தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளும் தகுதியற்ற பள்ளிகளும் ஓர் ஆய்வு


லங்கைத் திருநாட்டில் தவ்ஹீத் பிரசாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மவ்லிது குப்பைகள், கந்தூரி சாப்பாடுகள்,பராஅத்த இரவுகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர். ஊரைவிட்N;ட வெளியேற்றினர். புள்ளியில் தொழுது கொண்டிருககும் போது சூட் பண்ணினர்.சிலர் ஷஹீதாக்கப்பட்டனர்.
நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாதுளூ இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் பல உலமாக்களின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.
நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆந்தக் கொடுமை இன்றும் சில இடங்களில் தொடர்ந்தகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், அதே சமயம், மது அருந்துபவர்கள், விபச்சாரிகள், வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள், அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத்வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிரிந்து தவ்ஹீத் பள்ளி உருவானது. இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வர ஆரம்பித்தது. எனவே இவர்கள் பணத்திற்கு அடிமைப்பட்டு குராபிகளின் அதே வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். யார் தவ்ஹீதை அழிக்க மும் முரமாகச் செயற்பட்hர்களோ அவர்களுக்கப் பள்ளி கட்டிக் கொடுத்து, இன்னும் வேகமாக தவ்ஹீதை அழி என்று உதவி வருகின்றார்கள்.

இன்று, குர்ஆன் ஹதீஸை மட்டும் பேசும் தவ்ஹீத் சகோதரர்களை, தவ்ஹீத் வேசமிட்ட, குராபிகளைவிட மோசமான நிதி நிறுவனவாதிகளால் தாக்கப்படும் நிகழ்வுகள் கச்சிதமாக நிறைவேற்றப்படுகிறது. குராபிகளக்குப் பள்ளிகட்டிக் கொடுக்கும் தடம் புரண்ட இந்த ஆசாமிகள் அசத்தியத்துக்கு துணைபுரிந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் அதைப் பரப்புவோருக்கும் எதிராக அராஜகங்களைத் தூண்டிவிடுகின்றனர். பொலிசில் முறையிட்டு ஜூம்ஆவைத் தடுப்பது,அங்கு இவர்கள் புத்தர் சிலையை வணங்க வேண்டாம் என்கின்றனர்.அந்நிய மதத்தினரை குறிப்பாக புத்தர்களை இஸ்லாத்திற்கு மாற்றுகின்றனர் என்றெல்லாம் மக்கா காபிர்களின் வேலையை கச்சிதமாகச் செய்துவருகின்றனர்.
அதேபோல் இவர்கள் கட்டிய பள்ளியில் தொழச் சென்றால் ஏற்றத்தாழ்வு காட்டுவது, பிரதேசவாதம் பேசுவது, கேலி பண்ணுவது, அவதூறுகளைப் பரப்புவது அதிகார துஷ்பிரயோகம் செய்வது, தீங்கு இழைப்பது, சந்தாவைப் புறக்கணிப்பது, குர்பானியைத் தடுப்பது இது போன்ற அநியாயத்தை செய்கின்றனர்.
இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் தொழக் கூடாது என்பது தான் ஏக இறைவனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர், நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.  (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! (அல்குர்ஆன் 9:107, 108)
மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவ வாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.
1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்  2. ஏக இறைவனை மறுத்தல் 3. முஃமின்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுப் பிரினையை ஏற்படுத்துதல் 4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்.
இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.
இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகிறதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் தவ்ஹீத் போடே போட்டுக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பார்வையில் பள்ளியாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் கூடாது.
குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது. உண்மையில் குர்ஆனை நம்பும் முஸ்லிமாக இருந்தல் அந்த இறை கட்டளையை அவர்கள் புறக்கணிக்க முடியாது.
இன்று நம் ஊரில், நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.
1.    முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்
நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம். பெருநாளை சந்தோசமாகக் கொண்டாட குர்பானி வாங்க வந்தால் விரட்டிவிடுவது.
மதீனாவில் நபியின் பள்ளியில் பேரீச்சம் பழம் கொண்டுவந்து தொங்கவிடப்படும்.வருபவர்கள் உணவு அருந்திவிட்டுப் போவார்கள். அன்றைய பள்ளி அகதிகளுக்கு தங்குமிடமாக இருந்தது. வீடு இல்லாதவர்களுக்கு பள்ளிக்க காணியிலாவது வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். நோயாளிக்கு மருத்துவ உதவி பள்ளிவாசலே முன்நின்று செய்ய வேண்டும். ஏழைகளின் கஷ்டத்தைப் போக்க வேண்டும். சந்தா என்று மக்களைக் கஷ்டப் படுத்தக் கூடாது. திருமணப் பதிவு தரமாட்டோம் என்று மிரட்டுவது.
இவ்வாறு இன்னும் சில பள்ளிகளில்   நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் மஃரிப் உடைய முன் சுன்னத்திற்கு உரிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
நிறுவனங்களால் கட்டப்பட்டு தவ்ஹீத் போடு போடப்பட்ட பள்ளிகளில் தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சென்;ற ரமழானில் பள்ளிக்குள் தந்தைக்காக மகன் தொழுவிக்க முனைந்த போது சிலர் காட்டுக் கூச்சலிட்டனர்.
அதேபோல் ஒரு பொது மையவாடியில் சலசலப்பு ஏற்பட்டது. தப்லிக் ஜமாஅத்திற்கும் சொந்தமான மையவாடி அது. அவர்கள் மவ்னமாக இருக்க நிறுவனத் தவ்ஹீத்வாதிகள் அசிங்கமாக நடந்து கொண்டனர்.
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே, உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்.  அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி), அபூதாவூத் 1135
குர்ஆன் ஓதுவதில் கூட அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. ஆனால், ஷரீஆ சட்டப்படி நடந்த  ஒரு திருமணவிடயத்திற்காக தண்டப் பணம் விதிப்பதை எதிர்த்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஓர் ஆசிரியர் நியாயம் கேட்டபோது, பதில் சொல்லத் தெரியாத ஒரு நிர்வாகி அவருக்கு அடிக்கப் பாய்கிறார். இன்னொருவர் தடுக்காவிட்டால் நடுப்பள்ளியில் கைகலப்பு ஏற்பட்டிருக்கும். இதைப்பார்த்த அடுத்த ஜமாஅத் சிலர் ரவுடிக் கொமிடி என்று சுவரில் போஸ்டர் அடித்தவிட்டுச் சென்றனர்.

இன்னும்   சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.
இன்னும் சில பள்ளிகளில் வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முஅத்தின் மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.
பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் சந்தா என்று பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை.  சில பள்ளிகளில் ஆள் பார்த்து ஸகாத் வழங்குவது. நிர்வாகிகளின் உறவினர்களுக்கு மட்டும் அவன் தொழாதவனாக இருந்தாலும் உதவுவது. இவ்வாறு பல விடயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர, நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை.
அது, முழுமையான தவ்ஹீத் அடிப்படையில் மார்க்கத்தெளிவொடு கட்டப்பட்ட பள்ளிகளில் மட்டும் தான் இந்த நிலையை அவதானிக்க முடியும்.
 2. இறை மறுப்பு
 அல்லாஹ்வைத் துதிக்க அவனைப் புகழ மார்க்க விளக்கம் அளிக்க பள்ளி இடமளிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஆள்பார்த்து இடமளிப்பது.தனக்கு சாதகமானவன் குப்ரில் இருந்தாலும், வட்டிக்கு விளம்பரம் செய்தாலும் அவர்களை தூக்கி வைப்பது. இதுவும் இன்று தவ்ஹீத் லேபல் பள்ளிகளில் பரவலாக நடக்கிறது.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! அல்குர்ஆன் 72:18
மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. 
இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மவ்லிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்ளூ அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மவ்லிது, நாகூர் ஆண்டவர் மவ்லிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன. மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.
அதே போல் சில கட்டுக்கதைகளை ஹதீஸ் என்று நம்பி பல குர்ஆன் வசனங்களை மறுப்பது. சூனியத்தினால் நபி மனநோயாளியாக ஆனார்கள் என்றும், சூனியத்தால் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவது மிகப் பெரிய ஷிர்க்காகும். இந்த நம்பிக்கையுள்ள இமாமைப் பின்பற்றித் தொழக் கூடாது.
3. முஃமின்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குதல்
பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் ஏழையும் பணக்காரனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையையும் ஏற்றத் தாழ்வையும் ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன.
பிரதேசவாதம் பேசும் இடங்களாக இன்;றைய லேபல் தவ்ஹீத் பள்ளிகள் உள்ளன.  ஒரு 50 வருட நிறுவனத் தவ்ஹீத் பள்ளி உள்ள ஊர் ஒன்றில்  வெளி ஊரைச் சேர்ந்த அவ்ஊரில் நீண்டகாலம் வசிக்கும் மார்க்க பக்தியுள்ள ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். உடனே ஊர்வாசி  ஒருவர் எழும்பி  வந்தான் வரத்தானுக்கெல்லாம் தலைமைத்துவம் கொடுக்கக் கூடாது என்றார். தவ்ஹீத் பள்ளி என்று கூறிக் கொள்ளும் அந்த ஊர் மக்கள் யாரும் எதுவும் பேசவில்லை. அவரல்லாத வேறு ஒரு தகுதியற்ற ஊர்வாசி பின்னர் தலைவனாக ஒருவாரத்தின் பின்னர் நியமிக்கப்பட்டார். இம்முறையும் இதேபோல் நடந்தது. ஊர்வாசி ஒருவர் நியமிக்கப்பட்டபோது ரோட்டில் போரவனுக்கெல்லாம் தலைமை கொடுக்க் கூடாது என்று கூக்குரலிட்டனர். தகுதியற்றவர்களில் தகுதியானவர் என்பது போல் கூக்குரலிட்டவரைவிட கூக்குரலிடப்பட்டவர் கொஞ்சம் பராவாயில்லை. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு நாங்கள் தவ்ஹீத்வாதிகள் எங்கள் பள்ளியில் என்ன தவறு உள்ளது என்று கொக்கரித்துக் கொண்டுள்ளனர். இவர்கள் ஜாஹிலியத்தில் இருக்கின்றனர் என்பது இவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை. அடுத்த ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு மார்க்கம் சொல்லிக்கொடுக்கம் தரத்தில்தான் இவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எல்லாம் தெரியும் என்ற மமதை தலைக்கு அடித்துள்ளது.தவ்ஹீத் லேபல் பள்ளிகளே இந்த நிலை என்றால் மற்றவற்றைக் கேட்கவா வேண்டும்.
நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும். சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சினைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால், இந்த ஷாஃபி, ஹனஃபி மற்றும் நிதி நிறுவன ஸலபுப் பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது.
 இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள்  மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவில் இந்த வெறி முற்றிய நிலையிலுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரசாரம் செய்கின்றனர்.
இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?
இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
4. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:17,18)
மேற்கண்ட வசனங்கள் இணை  கற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள் 1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும் 2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.
மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வட்டி விளம்பரதாரிகள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முஅத்தின்கள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர். மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும், அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ, அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.
இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும். நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் நாடவில்லை என்று அவர்கள் சும்மா கூறிக் கொண்டு சதி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
1. முஃமின்களுக்கு தீங்கிழைத்தல்  2. ஏக இறைவனை மறுத்தல் 3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 4. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போரிடுவோருக்குப் புகலிடம்.  இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.
நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.  (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!  அல்குர்ஆன் 9:108
அல்லாஹ்வுக்காக வக்ஃ செய்த பள்ளியில் தொழ இயலாதா? ஏன்று சிலா கேட்கின்றனர். தர்ஹாவும் வக்ஃ செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் செய்யப்பட்டால் மட்டும் போதுமா? அல்லாஹ் சொல்கின்ற இந்த நான்கு காரணங்களும் உள்ளனவே! அதில் தொழ முடியுமா?  ஓரு போதும் தொழ முடியாது.
முனாஃபிக்கீன்கள், நாங்கள் நல்லதற்காகத் தான் இப்பள்ளியைக் கட்டியுள்ளோம் என்று சத்தியம் செய்து கூறிய போதும் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூறியது பொய் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அது போன்று மேற்கண்ட நான்கு காரணங்களும் நடைபெறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகிகள் நாங்கள் நல்லதற்காகத் தான் இந்தப் பள்ளியை நிர்மாணித்துள்ளோம் என்று கூறிய போதிலும் இந்நான்கு காரணங்களும் நீக்கப்படுகின்ற வரை அவை முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளாக ஆகாது என்பதே உண்மையாகும்.
அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகப்  பொறுப்பு எடுத்தவுடன், நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த இயக்கத்தைதான் பின்பற்றி வருகின்றோம். அவர்கள் சொல் கேட்டுத்தான் நடப்போம் என்றால் இதைவிட ஷிர்க் வேறு எதுவும் இருக்க முடியாது. அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் புரியும் இவர்களை நீங்கள் எவ்வாறு பின்பற்றுவீர்கள். ஊங்களுக்கு அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழியும் போதாதா?
முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்குர்ஆன் 9:108
ஒரு நிதி நிறுவனம் ஒரு கிளையில் பள்ளி கட்டிக் கொடுக்கிறது. உடனே இன்னொரு கிளை நிர்வாகிகள் தலைமைக்கச் சென்று பள்ளி கட்டிக் கொடுத்துள்ளீர்கள் அதே போல் எங்களுக்கும் பள்ளி கட்டிக் கொடுங்கள் என்று ஒரு பள்ளி இருக்கத்தக்கன கேட்டு அடம்பிடிக்கிறார்கள். உடனே கொமிசன்  பேராசை தலைமை நிர்வாகம் அந்தப் பள்ளியை அப்படியே விட்டுவிட்டு அதற்குப் பக்கத்தில் இன்னொரு பள்ளிகட்டிக் கொடுக்கிறது. துலைமையக நிர்வாகிகளுக்கு கொழுத்த கமிஷன் கிடைக்கிறது.இந்த அப்பாவிகளுக்கு இது தெரியாது.பாவம் இவர்கள்.
 இவ்வாறு கட்டுவது போட்டி மனப் பான்மையா? இறையச்சமா? பள்ளி இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப';பட வேண்டும். இன்று கொமிஷனுக்காக குராபிகளுக்கும் கட்டப்படுகிறது. அங்கே தவ்ஹீத் புதைக்கப்படுகிறது. 
இப்படிப்பட்டபட்ட நிறுவனப் போலித் பள்ளிவாசல்கள் நிறைந்து காணப்பட்டாலும் இன்று  உண்மையான தவ்ஹீத் பள்ளிகள்  பல எமது நாட்டில் உருவாகி வருகிறது. அவைதான் கொள்கையில் முன்னிலை வகிக்கின்றன.
இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த ஆக்கம் போதாது.
மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது. முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்தும் நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் கொழும்பில் எமது தலைமைத் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது. பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர, வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.
இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்தில் இல்லை. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.
மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.
இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
அல்குர்ஆன் 60:4
இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே!
அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழியில் தொடர்ந்து நடக்கச் செய்வானாக.

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger