எம்.ஏ.ஹபீழ் ஸலபி
மொழியின் வரலாற்றுக்கு இன்றியமையாத சான்று இலக்கியமாகும். மொழியினடியாய் இலக்கியம் தோன்றி மனிதனின் கொள்கை, கலாசார,சிந்தனை, உணர்வு போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் எவரிடமிருந்தும் மாறுபட்ட கருத்தியல் எதிரொலிக்க முடியாது.
இலக்கியம் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம். அது மனித வாழ்க்கையின் கண்ணாடி மட்டுமல்ல, சமூக வாழ்வை புரட்சி ரீதியாக மாற்றியமைப்பதில் அதற்குப் பாரியதொரு பங்குண்டு என்பதை வரலாற்றைப் படிப்போரால் அறிந்து கொள்ள முடியும். ஒரு சமூகத்தின் உணர்வுகளினதும் கலாசார, சிந்தனை மரபுகளினதும் படிமங்களாக இலக்கியம் அமைவதால், கலாசார, சிந்தனைத் தாக்கங்களை ஏற்படுத்த இலக்கியத்தைச் சாதனமாகப் பயன்படுத்தும் நவீன உத்திகள் சமகாலத்தில் மிகத்தந்திரமாகவும், நுட்பமாகவும் கையாளப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு, இஸ்லாத்தின் எதிரிகள் இலக்கியத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. இத்தகைய சவாலையும் நாம் இதில் இனங்காட்ட எத்தனிக்கின்றோம்.
ஒரு சமூகத்திற்குச் சொந்தமான கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களிலிருந்தும் கொள்கை உறுதியிலிருந்தும் ஒழுக்கப் பெறுமங்களிலிருந்தும் அச்சமூகத்தை அந்நியப்படுத்தும் முயற்சியில் அதற்கு உன்னத இடமுண்டு என்பதை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் நோக்கும்போது இலக்கியத்திற்கும் மனித சமுதாயத்திற்குமிடையிலான தொடர்பு இறுக்கமானதும், நெருக்கமானதும் ஆகும். அது சமுதாயத்தினடியாகத் தோன்றி, மனிதனின் மகிழ்ச்சியையும், உள்ளக் கிடக்கையையும், சோகத்தையும் கவலையையும், களிப்பையும்,
நம்பிக்கையும், ஆசைகளையும், ஆவல்களையும், அவலத்தையும், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரதிபலித்துச் செல்கிறது.
இதற்கு அண்மைய உதாரணமாக கார்ல் மார்க்ஸும் அவருடைய நண்பர் எங்கல்சும் இணைந்து நடத்திய சமுதாய, பொருளாதார ஆய்வுகளில் இலக்கியம் 20ம் நூற்றாண்டுடைய வாழ்வியலையும் சிந்தனைப் போக்குகளையும் பெருமளவில் மாற்றியமைத்ததோடு, தற்கால இலக்கிய படைப்புக்கள் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.
'உலக இயக்கத்திற்கும் வரலாறு, கலை போன்றவற்றின் செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக, அடித்தளமாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினைகளே! என்பதைக் கார்ல் மார்க்ஸும் அவரது சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் விளக்கிடப் பகிரதப் பிரயத்தனப்பட்டுள்ளனர்.
'இலக்கியவாதிகள், மனித சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டடக் கலைஞர்கள்' எனப் பொதுவுடைமைவாதியான ஸ்டாலின் கூறி, மனித சமூக நிர்மாணத்தை நெறிப்படுத்தும் இலக்கியத்தின் வல்லமையை விளக்கினார். அதேபோன்று, சிறந்த கட்டக் கலைஞன் நன்றாக கட்டடத்திற்கு ஓர் அமைப்புத் தோற்றம், ஒழுங்கு என்பவற்றைக் கொடுப்பது போன்று, அதற்கு மாற்றமான கட்டடக் கலைஞன் இருப்பான் என்பதை மறுதலிக்க முடியாது. எனினும், ஸ்டாலினின் கருத்து இலக்கியத்தின் சக்தியையும் பலத்தையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
இனி இலக்கியம் என்றால் என்ன? அது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது? அது எந்த வகையில் மற்றைய கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது? இலக்கிய வாதிகளது ஆக்கங்களை இஸ்லாமிய அடைமொழிகளோடு நோக்க முடியுமா? என்பன போன்ற தெளிவைப் பெற்று, இஸ்லாமிய இலக்கியத்தின் செயல்நெறியைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
பல்வேறு கொள்கைகள் மிகச் சாதாரணமாகவே மனிதச் சிந்தனையில் ஊடுருவிஇ ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தையும் அதன் இலக்கியக் கோட்பாட்டையும் புரிவதில் தவறிழைத்துக் கொண்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள், மேற்கின் இஸ்லாமிய விரோதப் போக்கை இனாமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இஸ்லாத்திற்குப் புறம்பான சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு, 'இலக்கியம் என்பது, அழகுணர்வுத் தேவை வெளிப்பாடு, கலை கலைக்காகவே என்ற நோக்கில் அணுகப்படல் வேண்டும். அதனை இரசனை உணர்வுடன் அனுபவித்துச் சுவைத்து, இன்புறல் வேண்டும். அதை மதம் என்ற குறுகிய வேலிக்குள் சிறையிட முயற்சித்தல் எவ்வகையிலும் அறிவுடைமையாகாது. இஸ்லாமிய நோக்கில் முஸ்லிம் கவிஞர்கள்-புலவர்களின் ஆக்கங்களையும் அணுகி ஆராய்தல் என்பதும் அர்த்தமற்ற ஒரு வீண் முயற்சியாகும் என சில விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன. அதற்கோர் உதாரணத்தைக் கீழே தருகின்றோம்.
'எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்' எனும் கவிதை பிரசுரமான போது, சிலர் மத நிலை நின்று அதனை விமர்சித்தனர். அவர்கள் கவிஞனின் பாஷையைப் புரிந்து கொள்ளாதவர்கள். அல்லாமா இக்பாலின் ஜாவீது நாமாவை படித்துப் பார்க்க வேண்டும்.' என்று கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள், எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 'நான் எனும் நீ' எனும் நூலுக்கான தனது அணிந்துரையில் கூறும் இக்கருத்து, நாம் மேலே குறிப்பிட்டதற்கோர் அண்மைய உதாரணமாக உள்ளது. எஸ்.ஜே.வி. என்பவர் மாற்று மதத்தவர். (காபிர்) அவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்பது இஸ்லாத்தின் நிலை. ஆனால், அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் 'எஸ்.ஜே.வியை என் இறக்கைகளில் காணுங்கள்' என்ற கவிதையில் அவரை, தான் சுவனத்துக் கன்னிகளிடமிருந்து பறித்துக்கொண்டு, பூமிக்கு வருவதாக வர்ணிக்கிறார். இவரின் கருத்து பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது. மரணித்தவர் மீள உலகிற்கு வரமாட்டார் என்பது நாமறிந்த ஒன்று. அப்படியிருந்தும் இதற்கு வக்காலத்து வாங்குவது என்பது எம்மை அதிர்ச்சிக்குள் வீழ்த்துகிறது. இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாகவும் பகுத்தறிவுக்கு முரணாகவும், புகழ்ச்சி வரம்பைக் கடந்து சென்றதாலுமே, பலர் அதனை மதநிலை நின்று விமர்சித்தனர் என்பதை நடுநிலையோடு நோக்கியிருந்தால், அவ்விமர்சனம் பிறந்திருக்காது என்பதே எமது பணிவான கருத்து.
எனவே, முஸ்லிம்களால் ஆக்கப்படும் இலக்கியங்கள் அனைத்தும் அவை, இஸ்லாமிய நெறிமுறைகள் விசுவாசக் கோட்பாடுகள், அதன் வரம்புகள், கண்ணோட்டங்கள் அனைத்தையும் மீறி, இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான, எதிரான எந்தக் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தாலும் சரியே! அவை, இஸ்லாமிய இலக்கியமெனக் கொள்ளப்படல் வேண்டும். அவற்றை விமர்சினத்திற்கு உட்படுத்துதல் பொருத்தமற்றது என்ற 'கருத்து மயக்கம்' நிலவும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய சிந்தனைத் தெளிவை வழங்குவது இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தோரின் கடமையாகும்.
இஸ்லாத்தின் சர்வ வியாபகத்தன்மை அதன் ஆழமான பல்வேறு பரிமாணங்கள் பிரபஞ்சம், அதில் மனிதனது வாழ்வு தொடர்பான விரிந்தஇ ஆன்மீக, உலகியல் நோக்கு இஸ்லாத்தின் தெய்வீகத் தன்மை என்பன பற்றிய அறிவையும் சிந்தனைத் தெளிவையும் பெற்றோர் இதன் அவசியத்தை உணர்ந்து, நமது விமர்சன அணுகுதலை ஜீரணித்துக்கொள்வர்.ஆனால், தலைவனைப் புகழ்ந்து, தன் தலையை இழந்து காசுக்காய் மந்தையைவிட மட்டமாய்ப் போன சீழ் நிறைந்த சின்னக் கவிஞனுக்கு ஜீரண சக்தி குன்றியிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமன்று. இவர்கள் மந்தையை விட மட்டரகமானவர்கள் என்று அல்குர்ஆன் ஓங்கி முழங்குகிறது.
ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.(7:179)
எமது சமகால இலட்சிய வாதங்களான முதலாளித்துவமும், கம்யூனிச-பொதுவுடமை வாதமும் இலக்கியத்தினூடாகவே அதிகமதிகம் பிரசாரப்படுத்தப்படுகிறது. இச்சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டவர்கள் அக்கொள்கையின் பிரசார சாதனமாக இலக்கியத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களது சிந்தனை கருத்துக்களில் இலக்கியத்தினூடாக ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதேபோல், இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், இஸ்லாத்தின் தூய்மையான ஏகத்துவக் கருத்துக்களை மாசுபடுத்தியும், அதன் பகுத்தறிவு பூர்வமான போதனைகளைத் திரித்தும்இ சிதைத்தும் பிரசாரம் செய்வதிலும், முஸ்லிம் உலகிற்கு எதிராக ஏனைய மக்களை அணிதிரளச் செய்வதற்கும, நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் திருத்தூதர் முஹம்மத் நபி அவர்களின் புனிதமான, அப்பழுக்கற்ற அளுமைக்கு மாசு கற்பிக்கும் பிரயத்தனங்களிலும்இ இலக்கியத்தினூடாக சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பிரதிபலிப்பு இன்று பிரத்தியட்சமாகத் தென்படுகிறது. மேற்கத்தேய சடவாத சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்ட, இஸ்லாம் தெரியாத, இஸ்லாமிய, உம்மத்தில் தோன்றிய, இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள, நவீனத்துவ வாதிகளான, மேற்கின் சாக்கடைகளுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரீன், தாஹா ஹூஸைன், நஜீப் மஹ்பூழ், தோப்பில் முஹம்மது மீரான், சாரா அபூபக்கர் போன்ற இன்னும பலர், தமது கீழான இஸ்லாமிய விரோதப் போக்குச் சிந்தனையை மக்கள் மன்றத்தில் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு இலக்கியத்தையே ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இலக்கியப் பரிமாணங்களான பாட்டும், கவிதையும், நாடகமும், சிறுகதையும் நாவலும் சினிமாவும் சத்தியதை அசத்தியமாகவும், அசத்தியத்தை சத்தியமாகவும், மெய்யை, பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும், உண்மையை உளரலாகவும் உளரலை உண்மையாகவும் திரிவுபடுத்தி அழகூட்டி, கவர்ச்சியாக்கி, கை - கால், மூக்கு வைத்து, உயிர்கொடுத்து உணர்ச்சியூட்டிச் சொல்ல வல்லன.
இலக்கியம்
இலக்கியம் குறித்து, இலக்கிய வாதிகளால் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து இரத்தினச் சுருக்கமாக நோக்கின், 'சொல்லில் அழகைப் புலப்படுத்தி வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியமாகும் என வரைவிலக்கணப்படுத்தலாம். எப்படி கல்லில் அழகை வெளிப்படுத்தி, ஒரு பொருளை வடித்தெடுப்பதை சிற்பக்கலை என்கிறோமோ அதுபோல, சொல்லின் அழகை வெளிப்படுத்திஇ வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கிக் கலையாகும்.
உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன. அதேவேளை, அழகுபடக்கூற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மைகளைப் பலிபீடத்திற்கு அனுப்பிவிட்டு அழகையே ஆராதித்துக் கொண்டிருக்கிற இலக்கியங்கள் பல இன்று நம்மிடையே உலா வருகின்றன.
எதார்த்தத்திற்கும், உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிரான பொய்யும், புனை சுருட்டும், கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண் காது, மூக்கு என்பன வைத்துப் புனையப்பட்ட கதைகளும், அழகியல் பெயர் தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயிற்று.
உண்மைகளை உலவவிட வேண்டும் என்ற நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு போலிகளை உலாவவிடும் போலிகள் அதிகரித்து பொய்யாயினும், புழுகு மூட்டைகளாயினும் கவர்ச்சியோடு கூறினால் அது இலக்கியமாகிவிடும் எனும் எண்ணம் படைப்பவனிடமும் (இலக்கியலாதிகளிடமும்) படிப்பவனிடமும் (இலக்கியப் பிரியர்களிடமும்) பரவி சமுதாயம் அறியாமைக்குள் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இந்த இழிநிலை தான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே அத்தகைய போலிகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதனால் அல்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் இலக்கியம் பற்றிய இஸ்லாத்தின் அணுகுமுறையைத் தெளிவாக எடுத்துரைத்து இலக்கிய வாதிகளை நெறிப்படுத்துகிறது.
'ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள், கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள், ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவiதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.' (26:221-226)
உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி வாழ்க்கையின் இலட்சியத்தை இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டு சத்தியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, அதை ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்கிறது.
ஆனால், உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்யை அல்லது அசத்தியமான உண்மைக்குப் புறம்பான, அளவுக்குமீறிய கற்பனைகளை உலாவவிடும் நச்சிலக்கியங்களையே அது கடுமையாகக் கண்டிக்கிறது. அத்தகைய நச்சிலக்கியம் படைக்கும் பொய்யர்களையும் காரல் மாக்ஸை கடவுளாக்கும் அற்ப கவிஞர்களையும் அல்குர்ஆன் ஷைத்தான்கள் என்றே அடையாளப்படுத்திகிறது.
ஆனால், உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்யை அல்லது அசத்தியமான உண்மைக்குப் புறம்பான, அளவுக்குமீறிய கற்பனைகளை உலாவவிடும் நச்சிலக்கியங்களையே அது கடுமையாகக் கண்டிக்கிறது. அத்தகைய நச்சிலக்கியம் படைக்கும் பொய்யர்களையும் காரல் மாக்ஸை கடவுளாக்கும் அற்ப கவிஞர்களையும் அல்குர்ஆன் ஷைத்தான்கள் என்றே அடையாளப்படுத்திகிறது.
அல்லாஹ்வின் சட்டங்களை விமர்சிக்கும் இன்னொருவரை இங்கு விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், புகாரி மொழிபெயர்ப்புக் குழுவில் கூட அங்கம் வகிக்கும் கவிகோ அப்துர் ரஹ்மான் ஒரு மாக்ஸிய சிந்தனை அடிவருடி. ஏனெனில், தனது 'பசி எந்தச் சாதி? என்ற நூலில் குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்களை கடுமையாக விமர்சித்து, குப்ரியத்திற்கு கும்மாளமிட்டுள்ளார். சமநிலைச் சமுதாய சிந்தனையை வரித்துக்கொண்ட அவரின் வரிகளை சற்று அவதானித்துப் பாடுங்கள்.வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com