அல்லாஹ்வின் சட்டங்களை விமர்சிக்கும் இன்னொருவரை இங்கு விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், புகாரி மொழிபெயர்ப்புக் குழுவில் கூட அங்கம் வகிக்கும் கவிகோ அப்துர் ரஹ்மான் ஒரு மாக்ஸிய சிந்தனை அடிவருடி. ஏனெனில், தனது “பசி எந்தச் சாதி? என்ற நூலில் குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்களை கடுமையாக விமர்சித்து, குப்ரியத்திற்கு கும்மாளமிட்டுள்ளார். சமநிலைச் சமுதாய சிந்தனையை வரித்துக்கொண்ட அவரின் வரிகள் சற்று அவதானித்துப் பாடுங்கள்.
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்லர்
அவர்களில் தீயவர்களும் இருக்கிறார்கள்.
தீயவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது அதற்குப்
பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு எழுவது
இயற்கை.
ஆனால், ஒவ்வொருவரும் கண்ணுக்குக்
கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கத்
தொடங்கிவிட்டால் உலகத்தில் ஊனமுடையவர்கள்
மட்டுமே இருப்பார்கள்.
பொறுமை இல்லாதவர்களால்தான் உலகத்தில்
பிரச்சினைகள் உண்டாகின்றன.
பொறுமை உடையவர்களோ சாந்தியின் தூதுவர்களாக
இருக்கிறார்கள்.
உலகம் அத்தகையவர்களால்தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை
பொறுமைக்குப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது.
குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு.
குடும்பத்தில் பொறுமையைக் கற்றுக் கொண்டவன்
சமூக வாழ்க்கைக்குத் தகுதியுடையவனாகிறான்.
பொறுமை என்ற உயர்ந்த ஒழுக்கத்தைக் காலந்
தோறும் சான்றோர்கள் போதித்து வருகிறார்கள்.
ஒருவன் உன்னை வலது கன்னத்தில்
அறைந்தால் அவனுக்கு
மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5.39)
என்கிறார் இயேசு பெருமான்.
தன்னை அறைந்தவனைத் திருப்பி அறைய வேண்டும்
என்று நினைப்பதுதான் உலக இயற்கை.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்தே பெரிய விஷயம்.
இயேசு பெருமானோ ‘நீ திருப்பி அறையாதே.
அறைந்தவன் திருப்பி உன்னையே அறைய உன்
மறு கன்னத்தையும் காட்டு’ என்கிறார்.
இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.
ஆனால், இதில் சாந்தியின் வித்து இருக்கிறது.
அறைந்தவனைத் திருப்பி அறைந்தால் அவனும்
திருப்பி அடிப்பான். சண்டை முற்றும். பிறகு
இதில் சாதி, மதம், இனம் எல்லாம் சேர்ந்து
கொள்ளும்.
தனிப்பட்ட இருவருடைய சண்டை பெரிய
கலவரமாகிவிடும்.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்கிறவன் ஒரு
பெரிய கலவரம் நிகழாமல் தடுத்துவிடுகின்றான்.
அதுமட்டுமல்ல அறைந்தவனுக்கு மறு கன்னம்
காட்டினால், அறைந்தவன் திடுக்கிடுவான்.
“இத்தகைய நல்லவனையா அறைந்தோம்?” என்று
வருந்துவான். அதனால் திருந்துவான்.
எனவே பொறுத்துக்கொண்டவன் ஒரு தீயவனை
நல்லவனாக்கி விடுகிறான். பகைமைக்கு முற்றுப்
புள்ளி வைத்துவிடுகிறான்.
இயேசு பெருமானின் இந்தப் பொன்மொழியைப்
பொறுமையின் உச்சம் என்று உலகம்
போற்றிக் கொண்டாடுகிறது.
ஆனால், திருவள்ளுவரோ இதற்கும் மேலே
போகிறார்.
‘ஒருவன் உனக்குத் தீமை செய்தால்
அதற்கு மாறாக நீ
அவனுக்கு நன்மையைச் செய்’
என்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
நன்னயம் செய்து விடல் (குறள் 314)
இயேசு பெருமானின் வார்த்தைகளை வைத்தே
இதை விளக்குவதாக இருந்தால், ஒருவன்
உன்னை அறைந்தால் நீ அறைந்த கைக்கு
மோதிரம் போட்டு விடு என்று அர்த்தம்
தண்டிக்க நினைப்பதுதான் மனித இயற்கை எனவே
இந்த இயற்கைப்படியே ‘உனக்குத் தீங்கு செய்தவனைத்
தண்டிக்கத்தானே விரும்புகிறாய்? இதோ இதுதான்
தண்டனை. அவனுக்கு நீ நன்மையைச் செய்’
என்கிறார் வள்ளுவர்.
இது எப்படி தண்டனை ஆகும் என்று கேட்கலாம்.
உண்மையில் இதுதான் கொடிய தண்டனை.
அடித்தவனைத் திருப்பி அடித்தால் அவனுக்குக்
கொஞ்ச நேரம் வலிக்கலாம். பிறகு வலி
போய்விடும்.
காயம் ஏற்பட்டால் கூட ஆறிவிடும்.
ஆனால், தீமை செய்தவனுக்கு நன்மை செய்வது
என்பது அவனுடைய இதயத்தில் அடிப்பதாகும்
இந்த அடியின் வலி தீராது. அவன் நினைக்கும்
போதெல்லாம் வலிக்கும்.
இத்தகையவனுக்கா தீங்கு செய்தோம் என்று
நினைத்து வருந்துவான்.
இந்தக் காயம் ஆறாது
பரிமேலழகர் உரைப்படி இந்தக் குறளில்
இன்னொரு கருத்தும் இருக்கிறது.
தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதோடு,
அவன் செய்த தீமையையும், நீ செய்த நன்மை
யையும் மறந்து விடு என்பது பரிமேலழகர்
கருத்து.
இக்கவிதையைப் படிக்கும் போதே கவிக்கோ யார் என்று தெரிந்து விடும்.
சமய சார்பற்ற சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு தலைகால் புரியாமல் இலக்கியம் படைப்போர், மதம் - கடவுள் பற்றிய எள்ளி நகையாடலை மலினப்படுத்தியுள்ளார். மதவாழ்வை கேள்விக்குட்படுத்தி, கொச்சைப்படுத்தும் நாவல்களும் கவிதைகளும் தற்போது, மிக அதிகமாகவே வெளிவரத் தொடங்கியுள்ளன.
இஸ்லாமிய இலக்கியம் இறைநெறிக்குட்பட்டுப் பேசும். ஆனால், அந்நிய இலக்கியங்கள் அந்தந்த சமூகம் சார்ந்த கலாசார, மரபுகளைப் பிரதிபலித்துக் கொண்டு செல்லும். அவை, அந்த இலக்கிய மரபுகளில் தவிர்க்க முடியாதவை. அங்கே, ஆண்-பெண் அந்தரங்கச் சதை வியாபார வெறியாட்டங்கள் என்பன அந்தந்த சமூக, பண்பாட்டுக் காலாசார மரபுகளின் சிந்தனைக்கேற்ப, கதைகளில், நாவல்களில், கவிதைகளில், பாடல்களில் வெளிப்படும்.
சிலபோது, வக்கிரத்தை வெளிப்படுத்துமாப்போலும் அமைந்துவிடுகிறது. பெற்ற தாய்-தந்தைக்குத் தெரியாமல், ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் சமாச்சாரங்கள் பலவடிவங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இதற்கு உடன் போக்கு என்று பெயர். உடன்போக்கு மேற்கொண்டவர்கள் பிறந்த இடத்துக்கு திரும்பி வரமாட்டார்கள். இதன் தாக்கத்தால், இன்றைய காதலர்கள் (?) சொல்லிக் கொள்ளாமல் போகிறார்கள். சொல்லாமலே வந்தும் விடுகிறார்கள் - சில பேர் ஏமாற்றப்பட்டதால் உலகத்தைவிட்டே ஓடி விடுகிறார்கள் என்பதை அன்றாடம் அறிகிறோம்.
சங்ககால இலக்கியக்காதலர்கள் மணம் முடிக்க ஓடினார்கள். அதன் இலக்கிய விரச ரசனைக்கு ஆட்பட்ட இன்றைய கால காதலர்கள் மணம் முடிக்காமல் வக்கிரத்தை வெளிப்படுத்த ஓடுகிறார்கள். இவர்கள் இதில் சேராமல் காதலர் தினம் (ஏயடநவெiநெ னுயல) என்று பெப்ரவரி 14ம் திகதியை, தமது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்த ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக் கேடு கெட்ட கலாசாரத்திற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், தூபம் இட்டு வளர்த்தும் வருகின்றன.
உண்மையை மட்டும் பேசும், உள்ளாந்த இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைக்காத போது, இஸ்லாமிய இளைஞன் பிற இலக்கியங்களில் ரசனைத் தாகம் தணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவற்றைப் படிக்கத்துவங்கும் போது, அவை வாசகன் மீது சிறுக சிறுக தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த துவங்குகிறது. எனவே, அந்நிய இலக்கியத்தில் தாகம் தீர்க்கும் வாசகன், அவற்றைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாகவே நாளடைவில் மாற்றமடைகிறான். நமது பெரும்பாலான மக்களுக்கு வழிகாட்டி தமிழ்ச் சினிப்பாடல்கள், படங்கள், சில புத்தகங்கள், சில நாவல்கள், விரசத்தைக்கக்கும் பத்திரிகைகள் என்பனவாகிவிட்டன. மிக மோசமான சினிமாப்படங்கள் அவற்றுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் பத்திரிகைகள் கல்லூரியில், கலாபீடங்களில், பல்கலைக்கழகங்களில், ஏன்? அரபு மத்ரஸாக்களில் படித்த அதிக இளைஞர்களிடம் அமெரிக்க, மேற்கத்திய ‘ஹிப்பி’ கலாசாரத்தையும், அரைகுறைபடிப்பாளர்களிடம் தமிழ்ச்சினிமாக் கலாசாரத்தையும், இலக்கியம் என்ற போர்வையில் திட்டமிட்டு இன்னும் பரப்பிவருகின்றன. இந்தப் பத்திரிகைகள்.
எனவே, அத்தகைய அந்நிய இலக்கியம் பற்றிய சில உதாரணங்களை இங்கே குறிப்பிட்டுக்காட்ட முனைகிறோம்.
Post a Comment
adhirwugal@gmail.com