தவ்ஹீத் வரலாற்றில் ஒரு மைல்கள்
வலிமார்கள் மாநாட்டைக் கண்டித்து பீஜே வெளியிட்ட பிரசுரத்தை சென்ற தொடரில்
பார்த்தோம். அந்தப் பிரசுரம் தவ்ஹீத் வரலாற்றில் ஒரு மைல்கள்.எனினும், அதன் விளைவுகள் எவ்வாறு இருந்தன?
"தமிழகத்தில்
பரேலவிஸ எதிர்ப்புப் போரின் துவக்கமாக அமைந்தது இந்தப் பிரசுரம் தான்.
எதிர்பார்த்தது போலவே ஜமாஅத்துல் உலமா சபையின் எதிர்ப்புகள்
உச்சக்கட்டத்தை அடைந்தன. பரேலவிஸத்தின் எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்ட யாரும் எங்களுக்குத்
தோள் கொடுக்க முன் வரவில்லை. இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் நாங்கள் நான்கு மத்ஹபுகள்
என்ற சுவர்களைத் தாண்டி வெளியே வரவுமில்லை. அப்படி இருந்தும் அவர்களிடமிருந்து ஆதரவு
இல்லை.
அப்போது சங்கரன்பந்தல் மதரஸாவை நோக்கி ஜமாஅத்துல் உலமா சபையினர்
படையெடுத்து வந்து பி.ஜே. மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர். அப்போது நாங்கள் சங்கரன்பந்தலில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றானதும் எங்கள் மீது நடவடிக்கை
எடுப்பதற்காக, தஞ்சை திருப்பந்துருத்தியில் ஜமாஅத்துல் உலமா சபை கூடியது. அழைக்கப்பட்ட
நாங்கள் மூன்று பேரும் அதில் கலந்து கொண்டோம். அதற்கு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர்
எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா தலைமை தாங்கினார். காரசாரமான வாக்குவாதம் நடந்தது.
தஞ்சை மாநாட்டில் அல்லாஹ் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறான்
என்பதை விட அவர்கள் அவமானப் படுத்தப்பட்டது தான் மேலோங்கி நின்றது.
மன்னிப்புக்கு அல்லது மறு பரிசீலனைக்கு இடம் கொடுக்காது அங்கிருந்து
வெளிநடப்புச் செய்தோம். ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து நீக்கவும் பட்டோம்.
அன்றிலிருந்து தவ்ஹீது பிரச்சாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் களமிறங்கினோம்.
அந்தப் பணியும் பயணமும் தொடர்கின்றது. பயணத்தின் நடுவில் சகோதரர் பி.எஸ்.அலாவுதீன்
அவர்கள் உயிர் பிரிந்து விட்டார்கள். இந்தப் பயணத்தில் இணைந்தவர்களும் உண்டு. இதை விட்டுப்
பிரிந்தவர்களும் உண்டு. இருப்பினும் இந்தப் பயணம் தொடர்கின்றது.
அரபு நாட்டு வரவைப் பெற்றுக் கொண்டு,
வந்ததை வாந்தி எடுக்காது
அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் இந்த மார்க்கத்தின் அச்சாணிகள் என்ற நம்பிக்கையுடன்
பாதாள நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பரேலவிஸத்திற்கு எதிரான போர்ப் பயணம் இன்றும்
தொடர்கின்றது. இன்ஷாஅல்லாஹ் இறுதி மூச்சு வரை இப்பயணம் தொடரும்." (தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி ஷம்ஸுல்லுஹா
உணர்வு உரிமை -12 குரல் 36 மே 9-15-2008)
பிரசுரத்தில்
தொடங்கிய பீஜேவுடைய எழுச்சிப் போராட்டம் இன்று ஆல விருட்சமாகக் கிளை
பரப்பியுள்ளது.
தர்ஹாக்களில்
தஞ்சமடைந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பித்துக் கொண்டிருந்த பல இலட்சக்கணக்கான
மக்கள், இன்று ஒரே இறைவனை வணங்குகின்ற காட்சிகளை உலகம் வியப்போடு பார்க்கிறது.
துவக்கத்தில்
இணைவைப்புக்கு எதிரான அவர்களின் போராட்டங்கள் முபாஹலாவரை விரிந்தது.
வரலாறு இன்னும்
வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com