அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5



மேலும், "நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே' "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.

 
உமர் (ரலி) இவ்வாறு சொல்வது ஆச்சரியமளிக்கின்றது ஏனெனில் அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலைகளை நான் சீவி விடுவேன் என்று சொன்னவர் பின்வருமாறு இந்த செய்தியை அவர்கள் நமக்குக் கூறுகின்றார்கள்.
 நபிகளாரும் மரணிக்கக் கூடியவர்தான் என்ற வசனம் குர்ஆனில் இருக்கின்றது என்பது ஏன் எங்களுக்குத் தெரியாமல் போனது இப்போதுதான் இது இறங்கிய போன்று இருந்தது என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலிலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்துகொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர்.  ஆதாரம் புகாரி 1242

இந்த வசனத்தை அபூ பக்கர் (ரலி) அவர்கள் ஓதிக் காட்டும் வரை அவர்களில் எவருக்கும் இப்படி ஒரு வசனம் குர்ஆனில் இருந்தது என்று அறியாமல் இருந்தார்கள் அபூ பக்கர் (ரலி) அவர்களின் மகளார் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு வரவில்லை அங்கிருந்த ஒட்டு மொத்த மக்களுக்கும் இந்த வசனம் நினைவுக்கு வரவில்லை இந்த ஒரு மனிதரைத் தவிர  இப்படி ஒரு வசனம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தால் இப்படியான ஒரு பார தூரமான ஒரு கருத்தை நாங்கள் சொல்லி இருக்க மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டு மீண்டும் தொடர்ந்து கூறுகின்றார்கள் இந்த வசனத்தை மக்கள் கேட்டவுடன் மக்கள் அனைவர்களும் இந்த வசனத்தை மக்கள் மீண்டும் மீண்டும் ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ் இந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் காப்பாற்றி விட்டான் இல்லையென்றால் இன்று முஸ்லீம்கள் நபிகளாருக்கும் சிலை வைத்து வணக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பார்கள். இல்லையென்றால் இஸ்லாம் என்பது அல்லாஹ்வை வணங்கும் மார்க்கத்திற்குப் பதிலாக முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கும் ஒரு மார்க்கமாக மாறியிருக்கும். உமர் (ரலி) அவர்கள் இதை விடவும் கடுமையான ஒரு வார்த்தையைப் பிரயோகிக்கின்றார்கள் வாள் எடுத்து வெட்ட நினைத்த உமர் (ரலி) அவர்கள் அபூ பக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களும் மரணிக்கக் கூடியவர்கள்தான் என்ற வசனத்தை ஓதிக் காட்டியதும் உமர் (ரலி) அவர்கள் நிலை எவ்வாறு மாறி விட்டது என்பதை நமக்கு அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். இந்த வசனத்தை நான் செவியேற்றதும் என் கால்கள் தளர்ந்து என்னுடைய உடல் கணத்துப் போய் என் பாரத்தை சுமக்க முடியாத அளவுக்கு நான் சென்று விட்டேன்  என்னால் நிற்க முடியாமல் நான் உற்கார்ந்து விட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
உமர் (ர-) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான்
கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ர-) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.ஆதாரம் புகாரி 4454
மகா பார தூரமான ஒரு செயலை செய்ய இந்த சமுதாயதிற்கு அபூ பக்கர் மட்டும் இந்த இரு வசனங்களை ஓதிக் காட்டவில்லையென்றால் மக்களின் தவறான இந்த அனுகு முறையின் காரணமாக இந்த சமுதாயமே ஒரு தீமையான காரியத்தை செய்வதற்கு உமர் (ரலி) அவர்கள் காரணமாக இருந்திருப்பார்கள். அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும் மரணிப்பவர்தான் அது தெரியாமல் இருந்ததை அவர்கள் சகித்துக் கொள்ளவே முடியவில்லை இதனால்தான் அவர்கள் அவர்களை அறியாமலே உட்கார்ந்து விடுகிறார்கள். என்று அந்த செய்தி கூறுவதைப் பார்க்க முடிகின்றது. வாளை எடுத்து வெட்டுவேன் என்று சொன்னவருக்கு அபூ பக்கர் (ரலி) அவர்களால் வைக்கபட்ட சான்றுகளுக்கு முன்னால் சரியான ஒரு சான்றைக் கூறி  அவர்களின் தவறான வாதத்தை நிலை நிறுத்த முடியாமல் போய்விட்டது.

முதன் முதலாக இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட கெட்ட கொள்கை இதுதான் இந்தத் தீய கொள்ளை வந்ததுமே அபூ பக்கர் (ரலி) அவர்களால் உடனே மதீனாவில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மதீனா அல்லாத இடங்களில் இந்தக் கெட்ட கொள்கையின் காரணமாக இஸ்லாத்தின் பால் வந்த மக்கள் மீண்டும் புற முதுகு காட்டி சென்று விட்ட வரலாற்றையும் பார்க்க முடிந்தது.  
இவ்வுலகில் மரணித்தில் இருந்து யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கூறுகின்றார்கள்.

உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். அல்குர்ஆன் (56: 60,61)
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. அல்குர்ஆன் (3:185)
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக  உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!  அல்குர்ஆன் (21:3
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. அல்குர்ஆன் (3:185) 
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.  அல்குர்ஆன் (4:78) 
இந்த வனசங்கள் உலகில் பிறந்த இறைத்தூதர்களாக இருந்தாலும் மகான்களாக இருந்தாலும் பெரியார்களாக இருந்தாலும் அனைவரும் மரணித்தே தீருவார்கள் என்பதுதான் நியதி என்பதனை கூறுகிறது.
இஸ்லாமிய வரலாற்றில்  இஸ்லாத்தின் பெயரால் முதன் முதலாக ஏற்பட்ட கொள்கைக் குழப்பம் நல்லடியார்கள் மரணிக்க மாட்டார்கள்.

நபிகளாரின் மரணத்தில் ஆரம்பித்த கொள்கைக் குழப்பம் இன்று வரையும் அதன் சாயலில் பல விதமான வடிவங்களில் இந்த சமுதாயத்தில் உலாவருகின்றது அதில் அலி (ரலி) அவர்கள் கொல்லப்படவில்லை அவர்கள் வான் உலகில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் பெரியார்களும் மாகான்களும் இறைநேசர்களும் மரணிக்கவில்லை அவர்கள் இன்று வரைக்கும் உயிரோடுதான் உள்ளார்கள் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தூதர் காலத்தில் தோன்றி அதற்கு உடனே வந்த இடம் தெரியாமல் சென்ற போதும் இக்கொள்கையை மீண்டும் உயிர்ப்பித்து  அதன் சாயலில் வேறு வடிவத்தில் இன்று சமுதாயத்தில் நிலைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.
மவ்லீது ஓதும் சபைகளுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தருவதாகவும் இன்று வரைக்கும் நபிகளார் மரணிக்க வில்லை என்றும் தவறான ஒரு நம்பிக்கையை கடைப்பிடித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அதே போன்று அப்துல் காதிர் ஜீலானி என்ற பெரியாரை தனிமையில் ஆயிரம் தடவை அழைத்துப் பிராத்தித்தால் அந்த சபைக்கு மரணித்துப் போன மனிதனை  ஆஜராவார்கள் என்று நம்பியுள்ளாரகள்.  பின்வரும் இந்த அறபுப் பாடல் கூறுவதைப் பாருங்கள்
ومن ييادي اسمي الفا بخلوته عزما بهمته صرما لغفوته أجبته مسرعا من أجل دعوته فاليدع يا عبد القادر محي الدين 
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும் தனது உறக்கத்தைக் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே ஓ அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் (எனனை) அழைக்கட்டும் (என்றும் தாங்கள் கூறினீர்கள்.)

இத்துடன்  இவர்கள் நிறுத்திக் கொள்ளாமல் நமது அப்பன் பாட்டன்களுக்கும் அதைக் கொண்டு அவர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு இதை சாதகமாக வைத்துக் கொண்டு மரணித்தவர்களுக்கு பாத்திஹாக்கள் கொடுக்கவில்லையென்றால் அவர்களின் ஆவி நம்மை சுற்றி வரும் என்று கூறி மக்களை நம்ப வைப்பதைப் பார்க்க முடிகின்றது.   இறந்து போனவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு திரும்பி வர முடியாது என்று அல்லாஹ்வின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களை வைத்து நிறூப்பித்துக் காட்டிய பிறகு  ஆதாரத்தைக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயத்தினாலும் இஜ்மா (ஏகோபித்த தீர்மானம்) ஒன்று நடந்திருக்கும் என்று சொல்லுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதுதான் அது மட்டுமல்லாமல் நபித் தோழர்கள் அனைவரும் ஏகமனதாக ஒரு கருத்திற்கு வந்தார்கள் என்று சொல்வதாக இருந்தாலும் அதுவும் அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும் அவரும் மரணிக்கக் கூடியவர்தான் அவரும் மௌத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற இந்த ஒன்றில்தான் இருக்க முடியும்.  அல்லாஹ்வின் வேதத்திலும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியிலும் அபூ பக்கர் (ரலி) அவர்களின் கூற்றிலும் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திலும் ஏகமனதாக ஒரு கருத்திற்கு வந்தார்கள் அதை இன்று குழி தோன்டிப் புதைத்துள்ளார்கள். இக்கொள்கைக் குழப்பம் இனி ஒரு காலத்தில் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இதை தெளிவாச் சொல்ல வேண்டும் அரை குறையாகச் சொல்லப்பட்டால் இந்த ஒரு விசயத்தில் அனைவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரும்.
உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்
தொகுப்பு- மனாஸ் பயானி 
இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger