் அற்ற கல்வியின் பயங்கரமான விளைவுகள் நவீன உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், கல்வி பற்றிய இந்த இஸ்லாமியக் கண்ணோட்டம், கருத்தில் கொள்ளப்படல் மிக அவசியமாகும். ஆறிவின் மூலம் புகழும் கீர்த்தியும் பெறல்; தனது அறிவுத் திறமையினால் பிறரை வெற்றிகொண்டு, தனது புகழை நிலைநாட்டல்; தனது அறிவை லோகாய நோக்கம் கருதி எந்த வழியிலேயும் பயன்படுத்தி, தனது வாழ்க்கையின் வசதியினைப் பெருக்கிக் கொள்ளல் போன்ற குறுகிய நோக்கங்களுக்காக அறிவைத் தேடுவதையும், அறிவைப் பிரயோகிப்பதையும் இஸ்லாம் கண்டிக்கிறது.
இறை நம்பிக்கையில்லாத அறிஞர்களிடம், தமது அறிவில் கொண்ட மதிமயக்கத்தையும் மமதையுமே காண முடியும். தமது மூளையும் அறிவாற்றலையும் பு+ஜித்து வணங்கும் நிலையிலேயே அத்தகையோர் இருப்பர். ஆனால், இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்களான அறிஞர்கள் தமது அறிவாற்றலைக் கொண்டு எத்தனை சாதனைகளைப் படைத்தாலும் இறுமாப்படையாது, உலக சுகபோகத்தை, பணத்தை, பதவியை எதிர்பார்க்காது தமது திறமைக்கான காரணம் இறை கருணையே என்று நம்புவர். அத்தகையோர் பற்றி அல்குர்ஆன் சிறப்பாகச் சிலாகித்துப் பேசுகிறது.
உலகின் ஆட்சியும் அதிகாரமும் மற்றும் பல ஆற்றல்களும் சக்திகளும் கொடுக்கப்பெற்றிருந்த நபி சுலைமான் (அலை) அவர்கள் தம் நிலை கண்டு மதிமயங்கவில்லை. அவர்களது மனோநிலை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றது.
“இது, எனது இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா? இல்லையா? என்று என்னைச் சோதிப்பதற்காக எனக்குப் புரிந்த பேரருளாகும்.” (27:40)
ஊலகின் பல அற்புதமான சாதனைகளை நிலைநாட்டிய துல்கர்னைன் என்பவர் இறுதியில் ஒரு பெரும் மதிலைக் கட்டிவிட்டு, அதற்காக அவர் பாராட்டப்பட்ட போது, மொழிந்த ஈமானின் ஒளி சிந்தும் அடக்கமான வசனங்களையும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
“இது என்னுடைய இறைவனின் அருள்தான். எனது இறைவனின் வாக்குறுதி(யாகிய யுகமுடிவு) வரும்போது, இதனைத்தான் விளக்கிவிடுவான். எனது இறைவனின் வாக்குறுதி உண்மையானதே என்று கூறினார்கள்.” (18:98)
கல்வி, அறிவு நுட்பத்தின் புலமையாகவும் தொழில் முறையாகவும் ஒழுக்கத்தின் உயர் பண்பாகவும் அரசாளும் யுத்த திறனாகவும் பல்வேறு வடிவங்களில் நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றது. கல்வி தனக்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக அல்லாமல், சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடியதாக அமைய வேண்டும். பயனளிக்காத கல்வி வீனே அன்றி வேறில்லை. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் பயனளிக்காத கல்வியை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடிப் பிரார்த்தித்துள்ளார்கள்.
“அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சிர தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான்; அதனை மக்கள் அருந்தினர். (தமது கால்நடைகளுக்கு) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது, (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டந்தரை. அது, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பு+ண்டுகளை முளைக்கவிடவில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, 79)
வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com