Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கொள்கை. Show all posts
Showing posts with label கொள்கை. Show all posts

அநியாயக்காரன் பிர்ஆவ்ன் அழிக்கப்ட்ட மாதம்

முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள்.  "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும்  நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3397
இந்தச் சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?
0 comments

அல்லாஹ்வை நேசிப்போம். ஈமானைப் பாதுகாப்போம்.

ந்த உலகத்தில் வாழக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தர வேண்டும் என்று இறைவனின
0 comments

இலட்சியக் கனவு காணும் இளைமைப் பருவமும் இலக்கு மாறும் இளைஞர்களும் - 1

எம். ஏ. ஹபீழ் ஸலபி
ன்று முழு முஸ்லிம் உம்மத்தும் உலகளாவிய ரீதியில் ஓர் இறுக்கமான நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவர்களுக்கெதிரான சதிவலைகள் பின்னப்பட்டு அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, இனச் சுத்திகரிப்புக்கு ஆற்படுத்தப்படுவதையும் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களை ஒடுக்கி, இஸ்லாத்தை கொச்சப்படுத்துவதற்காக, இஸ்லாத்தின் எதிரிகள் எல்லாம் தமக்கிடையே இருந்து வந்த நீண்டகால பகையுணர்வை மறந்து, கைகோர்த்துள்ளனர். இவர்களின் தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு போர்ப் பிரகடணத்தையே செய்துள்ளன.
இத்தகைய ஒரு நெருக்கடியான காலகட்டத்திலே, ரணப்பட்டுப் போயிருக்கும் இஸ்லாமிய உம்மத்திற்கு ஒத்தடம் கொடுக்கவேண்டிய இளைஞர்கள் பற்றி நாம் எமது கவனத்தை குவிமையப்படுத்த வேண்டியுள்ளது. இஸ்லாமிய உம்மத் எதிர்நோக்கும் இன்றைய காலத்தின் அறை கூவலுக்கு அவர்கள்தான் தமது அறிவுக் கூர்மையால் சரியான பதிலடி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அங்கமான இளைஞர்களின் பணி எத்தகையது என்பது பற்றி சிந்தித்து, அவர்களது செல்நெறியை வகுத்துக் கொடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமையாகவுள்ளது.
ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஆக்க சக்தியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த சமுதாயம் உயர்ந்த, உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெற முடியும் என்பதில், இளைஞர்களின் சக்தியை நன்கு புரிந்தவர்களிடம் மாற்றுக் கருத்து எதிரொலிக்க முடியாது.
இஸ்லாமிய சமூகத்தில் இளைஞர்கள் முக்கிமான, சிற்பான இடத்தை வகிக்க வேண்டும். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாகவும் அதன் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி, அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இளமைப் பருவம் என்பது, அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில்  மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும்.
ஏனெனில், நபியவர்களின் தூதுத்துவப் பணி பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும் போது, 'நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.'(அல்குர்ஆன்:03:164)
 உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, கையாளாகாத நிலையில் இருந்துவிட்டால், இளைஞர்கள் தவறான, இஸ்லாத்திற்கு முரணான திசைகளில் வழிநடாத்தப்பட்டு, அவர்களது ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்பட்டு, மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு, இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏனையவர்களுக்கும் தலையிடியாகப் போவது தவிர்க்க முடியாது. முழு மனித இனத்திற்கும் அது அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, குக்கிராமம் முதல் பெரும் நகரங்கள வரை, உலகலாவிய ரீதியில் பேரலையாக ஆர்த்தெழுந்து விரவிவரும் இளைஞர்களின் முறை தவறிய உணர்ச்சி ரீதியான போராட்டங்கள், ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அறியாமை,ரவுடிசம், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்கள் என்பன இளைஞர்களைப் பண்படுத்தத் தவறியமையை பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றன.
 இளைஞர்களைக் கணக்கில் கொள்ளாது விட்டதனால் 'மாபியா'க் கும்பல்கள் அவர்களை தமக்குச் சாதகமாக, நன்கு பயன்படுத்தி வருகின்றன. இஸ்லாமிய சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்களில் ஒரு சாரார், அதன் அழிவு சக்தியாக பயன்படுத்தபப்படுகின்றார்கள்.
இன்று கொலை,கொள்ளை, மது, மாது, சூது, பாலியல் வன் கொடுமை வெறியாட்டங்கள்,வரதடசணைக் கொடுமைகள், போன்ற சமூகக் கொடுமைகள்தான் உலகில் எங்கு நோக்கினாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்திற்கும் காரணம் யாரென்றால், சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராட வேண்டிய இளைஞர்கள்தான்.
சினிமாவிலும் இசையிலும் அற்ப சிற்றின்பத்திற்காக தமது  பொன்னான நேரங்களையெல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்களே! எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் பதிலீடு இல்லை. அவற்றை ஒரு போதும் மீளப்பெறவே முடியாது. கடந்தவை கடந்து விட்டன. இனி இருக்கும் காலத்தையாவது பிரயோசனமாகக் கழிக்க முயற்சிப்போம். ஏனெனில்,மறுமையில் எமது இளமைப் பருவம் பற்றியும் கேட்கப்படுவோம்.
 'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1.            தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2.            தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3.            செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4.            பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழி) நூல்: தபராணி.

 நபி (ஸல்) அவர்கள் தமது பிரசாரத்தை ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, ஏற்று, செயற்பட்டு, அதனை பிரசாரப்படுத்தியவர்களும் இளைஞர்களே!
 எமது சமூகத்தின், நாகரிகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் நமது இளைஞர்களின் கரங்களிலே பாரியளவு தங்கியள்ளது. எனவே, அவர்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்த்துவதோடு, அவர்களை வழிபிறழச் செய்யும் சமூக, சூழல் காரணிகள், அவர்களின் இன்றைய நிலை, ஈடேற்றம் பெற என்ன வழியுண்டு என்பன பற்றிய தெளிவைப்  பெறவேண்டும்.
இளமைப் பருவம்:
உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆக்குவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது. பெற்றோர்கள் கொள்கை உறுதிமிக்கவர்களாக, இஸ்லாமியப் போதனைகளைப் பேணி நடப்பவர்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெற்றோர்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருந்தால் அவர்களது குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிக்கும்  என்பதை நபியர்களின் பொன்மொழி பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றது. 
'ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ, அதைப் போல எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (1359)
தந்தை கெட்ட தீய பண்புள்ளவனாக இருந்தால் பிள்ளையும் கெட்டவனாக வளர்க்கப்படுகிறது. சிகரட், குடி என்பவற்றிற்கு அடிமையாவது குடும்ப சூழலே என ஆய்வுத் தரவுகள் சுட்டி நிற்கின்றன.
மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுருகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும். இதற்கு இளைஞர்களின் இறைவிசுவாசமும், இறைநம்பிக்கையும் மிக உறுதியாக்கப்படக்கூடிய ஆன்மீக ஒளியூட்டல் அவசியமாகும்.
இளமையின் பண்பு:
இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். முpக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள். இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக காணப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
இலட்சியக் கனவு காணும் பருவம்:
இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர். எனினும், இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள்.இப்பருவத்தில் தனது வாழ்க்கைத் துணை நலப் பற்றி அதிகம் சிந்திப்பார்கள்.அவர்களுக்கு இஸ்லாம் இவ்வாறு வழிகாட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (5090)

இளைஞர்-யுவதிகள் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் போது, ஒழுக்கத்தையும் மார்க்கப் பிடிப்பபையும் முதலில் கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதற்கடுத்து பெண்கள் கணவன் செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
'கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்.)(அல்குர்ஆன்24: 26)
பயனுள்ள பருவம்:
எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய பெயர் தாங்கிய இயக்கங்கள், அமைப்புக்கள் அதிகளவு இளைஞர்களை பயன்படுத்தவும் தவறிவிட்டன. அதனால், இன்று தவ்ஹீத் என்று ஓர் இளைஞர் கூட்டம் அலைகிறது.ஆனால் தவ்ஹீத் என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தவ்ஹீத்' எதிர்ப்பில் இறங்கியுள்ளனர். சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு.வைக்கோலைக் காக்கும் நாய் அது தின்னுவதுமில்லை.தின்ன விடுவதுமில்லை.அந்த நிலைதான் இன்று பல இளைஞர்களின் நிலையாக உள்ளது. மார்க்கப் பிரசாரம் செய்ய இவர்களிடம் எந்த அறிவும் இல்லை.செய்பவர்களை விடவும் மாட்டார்கள்.
இப்போது, சில இயக்கங்கள் உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. ஒரு சில இயக்கங்கள் ஜிஹாத் கோசமிட்டுக் கொண்டு, இளைஞர்களைத் தவறான வழிக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருக்கின்றன.நபியவர்களின் ஒரு சுன்னாவை ஊருக்குப் பயந்து மறைக்கும் இவர்களால் எப்படி அந்நிய சக்திகளை எதிர்த்து நிற்க முடியும் என்றாவது இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இந்த இழி நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும்; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.
இலக்குத் தொடரும்

0 comments

தவ்ஹீத் பிரசாரத்தால் ஒற்றுமை குலையுமா?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:104
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! அல்குர்ஆன் 15:94
மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.
மேலும், இறைக் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.
இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்
நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான். ஆனால், இந்த ஓரிறைக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்கக் கூடிய தர்ஹா வழிபாடுகள், தாயத்து தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், மவ்லித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள், மீலாது விழா, ஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.
வரதட்சணைக் கொடுமை, வட்டி, பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது, பெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை, போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரசாரம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபி, ஹனபி என்றும் காதிரியா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா, நக்ஷபந்தியா என்றும் ஜமாஅதே இஸ்லாமி, இக்வானிஸம், தப்லீக்,போலித் தவ்ஹீத் என்றெல்லாம் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்
அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் இந்தத் தவ்ஹீத்வாதிகள் தான் ஊர் ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள், அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத் தான் செய்யும். ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரசாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத் தான் செய்யும். எனவே, ஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவது தான் இஸ்லாமிய நெறிமுறையா?
ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத் தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத் தான் செய்யும். எனவே, ஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பது தான் இஸ்லாமிய வழிமுறையா? தவ்ஹீத் பிரசாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்ததினால் ஊர் மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே, லூத் நபியவர்கள் பிரிவினைவாதியா?
ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வந்த ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும், அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் ஷுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவானார்கள். எனவே, ஷுஐப் நபி பிரிவினைவாதியா?
இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கி, உங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமை தான் என்றுரைத்தார்களே அந்த இப்ராஹீம் (அலை) பிரிவினைவாதியா?
'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது| என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லை|| என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. 'எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன்|| (என்றும் பிரார்த்தித்தார்.) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்ளூ புகழுக்குரியவன். அல்குர்ஆன் 60:4-6
இப்ராஹீம் நபி ஓரிறைக் கொள்கைக்காகத் தம்முடைய சமுதாயத்தைப் பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்று தான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியா? திருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கி என்ன சொன்னார்கள் தெரியுமா?
இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார், நம்முடைய வழிமுறைகளைக் குறை கூறுகிறார், நம்முடைய ஜமாஅத்துகளைப் பிரித்து விட்டார், நம்முடைய கடவுள்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (பார்க்க: அஹ்மத் 6739)
அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினைவாதியா? லூத் (அலை), ஸாலிஹ் (அலை), ஷுஐப் (அலை), இப்ராஹீம் (அலை), முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
பாவமான காரியங்களைச் சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
திருக்குர்ஆன் எந்த ஓர் இடத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறவே இல்லை. மாறாக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.
நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!|| என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42:13
மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்குர்ஆன் 3:103
தமிழ் உலகில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். 'ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்|| என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன், ஹதீஸில் உள்ளவற்றை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றதுளூ எனவே, அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்து, பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்து, பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர் தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.

எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்து, பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்து, பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும். அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடவேண்டும்.
 அதேபோல் இன்னும் சிலர் போலி ஒற்றுமை மூலம் கிலாபத் கனவில் மிதக்கின்றனர்.மறுமையை அடிப்படையாகக் கொண்டு தூய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி வந்தால் கொள்கை அடிப்படையிலான மக்கள் திரள் உருவாகும்.அவ்வாறு அதிகமான மக்கள் கொள்கைக்காக திரளும் போது அவர்களிடம் இறையச்சம் மட்டுமே மிகைத்து நிற்கும்.அவர்கள் கையில் அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்தால், அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்கும்.
ஆனால், ஆட்சி அமைக்கப் போகின்றோம் என்பதையே கொள்கையாகக் கொண்டு செயற்படுவோரிடம் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறிதான் இருக்கும்.
இவர்களால் ஒருபோதும் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கவே முடியாது.இவர்கள் எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்ற சந்தர்ப்பவாதம் காரணமாக கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.ஆட்சியைப் பற்றிப்பேசாமலும் கனவு காணாமலும் மறுமையை முன்னிறுத்தி ஏகத்துவக் கொள்கையை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் போதித்தால், அல்லாஹ் நாடினால் அவர்களைக் கொண்டு ஓர் ஆட்சி உருவாகலாம்.அப்படி உருவானால் அது இஸ்லாமிய ஆட்சியாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் அந்த முறையில் தான் ஆட்சியைப் பெற்றார்கள். ஆட்சியைப் பிடிப்பதும் பதவியை அனுபவிப்பதும் குறிக்கோள் என்று இருப்பவர்களால் இஸ்லாமிய ஆட்சியையும் கொண்டுவர முடியாது. அவர்களே உண்மை முஸ்லிம்களாக வாழவும் முடியாது.

SRI LANKA THOWHEED JAMAATH(SLTJ)
PARAGAHADENIYA BRANCH
321,WELIGEPOLA,KU/WEUDA-60080
MOBILE -0094776971717

0 comments

அந்நியருக்கு மத்தியிலும் அழைப்புப் பணியை விரிவுபடுத்துவோம்

ன்று, பல்வேறு கொள்கை சார்ந்த இயக்கங்கள் உள்ளன. அவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மத்தியில் தான் அதிகளவு பிரசாரம் செய்துவருகின்றன. நம் நாட்டில் இஸ்லாத்தின் வாடையை நுகராது, ஏகத்துவக் கொள்கையின் இன்பத்தை உணராது, நரகத்தின் விளிம்பில் நிற்கும் முஸ்லிமல்லாத மக்களைப் பற்றி பெரிதாக அவை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதனால், அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் மோசமான சில நடவடிக்கைகளினால் அவர்களிற் சிலர் இஸ்லாத்தையே வெறுக்கின்றனர். இதனால், நமக்கும் அவர்களுக்குமிடையே பகைமை உணர்வு படர ஆரம்பித்துள்ளது. இந்தக் கசப்புணர்வைக் களைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது.
   இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும், ஆன்மீக தகிடுதத்தங்களுக்கும், மதவாதிகளின் சுரண்டல்களுக்கும் உட்பட்டு, ஏமாற்றமடைந்துள்ள இவர்களின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகத் திகழும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை நாம் வழங்க முனைய வேண்டும். இப்பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஏனெனில், எல்லா நபிமார்களும் எத்தகைய அராஜக சக்திகளுக்கும் அஞ்சாமல், இஸ்லாத்தையும் அதன் ஏகத்துவக் கொள்கையையும் அறிமுகம் செய்தார்கள். பலதெய்வ வழிபாடு எங்கு வேரூன்றியிருந்ததோ, அங்கேயே ஏகத்துவத்தைத் துணிவாகப் பிரசாரம் செய்தார்கள். எனினும், நம்மிற் சிலர் அல்லாஹ்வின் 'தீனை'யே 'தீனுக்காக' அலட்சியப்படுத்தி, இயக்கம் வளர்க்க முயற்சிக்கின்றனர். நபிமார்கள் எதைச் செய்தார்களோ அதைவிட்டுவிட்டு, இஸ்லாமிய ஆட்சியை 'எஜஸ்மண்ட்' வேலை மூலம் பெற்று விடலாம் என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.
   முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் ஊடுறுவியுள்ள ஷிர்க், பித்அத், மூடப் பழக்க வழக்கங்கள், தவறான கொள்கைகள் அனைத்தையும் துணிச்சலுடன் விமர்சனம் செய்து, அவர்களைத் தூய்மையான ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்க வேண்டும். அழைப்புப் பணியில் இறங்கும் போது, இயக்கம் வளர்ப்பதற்காக வளைந்து, நெழிந்து, பூசி மெழுகக் கூடாது. ஊருக்குப் பயந்து உண்மையை மறைக்கவும் கூடாது. அல்லாஹ் ஒருவன் என்று உறுதியாக நம்ப வேண்டும். அவனல்லாத அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என்று உறுதியுடன் உரத்து முழங்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே எங்கள் நிரந்தர வழிகாட்டி. அன்னவர்களது 'சுன்னா'வுக்கு முரணான அனைத்தும் புறக்கணிக்கப்பட வேண்டியவைகள். இந்த உறுதியான கொள்கை நிலைக்கு எமது உயிர்தான் விலை என்றால், அதற்கும் தயங்கக் கூடாது. இதுதான் உண்மையான ஏகத்துவக் கொள்கை வாதிகளின் உறுதியான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தை சீர்படுத்தும் பணிக்கு நிகராக, அந்நிய மக்களுக்கான அழைப்புப் பணியையும் நாம் மேற்கொள்ள வேண்டும். கருத்தரங்குகள், துண்டுப் பிரசுரங்கள், நேரடி சந்திப்புகள், மீடியாக்கள் இன்னும் இதுபோன்ற பல்வேறு வழிகளிலும் இஸ்லாத்தின் பக்கம்; அவர்களை அழைக்க நாம் உழைக்க வேண்டும். ஆப்போதுதான் நமது எதிர்பார்ப்பும் அழைப்புப் பணியும் முழமை பெறும். தொழுவது எவ்வளவு முக்கியத்துவம் உடையதோ, அதேபோல் அழைப்புப் பணியும் ஒரு முக்கிய கடமையாக உள்ளது என்பதை நாம் உணரவும் உணர்த்தவும் வேண்டும். இப்பணியிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அல்லாஹ் விசாரிப்பான் என்பதை நினைவில் நிறுத்திப்பார்க்க வேண்டும். எனினும், இதில் இதுவரை போதியளவு அக்கறை செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
- ஆசிரியர் -2007ல் ஹபீழ் ஸலபி அவர்களால் அழைப்பு இதழுக்காக எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம்
0 comments
 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger