மதமும் அறிவியலும் ஒரு விமர்சினக் கண்ணோட்டம்


எம்..ஹபீழ் ஸலபி

ன்று, மனிதன் தனது அறிவுத் திறனை முழுமையாகப் பயன்படுத்தி இனி ஒருக்காலும் எட்ட முடியாத அறிவியல் சாதனைகளை நிகழ்த்திவிட்டதாக இறுமாந்திருக்கின்ற நிலையை அடைந்திருக்கின்றான்.

மனிதன் தான் படைத்த, உருவாக்கிய, சாதித்தவற்றைப் பார்த்து நானே வியந்து ஆச்சர்யப்பட்டு வியப்பில் ஆழ்ந்திருக்கின்றான்.

மனித அறிவு வளர வளர அவன் வெகுவேகமாக முன்னேறி,படைத்த கடவுளிலிருந்தும், வேத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் வெகு தொலைவிற்குச் சென்று கொண்டிருப்பதை நாம் தினமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞான அறிவு வளரவளர மனிதன் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது மட்டுமல்லாமல் விஞ்ஞான வளர்ச்சிக்கு மதங்கள் தடையாக, முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்ற தவறான முடிவுக்கு வந்து நாஸ்திகத்தை நோக்கியும் மதங்களை எதிர்ப்பதிலும் வேத இதிகாசங்களை வசைபாடுவதிலும் இருக்கின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

இந்த நிலை ஏற்படுவதற்கு ஒரு நியாயம் உண்டு. வேதங்கள், புராணங்கள், மதங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், சுலோகங்கள் சொல்லக்கூடிய, போதிக்கக் கூடிய விடயங்கள், போதனைகள், கோட்பாடுகள் விஞ்ஞானத்தோடு நேரடியாக மோதுகிறது, அல்லது முரண்படுகிறது என்பதை நடுநிலை ஆய்வாளர்கள் மறுத்துரைக்க மாட்டார்கள்.

மனித இனத்தின் வரலாற்றைப் படிக்கின்றபோது நாம் மதத்திற்கும் அறிவியலுக்குமிடையே நடந்த போராட்டங்களை அவதானிக்க முடியும். எனவே, இப்பகுதியில் ஒவ்வொரு விடயமாக சுருக்கமாக ஆய்வு செய்வோம்..

அறிவியலும் மதமும் பரஸ்பர முரண்பாடு உடையதா? அறிவியலுக்கும் மதத்திற்குமிடையிலான இன்றைய சமூகவியல் ரீதியான விளக்கம் சரியானதா? அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் ஒருவன் மத நம்பிக்கையுள்ளவனாக வாழமுடியாதா? முதம் வரலாற்றின் அனைத்துக் காலகட்டத்திலும் அறிவியலுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதா? இந்த வினாக்களின் பின்னணியிலே ஆராய்ச்சி பூர்வமாக விடை கண்டு அறிவியலுக்கும் இஸ்லாத்திற்குமிடையிலான தொடர்பை இஸ்லாத்தின் நிழலில் நோக்குவோம்.

மதம் VS அறிவியல்

மதம் அறிவியலுக்கு எதிரானது, முரணானது என்ற நிலையை ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில சோகமயமான நிகழ்வுகள்தான் தோற்றுவித்தன.

உண்மையில் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான போராட்டம் ஐரோப்பா தவிர உலகில் எங்கும் நிகழவில்லை. உலகில் மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக எங்கும் அமைந்த வரலாற்றை எம்மால் காணமுடியவில்லை.

மத்தியகாலப் பிரிவில் ஐரோப்பாவில் கிறிஸ்தவக் கோயில்கள் மிகவும் சக்தியும் அதிகாரமும் படைத்த ஒரு நிறுவனமாக விளங்கியது.

இக்காலப் பிரிவில் கிறிஸ்தவக் கோயில்கள் அதிகாரத்தில் மட்டுமின்றி, அறிவு, பண்பாட்டுக் கலாசாரத்திலும் தனது செல்வாக்கை செலுத்தியது.

சுதந்திர சிந்தனை, அறிவு வேட்கை, ஆராய்ச்சி உணர்வு போன்றவற்றிற்கு எதிராக கிறிஸ்தவக் கோயில்கள் செயல்பட்டன.

இக்கால கட்டத்தை ஐரோப்பிய வரலாற்றாசிரியர் ஃபிஷர் (Fischer) தனது ஐரோப்பிய வரலாறு எனும் நூலில் 'அறிவியலானது நிலைபெற்று வளர்ச்சியடைவதற்கு துணைபுரியும் சுதந்திரமான ஆய்வுக்கு எதிரான ஒரு சூழல்' (An atmosphere hostile to free inquiry in which science could live and mature – H.A. Fischer, History of Europe)  எனக் குறிப்பிடுகிறார்.

அறிவுச் சுதந்திரத்தையும், ஆராய்ச்சி உணர்வையும் கிறிஸ்தவக் கோயில்கள் ஆதரிக்காத இச்சூழ்நிலையில் ஐரோப்பா கல்வி கலாசாரப் பண்பாட்டுத் துறைகளில் பின்னடைந்து தேக்க நிலையில் காணப்பட்டது.

ஆனால், ஐரோப்பா இருளிலும், அறியாமையிலும், காட்டுமிராண்டித்தனத்திலும் மூழ்கி, மடமையில் ஆழ்ந்திருந்த அக்காலப் பிரிவில், இஸ்லாமிய உலகின் நிலை இதற்கு முற்றிலம் முரணாக அமைந்திருந்தது.

இஸ்லாம் ஏற்றிவைத்த அறிவும் தீபம் உலகம் முழுதும் சுடர்விட்டு பிரகாசிக்க ஆரம்பித்தது.முஸ்லிம்கள் அறிவின் அனைத்துத் துறைகளுக்கும் அளப்பபெரிய பங்களிப்பைச் செய்த காலப்பிரிவாகவும் கலாநிலையங்கள், நூலகங்கள், ஆய்வு கூடங்கள், அவதான நிலையங்களைக் கட்டியெழுப்பிய ஒளிமிக்க காலப்பிரிவாக இது விளங்கியது.எனினும் முஸ்லிம்கள் எந்த அறிவுப் பணியையும் செய்யாதது போன்ற ஒரு தோற்றம் கற்பிக்கப்பட்டுள்ளது.

  முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்? என்று ஒரு மாற்று மத நண்பர் கேட்ட கேள்விக்கு அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதிலை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். 
நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம்.
இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான். இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல. மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.
மாறாக பொருளாதார வசதி ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர். இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவேதான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.
ஆயினும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. அந்த நண்பரின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும். அப்படிச் செய்தால் நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும் மருத்துவ மனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.
ஆனாலும் இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போராட்டங்களில் கல்வியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.
எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன. ஆனால் முஸ்லிம்களோ முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல்களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.
இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள். புதிதாக முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர். (காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)
கிறிஸ்தவர்களும் பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கூறினார்கள்.
இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதலைப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால் முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.
வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின்                                                                    தொடர்ச்சி  நிறையக் கல்வி கற்றவர்கள்      உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்டகல்வி                நிலையங்கள் மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி போன்றவை காரணமாக கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.
ஆனால், முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்த பிறகு தான் அடிப்படைக் கல்வியிலிருந்து ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தனது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.
ஆனாலும் 250 ஆண்டு காலத்தில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிக மிக அதிகம் தான். சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இவை யாவும் ஐம்பது வருடங்களில் முஸ்லிம்கள் வெளியார் உதவியின்றி செய்த சாதனைகள். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...
(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)
               
                அல்குவாரிஸ்மி     780-850     கணிதம்- வானவியல்
                (அல்காரிஸ்ம்)
                அல் ராஜி        844-946     மருத்துவம்
                (ரேஜஸ்)
                அல் ஹைதம்           965-1039      கணிதம்-ஒளியியல்
                (அல்ஹேஜன்)
                அல்பிரூணி      973-1048      கணிதம்-தத்துவம்- வரலாறு
                இப்னு சீனா  980-1037          மருத்துவம்
                (அவிசென்னா)
                அல் இத்ரீஸி             1100     புவியியல்
                (டிரேஸஸ்)
                இப்னு ருஸ்து            1126-1198         மருத்துவம்-தத்துவம்
                (அவிர்ரோஸ்)
                ஜாபிர் இப்னு ஹையான் 803        பௌதீகம்
                (ஜிபர்)
                அல் தபரி       838        மருத்துவம்
                அல் பத்தானி             858        தாவரவியல்
                (அல்பதக்னியஸ்)
                அல் மசூதி    957        புவியியல்
                அல் ஜஹ்ராவி         936        அறுவை சிகிச்சை
                (அல்புகேஸிஸ்)
                இப்னு ஹல்தூண்  1332     வரலாறு
                இப்னு ஜுஹ்ர்     அறுவை சிகிச்சை
                (அவன்ஜோர்)
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய  கல்வி நிலையங்கள்! தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.
1) இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி (1919 -ல் தொடங்கப்பட்டது.
2) புதுக்கல்லூரி சென்னை
3) ஜமால் முஹம்மது கல்லூரி திருச்சி
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பாளையங்கோட்டை
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம்
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி இளையான்குடி
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உத்தமபாளையம்
8) காதிர் முஹைதீன் கல்லூரி அதிராம்பட்டிணம்
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி சென்னை
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி மேடவாக்கம்
11) முஸ்லிம் கலைக் கல்லூரி திருவிதாங்கோடு
12) மழ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூர்
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி மதுரை
14) கிரஸண்ட் பொறியியல் கல்லூரி வண்டலூர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி கீழக்கரை
உட்பட 18 கலைக்கல்லூரிகள் 5 பெண்கள் கலைக் கல்லூரிகள் 12 பொறியியல் கல்லூரிகள் 8 பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள். இக்கல்லூரிகளில் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்களின் கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சியிலும் அறிவுப் பங்களிப்பிலும் ஸ்பெயின் மிக முக்கிய இடத்தை வகித்தது.

மத்தியகாலப் பிரிவில் ஸ்பெயின் அறிவுப் பங்களிப்புக் குறித்து பேராசிரியர் ஹிட்டி பின்வருமாறு குறிப்பிடுகிறார் :
 'முஸ்லிம் ஸ்பெயின் மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் மிக ஒளிமிக்க அத்தியாயங்களுள் ஒன்றை உருவாக்கியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் உலகம் முழுவதும் அரபு பேசும் மக்களே கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் ஒளியை ஏந்தி நின்றனர். அவர்கள் மூலமாகவே புராதன அறிவியலும் தத்துவமும் அழியாது பாதுகாக்கப்பட்டு, அவர்களது பங்களிப்பும் இணைந்து மேற்கு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. இதுவே ஐரோப்பய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது' Hitti, History of Arabs, P.557.
மேற்கத்திய உலகம் ஆழமான அறிவைப்பெற விரும்பியபோதும் புராதன சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள முற்பட்ட போதும்இ முதலில் அது கிரேக்க மூலாதாரங்களை நோக்கியன்றிஇ அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது. பேராசிரியர் (George Sarton) அவரது அறிவியல் வரலாற்றிற்கு ஓர் அறிமுகம் (Introductio of History of Science) எனும் நூலில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger