இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?
ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம்
அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள்
அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். அப்துல் காதிர்
ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து
விட்டார்களா? என்ற ஒரு சந்தேகம் வரும். அப்படியானால்
இதுவும் அந்தக் கொள்கைக் குழப்பத்தில் அடங்கும். நபிமார்களாக இருந்தாலும் அவர் மரணித்தை
அடைவார்கள் என்று சரியான கொள்கையாக இருந்தால் இந்த அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களும்
மரணித்து விட்டார்கள் என்று ஒரு கருத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.
ஈஸா (அலை) அவர்கள் மரணித்து
விடவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னவைகள் என்ன ஆனது என்ற ஒரு கேள்வி
எழும்.
ஆனால் நாம் அல்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதருடைய தூய போதனையும்
பின்பற்றக் கூடிய நமது நிலைப்பாடு ஈஸா அவர்கள் மரணிக்க வில்லை என்பதுதான். ஒரு நாள்
மரணிப்பார்கள். ஆனால் அவர்களும் அனைவரும் மரணிப்பார்கள் என்ற விதியின் அடிப்படையில்
அவர்களும் என்றைக்காவது ஒரு நாள் மரணிப்பார்கள். இனி மரணிப்பார்கள் என்றுதான் நாம்
நம்புகிறோமோ தவிர இன்றைய தேதியில் அவர்கள் மரணிக்க வில்லை என்று நாம் நம்புகிறோம்.
ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?
இறைத் தூதர்கள் அனைவர்களும் மரணிப்பார்கள்
எனும் போது ஈஸா (அலை) அவர்கள் மாத்திரம் ஏன் இன்னும் மரணிக்கவில்லை அவர்களுக்கு
ஏதேனும் விதி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? என்ற ஒரு சந்தேகம் முஸ்லீம்கள்
மத்தியிலும் முஸ்லீம் அல்லாதோர் மத்தியிலும் இது நாள் வரைக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. இது பற்றி திருமறைக் குர்ஆனின் சான்றுகளைக் காண்போம்.
அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப் படாதீர்! என்னையே
பின்பற்றுங்கள்! இதுவே நேர் வழி'(எனக் கூறுவீராக.) ஷைத்தான் உங்களைத் தடுத்து விட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க
எதிரியாவான். அல்குர்ஆன் 43:61,62
ஈஸா (அலை) அவர்கள் கியாமத் நாளில் அடையாளமாக
இருக்கிறார். எனவே அவர்களை அந்த விசயத்தில் நம்ப வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் தான் நேரான
வழி என்று இந்த திருமறை வசனம் கூறுகிறது.
ஈஸா (அலை) அவர்கள் மரணிக்க வில்லை என்று
திருமறைக் குர்ஆன் கூறுவதனால் ஷைத்தான் மனிதர்களை இந்த விசயத்தில் திசை திருப்ப முயற்சிக்கிறான்.
அவனுடைய சூழ்ச்சிகளுக்கு முஃமின்கள் இலக்காகி விடக் கூடாது. அனைத்து இறைத் தூதர்களும் மரணித்து விட்டாலும் ஈஸா (அலை)
அவர்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் விதிவிலக்களிக்கிறான். என்று நம்ப வேண்டும்.
கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு
மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம்
எனக் கூற முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம்
என்று எப்படிக் கூற முடியும்? நபி (ஸல்) அவர்களை கியாமத் நாளின் அடையாளம் என்று கூற முடியும் ஏனெனில் ஈஸா (அலை)
அவர்களுக்குப் பிறகு வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் அவர்களை கியாமத் நாளின் அடையாளம்
என்று கூற முடியும். இந்த வசனத்தில் இருந்து இவர் மரணிக் வில்லை முஹம்மத் (ஸல்) மரணித்து
விட்டார்கள். இதனால் தான் ஈஸா (அலை) அவர்களை
கியாமத் நாளின் அடையாம் எனக் கூறுகிறான். அவர் கியாமத் நாள் நெருங்கும் போது மீண்டும்
பூமிக்கு வருவார்கள் ஏனெனில் அவர் பூமியில் வந்து மரணிக்க வேண்டும் என்ற விதியை அவர்களுக்கு
அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இதனால் தான் அவர் கியாமத் நாளின் அடையாளம் என்று கூறுவதுடன்
இது நாள் வரைக்கும் அவர்களுக்கு அவன் விதி விலக்கு அளித்துள்ளான்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும்,
அல்லாஹ்வின் தூதரான மர்யமின்
மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன்
முத்திரை யிட்டான்.) அவரை அவர்கள் கொல்ல வில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை.
மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே
உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள்
அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.அல்குர்ஆன் 4:156,157,158
ஈஸா (அலை) அவர்கள் யூத வம்சத்தில் பிறந்தவர்.
அவர்களுக்கு எதிரிகள் யூதர்களாகவே இருந்தார்கள். ஈஸா (அலை) அவர்கள் யூதர்களின் தவறான
கொள்கை கோட்பாடுகளை விமர்சித்து அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடு பட்டு வந்த
காரணத்தினால் அவர்களை யூதர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் மேலும் அவர்களுக்கு நோவினைகளையும்
இடையூறுகளையும் தொல்லைகளையும் கொடுத்து வந்தார்கள்.
நாங்கள்தான் ஈஸாவைக் கொலை செய்தோம் என்று கூறியதால் நாங்கள் சபிக்கப்பட்டோம் என்று
அவர்கள் கூறுவது மிகப் பெரிய பொய்யாகும். அவர்கள் ஈஸாவை கொலை செய்தோம் என்று பொய்யைக்
கூறிய காரணத்தினால்தான் அல்லாஹ் அவர்களை சபித்தான்.
ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை
என்று அல்குர்ஆன் கூறும் போது இவர்கள் நாங்கள்
தான் கொலை செய்தோம். என்று அவர்கள் எப்படிக் கூற முடியும். அவர்கள் ஈஸா (அலை) அவர்களை
சிலுவையில் அறையவும் இல்லை அவரைக் கொலை செய்யவும் இல்லை
யூதர்கள் கொலை செய்து சிலுவையில் அறைந்தோம்
என்று கூறுவது உண்மை ஆனால் யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்யவில்லை என்று குர்ஆன்
மறுக்கிறது ஈஸா (அலை) அவர்களைப் போன்று ஒரு மனிதர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு சிலுவையில்
அறையப்பட்டார். ஆள்மாறாட்டம் நடந்து விட்டது என்று சொல்லப்படுவதற்கு யார் முரண்படுகிறார்களோ
அவர்களுக்கு இது பற்றிய பூரண அறிவு இல்லை என்று குரஆன் கூறுகிறது.
அல்லாஹ் ஆரம்பத்தில் அவரைக் கொலை செய்யவில்லை
என்று கூறிவிட்டு பின்பு உறுதியாக அவர்கள் அவரைக் யாரும் கொலை செய்யவில்லை என்று அளுத்தம்
திருத்தமாக கூறுகிறான். அப்படியானால் ஈஸா (அலை) அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.
மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும்,
ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
அல்லாஹ் அவர்களை உயர்த்திக் கொண்டான் என்றால் அந்தஸ்துக்களையும் பதவி உயர்வுகளையும்
கொடுத்தோம் என்று நினைக்கலாம். அதற்கும் அல்லாஹ்
இடம்தராமல் மாறாக அவரை தன்னளவில் உயர்த்திக்
கொண்டான். ஒரு மனிதனை வானலோகத்திற்கு உயர்த்துவது எவ்வளவு கடினமான காரியம் ஆனால் மனிதனுக்குத்தான் அது கடினமே தவிர அல்லாஹ்வுக்கு
அது கடினமாக காரியம் இல்லை என்று அவன் கூறுகிறான். அந்தரத்தில் சூரியனையும் சந்திரனையும்
எதிலும் முட்டுக் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பவனுக்கு இரு ஒரு சிரமமான காரியம்
அல்ல ஏனெனில் அற்பத்திலும் அற்பமான மனிதனை ஒரு இந்திரியத் துளியில் இருந்து படைத்தவன்
மனிதனுக்கும் அவனுக்கும் உள்ள வேறுபாடே மனிதனால் முடியாத ஒன்றைச் செய்பவன் தான் இறைவன்
அது தான் இறைவனுக்குள்ள இலக்கணம்.
இன்னும் வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com