எம்.ஏ.ஹபீழ் ஸலபி
'உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துச் சென்று> ஒரு கட்டு விறகை தனது முதுகில் சுமந்து வந்து> விற்பது மக்களிடம் யாசகம் கேட்பதை விட மேலான காரியமாகும்'
மனிதன் சிறப்புறவும் நல்வாழ்க்கை வாழவும் உழைப்பு அவசியமாகிறது. எனவே> மனிதன் உழைத்து வாழ வேண்டும்; அவன் தன்னுடைய ஜீவனோபாயங்களைப் பிறரிடம் கைய்யேந்திப்
பெறாது>
சுயமாக உழைத்து உண்ண வேண்டும்
என்று இஸ்லாம் வலியுறுத்துவதோடு> உழைக்கும் வர்க்கத்தை மிக உயர்வான இடத்தில் வைத்து மதிக்கிறது
என்பதையும் இந்த ஹதீஸ் மிக அழகாகத் தெளிவுபடுத்துகிறது.
உழைக்காதவன் முன்னேற முடியாது, அது மட்டுமல்லாது நாட்டின் முன்னேற்றத்தையும் உழைக்காதவன்
கெடுக்கிறான். உழைகை;காமல் சோம்பேறியாக இருந்துகொண்டு
பிறரில் தங்கி வாழ்பவனை முஹம்மத் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். அடுத்தவர்களிடம்
கையேந்துபவன் சிறப்புக்குறியவனாக இருக்கமுடியாது என்றும்> 'வாங்கும் கையை விட கொடுக்கும் கையே சிறந்தது' (முஸ்லிம்) எனவும் கூறியுள்ளார்கள்.
'தம் கரத்தால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை எவரும் உண்பதில்லை' (புகாரி) என்று உழைப்பின் உயர்வையும் சிறப்பையும் நபி
(ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும்
செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள்! அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது. (67:15)
இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா பூமிப்பந்;தை மனிதனுக்காகவே படைத்திருப்பதாகவும்> அதை மனிதன் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும்
குறிப்பிடுகின்றான். எனவே> மனித வர்க்கம் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் அல்லாஹ்வின் அருளைத் தேடிச் சென்று> இனங்கண்டு தாராளமாகப் புசிக்க வேண்டும்.
'ஆரோக்கியமான உடலும் பலமும் உள்ள ஒருவனுக்கு 'ஸதகா' (யாசகம்) ஹலாலாக மாட்டாது' (திர்மிதி) எனும் நபிமொழி உழைக்க சக்தி உள்ளவனுக்கு 'ஸதகா' வழங்கி சோம்பேறியாக மாற்றுவதைக் கண்டிக்கிறது.
இஸ்லாம் நெற்றி வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அவ்வாறு உழைத்து
உண்பதை இறையருள் (فضلபழ்ல்) எனக்கூறி உழைப்பை உற்சாகப்படுத்துகிறது. இதனை
அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
'தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை
அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.' (62:10)
அல்லாஹ் விரும்புகின்ற வகையில் உழைப்பது 'இபாதத்'தாக மாறுகிறது. தொழுகை ஆன்மீக பரிசுத்தத்திற்கு எவ்வளவு அவசியமோ> அவ்வாறே உழைப்பது உலக சுபீட்சத்திற்கு அவசியமானதாகும்.
தொழுகையும்>
உழைத்து உண்ண முயற்சிப்பதும்
மனித வாழ்வில் இடம்பெறும் இருவகை வணக்கங்களாக அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
இஸ்லாம் கூறும் போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் பேணி பொருள் திரட்ட வேண்டும்.
இஸ்லாத்திற்கு முரணில்லாத எந்தத் தெழிலில் ஈடுபடுவதையும் அது தடுக்கவில்லை.
ஓவ்வொருவரும் உழைத்து உண்ண ஆரம்பிக்கும் போது> தனிமனித> குடும்ப> சமூகவாழ்வு மேம்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தொழில்
புரியும் போது>
அவர்களது மானம் காக்கப்படுவதோடு> குடும்பம் நடுத்தெருவில் விடுபடுவதும் தவிர்க்ப்படுகின்றது.
தனிமனிதன் உழைக்க எடுக்கும் முயற்சியினால்> சமூகத்திற்கு பல்வகை நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால்
சமூக அங்கத்தவர்களின் சொத்து> சுகம்>
மானம்> மரியாதை என்பன பாதுகாக்கப்படுவதோடு> திருட்டு> கொள்ளை> கொலை> மோசடி போன்ற தீமைகள் அகற்றப்படுகின்றன. இதனால்> தனிமனிதர்களின் உள்ளம் அமைதிபெறுகிறது; குடும்பம் இன்புறுகிறது; சமூகம் வளம்பெறுகிறது; தேசம் அபிவிருத்தி யடைகிறது; உலகம் செழிப்புறுகிறது.
இதுபோன்று விவசாயம்> கை;தொழில்> வியாபாரம்> வணிகம் என்பவற்றை மேற்கொள்பவர்கள் தனது வயிற்றுப்பசியை
மட்டுமல்ல>
தேசத்தினதும்> உலகினதும் பசியையே தீர்க்கின்றனர். இவை அனைத்தும் இஸ்லாத்தின்
நெறிநின்று மேற்கொள்ளப் படும்போது> இம்மையில் மட்டுமின்றி மறுமைப் பேற்றையும் பெற்றுத்
தருகின்றன.
'ஒரு முஸ்லிம் விதையொன்றை நாட்டி> அது வளர்ந்த பின்னர் அதனை ஒரு மனிதனோ> விலங்கோ> ஒரு பட்சியோ சாப்பிட்டு விட்டால்> அதனை விதைத்தவருக்கு மறுமை நாள்வரை அது ஸதகாவாக (தர்மமாக)
அமைகிறது'
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
எனவேதான்>
நபிமார்களும் தொழில் முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளனர்.
அல்லாஹ் அனுப்பிய அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்துள்ளார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா? என நபித்தோழர்கள் கேட்க> ஆம்! நானும்தான்; சிறு தொகைப் பணத்தை கூலியாகப் பெற்றே மக்காவாசிகள் சிலருக்கு
நான் ஆடு மேய்த்துள்ளேன்' என நபி (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள்.' (புகாரி)
நபி தாவூத் (அலை) அவர்கள் தானே உழைத்து சாப்பிடுவார்கள்' (புகாரி)
'நபி ஸகரியா (அலை) இரும்புக் கொல்லராக (இருந்து உழைத்து) வாழ்ந்துள்ளார்கள்.' (முஸ்லிம்)
தூதுத்துவப் பணியை நிறைவேற்ற வந்த நபிமார்கள் அனைவரும் உழைத்தே வாழ்ந்துள்ளனர்.
ஆன்மீகத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டி வாழ அவர்கள் முனையவில்லை.
உழைக்காமல் பிறர் தயவை நாடும் சோம்பேரிகளை
இஸ்லாம் விரும்பவில்லை. 'மற்றவர்களிடம் ஒரு மனிதன்
கையேந்த ஆரம்பித்தால்> அல்லாஹ் அவனின் வறுமையின் வாயிலைத் திறந்து விடுகிறான்' எனக் கூறி யாசகம் கேட்பது மென்மேலும் வருமையின் கோரப்பிடிக்கே
கொண்டு செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
'உங்களில் (யாசகம் கேட்கும்) ஒருவனை அவனது யாசகம் கேட்ட நிலை; (மறுமையில்) அல்லாஹ்வை சந்திக்கும் போது அவனது முகத்தில்
சதையில்லாதவனாக்கிவிடும்' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(புகாரி > முஸ்லிம்)
உழைப்பின் உயர்வையும்> சிறப்பையும் கூறிய இஸ்லாம் இரந்து செல்வதைக் கண்டிக்கிறது. அத்தோடு> உழைப்பின் சரியான வழியில் அமையவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
அதாவது>
ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிக்
குடிக்கும் வட்டி> இலஞசம் போன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பிக்கிறது.
'வட்டி உண்பவரையும்> உண்ணக் கொடுப்பவரையும்> அதற்கு சாட்சியாக இருப்பவரையும்> அதை எழுதக்கூடியவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்'
(நஸாயி> அபூதாவுத்) 'ஒரு காலம் வரும்; அந்நாளில் மக்கள் தாம் சம்பாதிப்பது சரியான வழியா? தவறான வழியா? என்று கொஞ்சமும் சிந்திக்கமாட்டார்கள் என்று கூறி> அப்படிப்பட்ட நிலைக்கு நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
நாம் மேற்கொள்ளும் தொழிலில் நேர்மை> நாணயம்> உண்மை என்பன இருக்க வேண்டும். மோசடி> ஏமாற்று> பொய் என்பன தவிர்க்கப்பட வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் ஏமாற்றும் வகையிலான வியாபாரத்தையும்> கற்களைச் சுண்டிவிட்டு> அது எவ்வளவு தொலைவில் விழுகின்றதோ அவ்வளவு நிலத்தை விற்பனை
செய்வதையும் தடைசெய்தார்கள்'
(முஸ்லிம்> அஹ்மத்)
ஒரு முறை கடைத்தெருவில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள்> ஒரு வியாபாரியின் தானியக் குவியலில் தம் கரத்தை நுழைத்தார்கள்.
அப்போது உள்ளே ஈரத்தானியங்கள் இருப்பது கண்டு 'யார் ஏமாற்றுகிறாரோ> அவர் நம்மைச் சார்ந்த வரில்லை' (முஸ்லிம்) என்று கடுமையாக அந்த வியாபாரியை எச்சரித்தார்கள்.
'விற்ற பின்னர் தெரியவரும்
முறைப்பாடுகளுக்கு (விற்றவர்) பொறுப்பேற்க வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி)
இன்னும்>
உழைப்பை சிறப்பித்து ஊக்குவித்த
இஸ்லாம் அதன்மூலம் பெறப்படும் செல்வத்தை நல்வழிகளிலேயே செலவழிக்கவும் கட்டளையிடுகிறது.
தேவையற்ற செலவுகள்> வீண்விரயம்> ஆடம்பரம் போன்றவற்றைக் கண்டிக்கிறது.
'ஒருவர் தாம் ஈட்டிய செல்வம் எப்படி வந்தது என்றும்> அது எந்த வழியில் செலவு செய்யப்பட்டது என்றும் மறுமை
நாளில் கேள்வி கேட்கப்படும்> அதற்கு சரியான பதிலை அளிக்காதவரை அவரது பாதங்களை நகர்த்த முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் தானும் ஓர் உழைப்பாளியாக இருந்து தனது தோழர்களையும் உழைப்பாளிகளாக்கி> செல்வத்தை நேர்மையான வழியில் சேகரிக்கவும்> அதனை நல்வழியில் செலவு செய்யவும் தூண்டினார்கள். அத்தோடு> கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையும் ஏனைய செல்வங்களையும்
பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்கள். 'தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணிப்பவர்
உயிர் தியாகி (ஷஹீத்) ஆவார்' (முஸ்லிம்) என்று அவர்களது
பொன்மொழி ஒன்றும் பிரஸ்தாபிக்கின்றது.
ஆகவே>
முஃமின்கள் என்போர் சுய உழைப்பில்
வாழவேண்டும். தொழிலில் ஈடுபடும் போது அது வணக்க வழிபாடுகளை விட்டும் தூரப்படுத்திவிடக்கூடாது.
இஸ்லாம் அனுமதித்துள்ள எந்தத் தொழிலைச் செய்தாலும்> அது அல்லாஹ்வின் நினைவை விட்டும் தூரப்படுத்திவிடக்கூடாது.
ஹலால்>
ஹராம் பேணும் முஃமின்களையே அல்லாஹ்
விரும்புகின்றான்.
எனவே விவசாயம்> வர்தகம்>
வணிகம்> வியாபாரம்> கைத்தொழில் போன்ற இஸ்லாம் அனுமதித்துள்ள அனைத்துத் தொழில்
முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். பிறரிடம் இரந்து செல்கின்ற இழிநிலையிலிருந்து விடுபட
வேண்டும்.
தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்காத முதலாளிகளின் நடவடிக்கையக் கண்டித்து> தொழிலளர்களின் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின்
கடமை என இஸ்லாம் கருதுகிறது. தொழிலாளர் நலன் பெறவும் உரிமை பேணப்படவும் வேண்டுமாயின்
இஸ்லாமியப் போதனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
குகையில் மாட்டிக் கொண்ட மூவரில் ஒருவர் தொழிலாளியின்
உரிமையைப் பேணியவர்> உரிமைகளை வழங்கும்போது கிடைக்கப்பெறும் மகத்துவத்தை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
எனவே>
இது தொடர்பான பகுதியை மட்டும்
சுருக்கமாக இங்கு தருகிறோம்.
'அல்லாஹ்வே நான் வேலையாட்களை கூலிக்கு அமர்த்தினேன்.
ஒரு மனிதரைத் தவிர அனைவருக்கும் நான் கூலியைக் கொடுத்துவிட்டேன். அவர் தனக்குரிய கூலியை
விட்டு விட்டுப்போய்விட்டார். அப்போது> நான் அவரது கூலியை பலன் தரும் விதத்தில் முதலீடு செய்தேன்.
அது>
அதிகமான பலனையும் தந்தது. சுpல நாட்களுக்குப் பின்னர்> அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எக்குக்கொடு' என்று கேட்டார்.
'இதோ> நீர் பார்க்கின்ற ஒட்டகம்> பசு> மாடு> ஆடு> அடிமைகள் அனைத்தும் உனக்குரியதுதான்' என்று நான் கூறினேன். அப்போது> அவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னை எள்ளி நகையாடாதீர்' என்றார். 'நான் உன்னை பரிகாசிக்கவில்லை' என்று கூறினேன். உடனே அவர் எதனையும் விட்டுவைக்காமல்
அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
'அல்லாஹ்வே! உன்னுடைய திருமுகத்தை நாடி இதை நான் செய்திருப்பேயானால்> நான் மாட்டிக் கொண்டிருக்கும் பாறையை எங்களை விட்டும்
அகற்றுவாயாக!” என்று கூறி பிரார்த்தித்தார்.
அப்போது பாறை விலகியது; அவர்கள் வெளியேறிச் சென்றார்கள் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி> முஸ்லிம் )
தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில்
கூலி வழங்கிட வேண்டும். 'தொழிலாளியின் வியர்வை
உலர்வதற்கு முன்னர்> அவரது கூலியை வழங்கிவிடுங்கள்' (இப்னு மாஜா) என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை.
எனவே> பிறரில் தங்கி வாழ்வதிலிருந்து சுயமாக உழைத்து> உண்டு ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள முனையவேண்டும்.
அதன் மூலமே இம்மையிலும்> மறுமையிலும் சுபிட்ச கிடைக்கப்பெறும்> அத்தைகைய பேறுகளுக்கு முயற்சிப்போமாக.
Post a Comment
adhirwugal@gmail.com