ஈசா (அலை) அவர்கள் இறங்கி வருவார்களா?

அந்த 72 கூட்டத்தினர் யார்? 
 தொடர் - 8

உரை- பீ.ஜைனுல் ஆபிதீன்
தொகுப்பு- மனாஸ் பயானி 
 அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அபூ ஹ‚ரைரா (ரலி) அவர்களிடம் வந்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? என வினவிய போது பின்வரும் இந்த வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்றார்.


மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்க üடையே நேர்மையாகத் தீர்ப்பüக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்கüடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ள வற்றையும் விடச் சிறந்ததாக (மக்கüன் பார்வையில்) ஆகிவிடும்.
இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ர-) அவர்கள், " "வேதம் வழங்கப்பட்டவர்கüல் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாüல் அவர் களுக்கெதிராக அவர் சாட்சியம் அüப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
ஆதாரம் புகாரி:3448
 அல்குர்ஆனில் ஈஸா (அலை) அவர்கள் கொலை செய்யப் படவில்லை என்பதற்கு ஏராளமா சான்றுகள் உள்ளது. அவர்கள் கொலை செய்யப்படவில்லை. சிலுவையில் அறைப்படவில்லை, தன் அளவில் உயர்த்திக் கொண்டான்,அவனுக்கு வலிமையும் நுணுக்கமான அறிவும் உள்ளது, நான் ஆற்றல் மிக்கவன், அவர் மரணிப்பதற்கு முன்னர் அனைவர்களும் நம்பிக்கை கொள்வார்கள், அவர் கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார், அல்லாஹ் இத்தனை வாசங்கள் மூலம் தெளிவு படுத்துகிறது. அவர்களுக்கு அல்லாஹ் பிறப்பில் விதி விலக்கை கொடுத்தது போன்று இறப்பிலும் விதி விலக்கை அல்லாஹ் கொடுத்தான். என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைத்தூதர் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு அவரைக் கடவுள் என்றும் அவர் கடவுளின் மகன் என்றும் கூறி வந்தவர்கள் தற்போது அந்த நிலையை மாற்றி அவர்கள் ஆண்டவராகிய ஏசு கிறிஸ்த்து என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
 நீங்கள் ஏசுவை கடவுள் என்று சொல்வது தவறு என்பது அல்லாஹ்வின் வாதம்
75. மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! அல்குர்ஆன்:5:75
 ஈஸா (அலை) அவர்களையும் அவருடைய தாயாரையும்  கடவுள்  என்கிறீர்கள். அவர்கள் இருவரும் உணவு உண்பராக இருந்தார்கள். உணவு உண்டு மலசம் கழித்து இயற்கைத் தேவைளின் பால் நாட்டம் கொண்டவர்களை எப்படிக் கடவுள் என்று சொல்ல முடியும். கடவுளாக இருப்பவர்கள் உணவோ குடிபானமோ உறக்கமோ மறதியோ இயலாமையா இருக்கவே கூடாது. ஆனால் இவர்கள் இருவரிடமும் இந்தப் பண்புகள் காணப்பட்டது. இது பற்றிய ஏதாவது காரணங்கள் கூறி விட முடியும் ஆனால் கடவுள் என்பவர்கள் மரணிக்கவே கூடாது. மரணித்து விட்டால் தன்னையே மரணத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எப்படிக்  கடவுளராக இருக்கவே முடியும்.?
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவருக்கு முன்னர் தான் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் அனைவர்களும் மரணித்து விட்டார்கள் என்றுதான் புரிந்து கொள்கிறோம். அப்படியானால் ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று இந்த வசனம் கூறுகிறது.
அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்ற வாசகத்தில் இருந்து அவர் போகவில்லை என்று தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. அவர் மரணித்திருப்பாரானால் அவருக்கு முன்னாடி உள்ள தூதர்கள் சென்றிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.  
இறைத் தூதர்களான ஆதம் (அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை வந்த அனைத்து இறைத் தூதர்களும் மரணித்து விட்டார்கள். ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் விதிவிலக்கை அளித்துள்ளான்.
  அல்லாஹ் மனிதர்களில் எவருக்கும் மரணத்தில் விதி வலக்கை ஏற்படுத்த வில்லை ஆனால் இன்று முஸ்லீம்களில் சிலர் இத்ரீஸ், ஹள்ர் (அலை) ஆகியோருக்கு அல்லாஹ் விதி விலக்கை ஏற்படுத்தியுள்ளான். என்று ஒரு பொய்யான கட்டுக் கதையைக் கூறுகிறார்கள். இதற்கான எந்த ஆதாரத்தையும் அல்குர்ஆனில் காணமுடியவில்லை
 ஈஸா (அலை) அவர்களுக்கு குர்ஆனில் விதி விலக்கு அளித்துள்ளதாக அல்லாஹ்வே கூறுகிறான். நபிமொழிகளில் அவர் இறுதிக் காலத்தில் உலகிற்கு இறங்குவார்கள், அவர் தஜ்ஜாலைக் கொலை செய்வார்கள், அவருக்கு பின்னால் உலக மக்கள் அனைவர்களும் அணிவகுத்து நிற்பார்கள்,அவருக்கு வருகைக்கு பின் உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நன்மக்களாக மாறுவார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் நபியாக வருவாரா? என்றால் அவர் நபியாக வரமாட்டார். அவரும் நபி (ஸல்) அவர்களைத் தான் பின்பற்றுவார். அவருக்கு தொழுகை நடத்துமாறு கூறப்படும் போது  முடியாது என்று மறுத்து விடுவார்கள்.
ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை அல்லாஹ் மறுமை நிகழ்வு நடக்கும் வரைக்கும் விதி விலக்கு அளித்துள்ளான் அவர் உலகிற்கு மீண்டு வருவது மரணிப்பதற்காகவே இதனால் தான் அவர் மறுமையின் அடையாளமாக இருக்கிறார் என்று அல்குர்ஆன்  குர்ஆன் கூறுகிறது.
இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.  அல்குர்ஆன் 20:55
அவர் எங்கிருந்தாலும் இந்த பூமிக்குத்தான் திரும்பி வர வேண்டும் இங்குதான் அல்லாஹ் அவருக்கு மரணத்தை விதியாக ஆக்கியுள்ளான் இங்குதான் அவர் அடக்கம் செய்யப் படுவார். இங்கிருந்துதான் அவர் எழுப்பப் படுவார்.
 ஈஸா (அலை) அவர்கள் ஆகாயத்தில் இருந்து கொண்டு எதைச் சாப்பிடுகிறார்? எப்படி உறங்குகிறார்? என்ற விதண்டாவாதமாக சில கேள்விகளை எழுப்புகிறார்கள். அவரை கோடான கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள வானலோகத்திற்கு உயர்திய அல்லாஹ்விற்கு இது ஒரு சிரமமான காரியம் இல்லை நடக்கவே முடியாத காரியங்களை அவன் நடத்திக் காட்டும் போது இப்படியான சில்லரைக் காரணங்கள் அவனுக்கு முடியாது போய் விடுமா? அவனுடைய இலக்கணத்தில் முடியாது என்பதற்கு இடம் இல்லை  அல்லாஹ் விண்ணுலகிற்கு அவரை  உயர்த்தும் போது எல்லா  விதமான ஆயத்தங்களுடன் தான் அவன் உயர்த்தி உள்ளான். அவனுக்கு சிரமமான காரியமாக  இல்லை 
சுவனவாசிகள் அங்கு அவர்கள் யாரும் இயற்கை தேவைகளைக் கழிக்க வேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமோ அவர்களுக்கு ஏற்படுத்தப் படவில்லை நாம் சுவனத்திற்குச் சென்றால் அங்கு இயற்கை உபாதைகளுக்கு செல்லமால் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
இரண்டாயிரம் வருடமாக ஒருவர் உயிருடன் வாழ்வது ஆச்சரியம் என்றால் தந்தை இல்லாமல் அவர்கள் பிறந்தார்கள் என்பதும் ஒரு ஆச்சரியமே அல்லாஹ் கூறாத ஒன்றைக் கூறினால் அது பொய்யாகவிடும் அல்லாஹ் கூறிய ஒன்றில் மாற்றுக் கருத்தை தெரிவிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரம் இல்லை
ஈஸா (அலை) அவர்களுக்கு விதி விலக்கு இல்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியிருந்தால் நாமும் அப்படியே கூறியிருப்போம். இதை அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு மறுப்பாகவே கூறுகிறான். எனவே நமது நம்பிக்கை அல்லாஹ் கூறுவது போன்று அமைத்துக் கொள்ள வேண்டும்.


இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger