முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவ எழுச்சியின் நவீன முன்னோடி தொடர் -02

அரேபியாவின் அரசியல் நிலை:-
                                அன்று ஹிஜாஸ் பகுதியின் அரசியல் நிலையும் மிக மோசமாகவே காணப்பட்டது. உட்பூசல்களும் போராட்டங்களும் நிறைந்திருந்தன. மார்க்க உணர்வு மங்கி, ஷிர்க்கும் பித்அத்தும் பரவி, ஆட்சியும் அதிகாரமும் கோத்திரவு உணர்வு மிகுந்ததாக இருந்தது. மிகச் சிறிய பகுதிகளுக்கும் ஓர் ஆட்சி என ஹிஜாஸ் முழுமையிலும் பல ஆட்சியாளர்கள் காணப்பட்டனர்.

                                நஜ்த் என்ற சிறிய பிரதேசம் பல சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து, பல சிற்றரசர்களின் கீழ் இருந்தது. அடிக்கடி குறுநில மன்னர்களுக்கு மத்தியில் யுத்தங்கள் நடைபெற்றன. அப்போது கொள்ளையும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரமும் சிறுபிள்ளைகள் கொல்லப்படலும் பெண்கள் சிறைபிடிக்கப்படலும் சாதாரணமாகவே நிகழ்ந்தன.
இவ்வாறு, கொலையும் கொள்ளையும் விபச்சாரமும் பயங்கரமாகவே நடக்கத்துவங்கியிருந்தன. ஆரசியல் நிலை ஒரு பெரும் கேலிக் கூத்தாகவே ஆகியிருந்தது.
                                அன்று நஜ்த் மாநிலம் துருக்கிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது. கலாசார அபிவிருத்திக்குரிய பிரதான பாகங்களுடன் அதற்கு அதிக தொடர்புகள் இருக்கவில்லை. கரவன் வர்த்தகத்தை மட்டுமே அது நம்பியிருந்தது. இஸ்லாமிய கிலாபத் மாற்றம் (661) நிகழ்ந்ததிலிருந்து, கரன் வர்த்தகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அதனால், அம்மாநிலப் பழங்குடிகள் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் வறுமையிலும் வாழ்ந்தனர். வழிப்பறியும் கொள்ளையும் பல்வேறு சமூக ஒழுக்கச் சீரழிவுகளும் நஜ்த் வாசிகளின் நிரந்தரப் பகையாளிகளாயிருந்தன. கிராமத்திற்கிடையிலும் பழங்கடிகளுக்கிடையிலும் அங்கு ஐக்கியத்திற்கிடமிருக்கவில்லை. இவ்வாறு, அம்மக்களது பொது வாழ்க்கை பல நூற்றாண்டுகளாகச் சீர்குலைந்து காணப்பட்டது.
                                மொத்தமாகச் சொன்னால் முஸ்லிமகள் என்பவர்கள் அப்போது, முஸ்லிம்களாகத் தோன்றவில்லை, மிகக்கீழ் நிலைக்கு அவர்கள் வீழ்ந்திருந்தனர். அக்காலப்பிரிவில் இஸ்லாமிர்களின் நிலையைக் கண்டால் யாரும் கோபமுற்று முஸ்லிம்களைச் சபித்திருப்ர். இவ்வாறு, அரசியல் ஆன்மீகத்துறைகள் அனைத்தும் கெட்டுக்கிடந்தன.
 சீர்திருத்தப் பணிகள்
முஹம்மது இப்னுஅப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் (கி.பி1703) உயைய்னா என்ற பாலைவனக் கிராமத்தில் பிறந்தார்கள். இவர் அன்றைய அரேபியாவில் புகழ் பெற்ற பனூதமீம் குலத்தைச் சேர்ந்தவராவார். இவரின் பாட்டனார், சுலைமான் இப்னு அலி உயையினா நீதவானாகவும் (காழி) நஜ்த் மாகாணத்தின் ஷெய்குல் இஸ்லாமாகவும் இருந்தார். முஹ்ம்மதின் தந்தை ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் உலமாவாகவும் உள்ளுர் காழியாகவும் விளங்கினார்.
இமாம் முஹம்மதின் தந்தையின் பெயரே அப்துல் வஹ்ஹாப். எனினும், முஹம்மது என்ற பெயருக்குப் பதிலாக, அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்டே உலகம் அவரை அழைத்தது.
                முஹம்மத் 20 வயதாகும் போது இஸ்லாமியக் கலைகளில் பாண்டித்தியம் பெற்ற அறிஞராக விளங்கினார். அவரது குடும்பம் அறிவு வாழும் குடும்பமாக அமைந்தமையே இதற்கான முக்கிய காரணமாகும். ன்று இமாமவர்களின் தந்தை, அப்துல் வஹ்ஹாப் இஸ்லாமியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த அறிஞரானகப் பிரசித்தி பெற்றிருந்தார். இமாமின் பாட்டனார்  சுலைமான் அவர்கள் நஜ்த் மாகாணத்திலேயே தலைசிறந்த அறிஞராக மதிக்கப்பட்டார். இவ்வாறான அறிவுச் சூழலில் வளர்ந்ததன் காரணமாக 10 வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்ட, இமாம் முஹம்மது அவர்கள், இஸ்லாமியக் கலைகளிலும் ழ்ந்த புலைமையைப் பெற்று விளங்கினார். இருபது வயது இளைஞராக இருக்கும் போதே அடுத்த அறிஞர்களை மிஞ்சும் புலைமை அவரிடம் மிகுதியாகக் காணப்பட்டது.
                லதெய்வக் கொள்கைகளாலும், ஷிர்க்- பித்அத்களாலும் மாசுபடுத்தப்பட்டிருந்த இஸ்லாத்தை, தனிமனிதனாக நின்று மீண்டும் உயிர்ப்பித்து துார் தூர்ந்து போயிருந்த எகத்துவக் கொள்கைப் புரட்சியை மீண்டும் உருவாக்கிய நவீன இஸ்லாமிய ழுச்சியின்முன்னோடியாக இமாம்முஹம்மது இப்னு அல்துல் வஹ்ஹாப் (ரஹ்) கருதப்படுகின்றார்.
நவீனகால இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களின் கொள்கை ஊற்றாக அன்னாரின் சிந்தனைகள் விளங்குகின்றன. இஸ்லாத்தின் மூலாதாரத்திற்குத் திருப்பவேண்டும் என்றும் அல்குர்ஆனுக்கும் ஸ்சுன்னாவுக்கும் முஸ்லிம்கள் தம்மை முற்றாக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் குரல் எழுப்பினார்கள்.
                இஸ்லாத்த்தின் அடிப்படை தவ்ஹீத் என்பதை விளக்கப்படுத்துவதற்குத் தமது சக்தி அனைத்தையும் அவர் செலவிட்டார். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை தௌஹீதுவாதத்தின் எழுச்சியாக அவர் வடிவமைத்தார். தௌஹீதுவாதத்தை இஸ்லாமிய அரசியல் விஸ்தரிப்பில் ஒன்று கலப்பதிலும் அவர் வெற்றி பெற்றார்.
                கிறிஸ்தவ ஐரோப்பாவின் ஆதிக்கத்தினால், துருக்கிப் பேரரசு வீழ்ச்சியை எதிர்நோக்கியிருந்த காலத்தில் அரேபியாவில் மிகவும் பின் தங்கிய பழங்குடிகளின் கிராமத்திலிருந்து, அப்துல் வஹ்ஹாப் தமது ஏகத்துவப் பிரசாரத்தை ஆரம்பித்தார். ஆவர் பிறந்த கிராமம், அரேபியாவில் மிகவும் ஒதுக்கமாக இருந்த நஜ்த் மாநிலத்திலிருந்தது.
                இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் ஒத்த குணவியல்புகளுடனேயே காணப்பட்டுள்ளனர். இத்தகைய சீர்திருத்தவாதிகளிடம் வெறும் மூளை மட்டுமல்ல, உணர்ச்சிபூர்வமான உள்ளமும் காணப்படுவது இயல்பு. வரலாற்றில் அறிவுக்குப் பங்களிப்புச் செய்து, பல நூல்களை எழுதிப் பிரசித்தி பெற்ற அறிஞர்களைக் காண்கிறோம். வர்கள் பெரும்பாலும் தம் மூளையிலேயே  வாழ்ந்துவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால் சீர்திருத்தவாதிகள் அறிவுப்பணியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை அவர்கள் உள்ளத்தில் எரியும் உணர்ச்சி வேகம் அவ்வாறு நின்றுவிட அவர்களை விடுவதில்லை. தம்மைச் சூழவுள்ள தீமைகள். அநியாயங்கள் கொடூரங்களைப் பார்த்துச் சகிக்க அவர்களால் முடிவதில்லை.
 கொள்கையை மூளையில் சுமந்தால் மட்டும் போதாது நடைமுறை வாழ்விலும் பூமியிலும் அது வாழ வேண்டும் என்ற உணர்ச்சி பூர்வமான வேகம் அவர்களிடம் காணப்படும். என்வே தம் உயிரையும் மதிக்காது அவர்கள் போராடுவார்கள். அந்தப் பாததையில் செய்யும் தியாகம், அர்ப்பணிப்பு அவர்களைப் பொறுத்தவரையில் சுவைமிக்கவாழ்வாகவே அவர்களுக்குத் தோன்றும். எனவேதான் அவர்கள் செயற்கையாகவன்றி இயல்பாகவே தியாகிகளாக வாழ்வார்கள். மிகச்சாதாரணமாகவே மிகப்பெரும் தியாகங்களைப் புரிவார்கள்.
                இத்தகைய உணர்வுபூர்வமான சீர்திருத்தவாதிகளைச் சேர்ந்தவரே இமாம் முஹம்மது. 20 வயது இளைஞர். தன்னைச் சூழ உள்ள ஜாஹிலிய்யத்தின் இருளைக் காணும் போது. கொதித்தெழுந்தார். பெரும்பாவங்களாலும் ஷிர்க்குகளாலும் சமூக வாழ்வு நிறைந்திருப்பதை அவதானிக்கிறார். ள்ளம் கொதிக்கிறது உத்வேகம் மேலெழுகிறது. தான் படித்த அறிவை மூளையோடும் பிறகு புத்தகங்களோடும் மட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை.
                களத்திற்கு வருகிறார்தான், தனியாக இருக்கின்றேன் என்பதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை அறிஞர்களில் மிகப் பெரும்பாலானோர்  நடக்கும் தீமைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்களே! நமக்கென்ன வந்தது என அவர்  நினைக்கவில்லை. சீர்திருத்தவாதிகளால்  அப்படி நினைக்க முடியாது. அவ்வாறு நினைக்க அவர்களது உள்ளம் விடாது. மவ்ட்டீகக் கருத்துக்களும் விக்கிரக ஆராதனைகளும் மார்க்கமாகி. அநியாயமும் கொலையும் கொள்ளையும் பயங்கரப் பெரும்பாவங்களும் சளமாகிவிட்ட தன் சமூகத்தைப் பார்த்து சகித்துக்கொண்டிருக்க அவரால் முடியவில்லை.
இளைமைத்துடிப்பு, இஸ்லாமிய உணர்வும் சீர்திருத்தவாதிக்கு இயல்பாக அமைந்திருக்கும் உயிருள்ள உள்ளம், ஆகியவற்றோடு அவர் களத்துக்கு வந்து, தீமைகளை எதிர்க்க ஆரம்பிக்கின்றார். சோதனைகள் அலை அலையாக மூழ்கடிக்க முனைகின்றன.
வரலாறு இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger