எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அங்கம் - 1
பீடிகை
மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிப் படியில் மொழியின் பயன்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. மனிதன் விலங்குகளை விட உயர்ந்த, உன்னத நிலையை அடைந்திருப்பதற்கும், வளர்ச்சியின் உச்சியைத் தொட்டு நிற்பதற்கும், மொழியே முக்கிய பங்காற்றி வருகிறது. கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு இன்றியமையாத அடிப்படைச் சாதனம் மொழியாகும்.
மனித இனத்தை மிக அழகாக சிருஷ்டித்த அல்லாஹ், அவனது உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தவும் வழியமைத்துக் கொடுத்தான். அவன் மனிதனுக்கு வழங்கிய எண்ணிலடங்காத அருள்களில் சிறப்பானதும் முதன்மையானதும் மொழியாகும். இது தொடர்பாக அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது.
'மனிதனைப் படைத்தான் விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்' (55:3-4)
மிக அழகாகவும் அற்புதமாகவும் மனிதனைப் படைத்த அவன்இ மனிதனுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் அவன் தடைகளின்றி மிக இலகுவில் அவன் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருணையில் ஒரு நாவையும் இரண்டு உதடுகளையும் வழங்கியுள்ளான். தன்னை அளவற்ற அருளாளனாக அடையாளப்படுத்திஇ அருள்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கின்றான்,அல்லாஹ்.
'அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் ஆக்கவில்லையா?' (90:8-9)
'பார்ப்பதற்கு கண் எவ்வளவு முக்கியமோஇ அவ்வளவு முக்கியமுடையதாக நாவும், இரண்டு உதடுகளும் பேசுவதற்குத் துணை புரிகின்றன. நாவும் இரண்டு உதடுகளும் மனிதனது மொழியும் ஆற்றலுக்கு எவ்வளவு துணைபுரிகின்றன என்பதை நாம் எமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உணர்கின்றோம். மொழியும் ஆற்றல் மட்டும் இல்லாது இருந்தால் இன்றைய, ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை மனிதன் அடைந்திருக்க இயலாது.'
மொழியின் முக்கியத்துவத்தில் பிரதானமான பின்வரும் இரண்டைக் குறிப்பிடலாம்.
1. மொழிஇ சமூக உள்நிகழ்ச்சிகளுக்கும் தொடர்புகளுக்கும் அடிப்படைக் கருவியாக அமைகிறது. மொழியின்றி மனித இனத்திற்குச் சமூக வாழ்க்கை என்ற ஒன்று தோன்றியிருக்க முடியாது.
2. சமூக நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணங்களான மதம், கலாசாரம், ஒழுக்க நீதி, விழுமிய பண்பாட்டுப் போதனைக் கருத்துக்கள் போன்றவை ஒரு சந்ததியிடமிருந்து மற்றொரு சந்ததிக்கு மொழி மூலமாகத்தான் கடத்தப்படுகின்றன.
எனவேஇ மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பட்ட பொருளாக நின்று செயற்பட்டிருக்காவிட்டால், எமது வாழ்வியல் மேம்பாடும் கேள்வின் குறியாகியிருக்கும். எனவேதான் அல்லாஹ், மனிதனைப் படைத்து, அவனுக்குப் பேச்சுக் கலையையும் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
இந்த வகையில் பேச்சுக்கலை எப்படி முக்கிய அருளோ அதற்கு அடுத்த மிக முக்கிய அருளாக எழுத்தும் அமைகிறது.
' எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக' (68:01)
இங்கு, எழுதுகோல் மீது அல்லாஹ் சத்தியம் செய்வதுஇ எழுதுகோலுக்குள்ள சக்தியையும் அதன் தாக்கத்தினையும் மதிப்பிடப் போதுமாகின்றது.
'அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான்' (96:04-05)
எழுத்தும் - பேச்சும் அல்லாஹ்வின் மகத்தான இரு அருள்கள். எழுதுகோலை வைத்தே அவன்இ மனிதனுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு மொழி வளத்தினை வழங்கி, அதனூடாக எழுத்துக் கலையைக் கற்றுக் கொடுத்தான்.
மனிதனது மொழியினடியாக வளர்ந்த எழுத்துக் கலையினூடாக இலக்கியம் தோன்றி, வளர்ந்தது என மனித இன வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கியம் சமுதாயத்தின் இணைபிரியதா அங்கமாக இருப்பதால், அது பற்றிய ஆய்வும் விமர்சமும் சமுதாயத்தோடு இணைந்ததாக இருந்தால் வேண்டும் என்ற கருத்தும் வலுவாகப் பதியப்படுகிறது. எனவே, சமுதாயக் களத்தில் விளைந்த இலக்கியத்தை அதன் விளைநிலத்தில் இருந்து அப்புறப்படுத்திஇ தனியாக ஆய்வதற்கு முயலும் எந்த விமர்சன ஆய்வு முயற்சியும் முழுமைத்துவமான பண்புக் கூறு உடையதாக இருக்க முடியாது.
எனினும், சமூகவியல் நோக்கும், வரலாற்று உணர்வும், தத்துவங்கள் பற்றிய ஆய்வும், கண்ணோட்டமும், ஒப்பியல் பார்வையும், அழுத்தமான முருகியல் உணர்வும் நடுநிலையோடு நோக்கும் திறனாய்வுப் பார்வையும், இவை அனைத்துக்கும் மேலாய், ஆழமான இஸ்லாமிய அறிவும் இருந்து, அந்த அறிவுப் பின்னணி இலக்கியப் பார்வையில் அழுத்தமானகப் பதியும் போது மட்டுமேஇ சிறந்த திறனாய்வு மலர முடியும். இத்தகைய தளத்தில் நின்று மேற்கொள்ளப்படும் திறனாய்வு மலரும் போது மட்டுமே சிறந்த படைப்புக்களும் தோன்ற முடியும். இல்லாவிட்டால்,கீழே காணப்படுவது போன்ற இஸ்லாமிய அகீதாவை சிதைத்த, சடத்துவக் கவிதை (?) களையே நாம் தரிசிக்கும் பரிதாபாத்திற்கு உள்ளாகுவோம். வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com