முஃதஸிலாக்களின் கொள்கைளும் தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படைகளும் ஓர் ஒப்பீட்டாய்வு


அண்மைக்காலமாக தவ்ஹீத் ஜமாஅத்தை முஃதஸிலா இயக்கம் என்றும் அதன் பிரசாரகர்களை முஃதஸிலாக்கள் என்று அதன் எதிர் முகாமலுள்ள பலரால் பரந்தளவில் துர்ப்பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது. துாய்மைவாத தவ்ஹீத் இயக்கத்தை மூலமற்றுப் போன இயக்கத்தடன் முடிச்சிட்டுப் பேசுவது இவர்களின் வங்கரோத்து நிலையையும் நமது வளர்ச்சி இவா;களின் வேர்களை விலாசமற்றதாக்க முனைந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சரியான கொள்கையை எதிh;க்க முடியாத பலவீன எதிh; முகாம்கள்முகாரி ராகமிடுவதும் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்வதும் இஸ்லாமிய வரலாற்றில் இன்று நேற்று தோன்றியதல்ல.அது வரலாற்றுக் காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர்.
சத்தியக் கருத்துக்களை முறியடிக்க முடியாத கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத சிந்தனை வரட்சியில் சிக்கித்தவிக்கும் அசத்தியக் கும்பல்களும்; வெற்று முத்தல்; வற்றல் ஆராய்ச்சியாளர்களும் தவறான இயக்கங்களுடன் அல்லது சிந்தனைகளுடன் ஏகத்துவ பிரசாரத்தை முடிச்சுப் போட்டுப் பேசி வந்துள்ளனர்.
தொன்மை வரலாற்றுக்காலம் தொட்டு இந்த வரலாற்றுக் காழ்;புணர்வுவழிவழியாக வந்துள்ளது என்பதை மூஸா நபியின் வரலாற்றில் காண முடியாது. அந்த முஃஜிஸாவால் கவரப்பட்டவர்களை தன் தோல்வியை மறைப்பதற்காக சூனியக்கார பிர்அவ்ன் பின்வருமாறு குற்றம் சுமத்தியதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَفَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71) طه : 71
'நான் உங்களுக்கு அனுமதியளிப்ப தற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங் களை மாறுகால் மாறுகை வெட்டி உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலு வையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும் நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்என்று அவன் கூறினான். (20 :71)
சூனியவித்தையை முறியடித்த மூஸா நபியையே சூனியத்தைக் கற்றுக் கொடுத்த குருஎன்று சூனியக்கார பிர்அவ்ன் கூறினான்.
முஹம்மது நபியை மக்கா காபிர்கள் இவ்வாறு பழித்தனர்.
إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (47) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا (48) } الإسراء: 47 - 49)
'சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
 (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.(27 :08-09)
தவரான உதாரணம் காட்டுவோரை அல்லாஹ் வழிகெட்டவர்கள் என்று கண்டிக்கின்றான்.
17ம் நுhற்றாண்டில் நவீன ஏகத்துவ எழுச்சியைத் தோறு;றுவித்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை யூதக் கைக் கூலி என்றும் அவரது ஏகத்துவ சிந்தனையால் கவரப்பட்டவர்களை வஹ்ஹபிகள் என்றும் துhற்றினர்.இன்றும் இவ்வாறு துhறு;றுவோர் உள்ளனர்.
இதேபோல் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டு போது அப்துல் ஹமீத் பக்ரியை தா;வீஸ் என்றும் வஹ்ஹபி,யூதக் கைக் கூலி எனறெல்லாம் இகழ்ந்தனர்.
இதே பிர்அவ்னிய வழியில் வந்த வரலாற்றுத் துரோகிகள் ஏகத்துவப் பிரசாரத்தை, என்றோ வழக்கொழிந்து போன முஃதஸிலா சிந்தனையுடன் தொடர்புபடுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஃதஸிலா இயக்கம் என்றால் பாரதுhரமானது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்த இவர்கள் எடுக்கும் எத்தனங்கள் எல்லாம் அற்பமானவை என்பதை இந்த சிந்தனையைப்; பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும்.
முஃதஸிலா இயக்கக்தின்  கொள்கை என்ன? தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்ன ? என்பதை நாம் இதில் ஓர் ஒப்பீட்டு ஆய்வு செய்யப் போகின்றோம். இந்த ஒப்பீட்டு ஆய்வு மூலம், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கு, முஃதஸிலா இயக்க சாயம் பூசுபவர்கள்  எத்தகைய நயவஞ்சகர்கள் என்பதை உணர்ந்து கொள்வீh;கள். இந்த நவீன பிர்அவ்னிய சூனியக்கார கூத்தாடிக் கும்பலுக்கு வரலாற்று ஞானமோ, முஃதஸிலா கொள்கை பற்றிய அறிவோ இல்லை. ஏன் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி அறிவு கூட இல்லை. அதனால்தான் இத்தகைய சம்பந்தமற்ற சமாச்சாரங்களை சந்திக்குக் கொண்டுவந்து சத்தியத்திற்கு முன்னால் சக்தி இழந்து கிழிந்து கிடக்கின்றனர்.
முஃதஸிலாக்கள் என்றால் யார்? என்பது பற்றி தாரீஹுல் ஜஹ்மிய்யா என்ற நுhலில் கூறப்பட்டுள்ள கருத்து கவனிக்கத் தக்கது. (முஃதஸிலாக்கள் கணிசமான  ஆதரவாளர் தளத்தைக் கொண்ட பெரியதொரு இயக்கமாகும். இதுஈராக்கில் அதிகமானவர்களையும்; ஈரான், சிரியா, இந்தியா போன்ற பிரதேசத்திலும் இதன் ஆதரவுத் தளம் இருந்தது முஃதஸிலா சிந்தனையால் கவரப்படவர்கள்; மில்லியன் கணக்கில் காணப்படுகின்றனர்.)
இது வரலாற்றில் தோன்றியதோர் பகுத்தறிவுவாத இயக்கம் என்று வரலாற்று அரிச்சுவடி  கூட அறியாதவர்களால் பேசப்பட்டுவருகிறது. இது இயக்கமாக பரிணமித்தது என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் சில முக்கிய சிந்தனைகள் அவர்களின் கொள்கையாக வர்ணிக்கப்படுகிறது. அவற்றிற்கும் நமக்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது அவை நாம் எதிர்க்கும் கொளகைகளா என்று இத் தொடரில் பரிசோதிக்கப்படும்.
அத்தோடு வழி கெட்ட 72 கூட்டங்கள் தொடர் உரையில் முஃதஸிலாக்கள் பற்றிப் பேசவில்லை.அதனால் இவர்கள் முஃதஸிலாக்கள் என்று மொட்டத் தலையன் குட்டையில் விழுந்த மாதிரி ஒரு விமர்சினத்தையும் முன்வைக்கின்றனர். அந்த உரையிலும் இன்னும் ஏராளமான உரையிலும் எழுத்துக்களிலும் இவர்கள் கூறும் முஃதஸிலா என்ற சிந்தனைக்கு சம்மட்டி அடி கொடுக்கப்ட்டுள்ளது என்பதை நாம்; ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுவோம்.
பதவிளக்கம்:
அரபி மொழியில்إعتزل  இஃதஸலஎன்ற பதம் விலகினான் என்ற அர்த்தத்தைத் தருகிறது. பத்ஹுல்பாரியில் இமாம் இப்னு ஹஜர் கூட இதே அர்த்ததை கொடுத்துள்ளார்கள். ஒரு மனிதர் ஜமாஅத்துடன் தொழாமல் விலகி நின்றார் என்ற அh;த்த்தில் إعتزل இஃதஸல  என்ற பதம் உள்ள ஹதீஸை இமாம் புகாரி முஸ்லிம் போன்றோர் இட்டுள்ளனர்.
அஹ்லுஸ்ஸுன்னாவல்ஜமாஆ என்ற குழுவினர் தனது சிந்தனைக்கு மாற்றமான ஒரு பிரிவினரை இந்தச் சொல்லால் குறித்தும் வந்துள்ளனர்.
வலுவான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்கின்ற போது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் ஈராக்கின் பெரு நகரமான பஸராவில் ஹஸனுல் பஸரி என்ற தாபியீ பல மாணவர்களை வைத்து வகுப்புக்களை நடாத்தி வந்தார். அதில் ஒருவரான வாஸில் பின் அதாஉ என்பவர்  இருந்தார்.
பெரும் பாவம் செய்தவனின் நிலை பற்றி இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதாவது அவன் இவ்வுலகில் சுவர்க்கம், நரகம் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் கணிக்கப்படுவான். முஃமினும் அல்ல் காபிரும் அல்லன். எனினும் மறுமையில் நிரந்தர நரகத்தில் இருப்பான் என வாஸில் பின் அதாஉஎன்ற மாணவர் கருதினார். தனது ஆசிரயரின் சிந்தனைக்கு உடன்பாடாக தனது சிந்தனை இடம் கொடுக்க வில்லை என்பதால் அந்த குருமடத்தைவிட்டு பிரிந்து சென்றார்.
தனது ஆசானுடன் கருத்து மோதல் ஏற்பட்டு ஒரு மாணவன் பிரந்து சென்ற ஒரு நிகழ்வைக் குறித்து அந்த ஆசான் هو اعتزل عنا  அவர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று கூறுகின்றார். அற்பமான இந்த ஒரு நிகழ்வுதான் முஃதஸிலா என்ற பதப்பிரயோகத்தின் வரலாற்றுப் பின்னணி . பின்நாளில் முஃதஸிலா என்ற சிந்தனை அப்பாஸியாக்களின் ஆட்சிக் காலத்தில் மக்களிடம் வேறுவடிவில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது என்று வரலாற்றில் குறிப்புகள் உண்டு. இச்சிந்தனை அல் வாஸிலிய்யா  என்றும் வேறு சில பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகிறது.

المعتزلة: سموا بذلك لاعتزال واصل بن عطاء وعمرو بن عبيد - من رؤسائهم - مجلس الحسن البصري لقولهما بأن مرتكب الكبيرة ليس بمؤمن ولا كافر، وقيل سموا معتزلة لاعتزالهم منهج أهل السنة والجماعة، ومن عقائدهم إنكار جميع صفات الله، والقول بأن القرآن محدث، وأن الله لا يرى في الآخرة، وتصل فرقهم إلى حوالي عشرين فرقة، انظر: مقالات الإسلاميين (1235) ، الفرق بين الفرق ص (11) ، البرهان في معرفة عقائد أهل الأديان ص (49)
இதைத்தான் இன்று தவ்ஹீத் சிந்தனையுடன் முடிச்சிட்டு நம்மை முஃதஸிலா என்று மூடத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் பரப்பிவருகின்றர்;. இவர்கள் நம்மை நோக்கி ஒரு விரலை நீட்டினார்கள். ஆனால், அவா;களின் 3 விரல்கள் அவர்களை நோக்கி உள்ளது என்பதை ஏனோ உணர மறந்துவிட்டார்கள்.
வரலாற்றில் பிரிவதும் இணைவதும் சர்வசாதாரணமான நிகழ்வுகள். இவர்களின் வரலாற்றில் எத்தனை பிரிவுகள். ஏன் இவர்களின் விமர்சனப்படி பார்த்தால் இவர்களே முஃதஸிலா பிரிவினைவாதிகள்தான். உதாரணமாக வெளிநாட்டு நிதி பெற்று தப்லீகை வளா;க்கும் அமைப்பான ஐஐசுழு விலிருந்து பிரிந்த அன்ஸார் தப்லீகி ருமு  பணத்திற்கு மாறினார். இது பற்றி ஐஐசுழு காரா;களிடம் கேட்டால் அவர்கள் أنصار اعتزل عنا  என்று கூறுகிறாh;கள். அதவாவது அன்ஸார் தப்லீகி ஒரு முஃதஸிலா என்று அவர்கள் கூறுகிறார்கள். வானத்தைப் பார்த்து துப்பிவிட்டார்கள்.அது இவா;களின் முகத்தில் இப்போது விழ ஆரம்பித்துள்ளது.

முஃதஸிலாக்களின் அடிப்படைகளும் கொள்கைளும்
முஃதஸிலாக்கள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவோரிடம்  ஐந்து அடிப்படைகள் இருந்ததாக பலரும் 6 அடிப்படைகள் இருந்ததாக சிலரும் கூறுகின்றனர். அவற்றை விரிவாக நோக்கவோம்.
وللمعتزلة أصول خمسة وهي: العدل- التوحيد- المنزلة بين المنزلتين- الوعد والوعيد- الأمر بالمعروف والنهي عن المنكر.
1.            தவ்ஹீத் - التوحيد-    இறைமக் கோட்பாடு
2.            அல் அத்ல்   العدل-இறைத்தூது, விதி பற்றிய கோட்பாடு
3.            அல்வஃத், வல்வஈத் - الوعد والوعيد  மறுமை பற்றிய கோட்பாடு
4.            இரண்டு நிலைகளுக்கிடையிலான ஒரு நிலை - المنزلة بين المنزلتين பெரும் பாவம் பற்றிய கோட்பாடு
5.            நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் - الأمر بالمعروف والنهي عن المنكر.
6.            6வது அடிப்படையாக குர்ஆன் படைக்கப்பட்டது என்று அவர்கள் நம்புவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளும்; ஒருவரே முஸ்லிமாகக் கருதப்படுவார் என முஃதஸிலாக்கள் குறிப்பிடுவதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்களின் அடிப்படைகளிலிருந்து நமது கொள்கை வேறுபடும் விதத்தை இனி ஒப்பிட்டு நோக்குவோம்.
முஃதஸிலாக்களின் கொள்கை: 1- அத்தவ்ஹீத்  - التوحيد
இக்கோட்பாட்டினுhடாக முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகள் பற்றிப் பேசுகின்றனர். அல்லாஹ்வின் பண்புகளைக் கொண்டு அவனை வர்ணிப்பதை விட்டு விட்டு புதிய பண்புகளை அவர்கள் உருவாக்கினர். அவைதான் உண்மையானவை எனவும் நம்பினர். அவர்கள் உருவாக்கி அந்தப் பண்புகள் அல்லாஹ்வே இல்லைஎன்ற நிலையைத் தோற்றுவிக்கிறது.
 அஷ்அரீ என்பவர் முஃதஸிலாக்களின் தவ்ஹீத் கோட்பாட்டைப் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.
அல்லாஹ் ஒருவன்; அவனைப் போன்று எதுவும் கிடையாது; அவன் கேட்பவன்; செவிமடுப்பவன்; அவனுக்கு உடம்போ, ஆவியோ இல்லை. அவன் உருமவற்றவன்; அவனுக்கு எலும்போ, இரத்தமோ இல்லை. அவனுக்கு நிறம், சுவை, வாடை, உணர்வு இல்லை. சூடு,குளிர், காய்ந்த தன்மைகளும் இல்லை.  அவனுக்கு நீளமில்லை; அகலமில்லை, ஆழமுமில்லை, அசைவும் இல்லை. அமைதியும் இல்லை.  அவனுக்கு உடலுறுப்புக்கள் இல்லை. அவன் திசையற்றவன்; அவனுக்கு வலதுமில்லை, இடதுமில்லை; முன்னுமில்லை, பின்னுமில்லை; மேலுமில்லை, கீழுமில்லை; அவனுக்கென்று ஒரு இடமும் இல்லை. இதுவே அவாகளின் முதலாவது கொள்கை.
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை:
மேலுள்ளதுதான்  முஃதஸிலாக்களின் முதலாவது அடிப்படை. அதைப் பார்த்தவுடனேயே இந்தக் கொள்கைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கும் எள்ளின்  முனையளவு கூட சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். எனினும் குருடன் கொக்குப் பார்த்த நிலையில்தான் இன்று பலர் உள்ளனர். அதனால் இது பற்றி விரிவாக விளக்க வேண்டும் என்று கருதுகின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அடிநாதமே சூறா இக்லாஸ்தான்.
1. ”அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
2. அல்லாஹ் தேவையற்றவன்.
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
இது ஒன்றே முஃதஸிலாக்களின் முதலாவது அடிப்படை தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கு நேர் எதிரானது என்பதை புரிந்து கொள்ளப் போதுமானது.
அல்லாஹ்வின் பண்புகள் தொடா;பாக ஏகத்துவ பிரசாரத்தின் துவக்கத்திலேயே இவர்களின் மலட்டு வாதங்களுக்குப் பதில் அளிக்கப்ட்டுள்ளது. ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தொடர் சொற்பொழிவிலும் மிகத் தெளிவாகப் பதில் அளிக்கப்ட்டுள்ளது. ஏகத்துவமும் எதிர்வாதமும் கடவுள் இல்லை என்று வாதிடுவோரின் வரட்டு வாதங்களுக்கும், பல கடவுள் கொள்கை உடையவர்களின் அறியாமைக்கும், இஸ்லாத்தில் இருந்து கொண்டே ஏகத்துவத்துக்கு எதிரான வாதங்கள் வைப்போருக்கும் தக்க பதிலளிக்கும் தொடர் உரை. 28 பாகங்கள்
 அந்த உரையைக் கேட்க http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/egathuvamum_ethirvathamum/ லிங்கை நாடவும்
முஃதஸிலாக்களின் தவரான தவ்ஹீத் கோட்பாட்டைப்பற்றி தவ்ஹீத் ஜமாஅத் பேசிய அளவு எந்த ஜமாஅத்தும் பேசியதில்லை என்று துணிந்து கூறும் அளவு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன. இறைவன் உருவமற்றவனா? என்ற விரிவான கட்டுரை இன்னும் மிகத் தெளிவாகப் பதில் அளிப்பதால் அதை இங்கு தருகின்றோம்.
திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் முக்கியமான இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறுதான் நம்புகின்றனர். இறைவனை யாரும் பார்க்காததால் அவனை உருவமாக ஆக்கி முஸ்லிம்கள் வழிபடுவதில்லை என்ற கருத்தில் இப்படிக் கூறிவருகின்றனர்.
 ஆனால், இறைவன் என்றால் ஒன்றுமே இல்லாத சூனியம் என்ற கருத்தில் இப்படிக் கூறுவார்களானால் அது முற்றிலும் தவறாகும். திருக்குர்ஆனில் எந்த வசனத்திலும் இறைவன் உருவமற்றவன் என்று சொல்லப்படவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தமது பொன்மொழிகளில் இறைவன் உருவமற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை. மாறாக இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கருத்தில் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. நபிமொழிகளிலும் உள்ளன. இறைவனுக்கு உருவம் இல்லை என்ற இஸ்லாத்துக்கு எதிரான கருத்து இஸ்லாத்தின் பெயரால் மக்களிடம் புகுந்து விட்டதால் மக்களிடம் இறைவனைப் பற்றிய அச்சம் உரிய அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ் என்றால் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்று சொல்வதால் ஒன்றுமில்லாத சூனியத்துக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் அவர்களையும் அறியாமல் வேரூன்றியுள்ளது.
இறைவன் தனக்கே உரிய உருவத்தில் இருக்கிறான். ஆனால் அந்த உருவம் எத்தகையது என்று நாம் சொல்ல முடியாது. மறுமையில் அவனை நாம் காணும்போது தான் அவனது உருவம் நம் கண்களுக்குத் தென்படும். இப்படித்தான் அல்லாஹ்வைப் பற்றி முஸ்லிம்கள் நம்ப வேண்டும். இதற்கு திருக்குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
மறுமையில் நாம் அல்லாஹ்வைப் பார்ப்போம் என்று திருக்குர்ஆன் 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
 மறுமையில் இறைவனைக் காண முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரி 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440)
மறுமையில் இறைவனைக் காண முடியும் என்பது இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கான சான்றாகும். உருவம் என்று ஒன்று இருந்தால் தான் கண்களால் அதைப் பார்க்க முடியும். இறைவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)
அல்லாஹ், அர்ஷு எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று இவ்வசனங்கள் (9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15) கூறுகின்றன. சிம்மாசனத்தில் வீற்றிருப்பது என்பதும் இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதற்கான சான்றாகும். உருவமே இல்லாவிட்டால் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேச்சுக்கு இடமில்லை.
 சிம்மாசனம் என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவது தவறாகும். ஏனெனில் இவ்வசனங்களில் (39:75, 40:7, 69:17) அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளதாகவும் அர்ஷைச் சுற்றி இருந்து கொண்டு வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வானவர்கள் சுமக்கும் ஒரு பொருளாகவே அர்ஷ் என்பது சொல்லப்படுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
 மறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்று 89:22 வசனம் கூறுகிறது. மறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்று 68:42 வசனமும், புகாரி 4919வது ஹதீஸும் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், இன்னும் அதிகம் இருக்கின்றதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும், போதும்என்று கூறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 4848, 4849 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்குக் கால்கள் உள்ளதாக இதில் இருந்து தெரிகின்றது. மறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் போது அவர்களிடம் இறைவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரி 7440, 806வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
மறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து  இரகசியமாக உரையாடுவான். அவன் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க : புகாரி 4685) அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு இதுவும் சான்றாகும்.
உலகம் அழிக்கப்படும் போது வானம் பூமி அல்லாஹ்வின் கைப்பிடிக்குள் அடங்கும் என்று 39:67 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தன் கைப்பிடிக்குள் எப்படி அடக்குவான் என்று சைகை மூலம் விளக்கியுள்ளதாக முஸ்லிம் 7228, 7229வது ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.
தவ்ராத் வேதத்தைக் தன் கைப்பட எழுதி மூஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று புகாரி 6614வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. கியாமத் நாளில் பூமி அல்லாஹ்வின் கையில் ஒரு ரொட்டியைப் போல் அடங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று புகாரி 6520வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
மூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் என்று முஸ்லிம் 4825வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. முதல் மனிதர் ஆதமை தன் இருகைகளால் படைத்ததாக 38:75 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இது போல் ஏராளமான சான்றுகள் இறைவனுக்கு இரு கைகள் உள்ளதாகக் கூறுகின்றன. தஜ்ஜால் என்பவன் தன்னை இறைவன் என்று கூறுவான். ஆனால் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும். அவன் கூறுவதை நம்பாதீர்கள். உங்கள் இறைவன் கண் ஊனமானவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரி 3057, 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407) இறைவனுக்கு இரு கண்கள் உள்ளன என்பதை இதிலிருந்து அறியலாம். அல்லாஹ் மறுமையில் சிரிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 7437, 3798, 6573 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. அல்லாஹ் மூஸா நபியிடம் உரையாடியதாக 2:253, 4;164, 7;143, 7:144 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அல்லாஹ்வுக்கு வாய் உள்ளது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.
இறைவன் கேட்பவன் பார்ப்பவன் என்று ஏராளமான வசனங்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் இறைவனுக்குச் செவியும் கண்களும் உள்ளன என்பதற்கான சான்றுகளாக உள்ளன. இதுபோல் எண்ணற்ற சான்றுகள் இருந்தும் சிலர் இதற்கு வேறு விளக்கம் கொடுத்துள்ளனர். இவர் எனது வலது கை என்றால் இந்த இடத்தில் வலது கைபோல் முக்கியமானவர் என்று தான் பொருள். இவர் எனக்குக் கண்ணாவார் என்றால் கண் போன்றவர் என்று தான் பொருள். அது போல் தான் அல்லாஹ் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ள பண்புகள் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது இவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.
பொதுவாக எந்தச் சொல்லாக இருந்தாலும் அதற்கு நேரடியான பொருள் தான் கொடுக்க வேண்டும். நேரடியான பொருள் கொடுக்க முடியாத போது தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். மேற்கண்ட உதாரணங்களில் ஒருவன் இன்னொருவனுக்குக் கையாகவும் கண்ணாகவும் இருக்க முடியாது என்பதால் இங்கே வேறு பொருள் கொடுக்கிறோம். ஆனால் அவன் கையால் சாப்பிட்டான்; அவன் கை உடைந்தது; கண் சிகிச்சை செய்தான்; கண் விழித்தான் என்பன போன்ற ஆயிரக்கணக்கான சொற்களை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்கிறோம். அது போல் தான் அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது எந்த இடங்களில் நேரடிப் பொருள் கொள்ள முடியாதோ அந்த இடங்களில் மாற்றுப் பொருள் தான் கொடுக்க வேண்டும். இவை மிகவும் குறைவாகும். அது போன்ற இடங்களை (தமிழாக்கத்தின்) 61வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நேரடிப் பொருள் கொள்ள முடியாத அந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் நேரடிப்பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்பவர்கள் வைக்கும் ஒரே சான்று அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்ற கருத்திலமைந்த வசனங்கள் தான். அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொன்னால் அவனைப் போல் எதுவும் இல்லை என்ற வசனங்களுக்கு அது முரணாகி விடுமாம். இந்த வாதம் அறிவுடைய மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். அல்லாஹ்வின் படைப்புகளில் உருவமுள்ளவையும் இருக்கின்றன. உருவமில்லாதவையும் இருக்கின்றன. காற்று வெளிச்சம், மின்சக்தி, வெப்பம், குளிர் போன்றவை உருவமற்றவையாக உள்ளன. அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது என்று சொன்னால் அது படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடும் என்ற வாதப்படி பார்த்தால் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் உருவமற்றவைகளுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கியதாக ஆகும். இதிலிருந்தே இவர்களின் வாதம் எந்த அளவு அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது; ஆனால் அது படைப்பினங்களைப் போன்றதல்ல என்று சொன்னால் ஒரு குழப்பமும் இல்லாமல் எல்லாம் தெளிவாகி விடும். நாம் அப்படித்தான் சொல்கிறோம். அவனைப் போல் எதுவும் இல்லை. திருக்குர்ஆன் 42:1 ”அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!  அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. திருக்குர்ஆன் 112:1-4 ஆகிய வசனங்களைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு யாருக்கும் ஒப்பாகாத தனக்கே உரிய உருவத்துடன் அவன் இருக்கிறான் என்று நம்புவது தான் சரியான நம்பிக்கையாகும். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இருந்து கிடைக்கும் விளக்கம் இதுதான்.
 http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/488_iraivan_uruvamatravana/
இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் இறைமைக் கோட்டுபாடு தொடர்பான ஆணித் தரமான நிலைப்பாடு. இதில் முஃதஸிலா சிந்தனைக்கு மாத்திரமன்றி சரியான இறையேற்புக் கோட்பாட்டில் தடம்புரண்ட அனைத்து அசத்தியக் கும்பலுக்கும் பதில் அளிக்கப்ட்டுள்ளது.
இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்



Share this article :

+ comments + 1 comments

February 24, 2014 at 10:29 PM

அசத்தியவாதிகளை தோளுரிதுக்கட்டுவோம்

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger