எம்.ஏ. ஹபீழ் ஸலபி
அல் குர்ஆன் இறங்கும் போது அகிலத்தின் நிலை
அல்குர்ஆன் இறங்கும் போது அகிலம் அந்தகார இருளில் மூழ்கி>அறிவைப் புதைத்து மனித உருவில் விலங்கைவிட மோசமாக மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அப்போது உலகில் இரண்டு வல்லரசுகள் காணப்பட்டன.
(1) பாரசீக வல்லரசு
(2) ரோமப் பேரரசு
இவை இரண்டும் மனிதர்கள் மீது வல்லாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.அங்கே மனிதனை மனித சட்டங்கள் ஆளுகின்ற மடமை நிலை காணப்பட்டது. ஒர் இறைக் கொள்கையை மறுதலித்த மதங்களின் ஆதிக்கப் பிடியில் முழு உலகுமே சிக்குண்டிருந்தது.
Ø பாரசீக வல்லரசு
அணுவாயுத பலங்கொண்ட நாடாக வளர்ந்து வரும் இன்றைய ஈரான் அன்று பாரசீக வல்லரசாக இருந்தது. இன்று அங்கு ஷீஆயிஸம் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவது போன்று அன்று நெருப்பை வணங்கும் மஜுஸிய மதம் ஆதிக்கம் செலுத்தியது.
அன்றைய ஈரானில் நட்சத்திர பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேபோல் ஆட்சியாளர்களுக்கு சாஸ்ட்டாங்கம் பண்ணுதல் மன்னர்களையும் ஆட்சியாளர்களையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாகக் கருதுதல்.மன்னர்களை இறை அந்தஸ்திற்கு உயர்த்தி துதிப்பாடல்களைப் பாடுதல் போன்ற நிலைதான் அங்கு கோலோச்சியது.
மஜுஸிய மதம் பாரசீகத்திலிருந்து இந்தியாவின் எல்லை வரை பரவி ஓரளவு தாக்கம் செலுத்தியுள்ளது. அல்குர்ஆன் அருளப்படும் போது> அதன் ஆதிக்கம் இருந்துள்ளது என்பதற்கு ஸல்மான் அல் பாரிஸி என்ற நபித்தோழரின் வரலாறு சான்றாக உள்ளது.
அவரது சத்தியத் தேடல் பயணப் பாதையில் அவர் சந்தித்த கிறிஸ்த்துவ பாதிரிமார் பற்றிய குறிப்புகள் கிறிஸ்தவ மதத்தின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கூட தெளிவுபடுத்துகிறது.
அதேபோல் பின்வரும் நபிமொழியும் அன்றைய முக்கிய மூன்று மதங்கள் குறித்துப் பேசும் பாங்கு இக்கருத்திற்கு மேலும் வலுச் சோர்க்கிறது.
'ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல> எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ> கிறித்தவர்களாகவோ> நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) நூல் : புகாரி (1359)
Ø ரோமப் பேரரசு
கிரேக்கர்களின் தத்துவ ஆதிக்கம் உலகில் செல்வாக்குச் செலுத்தி வந்தது. அரிஸ்டோடில்>பிளேட்டோ போன்றேரின் தத்துவமாகக்கருதப்பட்டவை முக்கியத்துவமளிக்கப்பட்டன.
கிரேக்க தத்துவ ஆதிக்க வீழ்ச்சிக்குப் பின்னர் ரோமப் பேரரசு தனது வல்லாதிக்கத்தை கிரிஸ்தவ மதமாக்கலினூடாக நிலை நிறுத்த முனைந்துகொண்டிருந்தது. அன்றைய ஆட்சிப் பீடம் முதல் அடுக்களை வரை ஒழுக்க வீழ்ச்சியே அங்கு கோலோச்சியது.
உள்நாட்டுக்குள் அமைதியின்மை காணப்பட்டது. ஆட்சியாளர்களின் எல்லை மீறிய ஆபாச அரக்கத்தனம்> பாதிரிமார்களின் தகிடுதத்தங்கள்> படாடோப பகட்டுக்கள்>காமக் களியாட்ட லீலைகள்> ஆபாச அரக்கத்தனங்கள் என்பன ஆட்சிசெய்தன.
அங்கு மதரீதியான பிரிவுகள் தோன்றி> வலுத்து கிறிஸ்தவமே கிழிந்த கச்சையாகி> அதன் அசல் தன்மையை விட்டு விலகி> மன்னர்களின் காலில் சிரம் தாழ்த்தி வணங்கும் நிலை காணப்பட்டது. பாதிரிமார் தன்மை கடவுள் என்றே மக்களை எண்ணவைத்து>அத்தனை அராஜகங்களையும் செய்து கொண்டு> மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தனர். ரோமர்களுக்கு மத்தியில் இல்லாத தீமை ஏதும் அன்று உலகில் இருக்கவில்லை.
மூட நம்பிக்கையில் மூழ்கி> மத ரீதியாக சிலர் நட்சத்திரங்கள் மற்றும் தேவதைகளின் நிர்வாண சிலைகளை வணங்குவதில் ஈடுப்பட்டிருந்தனர்.
நபி ஈஸா (அலை) அவர்களுடைய ஏகத்துவப் போதனைகளை ஏற்ற கிறிஸ்தவர்களில் அதிகமானவர்கள் ஏகத்துவக் கருத்தோட்டம் அற்றவர்களாய் இருந்தனர். அவர்கள் பிதா> சுதன்> பரிசுத்த ஆவி> மரியம் ஆகியோருக்கு இறைமை உண்டு என நம்பிக்கை கொண்டிருந்தனர். கிறிஸ்தவ மதத்தின் பெயராலேயே பல பிரிவுகள் தோன்றி தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்தன.
இறந்த மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை வணங்கும் வழக்கம் கூட ரோமர்களிடம் பரவலாக இருந்தது. பாதிரிமார்களுக்கும்> மத குருமார்களுக்கும் சிர வணக்கம் (சஜ்தா) செய்யப்பட்டு வந்தது.
கிறிஸ்தவ மதப் போப்புகளும்> அவர்களுக்குப் பின்னர் படிப்படியாக மத குருமார்களும் சமயத்துறையில் பொறுப்புகள் வகித்து வந்தவர்களும் தத்தம்வட்டாரங்களில் அரசு அதிகாரங்களை – ஏன்> இறைமையதிகாரங்களையயே தம் கரங்களில் வைத்துக் கொண்டிருந்தனர். பைபிளில் இல்லாத சட்டங்களை இருப்பதாக மக்களை ஏமாற்றினர். வேதப் புத்தகத்தில் தமது கைவரிசையை முடிந்தளவு காட்டினர். பைபிள் அதன் அசல் வடிவையும் மூல மொழியையும் இழந்தது. பாதிரிமார் எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய சொந்தச் சரக்குகள்> சொற்கள் ஆகியன இறைவனின் வாக்காக அறியாத அந்த மக்களால் கருதப்பட்டு வந்தது. மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி அவர்களை மதவாதிகள் அடிமைப்படுத்தினர்.
இஸ்லாத்தின் வருகையின் பின்னர்> ருப்யீ இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் யஸ்தஜரின் அவையில் நுழைந்து முழங்கிய வார்த்தைகள் மதவாதிகளினதும் மன்னர்களினதும் வல்லாதிக்க வக்கிரங்களை தெளிவாக தோலுரித்துக் காட்டுகின்றன.
الولاء والبراء - القحطاني - (1 329(
وقدروا رحمهم الله تربية المصطفى صلى الله عليه وسلم وأهمية سنته الشريفة قولاً وفعلاً وأدركوا أنهم (لم يكونوا خدمة جنس، ورسل شعب أو وطن، يسعون لرفاهيته ومصلحته وحده، ويؤمنون بفضله وشرفه على جميع الشعوب والأوطان، ولم يخرجوا ليؤسسوا إمبراطورية عربية ينعمون ويرتعون في ظلها، ويشمخون ويتكبرون تحت حمايتها ويخرجون الناس من حكم الروم والفرس إلى حكم العرب وإلى حكمهم أنفسهم. إنما قاموا ليخرجوا الناس من عبادة العباد جميعاً إلى عبادة الله وحده كما قال ربعي بن عامر رسول المسلمين في مجلس يزدجرد 'الله ابتعثنا لنخرج الناس من عبادة العباد إلى عبادة الله وحده. ومن ضيق الدنيا إلى سعتها ومن جور الأديان إلى عدل الإسلام '.. ' فالأمم عندهم سواء والناس عندهم سواء. الناس كلهم من آدم وآدم من تراب.. لم يبخلوا بما عندهم من دين وعلم وتهذيب على أحد، ولم يراعوا في الحكم والإمارة والفضل نسباً ولوناً ووطناً، بل كانوا سحابة خير انتظمت البلاد وعمت العباد، وغوادي مزنة أثنى عليها السهل والوعر، وانتفعت بها البلاد والعباد على قدر قبولها وصلاحها) (1(
மனிதன் மனிதனை வணங்கும் மடமையிலிருந்து அவர்களை விடுவித்து அல்லாஹ் ஒருவனை மடடும் வணங்கும் உன்னத நிலைக்கு அழைப்பதற்காக நாங்கள் வருகை தந்துள்ளோம். அத்தோடு இங்கு கோலோச்சும் மதங்களின் ஆதிக்கப்பிடியிலிருந்தும் உலக நெருடல்களிலிருந்தும் மனித குலத்தை விடுவித்து இஸ்லாத்தின் நீதி நிழலின் பக்கம் அழைத்துச் சென்று மறுமை இன்பத்தைச் சுகிகச் செய்வதே எமது நோக்கமாகும்.... என்று அவர் கூறிய வார்த்தைகள் அன்றைய சூழ் நிலையை பட்டவர்த்தனமாகப் புலப்படுத்துகிறது.
இவ்வாறான காட்டுமிராண்டிகள் காலம் என்று அறியப்படும் காலத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது.
அருளப்பட்ட இடத்தின் நிலை
அல்குர்ஆன் முதலில் மக்காவில்தான் இறங்கியது.நபிவர்கள் அங்குதான் பிறந்தார்கள்.அங்குதான் கஃபா ஆலையமும் உள்ளது.அங்குதான் முதல் வஹியும் வந்து.
பலதெய்வ வழிபாட்டை மண்ணில் புதைத்து ஓர் இறையேற்புக் கோட்பாட்டை நிலை நாட்ட முஹம்மது நபி ஸல் அவர்கள் அங்குதான் துதராக ஏற்றம் பெற்றார்கள்.
இறை மறுப்பும் இணை கற்பிப்பும்
ஒரே இறைவனை மட்டும் வணங்குவதற்காக உலகில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட அந்தப் புனித ஆலயத்தில் நாளுக்கொரு தெய்வம் என்ற ரீதியில் 360 சிலைகளை அல்லாஹ்வை மறந்து அவற்றை வணங்குவதற்காக கஅபாவைச் சுற்றி அமைத்திருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'உண்மை வந்து விட்டதுளூ பொய் அழிந்து விட்டது” (திருக்குர்ஆன் 17:81) என்னும் வசனத்தைக் கூறத் தொடங்கினார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 2478
கொள்கை மையத்தில் கோவில் ஆராதணைகள்
மக்காவில் அமைந்துள்ள கஃபா எனும் ஆலயம் ஓரிறைக் கொள்கையின் உயர்மட்ட மையமாகும். இந்த மையத்திலேயே குறைஷிகள் உருவப் படங்களை வரைந்தனர். அதுவும் ஏகத்துவக் கொள்கையின் சின்னங்களாக, சிகரங்களாகத் திகழ்ந்த இப்ராஹீம், நபி இஸ்மாயீல் நபி ஆகியோரது உருவப் படங்களை வரைந்தனர். அவர்களது கையில் குறி கேட்கும் அம்புகளைக் கொடுத்து அழகு பார்த்தனர்.
நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது> கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்இ 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள். அதில் தொழவில்லை.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1601 - 3352
இறையில்லத்தில் இனமாச்சரியம்
ஹஜ் என்ற வணக்கமே தீண்டாமையை, இனமாச்சரியத்தை உடைத்தெறியும் ஓர் உன்னத> உயர்ந்த வணக்கமாகும். அந்த வணக்கத்தில் கூட இந்தக் குருட்டுக் குறைஷியர் தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தினர்
கஅபாவின் வாசலைத் தரையோடு தரையாக வைக்காமல் அதை மேலே உயர்த்தி வைத்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவது தான்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி> 'இது கஅபாவில் சேர்ந்ததா?" எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!’’ என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனைக் கஅபாவோடு இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உனது சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!" என்று பதிலளித்தார்கள். நான் 'கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?” எனக் கேட்டேன்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்> 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால்> அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரைக் கஅபாவினுள் இணைத்து> அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற்போலாக்கியிருப்பேன” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1584
உயர் சாதிக் கொள்கை
மக்கள் அரஃபாவில் ஒன்று கூடுகின்ற போது குறைஷிகள் மட்டும் அவர்களுடன் சேர மாட்டார்கள்ளூ முஸ்தலிஃபாவிலேயே நின்று கொள்வார்கள். இதன் மூலம் தங்கள் உயர் சாதிக் கொள்கையை நிறுவினர்.
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள்.(ஹரம் - புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்” எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்த போது> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9ஆவது நாüல்) அரஃபாத் சென்று> அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளை தான் 'மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4520
கூத்துக்களும் கும்மாளங்களும்
கஅபாவெனும் ஆலயத்தில் வணக்கம் என்ற பெயரில் கூத்துக்கள் கும்மாளங்கள் அடித்துக் கொண்டிருந்தனர்.
சீட்டியடிப்பதும்> கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. அல்குர்ஆன் 8:35
மக்கத்து அரபிகள் - குறைஷியர்கள் ஹஜ் எனும் வணக்கத்தை மட்டுமன்றி இப்ராஹீம் நபியவர்கள் கற்றுக் கொடுத்த தூய இஸ்லாத்தையே சிதைத்து விட்டிருந்தனர்.
புனித ஆலயத்திற்குப் போர்வை போர்த்துதல்
ஏகத்துவச் சின்னமான அந்த இறை இல்லத்தை இப்படிச் சின்னாபின்னப் படுத்திவிட்டு அதற்குப் போர்வை போர்த்துவதில் ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கஅபாவிற்குப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தனர்.
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592
ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்த குறைஷியர்கள்> இது போன்ற சடங்குகளை மட்டும் விட்டு வைக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
அஸ்திவாரத்தை மாற்றிய குறைஷியர்
இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவம் எனும் அஸ்திவாரத்தை மாற்றி விட்ட குறைஷிகள், கஅபாவின் அஸ்திவாரத்தையும் சேர்த்தே மாற்றினர்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷா! நிச்சயமாக உனது கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும் போது இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்து விட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?” எனக் கேட்டேன். 'உனது கூட்டத்தினர் இப்போது தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்ளூ இல்லை எனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்” என்றார்கள். ஆறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1583
குறைஷிகள் காலத்தில் நடந்த இந்தக் கஅபா புனரமைப்புப் பணியில் நபி (ஸல்) அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.
(நபியவர்கüன் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவரான) நபி (ஸல்) அவர்களிடம், 'உங்கள் வேட்டியை (கழற்றி) உங்கள் கழுத்துக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காப்பாற்றும்'' என்று சொன்னார்கள். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்த போது) அவர்கள் பூமியில் (மூர்ச்சித்து) விழுந்து விட்டார்கள். அவர்களுடைய இரு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்று விட்டன. பிறகு மூச்சு தெளிந்ததும்> 'என் வேட்டி> என் வேட்டி” என்று கேட்கலானார்கள். (வேட்டி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாக கட்டிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 3829
இந்தப் புனரமைப்பின் போது குறைஷிகள் கஅபாவின் ஓரங்கமான ஹிஜ்ர் என்ற அரை வட்டத்தை 6 முழங்கள் தள்ளிக் கட்டினர். ஆனால் அன்று புனித கஅபாவின் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, தாம் ஒரு இறைத் தூதர் ஆகப் போகிறோம், இந்தப் புனித கஅபாவின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தம் கைவசம் வரப் போகின்றது என்று தெரிந்திருக்கவில்லை.
புனரமைப்புப் பணியில் ஈடுபடும் மக்களில் தாமும் ஒருவர் என்ற அளவிலேயே அவர்களது அன்றைய பங்கெடுப்பு அமைந்திருந்தது. இவ்வாறு குறைஷிகள் காலத்தில் கஅபா புத்தாக்கம் பெற்றது. புது வடிவம் அடைந்தது.
கஅபாவின் அஸ்திவாரம் மாற்றப்பட்டதுடன்> இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவம் எனும் அஸ்திவாரத்தை விட்டும் தரையிறங்கிக் கிடந்தது. அந்தக் கொள்கை அஸ்திவாரத்தை மாற்றுவதற்காகவும்இ தரையிரங்கிக் கிடந்த அந்த அஸ்திவாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவும் இதோ முஹம்மது (ஸல்) அவர்கள் தூதுச் செய்தியைப் பெறுகின்றார்கள்.
கஅபாவைக் கட்டி முடித்ததும்> 'இந்த ஆலயத்தை அதன் கொள்கை அஸ்திவாரத்தில் கொண்டு செல்ல ஒரு தூதரை அனுப்பு” என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறும் தருணம் வந்தது. ஆம்! தூதர் இப்ராஹீம் கேட்ட துஆ ஒப்புக் கொள்ளப்பட்டது.
புரட்சி தொடரும்.
+ comments + 1 comments
salam Virainaha aduta todarai veli idaum.
Post a Comment
adhirwugal@gmail.com