இன்றைய சமூக வாழவில் பெண்களின் வெளித் தொடர்பு என்பது மிக முக்கயமானதொரு விஷயமாகும். 'ஆண்களின் அடுத்த பகுதியினர் - அடுத்த சம பகுதியினர் பெண்கள்' எனும் போது அந்த அடுத்த பகுதியினர் ஒடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு செயலற்றுக் கிடக்குமானால் சமூக எழுச்சியடைவதும் தாமதமாகும். எனவே, ஆணும் - பெண்ணும் சம அந்தஸ்துடையவர்கள் என்ற கோட்பாட்டின் நிழலில் அவள் சமூக உறவை அமைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இஸ்லாம் வாழ்வின் சகல துறைகளுக்குமென மிதமான தீர்வை வழங்கும் மார்க்கம் என்ற அடிப்படையில், பெண்ணின் சமூக உறவு பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகின்றது.
பெண் என்பவள் எதிர்காலப் பரம்பரையை உருவாக்கும் அதி உன்னத பொறுப்பு வாய்ந்தவள். அவளது உடல். உள இயற்கை அமைப்புக்கள் அனைத்தும் மகத்தான பணிக்கு ஏற்ப அல்லாஹ்வினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவள் வீட்டில் அடைபட்டு ஓர் அடிமையாக முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதல்ல. அவள் வீட்டை விட்டு வெளியேறி சமூகக் களம், ஏன்? போர்க் களங்கள் வரை கூட செல்வதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஆனால்இ அவளது வீட்டுப் பணிக்கு அது பாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இஸ்லாம் போதனை வழங்குகின்றது.
சமூகக் களம் ஆணின் முதன்மையான பகுதி. வீடு, குடும்பம் என்பன அவனது இரண்டாவது பகுதி. பெண்ணின் முதன்மையான பகுதி வீடும் குடும்பமுமாகும். சமூகக் களம் அவளின் இரண்டாவது பகுதி. இவ்வாறு இஸ்லாம் ஆணின் மீதும் பெண்ணின் மீதும் விதித்துள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் ஆழ்ந்து நோக்கும் போது, மிக அற்புதமானதொரு சமநிலையை ஆண்-பெண், குடும்பம்-சமூகம் என்ற இருவகை அலகுகளுக்கும் இடையே பேணியுள்ளமையைக் காண முடியும்.
சமூக சீர்திருத்த முயற்சியிலும் உழைப்பிலும் பெண்ணின் பங்கைப் பொறுத்தவரை மிக அவசியமானது. அந்நியர்கள் இஸ்லாமிய நாட்டின் மீது படையெடுத்து நாட்டுக்குள் நுழைந்து விட்டால் அனைவர் மீதும் (ஆண்-பெண் சிறுவர்-பெரியவர்) 'ஜிஹாத்' கடமையாகின்றது.
எனினும், சமூகத் தீமைகளுக்கு எதிராக பாடுபடுதல், உழைத்தல் என்பது பெண்களுக்கு கடமையல்ல என்ற மனப்பதிவு பரவலாகக் காணப்படுவதோடு மட்டுமல்லாது அவ்வாறு உழைத்தல் பெண்களுக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற எண்ணமும் சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. இது பற்றி சிந்திப்பதும் இதற்கான இஸ்லாமிய தீர்வு தேடுதலும் அவசியமாகும்.
முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையோடு, அவர்களது சீர்திருத்தம், இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் மாற்றுமத பெண்களோடு முஸ்லிம் பெண்களின் நிலை எவ்வாறு வேறுபட்டது, அதிலும் அதிக உரிமைகள் உடையது என்பதையும் ஆணும் பெண்ணும் சமம் எனும் கோட்பாட்டிற்கான இஸ்லாமிய வரையறை பற்றியும் இன்னும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், சமூக ஆதாரவின்றி அவற்றை அவர்களால் நிறைவேற்ற இயலாது என்பதையும் இங்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.
பன்மை சமூகங்களில் பெண்களின் பரிதாப நிலை
இஸ்லாத்தின் நிழலில் பெண்களின் சமூக உறவை ஆய்வுக்கு உட்படுத்த முன்னர் பெண்களை மற்ற சமூகத்தினர் எவ்வாறு நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று புரிந்து கொள்வது இஸ்லாத்தில் பெண்களின் மாண்பை மட்டிட இலகுவாக இருக்கும். அதனால் உலக சமூகங்களில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை முதலில் நோக்குவோம்.
கிரேக்கர்கள்:
கிரேக்கர்கள் பெண்களை விற்பனைப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். அங்கு பெண்களுக்கு சொத்துரிமைஇ கொடுக்கல் வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமிக்க விஞ்ஞானியான சோக்ரடீஸ் என்பவர், 'பெண்கள் இருப்பது உலகின் மிகப் பெரிய அழிவிற்கு மூல காரணம். நிச்சியமாக பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கிறது என்றும், அதிலுள்ளதை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனேயே மரணித்து விடுகின்றன' என்றார்.
இந்தியர்கள்:
பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் இவ்வாறு தான் இருந்தது. கணவன் மரணித்து விட்டால் அவனோடு சேர்ந்து அவனது மனைவியும் எரித்து விடுவார்கள். இதற்கு 'உடன்கட்டை' ஏறுதல் எனப்படுகிறது.
சீனர்கள்:
பண்டைய கால சீனர்கள் பெண்களை விற்கவும், உயிரோடு எரிக்கவும் செய்தனர்.
யூதர்கள்:
யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர்.இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.
கிறிஸ்தவர்கள்:
கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் Agent எனக் கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர், 'பெண் மனித இனத்தைச் சேராதவள்' எனக் கூறினார். செம்பூனா பென்தாரா என்ற கிறிஸ்தவன் 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதாதீர்கள். நிச்சியமாக நீங்கள் காண்பது ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் சீற்றம் தான்' என்றான்.
ஆங்கிலேயர்:
19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.
ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம்:
1567ம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது என்று சட்டமியற்றியது. இவ்வாறே 8வது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமான இருப்பதர் பிஞ்சிலே படிப்பது கூடாது என்று சட்டமியற்றியது.
பிரஞ்சு நாட்டவர்:
பிரஞ்சு நாட்டவர் 1586ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்றே உள்ளது. மேலும்இ மனைவியின் விலையை 6 பென்ஷிஇ அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள்.
இஸ்லாம்:
இஸ்லாத்திற்கு முன்பு வரை பெண்கள் புண்களாக எண்ணப்பட்டு இழிவான ஈனப் பிறவிகளாக இதயமற்ற மாமிச பிண்டங்களாக கருதப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். பெண் பிள்ளை பிறந்தால் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். இவ்வாறு அகிலம் முழுவதும் பெண்ணினத்திற்கு அளிக்கப்பட்டு வந்த கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. இவை அனைத்து அநியாயங்களை விட்டும் பெண்களை பாதுகாக்க இஸ்லாம் வருகை தந்தது. பெண் குழந்தை பிறந்ததை இழிவாகக் கருதி உயிரோடு புதைத்துக் கொண்டுரந்ததைக் கண்டித்து, பெண் குழந்தை பிறப்பதை நற்செய்தி என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனினும், அறியாமைக்கால மக்கள் அதனை அபச் செய்தியாகவே கருதினார்கள்.
'அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகின்றது. அவன் கோபமுடையவனாகின்றான்.' (16:58)
பெண்கள் பற்றிய எண்ணக் கரு சமூகநிலை மிகுந்த கருத்து வேறுபாட்டையும் அதி தீவிர கொள்கையையும் அடக்கிய பிரச்சினையாகி, விவாதப் பொருளாகியுள்ளது. எனினும், இஸ்லாம் சமநிலை பண்பு கொண்ட கொள்கை என்ற வகையில் அது தன் அடிப்படைக் கொள்கைகளிலோ சமூக நடைமுறைக்கான சட்டங்களிலோ எத்தகைய தீவிர நிலையையும் பிரதிபலிப்பதில்லை.
பெண்ணை நிச்சியமாக ஆணாகவே பாவிக்கும் சிந்தனையிலும், பெண்ணை அனுபவிக்கும் பொருளாக மட்டும் பார்க்கும் இது போன்ற பல்வேறு தீவிர நிலைகளையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஆனால், நவீன காலப் பிரிவில் பெண்களை ஆணாகவே பாவிக்கும் இயந்திர சிந்தனை வலுப்பெற்று சமூகங்கள் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
உரிமைகளும், சட்டங்களும் இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில விடயங்களில் அவரவர் இயல்பு நிலையை கருத்திற்கொண்டு சலுகையையும் வழங்கியுள்ளது.
ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும் தோன்றினார்கள் என்ற கருத்தை அல்குர்ஆன் மிக அழுத்தமாகப் மனித மனங்களில் பதிவுசெய்கிறது.
'மனிதர்களே நிச்சியமாக நாமே உங்களை ஓர் ஆண் பெண்ணில் இருந்து படைத்தோம்.' (49:13)
இஸ்லாத்தில் ஆண்-பெண் சமத்துவம் என்பது உண்மை. பெண்ணை எல்லா விதத்திலும் ஆணை விட தாழ்த்திப் பார்ப்பது அவள் மீது இழைக்கப்படும் அநீதி என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, ஆணையும் பெண்ணையும் ஒரே இனமாக பார்க்க முனைந்து. பெண்ணை ஒரு மோகப் பொருளாக நோக்கி போகப் பொருளாக பார்ப்பது, அல்லது மனித அந்தஸ்த்தை விட்டு தாழ்த்துவது ஒரு பெருங்குற்றம். அவள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மூலமாக அமைவது இதுவே. அதேவேளை ஆணையும் பெண்ணையும் எந்த வித்தியாசமும் அற்ற ஒரே இனமாக காண முனைவதும் பெண் மீது அநியாயங்கள் இழைக்கப்பட காரணமாக அமைந்து விடுகிறது. நவீன கால மேற்கத்திய பெண்களின் வாழ்வு இதற்கு முதன்மையான உதாரணமாகும்.
இவ்வாறான நிலைகளுக்கிடையே இஸ்லாம் நடுநிலையான சிந்தனையையே முன் வைக்கிறது. இருவருக்கும் சம அந்தஸ்த்தை கொடுக்கும் இஸ்லாம் சமூக வாழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது அவசியம் எனக் காண்கிறது.
'ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி ஈமான கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கின்றார்களோ இவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் கடுகளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.' (4:124)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுத்தஆலா உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கின்றான். (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் நபிமொழியொன்று பின்வருமாறு பேசுகின்றது. முஃமின்களில் பூரண ஈமான் உடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர் உங்களில் சிறந்தவர் தனது மனைவியிடத்தில் சிறந்தவர்கள்.
'உலகம் மிக இன்பமானது. ஆந்த உலகம் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவியாகும்.'
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'மனிதர்களில் நான் அழகிய பண்புடன் நடந்து கொள்ளக் கூடியவர் யார் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாய் என்றார்கள். பிறகு யார் என்று கேட்டார். உனது தாய் எனக் கூறினார்கள். பினபு யார் எனக் கேட்டார். உனது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார் எனக் கேட்டார். உனது தந்தை என்றார்கள்.'
இவை, பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும். எனவே, ஒருவரையொருவர் பூரணப்படுத்தும் இரு சமூக அலகுகளே ஆணும் பெண்ணும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.
'கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு.' என்கிறது. கூலி தண்டனை வழங்குவதில் இஸ்லாம் சமமாகவே பார்க்கிறது. ஆணைப் போலவே ஷரீஆ விஷயங்களில் பெண்ணும் பொறுப்புமிக்கவர். செல்வம் சேகரிப்பதற்கு, கொடுக்கல் வாங்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கருத்து வெளியிடவும் அவளுக்குப் பூரண உரிமை உண்டு.
இந்த வகையில், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் போன்று வேறு எந்த மதமோ நாகரிகமோ வழங்கியதை காண முடியாது. வாரிசுச் சொத்தில்இ தனக்கு ஏற்ற கணவனைத் தெரிவு செய்வதில், ஏன் தனக்குப் பொருத்தமின்றேல் கணவனிடத்தில் விவாகரத்து கோருதல் போன்ற அம்சங்களில் அவர்களுக்குரிய உரிமைகள் இஸ்லாம் வழங்குகின்றது. வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com