பெண்களும் கல்வியும்
அறிவீனத்தை இஸ்லாம் பெண்ணின் மீது திணிக்கவில்லை. அறிவு தேடுவதைப் பொறுத்தவரை அது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமையாகும். ஆண்கள், பெண்களிடம் சென்று கல்வி கற்ற வரலாற்றுக் காலமொன்று இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. ஆண்கள் அன்னை ஆயிஷா (ரழி) அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் போன்று அறிவிற் சிறந்த பெண்களிடம் சென்று நபிமொழிகளை கேட்டறிந்து கொண்டனர்.
இஸ்லாத்துடன் தொடர்பான பல அம்சங்களை அவர்களிடம் கற்றனர். பெரிய ஸஹாபாக்களும் தாபியீன்களும் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு கச்சிதமாக பதிலளித்ததோடு மூத்த ஸஹாபாக்களில் சிலர் தவறிய இடங்களை சுட்டிக்காட்டித் திருத்தியும் உள்ளார்கள். இவ்வாறான நிலைகளை இன்று காண்பது அரிதிலும் அரிது. ஏகத்து எழுச்சி ஏற்பட்ட பின்னா; பெண்கள் கல்லுhரிகளின் உதயம் இந்நிலையை மாற்றி வருவதை நாம் மறுக்க முடியாது. அதேபோல், அண்மைக் காலங்களில் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்து, பல்கலைக்கழகங்கள் வரை அவர்களின் படிப்பை தொடர்ந்து, வைத்தியத்துறையிலும் கூட பங்களிப்பு செய்கின்றார்கள்.
எனினும், 'பெண் என்பவள் சமூகக் காரியங்களில் ஈடுபடத் தகுதியற்றவள்,பலவீனமான உள்ளம் படைத்தவள்' என்ற ஆழ்மனப் பதிவு படித்த பல பெண்களிடம் கூட மண்டிக் கிடக்கிறது. அதிகமான பெண்கள் தமது பாடங்கள், தேர்வு, குடும்பம், தொழில் இவற்றுக்கு வெளியில் எதுவுமே தெரியாத நிலையில் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் எத்தகைய சமூச பிரக்ஞையும் அற்றவர்களாகவே உள்ளனர். அதனால், பல பெண்கள் இலகுவில் ஏமாற்றப்படுகிறார்கள்.
இந்திய இலங்கை பெண் சமூகத்தைப் பொருத்தவரை முன்னுக்குப் பின் முரண்பட்ட வாழ்க்கை முறை ஒன்றை அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. உலக வாழ்வு, ஆன்மீக வாழ்வு என்ற அர்த்தமற்ற பிரிவுக்குள் பெண் அவஸ்தைப்படுகிறாள். இதனால், பெண்ணை ஒரு பக்கத்தால் திறந்து விட்டு, இன்னொரு பக்கத்தால் முழுமையாக இறுக்கி மூடியும் பூட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
எமது பெண் சமூகத் தளத்தை கூர்ந்து அவதானிக்கும் போது, பல மேட்டுக் குடிக் குடும்பங்களில் உலகக் கல்வி, உலகின் ஏனைய செயல்கள் அனைத்தையும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அங்கு பெண் பிள்ளைகளுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குமர்ப் பெண்கள் பாடசாலைக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பர்தா அணிந்தோ அணியாமலோ செல்லலாம். அங்கு அந்நிய ஆண்களுடன் எப்படியும் பேசலாம், பழகலாம், சிரிக்கலாம், கும்மாளமடிக்கலாம். ஆண்-பெண் இருசாராரும் கலந்து சுற்றுலா செல்லலாம். அதேபோல் தொழிக்கு எப்படியும் போகலாம்.
ஆனால், துர்பாக்கியம் என்னவென்றால் அவள் 'மஸ்ஜித்' படிக்கட்டை மிதிக்கக் கூடாது என்ற குறுகிய சிந்தனைக்குள் சிறைப்பட்டுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதித்துள்ளது என்பதை இவர்கள் உணரத் தவறியுள்ளனர்;. அதனால், பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள். ஆனால், ஆண்களும் பெண்களும்; சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்ப ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா-பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (578)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது, (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமிருக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரி (707)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்கல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில் 'அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்' என்றார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : புகாரி (837)
தொழுகையில் இமாமின் தவறைச் சுட்டிக் காட்டவும் இஸ்லாம் அனுமதித்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். றிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (1203)
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள், அவர்களை அழைத்து '(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என்று கூறியதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிருந்து) புறப்பட்டு வந்து 'பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (862)
உமர் (ரலி) அவர்கன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம் ' (உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்க்குச்) செல்கிறீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''(என்னைப் பள்க்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது' என்று பதில் வந்தது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (900)
காஃப் வல்குர்ஆன் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (மனனமாக) நான் எடுத்துக் கொண்டேன். அதை அவர்கள் ஒவ்வொரு வௌ;ளிக்கிழமையும் மிம்பரில் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி நூல் : முஸ்லிம் (1442)
பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்று இஸ்லாம் அவளுக்குத் தேர்;வு உரிமையை வழங்கியுள்ளது.
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது அவர்களின் உரிமை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொண்டு, வீட்டிலேயே தொழுது கொள்வது சிறந்தது. இதனால், பெண்கள் பள்ளிக்குச் செல்வது தவறு என்று எண்ணிவிடக்கூடாது. பள்ளிக்கு வருவதினால் மார்க்க உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. சஹாபிய பெண்கள் நபியவர்களின் காலத்தில் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள்.மார்க்க அறிவை அதன் மூலம் அதிகப்படுத்திக்கொண்டார்கள்.
உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (480)
பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்ததாகும். வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறைக்குள் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : அபூதாவுத் (483)
ஆண்கள் பள்ளிக்கு வந்து கூட்டுத்தொழுகையில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். பெண்கள் கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். கலந்துகொண்டால் தவறில்லை.
ஏகத்துவ எழுச்சி விரிவடைந்துள்ள இன்றைய காலததில் பெண்கள் பள்ளிக்கு வருவது அதிகர;துள்ளது. அதேவேளை, மார்க்கப் பகுதியில் தஃவா-அழைப்புப் பணியில் பெண்ணின் பங்களிப்பு மிகக் குறைவு. போதுமான அளவு விரிவடையவில்லை. இன்றும் பெண்களுக்கு மத்தியில் தான் மார்க்கம் பற்றிய அறியாமை, மூட நம்பிக்கைகள் என்பன மலிந்து காணப்படுகின்றன என்பது யாரும் இன்று மறுக்க முடியாத உண்மையாகும்.
பள்ளி என்ற உன்னதமிக்க, மிக உயர்ந்த சமூக நிறுவனத்தோடு எந்த தொடர்பும் முஸ்லிம் பெண்களில் பெரும்பாலோரிடம் கிடையாது. நோன்பு கால இரவுத் தொழுகை, பெருநாள் தொழுகைகள் என்பன பெண்களுக்கு அதிக இடங்களில் தனியாகவே தொழுவிக்கப்படுகிறது.அதுவும் கனத்த திரைகளுக்குப் பின்னால் அவர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். ஒரு மார்க்க உபதேசம்இ மார்க்க வகுப்பு என்பன திரையின்றி நடந்தால் அதைத் தடுக்கவும் எதிர்க்கவும் பலர் உள்ளனர். இப்படி ஓர் அர்த்தமற்ற முரண்பாடான வாழ்வு முறையாகவே பெண்ணின் நிலை காணப்படுகின்றது. இந்நிலையை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாற்றியுள்ளது. அதனால், சமூகத்தளத்தில் அதன் அதிர்வுகளை அவதானிக்கமுடிகிறது. மாற்றுக கொள்கைத் தளத்திலும் பெண்கள் பற்றிய பழைமைவாத சிந்தனை ஓரளவு மாறி வருகின்றது என்பதும் மறுப்பதறிகில்லை.
கல்வி ரீதியாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒழித்து அவர்களுக்கு கல்விச் சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக எமது பங்களிப்பை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பெண்கள் அறிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். பிற்போக்கான வீழ்ச்சிக் காலத்திலே தான் அவள் சமூகக் களத்தில் இருந்து ஒதுக்கப்பட்டாள். 'மேற்குலகப் பெண் ஆய்வு செய்வதற்காக சந்திரனுக்கே சென்று வந்து விட்டாள். ஆனால், நமது ஆலிம்களில் பலரும் சமூகப் பொறுப்புள்ளவர்களில் பலரும் அவள் பள்ளிவாசலுக்குள் செல்வது 'பித்னா' என்று கூறிக் கொள்கின்றார்கள். இதைவிட அவளை ஓர் இருட்டறைக்குள் பூட்டி வைப்பது சிறந்தது. அதேபோல் இந்துப் பெண் கோயிலுக்குச் செல்கின்றாள். பௌத்தப் பெண் விகாரைக்குச் செல்கின்றாள். கிறிஸ்தவப் பெண் தேவாலயங்களுக்குச் செல்கின்றாள். ஆனால், முஸ்லிம் பெண் பள்ளிவாசலுக்கு செல்வதைப் பழமைவாதிகள் அனுமதிப்பதில்லை.ஆனால், இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை என்பதை முன்னர் ஆதாரங்களுடன் நோக்கினோம்.
எனவே, இஸ்லாமியப் பெண்களின் சமூக உறவில் கல்வி ஆளுமை குறைவாக உள்ளது. அதனைப் போக்க அவள் கல்வி கற்க வேண்டும். தனது இயல்பான வரையறைகளையும் தனது தொழிற்பாடடின் வரையறைகளையும் கவனத்தில் கொண்டு, அவள் கல்வித்துறையில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் இஸ்லாமியப் பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கு நான்கு முக்கியப் பணிகள் காத்திருக்கின்றன.
1- ஓர் உண்மையான இறைவிசுவாசியாக - முஃமினாக இறை உவப்பைப் பெற்ற பெண்ணாக வாழ்வதற்குத் தேவையான இஸ்லாமிய அறிவையும் ஆன்மீகப் பயிற்சியையும் அவள் பெற்றுக் கொள்ள வேண்டும், அதற்காக அவள் முழுமையாக உழைக்க வேண்டும்.
2- தான் கற்றவற்றை செயற்படுத்த வேண்டும்.
3- பெண் சமூகத்திற்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்க வேண்டும் - தஃவாவை மிகச் சரியாகவும், தெளிவாகவும் முன்வைத்து, ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தகுதியுடையவளாக அவள் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
4- பிரசாரப் பணி புரியும் போது ஏற்படும் இன்னல்களை சகித்துக் கொள்ளும் உள்ளத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நான்கு அம்சங்களையும் சூரா அல் அஸ்ர் மிகத் தெளிவாக முன்வைக்கிறது.
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com