நூலின் பெயர் : பொறுமையும் துன்பமும்
ஊரையாக்கம் : பீ. ஜைனுல் ஆபிதீன்
ஆசிரியர் : எம். ஏ. ஹபீழ் ஸலபி
வெளியீடு : அத்தக்பீர் சென்டர்,
320/2,வெளிகேபொல, பறகஹதெனிய.
மறுமைப் பேற்றை அடைந்துகொள்ள ஓர் இறை விசுவாசியின் வாழ்வில் பொருமை பண்பு அதி முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நோக்கில் சூறா அல்- அஹ்ஸாபின் முப்பத்தைந்தாவது வசனத்திலுள்ள 'வஸ்ஸாபிரீன்', 'வஸ்ஸாபிராத்' என்ற இரு வார்த்தைகளுக்கு மௌலவி பி ஜைனுல் ஆபிதீன் உலவி அளித்த விளக்கமே இந்நூலாக வெளியாகியுள்ளது என்று என்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த எம்.ஏ ஹபீல் இவ்வுரையை நூலாக்கம் செய்துள்ளார். அழகான முகப்பு அட்டைப் படத்தைக் கொண்டிருக்கும் இந்நூல் 56 பக்கங்களைக் கொண்ட கைக்கு அடக்கமான நூலாக விளங்குகின்றது.
இம்மையினதும், மறுமையினதும் வெற்றிக்குப் பொறுமையின் அவசியம் மகவும் விரிவான முறையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. பல உட் தலைப்புகளின் கீழ்; இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்களை ஆதாராமாகக் கொண்டு இவ்விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலகுமொழி நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை எவரும் படித்துப் பயன்பெற முயும் என்று துணிந்து கூறமுடியும். மர்லின்
THINAKARAN VARAMANJARY, SUNDAY DECEMBER 31, 2000 PAGE - 10
Post a Comment
adhirwugal@gmail.com