உமறுப் புலவரின் உளறல்கள்


இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் - 6
இஸ்லாத்துக்கு முரணான கவிதைகள் நாற்றம் பிடித்த சீழை விட அசிங்கமானவைள. அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட இஸ்லாமிய இலக்கியம் என்னும் பெயரால் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.
திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எப்படித்தான் தலையெடுத்தன?
பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்யவேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வமே இதற்குக் காரணமாகும்.
இன்றுகூட புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபடவியலாத நிலையில் இருப்பதை நாம் காணுகின்றோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு, ஐநூறு, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்?
அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை நினைவிருத்தியே இதை அணுக வேண்டும். அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப்போயிருந்த நிலையில் அதைவிட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆரம்ப நிலையிலிருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிற்கு மாறுகின்ற கட்டத்தில் (வுசயளெவைழையெட pநசழைன) அவர்களுடைய நிலை இருந்தது.
பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்ளூ கதாகாலகட்சேபம் கேட்டனர்ளூ மூர்த்திகளின் உற்சவங்கள், தேராட்டம், ஆனை குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல்-கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிற சமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதைக்கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் ஷஅறிஞர்கள்| முஸ்லிம்களுடைய இந்த வரம்பு கடந்த நடவடிக்கையிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி என யோசித்தனர். இதன் விளைவாக மாற்றுச் சமயத்தவரைப் போல இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமிய வேஷம் பூசினர்.
மூர்த்தி உற்சவங்கள் தர்கா உரூஸ்களாயினளூ தேரோட்டம் சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை குதிரையுடன் உண்டியல் ஊர்வலங்கள் ஆகியவை அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கப்ருகளுக்கு பூசும் அபிஷேகமாக ஷஅட்ஜஸ்ட்| செய்யப்பட்டது.
இந்தப் ஷபோலச் செய்தல்| (வுழ iஅவையவந) என்னும் மனித இயல்பு இஸ்லாமிய தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத்துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.
எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாச தாகத்திற்கு இப்புலவர்களும் கற்பனை நீர் வார்த்து மாற்றுமத இலக்கியங்களைப் போல இயற்றத் தொடங்கினார்கள்.
இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் மொழியாகிய அரபி மொழியின் மீது அக்காலத் தமிழ் மக்களுக்கு ஒரு தெய்வீக பக்தி ஊட்டப்பட்டது. தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபிமொழியமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ, மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்மொழியானது தமிழர்களுடைய (ஷதம்மளன்| என்பது கொச்சையான பேச்சு வழக்கு) பாஷைளூ அது காஃபிரானவனுடைய பாஷைளூ அந்த பாஷையில் புனிதம் மிக்க அரபி குர்ஆனை மொழிபெயர்த்து எழுதுவது ஒரு மகாபாவமான காரியமாகும் எனவும் ஒரு நம்பிக்கை நிலவியிருந்தது. ஆகவே, குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மெய்யான இஸ்லாத்தைத் தமிழ் மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளுகின்ற தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இது தொடர்பாக இன்னொரு நிலையையும் நாம் காணமுடிகின்றது. தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துக்களை எடுத்தெழுவதைத் தவறாகக் கருதிய அக்காலத்தில் அரபி மொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமேல் வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.
மக்களுடைய இந்த மனநிலையையும் நன்கு உணர்ந்து கொண்ட சிலர் தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அப்படியே அரபி எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடானர். ஷஅவன் வந்தான்| என்பதையே 'யுஏயுN ஏயுNவுர்யுN' என ஆங்கில எழுத்து வடிவத்தில் எப்படி எழுதுகிறோமோ இது போல் அரபி மொழி வடிவத்தில் தமிழை எழுதியமையால் ஷஅரபுத் தமிழ்| என ஒழு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப்பட்டன. இருந்தும் இந்த அரபுத் தமிழ் வடிவத்தில் கூட குர்ஆன், ஹதீஸ்களுக்குரிய மொழி பெயர்ப்புகள் வெளிவரவில்லை.
தமிழிலோ, அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு திருக்குர்ஆனின் மீது ஒரு எட்டாத உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன், ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? மாற்று மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியப் புலவர்கள். இந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து ஆலிம்களை அணுகி இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப்புலவர், ஆலிப்புலவர் ஆகியோர் முறையே சதக்கத்துல்லா அப்பா, காஸி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம்.
இப்புலவர்கள் இவ்வாறாக ஷஉரை| பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இயற்கையும் (உண்மையும்) செயற்கையும் (பொய்யும்) கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.
இவர்கள், படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துக்கள் ஒருபுறமிருக்க, அந்த நூல்களையுப் பிற்காலத்தில் பதிப்பித்தவர்கள் முன்னுரை என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்துவிட்ட புருடாக்கள் அதைவிட மேலாக மறுபுறம் துருத்திக் கொண்டு நின்றன.
உமறுப்புலவருக்கு வருவோம். உமறுப்புலவர் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்ணி சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் சென்று உரை (அது தொடர்பான செய்தி) கேட்டாராம். சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவரின் முஸ்லிமல்லாத தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணித்துவிடவே உமறுப்புலவர் கவலையில் நொந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் புலவருடைய கனவில் தோன்றினார்களாம். 'உமறே! நீர் கவலைப்படாதீர் சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே நீர் சதக்கத்துல்லாவை மீண்டும் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக' என நபி (ஸல்) அவர்கள் உமறுப்புலவரின் கனவில் தோன்றிக் கூறினார்களாம்.
இதுபோல சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி (ஸல்) அவர்கள் தோன்றி உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவருக்கு உரை வழங்கினாராம். நபி (ஸல்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி சீறாப்புராணம் தொடர்பாகக் கட்டப்பட்ட இந்தக் கதை பலரும் அறிந்ததே.
வேறு சிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கிறது. சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப்புலவர் மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்த)க்கு வருகிறார். அங்குள்ள காஸி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்கு தேவையான செய்திகளை கேட்க, நெய்னா லெப்பை உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்து அவருக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். இதனால் உள்ளம் உடைந்த உமறுப்புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, 'ஷாகுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும், சீறாப்புராணத்துக்கு நீங்கள் தான் தலைப்பெடுத்துத் தர வேண்டும் இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்' எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவர்? 'திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய்' எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு உமறுப்புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம். இதன் பின்னர் உமறு, நெய்னா லெப்பை, 'நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்தற்கு ஒலிகள் பிரான் அவர்களுக்குப் பொருத்தமேயாகலின் நமக்கும் மிக்கப் பொருத்தமே' எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை காதிரசனா மரைக்காயரின் ஷசீறா நபியவதாரப் படலம்| (காதிரசனா மரைக்காயர், சீறா நபியவதாரப் படலம், சென்னை, முதற்பதிப்பு ஜுலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
இஸ்லாத்துக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒரு புறமாகவும்ளூ அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைக் கதையாகக் கட்டி உருவாக்கிய தன்மை மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக்கூடிய முரண்கள் ஏராளம்... ஏராளம்!
தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப்புலவருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி (ஸல்) அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருப்பார்களானால், அத்தகைய கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம் பெறவே இயலாது.
ஆனால் உமறுவின் சீறாப்புராணத்தில் பொய்யும் புனைவுகளும் கூடிய இஸ்லாத்துக்கு முரணான செய்திகள் மலிந்து காணப்படுகின்றன தமிழ்க்காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப்படலம், நகரப்படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு புலவர் கற்பனை நயம் படப் பாடிச் செல்லுகிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை நீக்கி விட்டு நபி (ஸல்) அவர்களுடைய ஷபதிவு செய்யப்பட்ட| வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம். மெய்யான இந்த வரலாற்றைப் பாடும் போது கூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்லுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப்புடைத்துக் கொண்டு நிற்கின்றன நபி (ஸல்) அவர்கள் பிறந்தமையை ஷநபியவதாரப்படலம்| என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப்புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த போது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகின்றது பின்வரும் இப்பாடல்:
                பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
                பரந்து செவ் வரிக்கொடி யோடி
                மான்மருள் விழியா ராமினா விருந்த
                வளமினைத் திசையினை நோக்கி
                நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி
                னாலுமூ லையுமொரு நெறியாய்த்
                தூநறை கமழ வொளிதிகழ் தரவே
                சுஜுதுசெய் தெழுந்தன வன்றே
                (நபியவதாரப் படலம், பாடல் 105)
நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகலும் கஃபதுல்லாஹ்வின் நாலு மூலையிலும் ஒரு சேர சுஜுது செய்து எழுந்தனவாம்.
அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சுஜுது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபதுல்லாஹ் இத்தகைய உயர் தனிச் சிறப்புகளையுடைய கஃபதுல்லாஹ்வானது நபி (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி சுஜுது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.
சீறாப்புராணத்தை மட்டுமே படித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய  முனைகின்ற ஒருவர் இதனையும் உண்மைச் சம்பவமாகக் கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் இந்நூல் அனேகம் உள்ளன.
கஃபதுல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி உலக மாந்தர் அனைவரும் சுஜுது செய்ய வேண்டியது கடமையாயிருக்க, உமறுப்புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபதுல்லாஹ்வே சுஜுது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.
புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்லுகின்றன. ஆமினா அன்னையின் வீட்டை நோக்கி சுஜுது செய்த கஃபதுல்லாஹ் வாய்திறந்து பின்வருமாறு கூறியதாம்.
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற
கோற்றவ னென்றனை யின்றே
நிறைதரப் புனித மாக்கினா னென்ன
நிகழ்த்திய தொருமொழி யன்றே
                (நபியவதாரப் படலம், பாடல் 105)
'பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி சுஜுது செய்த இன்று தான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்' என கஃபதுல்லாஹ் வாய்திறந்து ஓதியதாம்.
ஷகஃபா| என்னும் சொல், 'புகழ் பெற்றுச் சிறந்துள்ளது' என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 'புனித ஆலயமாகிய கஃபாவை அல்லாஹ் ஷகியாமன் லின்னாஸ்| ஆக - ஜனங்களுக்கு ஆதாரஸ்தலமாக - நிலைப்பாடாக - அபயமளிக்கக்கூடியதாக - ஆக்கியிருக்கிறான்.' (குர்ஆன் 5:97)
'மனிதர்களுக்கு அபயமளிக்கக்கூடிய ஸ்தலமாக கஃபாவை நான் ஆக்கியிருக்கிறேன்' என அல்லாஹ் சொல்லுகின்றான். ஆனால் கஃபாவோ, தனக்கு அபயம் தேடக்கூடிய இடமாக ஆமினா அவர்களுடைய வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீடிருந்த திசை நோக்கி சுஜுது செய்ததாகக் பாடுகிறார் உமறுப்புலவர்.
கஃபா என்றாலே சிறப்புடையது எனப் பொருளிருக்க, நபி (ஸல்) அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா சிறப்பு பெற்றது என்பதாகவும் முரண்படக் கவிமை இயற்றியுள்ளார் புலவர்.
(மனிதர்களாகிய) அவர்கள் (கஃபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனை வணங்குவார்களாக. (குர்ஆன் 106:03)
என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் வீட்டை நோக்கி இரட்சகனுடைய வீடாகிய கஃபா சுஜுது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.
இவ்வாறு அல்லாஹ்வுடைய வீடு அவனுடைய தூதருடைய வீட்டுக்கு சுஜுது செய்துப் புனிதமைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப்புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப்பாடுவதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்வின் கஃபாவிற்குத் தலைகுனிவை உண்டாக்குகின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்ளுவான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதனை எப்படி அங்கீகரித்துக் கொள்வார்கள்?
அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனை விட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும் என அடுக்கிக் கூறுகிறது அருமறை குர்ஆன்.
எவர் என் மீது வேண்டுமென்று தெரிந்தே பொய் சொன்னாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம் அபூதாவூத், நஸயீ.
எனக் கடுமையாக எச்சரிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். இப்படியிருக்க இந்தச் சீறாப்புராணத்துக்காரருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அவருடைய கற்பனை வண்ட வாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் எனக் கொள்ளுவது எங்ஙனம் பொருந்தும்?.) (பார்க்க :இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் ப:21-31)
இன்னும் வளரும்
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger