எம்.ஏ.ஹபீழ் ஸலபி
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவா;கள் கூறினார்கள்.
அவர்கள்:
01. நீதமிகு தலைவர்
02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்
03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்
04. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்.
05. அழகும், கவா;ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.
06. தனது வலக்கரம் தா;மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது, (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.” அறிவிப்பவா;: அபு+ஹுரைறா (ரலி) நூல்: புகாரி 6806
மறுமை நாளில்,மஹ்ஷா; மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும்; அங்கு இருக்காது. ஒவ்வொரு மனிதனும் தனக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, மேலே கூறப்பட்டுள்ள நபிமொழியில் சிலாகிக்கப்பட்ட ஏழு பேரும் எந்தக் கவலையுமின்றி, நிம்மதியாக இருப்பாh;கள். இங்கு ஏழுபோ; என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதனால், ஏழுபோ; மட்டும்தான் அல்லாஹ்வின் நிழல் பெறுவாh;கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.அந்த ஏழுபோ; அந்தஸ்தில் எத்தனை ஆயிரம் பேரும் இணையலாம் என்றே புரிந்து கொள்ளவேண்டும். எழுவா; மட்டும்தான் என்று புரிந்து கொண்டால், அல்லாஹ்வின் அருட்கடாட்சங்களை குறைத்து மதி;ப்பிட்டதாகிவிடும். எனவே, ஏழு வகையான கூட்டத்தினா; என்றே இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும். இனி அந்த ஏழுவகைக் கூட்டம் பற்றி விரிவாக நோக்குவோம்.
நீதிமிகு தலைவா;:
தலைமைத்துவமானது செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு செயல்முறையாகவும் கடமைக் கூறாகவும் உள்ளது. இஸ்லாம் நீதிமிகு தலைமையையே வேண்டி நிற்கிறது. பொறுப்புக்களையும், பதவிகளையும் அது அமானிதமாகவே கருதுகின்றது. பக்கச் சாh;பற்று தீh;ப்புக் கூறப் பணிக்கிறது. நீதிமிக்க தலைமையின் இலக்கணமாக நபி (ஸல்) அவா;கள் திகழ்கிறாh;கள். அண்ணலாரின் நீதிமிகு தலைமை போன்றதோh; தலைமையை உலகம் இனிமேல் அதன் இறுதி மூச்சுவரை சந்திக்கவே முடியாது. அந்தளவு நபியவா;கள் இனம், நிறம், மதம் போன்ற அனைத்தையும் கடந்து நீதியாகவும் நோ;மையாகவும்; நடந்து கொண்டுள்ளாh;கள்.
இந்த உலகத்தில் அளப்பெரிய செல்வாக்குடன் மாபெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவா;களின் நெடிய பெயா;ப்பட்டியலில் முஹம்மது நபி (ஸல்) அவா;கள் முதன்மையானவா;கள். ஏனெனில் ஆன்மீக, அரசியல், சமூக, பொருளியல், அறிவியல் போன்ற துறைகளில் மகத்தான வெற்றிபெற்றவா;, உலக வரலாற்றில் அவா; ஒருவா; மட்டுமே, அவா;களின் தலைமைத்துவ ஆளுமை ஈட்டிய ஈடிணையற்ற செல்வாக்குத்தான், மனித இன வரலாற்றின் போக்கிலேயே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது சமயம், உலகியல் ஆகிய துறைகளில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவா; எனும் தனித் தகுதிக்கு அவா;களை உரித்துடையவராக்குகிறது. 'அறிவுரை கூறுவோh; அவா;போல் நடக்கவும்., இவா;கள் போல் நடக்கவும் என்று கூறுவதையே காண்கி;ன்றோம். என்னைப் போல் நட என்று சொன்ன பெருமைக்குரியவா; பெருமானாh; ஒருவரே!” என னுச. சிலம்பொலி கூறுகின்றாh;.
'மனிதா;களிடையே நீங்கள் தீh;ப்புக் கூறினால், நீதத்துடன் தீh;ப்புக் கூற வேண்டும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றாhன்.” (4: 58)
சமூகத்தின் தலைமைப்பொறுப்பேற்போh; நீதமாக நடந்து கொள்ள வேண்டும். பக்கச் சாh;பாக, அல்லது பிறா;மீது கொண்ட அதிருப்தி , வெறுப்புக் காரணமாக நீதி வழங்கும் விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாதென அல்லாஹ் அறிவுரை கூறுகின்றான்.
'...ஒரு கூட்டத்தாh; (மீதுள்ள) பகை, நீங்கள் (அவா;களுக்கு) நீதி செலுத்தாமல் இருந்துவிட உங்களைத் திண்ணமாகத் தூண்டிவிட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள், அது தக்வாவுக்கு மிக நெருக்கமானதாகும”; (5 : 8)
எவா; உள்ளத்தில் இறைவன் மீது அச்சம் அதிகமாக உள்ளதோ, அவரால்தான் நீதமான தலைவராகத் திகழ முடியும். அதற்கான கூலியாகவே அல்லாஹ் தனது நிழலை வழங்கக் காத்துள்ளாhன். அதேவேளை, பொறுப்புக்களைப் பெற்றுவிட்டு மோசடி செய்தால,; சுவா;க்கம் அவருக்கு ஹராமாகிவிடும்.
'எந்த மனிதருக்கேனும் சிலரை நிருவகிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கி, அவன் அவா;களுக்கு மோசடி செய்தவனாக மரணித்துவிட்டால், சுவனத்தை அவனுக்கு இறைவன் ஹராமாக்கி விடுவான்” என நபி (ஸல்) அவா;கள் கூறினாh;கள். (புஹாரி - முஸ்லிம்)
தலைமைப் பண்பைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தொல்லை கூட கொடுக்கக்கூடாது. நபி (ஸல்) அவா;களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மிகவும் இரக்கமாகவும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கடின சித்தத்துடன் ஆணவமாக நடக்கக் கூடாது. இதுபற்றி திருமறை வசனமொன்று பின்வருமாறு பேசுகிறது.
'நீh; கடுகடுப்;பானவராக - கடின சித்தமுடையவராக இருப்பீரானால், உம்மை விட்டும் அவா;கள் பிரிந்து போயிருப்பாhh;கள்.” (3: 159)
தலைமைப் பண்புக்கு கண்டிப்புடன் கூடிய மென்மைத் தன்மையும் அவசியமாகவுள்ளது. இஸ்லாம் இயம்பும் மென்மைத் தன்மையோடு, நடுநிலை தவறாத நீதிமிக்க தலைவா;களுக்கே அல்லாஹ் தனது நிழலை வழங்குவான்.
'இறைவா! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்துக்கு ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டு, அவா;களுக்குச் சிரமம் தருபவனுக்கு நீயும் சிரமத்தைக்கொடு! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்திற்குப் பொறுப்பேற்று, அவா;களிடம் இனிமையாக நடப்பவனிடம் நீயும் இனிமையாக நடப்பாயாக! என நபி (ஸல்) அவா;கள் கூறியுள்ளாh;கள். (முஸ்லிம்)
அல்லாஹுதஆலாவின் வணக்கத்தில் வளா;ந்த வாலிபா;:
உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் புவியில், இறை அடிமைத் தனத்தை நிலைநாட்ட வந்தவன் என்ற உணா;வுடன் மனிதன் தனது பொறுப்புக்களைப் உளப்பு+h;வமாக அல்லாஹ்வை நினைவு கூரவேண்டும்; வணங்க வேண்டும்; துதிக்கவேண்டும்.
இளமைப் பருவம் என்பது, அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (னுநஎநடழிஅநவெ ழக hரஅயn pநசளழயெடவைல) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும்.
சமூகத்தின் ஜீவநாடிகளான இளைஞா;கள், தங்களது இஸ்லாமிய பொறுப்புக்களை மறந்து, அகஃவய உணா;வுகளுக்கு உட்பட்டு நிற்பது ஆரோக்கியமானதல்ல. சூழலுக்கு அடிமையாகிப் போய், அல்லாஹ்வை மறந்து வாழ்வது அல்லாஹ்வின் நிழலை விட்டும் அப்புறமாக்கிவிடும். அல்குh;ஆனை அதிகமாக பொருளறிந்து ஓதுதல், உபரியான தஹஜ்ஜத் தொழுகையில் கூடிய கவனம் செலுத்துதல் , ஹலால் - ஹராம் பேணி வாழ்ந்து, வட்டியை விட்டும் தூரமாகுதல் போன்ற ஆழ்ந்த ஆன்மீகப் பண்புகளோடு சத்தியத்தை பிரசாரப்படுத்துதல், தீமையைத் தடுத்தல் ஆகிய இஸ்லாத்தின் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுதல் மூலம், ஓh; இளைஞன் அல்லாஹ்வின் அருளை நெருங்க முடியும். அல்குh;ஆன் இத்தகு ஆன்மீக கோட்பாடுகளுக்கு பல உதாரண புருஷா;களாக, வரலாற்று வாலிபா;களை அடையாளப்படுத்துகின்றது.
“இபாதத்” எனும் இறை வழிபாடு அதன் ஆழமான உள்ளார்ந்த அர்த்தத்தில் மனிதன் தனது சொல், செயல் எண்ணங்களால் முழுமையாக அல்லாஹ்வின் திருப்திக்கும் விருப்பத்திற்கும் இணங்க உலகில் செயல்படுவதையே குறிக்கின்றது. இறை வழிகாட்டலுக்கும் இறை சட்டத்திற்கும் ஏற்ப நடத்தைகளை அமைத்துக் கொள்ள வேண்டிய நிலை மனித வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாழ்வே இறை வழிபாடுடையதாகும்;.
ஈமானிய உடன்படிக்கை ஒரு முஸ்லிமின் வாழ்க்கைக் கடிவாளத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகின்றது. அல்லாஹ் தன் துhதரின் பொறுப்பில் அதைக் கொடுத்து, தூய “வஹி” மூலம் அவனுக்கு வழிகாட்டுகிறான். அவ்வழிகாட்டலைக் குறித்து முஸ்லிம் மனப்பு+ர்வமாக ஏற்று உலகில் செயற்படுவான்.
“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சியமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.” (33:36)
மேலுள்ள வசனம் முஃமின்களின் சிந்தனைக்குரியதாகும். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான அடிப்படை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் மாத்திரம் அடிமைத் தனத்தை நிரூபித்து, பொது வாழ்வில் சுதந்திரமாக, மனோவிருப்பத்திற்கு இணங்கி வாழும் ஒரு முஸ்லிம் இளைஞன் எவ்வாறு அல்லாஹ்வின் உண்மை அடியானாக இருக்க முடியும்?
வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஹலால்-ஹராம் பேனாதவன், இஸ்லாமிய குணநலன்களையே அணிகலனாகப் பெறாதவன் எவ்வாறு தன்னை அல்லாஹ்வின் விசுவாசமுள்ள, உண்மை அடியானாகப் பறைசாற்ற முடியும்?
தனிப்பட்ட வாழ்வில், பொது விடயங்களில், அல்லது சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் இறை சட்டத்துக்கு முரணாக ஒரு தீர்ப்பைப் பெற நாடுகின்ற, அல்லது பெற்றுத் திருப்தியடைகின்ற ஒரு இளைஞனின் வாழ்க்கை, அவன் தொழுகையாளியாகவோ, நோன்பாளியாகவோ இருப்பின் அது எவ்வாறு இபாதத்தாக முடியுமா?
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது “ஷிர்க்” எனும் கொடிய பெரும் பாவமாகும். அதற்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு இல்லை என அல்குர்ஆனும், ஹதீஸும் தெளிவாகப் பிரகடனப்படுத்திவிட்டுள்ளது. அல்லாஹ்வுக்கு நிகராக வேறொரு சிருஷ்டியை வணங்கி, வழிபடும் செயல் மாத்திரமே “ஷிர்க்” என நினைப்பது தவறு. மதகுருமாரால் உருவாக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை முறைகளுக்கு மனப்பு+ர்வமாக கட்டுப்படுவதும் “ஷிர்க்” ஆகும். இவ்வாறு செயல்பட யு+த-கிறிஸ்தவர்களைப் பற்றி குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை. அவன், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.” (9:31)
வேதம் வழங்கப்பட்ட யு+த-கிறிஸ்தவர்கள் தமது மத குருமார்களை தெய்வங்களாக்கிக் கொண்டார்கள் என்றால், அவர்களை வணங்கி வழிபட்டார்கள், பு+ஜித்தார்கள் என்பதன்று. இறை சட்டத்துக்கு மாறாக அவர்கள் உருவாக்கிய சட்டங்களைப் பின்பற்றினார்கள். எனவே, அவர்கள் இணைவைப்பாளர்களானார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
இறை இல்லங்களுடன் ஈடுபாடு கொண்ட மனிதா;:
அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்துடன் ஒரு முஃமின் தொடா;பு வைத்துக் கொள்ள வேண்டும். இத்தெடா;பு இறையச்சத்துடன் கூடிய இதயபு+h;வமானதாக அமைய வேண்டும். ஒரு தொழுகையை நிறை வேற்றி விட்டு, அடுத்த தொழுகை நேரத்தை எதிh;பாh;த்து, அல்லாஹ்வின் இல்லம் சென்று, அவனுடன் உரையாட ஆவலாக இருக்க வேண்டும்.
தொழுகை அல்லாஹ்வுடனான உரையாடலாக உள்ளது. பிரார்த்தனையாகத் திகழ்கிறது. பள்ளியில் சென்று, அல்லாஹ்வைக் காண்பது போன்று வணங்கவும், தனது இதயக் கிடக்கைகளையும் உளக் குமுறல்களையும் அவனிடம் இறக்கிவைத்து, இறைஞ்சவும் ஒரு சாதனமாக அமைகிறது. பள்ளியுடன் நெருக்கமான தொடா;பு ஒரு முஃமினின் வாழ்வில் அதி முக்கியமானதாகிவிடுகிறது. உண்மையான முஃமின் பள்ளியுடனான தொடா;பை துண்டித்து வாழ முடியாது. எந்த நிலையிலும் பள்ளியுடன் தொடா;பு துண்டிக்கப்படலாகாது. அவ்வாறு, துண்டிப்பவருக்கு இறையருள் எட்டாக் கனியாகிவிடும். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறையில்லங்களான மஸ்ஜித்களுடன் இதய பு+h;வமான - ஆத்மாh;த்தமான தொடா;புகளை வைத்துக் கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ்வுக்காக நட்புப்பாராட்டும் அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்:
மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளை தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர; சேர;ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகினறன.
நட்பு என்பது ஒரு புனிதமான, மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு ஒன்று இருக்குமாயின், உண்மையில் நட்பு ஒன்றேதான்.மனிதன் எப்போதும் தனது உள்ளத்து உணர;வுகளைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே உள்ளான்.
மனிதனுக்கும், வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக, பகுத்துக் காட்டும் பிரிகோடாக அன்பு அமைந்துள்ளது.இந்த வகையில் அன்பு, இரக்கம், நட்பு, பாசம், நேசம் என்பன இஸ்லாமிய வாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியமானவையாக அமைந்து காணப்படுகின்றன.
இஸ்லாம் இதற்கான ஆழமான வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. நல்ல நட்பின் நலன்கனையும் தீய நட்பின் பாதக விளைவுகளையும் நபி மொழி ஒன்று இவ்வாறு பிரிகோடிட்டுக் காண்பிக்கிறது.
'நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போலாவான். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக எடுத்துத் தரக்கூடும். அல்லது உனக்கு அதை விற்கவும் கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக்கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடக்கூடும். அல்லது அவனிடமிருந்து துh;வாடையை நீ நுகர நேரும்” என நபி (ஸல்) கூறினாh;கள். (புஹாரி -முஸ்லிம்)
மேலும், இன்னொரு நபிமொழி இவ்வாறு நட்புப் பற்றிப் பேசுகிறது.
'எனது ஆத்மா எவன் கையில் உள்ளதோ,அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவா;க்கம் நுழையமாட்டPh;கள். பரஸ்பரம் அன்பு கொள்ளும் வரை, ஈமான் கொள்ளமாட்டPh;கள்” என நபி (ஸல்) அவா;கள் கூறினாh;கள். (முஸ்லிம்)
நட்புப் பாராட்டுவதை வலியுறுத்திய இஸ்லாம், தீய நட்பை துண்டிக்கவும் பணித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்று நடப்பவனே அல்லாஹ்வின் நிழலுக்குத் தகுதியானவன் என்பதை நாம் விளக்கப் புகுந்துள்ள ஹதீஸின் இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.
விபச்சாரத்திற்கான அழைப்பு விடுக்கும்போது, அல்லாஹ்வை அஞ்சி ஒதுங்கும் மனிதன்:
ஒரு பெண் தனது அழகு, கவா;ச்சி, செல்வச் செழிப்புப் போன்றவற்றைக் காண்பித்து, விபச்சாரத்திற்காக அழைக்கும் போது, அக்கொடிய பாவத்திலிருந்து தன்னை இறையச்சத்தின் மூலமாகக் காத்து, ஒதுங்கிவிடுகின்ற மனிதனும் அல்லாஹவின் நிழலுக்கு உரித்தானவனாக ஆகிவிடுகின்றான். விபச்சாரத்திற்கு அழைத்த பெண்ணின் பிடியிலிருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, தன் கற்பகை; காப்பாற்றிக் கொண்ட ஆதா;ஷ புருஷராக நபி யு+சுப் (அலை) அவா;கள் திகழ்கிறாh;கள் என்ற வரலாற்றுப் பேருண்மையை சூறா யு+சுப் மிக விரிவாக விபரிக்கின்றது.
'மேலும், அவா; எவளுடைய வீட்டிலிருந்தாரோ, அவள் அவா; மீது காதல் கொண்டு,தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை 'வாரும்” என்றழைத்தாள.; அ(தற்க)வா;, அல்லாஹ் (இத்தீய செயலிருந்து) காத்தருள்வானக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன்;கண)வா; என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறாh;. நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்கு துரோகம் செய்யும்) அநியாயக்காரா;கள் வெற்றி பெறமாட்டாh;கள் என்று கூறினாh;.
அவள், அவரை (அடைய ) திட்டமாக ஆசை கொண்டு விட்டாள். அவா; தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள் மீது ஆசைகொண்டே இருப்பாh;. தீமையையும், மானக்கேடான செயல்களையும் அவரை விட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சமாக அவா; தோ;ந்தெடுக்கப்பட்ட நம் அடியாh;களில் உள்ளவராவாh;. (12 :23 - 24)
இரகசியமாக தா;மம் செய்தல்:
தா;மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபியவா;கள், 'வலக்கரம் செய்யும் தா;மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்யுறம் மனிதன்” என வா;ணித்துள்ளாh;கள். அத்தோடு, 'தா;மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக உள்ளது எனவும் ஒரு முறை கூறியுள்ளாh;கள். செல்வ மிக்கவா;கள் புகழுக்காக - தா;மசீலன் என உலகில் பெயா; பெற நினைத்து தா;மம் செய்தால், அது மறுமையில் எந்தப் பயனையும் தராது. நகரத்திற்கே கொண்டு செல்லும் என்று எச்சரிக்கும் நபிமொழிகள் அதிகமாக உள்ளன.
'நீ கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தா;மம் செய்தாய், அவ்வாறு, (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னா;, இவா; தொடா;பாக உத்தரவிடப்பட்டு, இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவாh;” என நபியவா;கள் கூறினாh;கள். (முஸ்லிம்)
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (அல்குர்ஆன் 2:2 3)
நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே, (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி (1419)
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:272)
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)
புகழ் விரும்பாது, பகிரங்கப்படுத்தாது, இரகசியமாக தா;மம் செய்வது அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத்தர வழிகோலும் செயலாகும். 'ஒரு மனிதா; இரவில் யாருக்கும் தெரியாமல் (வேறு) மனிதா; ஒருவருக்கு 'ஸதகா” வழங்கினாh;. அது ஒரு திருடனின் கையில் கிடைத்திருந்தது. மனிதா;கள், இதனை மறுநாள் பேசிக் கொண்டாh;கள். இதனை அறிந்த அம்மனிதா;, மீண்டும் ஒரு முறை ஒரு பெண்ணுக்கு 'ஸதகா” வழங்கினாh;. அப்பெண் ஒரு விபச்சாரியாக இருந்தாள். விபச்சாரிக்கு 'ஸதகா” வழங்கப்பட்டதாக மக்கள் பேசிக் கொள்ளலானாh;கள். இதனையும் அறிந்த அம்மனிதா;, அன்றிரவு ஒரு கனவு காண்கிறாh;. அக்கனவில் ஒருவா; வந்து, நீ திருடனுக்கு (இரவில் இரகசியமாக) வழங்கிய 'ஸதகா”வானது அவன் தன் திருட்டுத் தொழிலிருந்து ஒதுங்கி திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது” என்று கூறிச் சென்றாh;.(ஹதீஸின் சுருக்கம். புஹாரி -முஸ்லிம்)
அதிகம் செல்வம் வழங்கப்பட்டவர் தன் செல்வத்தின் மூலம் தான தர்மங்களை வாரி வாரி வழங்கி வருவதைப் பார்க்கும் ஒருவர் தனக்கு இவ்வாறு செல்வம் வழங்கப்பட்டால் நாமும் இவ்வாறு தர்மம் செய்யலாமே என்று ஆசைப்படலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்கலும் ஓதி வழிபடுகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அத்துள்ளான். அவர் அதனை இரவு பகல் எல்லா நேரங்கலும் தானம் செய்கிறார். (இவ்விருவரைப் பார்த்து நாமும் அப்படியாக வேண்டும் எனப் பொறாமை கொள்ளலாம்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர) நூல்: புகாரி (5025)
நாம் மற்றவர்களுக்காகச் செலவிடும் போது! இறைவன் நமக்குச் செலவிடுவான். ஏழைகளுக்குச் செலவிடும் பணத்தை இறைவனுக்கு வழங்குவதைப் போல் கருத வேண்டும்.
ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி (5352)
தனிமையில் இறை தியானத்தின் போது, அழும் மனிதன்:
இரவு நேரதில் தஹஜ்ஜுத் வேளையில் அல்லது தனித்திடும் போது அல்லாஹ்வை நினைத்து, தான் செய்த பாவத்திற்காக அழுது, கண்ணீh; வடித்து, மன்றாடிப் பாவமன்னிப்புக்கோரும் அடியானை அல்லாஹ் தனது நிழலில் இளைப்பாற வைத்துக் கண்ணியப்படுத்துவான் என நாம் விளக்கிவரும் ஹதீஸின் இறுதிப் பகுதி சிலாகிக்கின்றது.
உண்மையில், இந்நிலையை உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது, இரவில் எழுந்து நின்று, தொழுது, அல்லாஹ்விடம் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அழுகின்ற போது அனுபவிக்கலாம். இப்படியான நேரத்தில் மன்றாடுவது எவ்வளவு பெரிய அருளையும் அந்தஸ்தையும் மனிதா;களுக்கு அல்லாஹ்விடத்தில் அதிகப்படுத்துகின்றது. இத்தகைய பாக்கியம் பெற்றவா;களாகவும், அவனது நிழல் பெறும் ஏழு கூட்டத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிப்போமாக!
+ comments + 1 comments
நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆச் செய்யும் போது, ''இறைவா! பாவத்திருந்தும் கடனிருந்தும் உன்னிடம் பாதுப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (2397)
Post a Comment
adhirwugal@gmail.com