அரசியல் – சமூக நோக்கில் முஹம்மது அலி ஜின்னாஹ்


M.A.HAFEEL SALAFI

ந்தியாவின் சுதந்திர காலப் பகுதியில் அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாது சாதாரண மக்களிடம் கூட பிரபல்யமிக்க ஒரு வழக் குரைஞராக முஹம்மது அலி ஜின்னாஹ் காணப்பட்டார். தனது வாதத் திறமையால் தான் சந்தித் வழக்குகளை வெற்றி நிலைக்குக் கொண்டு சென்றார். அவரை விமர்சிக்கும் பார்ப்பணிய தலைவர்கள் அவரது திறமையை விமர்சிக்கத் துணியவில்லை.
இந்தியாவில் பிறந்தாலும் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கும்  திறமை அவரிடம் காணப்பட்டது. ஜனநாயக நிரோட்டப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்று  அவர் உருவாக்கிய நாடு இன்று அணு வல்லமை வரை வளர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்  என்ற வெளிப்படையான அடையாளம் அவரிடம் காணப்பட்டாலும் அவரது கொள்கைத் தடமாற்றங்கள் பற்றி பல்வேறு நியயமான விமர்சனங்களும் உள்ளன. எனினும் வாசகர்களுக்கு அவரது  அரசியல் சமூக பக்களிப்பை அறிமுகப்படுத்துவதே நமது நோக்கமாகும்.
ஜனனமும் ஆரம்பக் கல்வியும்
1876
ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி முஹம்மது அலி ஜின்னா பிறந்தார். 1882ம் ஆண்டு மார்க்கக் கல்வி போதிக்கக்கூடிய மத்ரஸாஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்இ  அடுத்த ஆண்டிலேயே சிந்து மதரஸதுல் இஸ்லாம்என்ற பெரிய பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டார்.  தனது மகனுக்கு சிறந்த மார்க்க கல்வி அளிக்கவேண்டுமென தந்தை ஜின்னா பூஞ்சா நினைத்தார். 1886ம் ஆண்டில் முஹம்ம்து அலி ஜின்னாவை பம்பாய்க்கு அனுப்பி கோகுல் தாஸ் தேஜ் பிரைமரிஎன்ற ஆங்கிலக் கல்வி கற்றுக்கொடுக்கும் கலாபீடத்தில் படிக்க்வைத்தார். ஓராண்டு தான் இக்கலாபீடத்தில் படிக்கவைக்கப்பட்ட்டு சிறந்த மத்ரஸா உயர் நிலைபள்ளியில் சேர்க்கப்பட்டார். 1890ம் ஆண்டு வரை அங்கே அவர் கல்வி கற்றார். 1891ம் ஆண்டி கராச்சியிலுள்ள கிறிஸ்துவ மிஷனரி சொசைடி ஹைஸ்ஸ்கூலில் சேர்க்கப்ப்ட்டார்.
திருமணம்
உயர் நிலை கல்வி படித்துக்கொண்டிருக்கும் போதே முஹம்மது அலி ஜின்னாவுக்கு திருமணமாகிவிட்ட்து. ஹிந்துவாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி சில குஜ்ராத்திகள் தங்களது குழந்தைகளுக்கு இளவயதிலேயே திருமணத்தை முடித்துவிடுவார்கள். ஜின்னாவுக்கு 14வது வயது நடந்துகொண்டிருக்கும் போது அவர் ராஜ் கோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு 11ம் வயது நிறம்பிய உறவுக்கார பெண்ணுடன் திறுமண சடன்ங்குகள் நிறைவேற்றப்பட்டன. மணப்பெண்ணின் பெயர் அமைபாய் என்பதாகும். பால்ய பருவத் திருமணம் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று.எனினும் இது இந்து மத சில இனக் குழுக்களிடம் இம்மரபு இன்று வரை  தொடர்கிறது.
ஜின்னாவின் தந்தை பூஞ்சா அவர்கள் தனது மகனின் மேற்படிப்புப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுது முஹம்மது அலி ஜின்னாவின் எதிர்கால வாழ்க்கைக்கு அடிப்படையாக ஒரு சம்பவம் நடந்ததாக அவர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களில் அறிய முடிகிறது. அது அவரது எதிர்கால மாற்றத்திற்கு வழிகோலியது என்று கருத முடிகிறது.
பெரடரிக் லோஹ் கிரேப் என்ற ஆங்கிலேயர் ஜின்னா பூஞ்சாவுடை நண்பர். இவர் ஒரு வியாபார இடைத் தரகர். வியாபார விடயமாக பூஞ்சாவிடம் அடிக்கடி வந்துபோவார். ஒரு நாள் முஹம்மது அலி ஜின்னாஹவை அவர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தனது படிப்பு முடிந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அலி ஜின்னா சிந்தித்துக்கொண்டிருந்த  நேரம்.
உயர் கல்வி
அப்போது முஹம்மது அலி ஜின்னாவை பார்த்ததும்  மிஸ்டர் கிரேபுக்கு பிடித்துப் போய்விட்டது. அந்ந இளம் முகத்தில்  அவரை வசீகரிக்கும் திறமை கூட தென்பட்டுள்ளது. தனது நண்பரின் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
பூஞ்சாவிடன் அச்சிறுவனுக்காக ஆச. கிரேக் வாதாடினார்.
இங்கிலாந்து (நுபெடயனெ) க்கு அனுப்பி மகனை உயர்கல்வி படிக்க வையுங்கள். சிறந்த அறிவாளியாக விளங்குவான் என்று அறிவுரை கூறினார். முஹம்மது அலி ஜின்னாவை இங்கிலாந்துக்கு அனுப்புவது என்று அவரது தந்தை  தீர்மானித்தார்.
இங்கிலாந்துப் பயணம்
1892
ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி முஹம்மது அல் ஜின்னா இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அப்பொழுதுஇ அவருக்கு வயது 16. பதினெட்டு வயதுக்கு பேற்பட்டவர்களைத்தான் சட்டக் கல்லூரிகளில் சேர்க்க இயலும் என்றும்இ ஜின்னாவுக்கு வயது போதவில்லை என்றும் பல்கலைக்கழகங்களில் பதில்கள் கிடைத்தன. அதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும் தனது திறமையில் அவர் தன்னம்பிக்கை இழக்கவில்லை.
ஓரிரு ஆண்டுகள் லண்டன் நகரில் வீணாகக் கழிக்க வேண்டுமே என்ற கவலை ஜின்னாவைப் பிடித்துக் கொண்டது. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. சட்டக் கல்லூரியில் சேரும் வரைஇ தனது அறிவை சொந்த முயற்சி மூலமாகவே வளர்த்துக் கொள்வது என்ற முயற்சிகளில் இறங்கினார். நிறைய நூல்களைப் படித்தார். பிரிடிஷ் மியூஸியம் மற்றும் அது போன்ற நூல் நிலையங்களில் தனது நேரங்களை எதிர்கால கனவுகளுடன் செலவழித்தார்.
அப்போது பிரிடிஷ் பாராளுமன்றத்திற்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கு நடைபெரும் நிகழ்ச்சிகளையும் வாதப் பிரதி வாதங்களையும் கேட்டு மகிழ்வதில் அவருக்கு அலாதியான இன்பம் ஏற்பட்டது. அந்த வாதங்களும் அவரது ஆளுமையிலும் அரசியல் பிரவேசத்திலும் தாக்கம் செலுத்தியது.
பதினாறு வயது இளம் ஜின்னா பிரிடிஷ் பாராளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்துஇ அந்நிகழ்ச்சிகளை நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இம்மன்றத்தில் நிறை வேற்றப்படும் மசோதா ஒன்றில் ஒரு நாள் தனது பெயரும் பிரஸ்தாபிக்கப்படும் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.
ஆம்! அப்படி ஒரு சம்பவம் வரலாற்றில் நிகழ்த்தான் செய்த்து. 1947ம் ஆண்டு ஜுலை மாதம் 18ம் திகதி இந்திய சுதந்திர மசோதாபிரிடிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அம்மசோதாவில் டொமினியின் அந்தஸ்துப் இந்தியாவுக்கு கவானர் ஜெனலாக மவுட் பேட்டன் பிரபுவும் டொமினியன் அந்தஸ்துப் பெற்ற பாகிஸ்தானுக்கு கவர்னர் ஜெனரலாக முகம்மது அலி ஜின்னாவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்து.
லண்டனில் ஜின்னா படித்துக் கொண்டிருந்த காலத்தில் கோபாலகிருஷ்ண கோகலே சேர் சுரேந்திநாத் பானர்ஜி போன்ற பிரபலமான இந்தியத் தலைவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்களில் இந்திய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் கூட்டங்களில் அத்தலைவர்கள் அடிக்கடி உரையாற்றுவதுண்டு.
மாணவர் கூட்டமொன்றில் திருகோகலே பேசும் போது நீங்கள் எங்கு வசித்தாலும் சரியே உங்கள் முகங்களை இந்தியாவின் பக்கமே திருப்பி வைத்துக்கொள்ளுங்கள் ஜப்பானியர்கள் எப்பொழுதுமே ஜப்பான்பக்கமே தங்களது முகங்களை திருப்பி வைத்துக்கொள்வார்கள். அதுபோல் உங்களது பார்வையும் சதா இந்தியாவின் மக்கமே இருக்கவேண்டும்என அறிவுரை கூறினார். இக்கருத்து ஜின்னாவின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. ஏற்கனவே கொழுந்துவிட்டுக்கொண்டிருந்த தேசியம் சுதந்திர தாகம் பலமாக பற்றிப்பிடித்துக்கொண்ட்து. கோகலே மீது ஜின்னாவுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்ட்து. பிற்காலங்களில் பல கூட்டங்களில் இதை அவர் பகிரங்கமாகவெ கூறிவந்திருக்கிறார்.
அதுபோலவே சுரேந்திர நாத் பானர்ஜி பற்றி ஜின்னா குறிப்பிடும் பொழுது; ‘அவரது அடிச்சவட்டில்தான் எனது ஆரம்ப அரசியல் பாடங்கள் ஆரம்பமாயின்என டில்லி மத்திய சபையிலேயே கூறி இருக்கிறார். தாதாபாய் நவ்ரோஜி சி ஆர் தாஸ் கோகலே சுரேந்திர நாத் பானர்ஜி போன்றவர்களின் தொடர்பும் அறிவுரைகளும் மாணவப் பருவத்திலேயா ஜின்னாவுக்கு கிடைக்கப்பெற்றது. பிற்கால அரசியல் வாழ்க்கைக்குத் துணையாக அமைந்துவிட்டது.
இரு துயர நிகழ்வுகள்
ஜின்னா லண்டனில் படித்துக் கொண்டிருந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் அவரது குடும்பத்தில் இரு முக்கிய இழப்புக்கள் நடந்துவிட்டன. அவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட அமய் பாய் என்ற பெண் 1893ம் ஆண்டில் திடீரென இறந்துவிட்டார். அதன் பின்னர் ஜின்னாவின் தாயாரும் ஓரிரு ஆண்டிகளில் மரணமடைந்துவிட்டார். ஜின்னாவின் துயரங்கள் அத்துடன் நிற்கவில்லை. அவரது தந்தை செய்து வந்த வியாபரத்தில் இடிவிழுந்துவிட்ட்து. பூஜ்சா பெருத்த நஷ்ட்த்திற்குள்ளானார். நிதி நிலைமை படுமோசமாகிவிட்டது. இருந்த போதிலும் லண்டனில் படித்துக்கொண்டிருந்த தனது மகனுக்கு இவ்விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. எப்படியோ சிரமப்பட்டு மகனின் படிப்பை நிறைவு செய்துவிட்டார்.
பரிஸ்டர் பட்டமும் குடும்ப சுமையும்
1896
ம் ஆண்டு தனது இருபதாவது வயதில் சிறப்புத் தகுதிகளுடன் பட்டம் பெற்று ஜின்னா கராச்சி திரும்பினார். இவ்வளவு குறைந்த வயதில் பரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார். என்னென்னவோ மனக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு தாயகம் திரும்பியவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்த்து. தந்தையின் வியாபர சீரழிவு முதலில் அவரை நிலைகுலைய வைத்த்து. மூத்தமகன் எனற நிலைமையில் அக்குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் சுமத்தப்பட்டது.
வக்கீல் பட்டம் பெற்று வந்ததும் ஓஹோ என தொழில் ஆரம்பமாகிவிடும் என்று அவர் கனவு காண முடியவில்லை. உனினும் அசட்டு நம்பிக்கையில் அவர் காலம் கட்த்தவில்லை. கஷ்டப்பட்டுத்தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உண்மையை ஜின்னா புரிந்துதான் இருந்தார். என்ற போதிலும் சோதனைகள் இவ்வளவு சீக்கிரமாக ஆரம்பமாகிவிடலாம் என அவர் எதிர்பார்க்கவில்லை. தந்தையையும் மற்றைய ஆறு உடன் பிறப்புக்களையும் கவனிக்க வேண்டிய கடமை அவர் மீது சுமத்தப்பட்டது.
வக்கீல் தொழில்
கராச்சியிலேயே வக்கீல் தொழிலை ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்தில் ஜின்ன நினைத்தார். சூழ்நிலை ஒத்த்துவரவில்லை. கராச்சியிலுள்ள பிரபல வழக்கறிஞர் சிலர் ஜின்னாவை தங்களுக்கு உதவியாளராக இருக்கும்படி அழைப்பு விடுத்தார்கள். எனினும் ஜின்னா மறுத்துவிட்டார். 1897 முதல் 1900 வரை மூன்று ஆண்டுகள் ஜின்னாவின் வாழ்க்கையில் மிகவும் சோதனையான கட்டம் குடுமபத்திலும் தன்னிடத்திலும் பொருளாதார நெருக்கடி வறுமை என்பன அவரை வாட்டி எடுத்த்து.
முதல் மூன்று ஆண்டுகளில் ஜின்னாவுக்கு ஒரு வழக்குக்கூட கிடைக்கவில்லை. அடித்த மூன்று ஆண்டுகளில்18 வழக்க்குகள் அவரைத்தேடி வந்தன. வியாபரம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கள் 16 வழக்குகள்இ மத ஸ்தாபனங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகள். வழக்கை ஒப்படைத்தவர்களில் ஏழு பார்ஸிகள் நான்கு ஹிந்துக்கள் ஒரு போராவும் ஒரு கோஜாவும் உற்பட முஸ்லிம்கள் ஜந்து பேர் மற்றப் பிரிவினர் இருவர்.
ஒரு முறை ஜின்னா நாணயம் தைரியம் உழைப்பு பிடிவாதமான விடாமுயற்சி ஆகிய நான்கு தூண்கள்தான் வெற்றிக்குரிய காரணங்களாகும். தோல்வி என்பது நான் அறியாத ஒன்றுஎன்று கூறியுள்ளார்.
பம்பாய் நீதிமன்ற வட்டாரங்கள் ஜின்னாவின் புகழ் ஓங்கவாரம்பித்தது. அவரது பீஸும்கூடிக்கொண்டெ சென்றது. ஜின்னாவின் வக்கீல் பீஸ் தினசரி 500 ரூபாய் என்ற கட்ட்த்தில் இருக்கும் பொழுது ஹாஜி அப்துல் கரீம் என்பவர் வழக்கு ஒன்றை கொண்டுவந்து கொடுத்தார். தம்மிடம் ரூபா 500 தான் இருப்பதாகவும் இத்தொகைக்குள் வழக்கை நட்த்தி முடித்துவிட வேண்டும் என்றும் தமது நிலையை அவர் ஜின்னாவிடம் எடுத்துச் சொன்னார். இந்த வழக்கை ஜின்னா எடுத்து நட்த்தினார். வழக்கு சாதகமாக முடிந்த்து. மூன்று நாள் பீஸை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்துவிட்டார் ஜின்னா.
ஒரு நாலைக்கு 1000 ரூபாய் என்ற நிலைமை மாறி, ஒரு மணிக்கு ஆயிரம் ரூபாய் என்ற கட்டத்திற்கு ஜின்னாவின் பீஸ்எட்டிவிட்ட்து. ஒரு நாள் ஒரு கட்சிக்காரர் ஜின்னாவிடம் வந்தார். அவர் கொண்டுவந்த பதிவுகளும் பைல்களும் பெரிய கட்டாக இருந்த்து. அதைப் பார்த்து சட்டபூர்வமான ஒப்பினிகள்கொடுக்க 10 - 15 மணி நேரம் பிடிக்கும் என்று தோன்றிற்று. ஆனால் வந்தவர்ரோ தம்மிடம் 10000 ரூபாய்தான் இருப்பதாகவும் தமது பதிவுகளைப் பார்த்துக் கொண்டு வரும்போது எந்த கட்ட்த்தில் அந்த ரூபாய் (வக்கீல் பீஸ் வைக்கு) சரியாகிவ்டுகிறதோ அந்தக் கட்டத்தில் பைலைப் பார்ப்பதை ஜின்னா நிருத்திவிடலாம் என்றும் ஆனால் எப்படியும் ஜின்னாதான் இதை பார்க்கவேண்டும் என்றும் வற்புறுத்தினார்.  பைல் பெரிதாக இருந்தபோதிலும் வழக்கின் தன்மைகளையும் அதற்காக வெற்றி வாய்ப்புக்களையும் 312 மணிநேரப் பரிசோதனைக்குள்ளானவே புரிந்துகொண்டார். தனது :ஒப்பினியைஎழுதிக்கொடுத்த்துடன் ரூ. 3500ஃஸ்ரீ போக மீதித் தொகையையும் திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜின்னா.
பம்பாய் உயர் நீதி மன்ரத்தின் நூறவது ஆண்டு விழா 1962ம் ஆண்டு கொண்டாடப்பட்ட்து. அப்பொழுது ஒரு சிறப்பு மலர் வெளியிடப்படாது. பிரபல் வலக்கரிஞராகவும் மத்திய அமைச்சராகவும் பாரத் வித்திய்  ஆபவன் ஸ்தாபகருமாக இருந்தவருமான க்ம் மின்க்ஷி அதில் நமது சுய நினைவுகளை விவரித்து கட்டுரை ஒன்றை தீட்டியிருந்தார். ஜின்னா பிரபலமான வழக்கறிஞராக இருந்த காலத்தில் அப்பொழுதுதான் முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர்இ க்ம் முன்க்ஷி. அந்தக் காலத்தில் நீதி மன்றங்களில் கொடி கட்டிப் பறந்தவர்கள் குறித்து தமது கட்டுரையில் முன்க்ஷி விவரிக்கையில் ஜின்னாவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சமயம் புகழ் பெற்றிருந்த இந்திய வழக்கறிஞர்களில் முஹம்மது அலி ஜின்னாவும் ஒருவர் நல்ல உய்ரம் நல்ல உயர் உடை அணிவதில் அவரது ஸ்டைலை மிஞ்ச முடியாது. அவர் அலாதியானவர் அவருக்கு நிகர் அவரே அவரது விவாத திறமை எல்லோருக்கும் வியக்கும் வண்ணம் சட்ட நுணுக்கமும் இருக்கும் பகுத்தறிவும் மிளிரும்; நல்ல தைரிய சாலி; அவரது நானயத்தை ஒருவரும் குறைசொல்ல முடியாது. கீழ்த்தரமான சில்லறை விளையாட்டுக்களில் அவர் ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது. நேருக்கு நேராகத்தான் கணக்கை தீர்த்துக்கொள்வார். நீதியாக இருக்கட்டும் அல்லது எதிர்கட்சியாக இருக்கட்டும் வழக்கறிஞராக இருக்கட்டும் அவருடன் மோதினால் நல்லபடியாக குட்டுப்பட்டுத்தான் வெளிவர வேண்டியிருந்த்து.!
பிரபலமான பல வழக்குகளை ஜின்னா நடத்தி இருக்கிறார். 1923 -24ம் ஆண்டுகளில் பவ்லா கொலை வழக்குஎன்பது பம்பாய் நகரையே உலுக்கி எடுத்து விட்ட்து. அதில் பான்ஸி என்ற குற்றம் சுமத்தப்பட்டவருக்காக ஆஜரானார். ஜின்னா சாட்சிகளை குருக்கு விசாரணை செய்வதில் அவர் அலாதியான திறமை படைத்தவர். சாட்சிகளை ஜின்னா குறுக்கு விசாரணை செய்கிறார் என்றால் அன்ரைய தினம் நீதி மன்றத்தில் கூட்டம் அலைமோதும் பவ்லா கொலை வழக்கிலும் அப்படித்தான் நடந்தது.
சிவில் கிரிமினல் வழக்குகளில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் அவர் ஆஜரானார். பிரிடிக்ஷ் அரசாங்கம் இந்தியத் தலைவர்கள் மீது பல குற்றச்சட்டாடுகளை சுமத்தி வழக்குத் தொடுத்தபோது தேசியத் தலைவர்களுக்காக ஜின்னா நீதிமன்றங்களில் வாதாடினார். பால் கங்காதர திலக் மீது 1908ம் ஆண்டும் 1918ம் ஆண்டும் ராஜதுரோக்க் குற்றம் சாட்டப்பட்ட பொழுது அவருக்காக ஜின்னா ஆஜரானார். 1914ல் அலில் சகோதரகள் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அவருக்காக வழக்காடினார். அவர் 1917அ அன்பெஸ்ண்ட் கைது செய்யப்பட்டபொழுது அதிலும் ஜின்னாதான் ஆஜரானார். சரத் சந்திர போஸ் 1935ம் ஆண்டு சிரை வைக்கப்பட்ட போது அந்த வழக்கிலும் ஜின்னா ஆஜரானார்.
அரசியலில் ஜின்னாவின் ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க தமது வகீல் தொழிலை அவர் மிகவும் குறைத்துக் கொண்டார். அவரைத் தேடிவந்த கட்சிக்காரர்களை தமது வக்கீல் நண்பர்களிடம் அனுப்பிவைத்தார். வக்கீல் பீஸையும் கூட்டிப்பார்த்தார். அப்படியும் கூட்டம் மொய்த்தது. நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடிக் கொண்டிருக்காமல் வீட்டிலிருந்துவாறே ஒப்பினியன்மட்டும் கொடுப்பது என்று ஜின்னா முடிவு செய்தார். அப்படியும் கூட்டம் திரளவே செய்த்து. 1942க்குப் பிறகு வக்கீல் தொழில் பார்ப்பதை அவர் முழுமையாக நிறுத்திக் கொண்டார். அவரது முழு நேரமும் அரசியலின் பக்கமே திரும்பிவிட்டது.
1904
அல்லது 1905ம் ஆண்டில் ஜின்னா இந்தியா தேசிய காங்கிரஸில் ஓர் உருப்பினராக சேர்ந்து கொண்டார். 1996ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர மாநாடு கல்கத்தா நகரில் நடைபெற்றது. வாதுபாய் நவ்ரோஜ் அம்மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்இ முதன்முதலாக ஜின்னா இங்குதான் காங்கிரஸ் கட்சி மேடையில் உரையாற்றினார். 1908ம் ஆண்டு டிசம்பரில் வருடாந்த காங்கிரஸ் மாநாட்டில் ஜின்னா கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை கூர்ந்து நோட்டமிட்டு வந்தார். அத்தோடு தனது கருத்துக்களை கட்சி மேடைகளில் பகிரங்கமாக எடுத்துரைத்தார்.  1906ம் ஆண்டில் டில்லியிலுள்ள இம்பிரியல் கவுன்ஸிலுக்குத் தேர்தல் நடைபெற்றது. தனித்தொகுதி முறை அப்போதே அமுலில் இருந்தது. அம்பாய் ராஜதெனி முஸ்லிம்கள் சார்பாக ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட் டார். முதல் கூட்டத்தொடரிலேயே அகில இந்தியப் புகழ் பெற்றுவிடார் ஜின்னா. தென்னாபிரிக்காவில் இந்தியர்களை கொடுமைப்படுத்துவது பற்றியும் நிறவேற்றுமை காட்டுபடுத்துவது பற்றியும் ஒருவிதம் சபையில் எழுந்தது. தென்னாபிரிக்கா ஆரசாங்கத்தை கண்டித்து உறுப்பினர் ஜின்னா போகும் போது இந்தியர்கள் காட்டுமிராண்டித்தனமாக அந்த ஆட்சியாளர்களால் நட்த்தப்படுகின்றார்கள் என்று வன்மையாகச் சாடி பேசினார். இம்பிரியல் கவுன்ஸிலில் விவாத்த்திற்கு வந்த எல்லா மசோதாக்களின் மீதும் ஜின்னா உரையாற்றினார். அதில் ஆணித்தரமான வாதங்களை எடுத்துவைத்தார். டில்லி வட்டாரத்தில் பிரபல்மான புள்ளியாக ஜின்னா மதிப்பு பெற்றுவிட்டார். கோகலே 1912ம் ஆண்டில் ஆரம்ப கல்வி மசோதா ஒன்றை சபையில் தாக்கல் செய்து பேசினார். அதை ஆதரித்து ஜின்னா பேசியது அனைவராஅலும் பாரட்டப்பட்ட்து.
முஸ்லிம்கள் வக்குபு சொத்துக்கள் தொடர்பாக தனியார் மசோதா ஒன்றை 1913ம் ஆண்டு ஜின்னா சபையில் கொண்டுவந்தார். வக்பு சொத்துக்கள் தொடர்பாக பிரிடிக்ஷ் நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தீர்ப்புக்கள் வழங்கிவந்தன. லண்டனிலுள்ள பிரிவு கவுன்ஸ்லில் வக்பு சொத்து சம்பந்தமாக அழித்து தீர்ப்பு ஒன்று இஸ்லாமிய சரீயத் சட்ட்த்திற்கு முரண்பாடாக அமைந்திருந்தது. ஜின்னா இந்த முரண்பாட்டை அகற்ற விரும்பினார்.
எனவே முஸ்லிம்களின் கருத்தை பிரதிபலிக்கும் வித்த்தில் மசோதா ஒன்றை தயாரித்து இதை சட்டமாக்க வேண்டும் என்று எண்ணத்தில் இம்பிரியம் கவுன்ஸிலில் முன்வைத்தார். இந்த தனியார் மசோதா ஒன்று இந்திய பாராளுமன்றத்தின் வரலாற்றில் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியலில் ஜின்னா அதிக கவனம் செலுத்தவாரம்பித்த பொழுது அவருக்கு ஓர் உண்மை பலிச்சிட்டது. பாரத நாட்டில் ஹிந்ந்த்க்களும் முஸ்லிம்களும் இருபெரும் சமுதாயங்களாக வாழ்கின்றார்கள். அவ்விரு கூட்ட்த்தினரும் ஒற்றுமையாகவும் சினேகபாகத்துடனும் செயலாற்றித்தான் அந்நியனான ஆங்கிலயன் இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்க முடியும். சுயராஜியத்தை ஸ்தாபிக்க இயலும் என்ற உண்மையை ஜின்னா நன்கு புரிந்துகொண்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமையின் மூலமே சுயராஜியத்தை அடைய முடியும் என்று திடமான முடிவு அவருக்கு ஏற்பட்டுவிட்ட்து. எனினும் அப்போது இருபெரும் சமூதாயங்களையும் பிரித்துவைக்கும் சூழ்ச்சிகள் நாட்டில் நடைபெற்றுக்கொண்டே இருந்தன.
1910
ம் ஆண்டு அலஹாபாத்தில் இந்து முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுகூடி இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடினார்கள். ஜின்னா இக்கூட்ட்த்தில் தனது கருத்துக்களை விளக்கினார். முஸ்லிம் லீக்கின் சட்ட்திட்டங்களை திருத்தியமைப்பதற்காக 1912ன் ஆண்டில் கல்கத்தாவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஜின்னா அழைக்கப்பட்டு உரையாற்றினார். மெளலான முஹம்மது அலியும் செய்யது வஜீர் ஹிஸைனுல் முஸ்லிம் லீக் அமைப்பில் ஓர் உருப்பினராக பதிவுசெய்து கொள்ளுமாறு ஜின்னாவை வற்புருத்தினார். 10 - 10 - 1913ல் உறுப்பினராக ஜின்னா இணைந்துகொண்டார்.
அதே காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸிலும் அகில இந்திய முஸ்லிம் லீக்கிலும் உறுப்பினராக இருப்பது அப்போது அனைவராலும் ஏற்றுக்கொள்லப்பட்டிருந்த்து. காங்கிரஸ் அங்கம் வகித்த முஸ்லிம் பெருந்தலைவர்கள் பலரும் இரு ஸ்தலங்களிலும் ஒருங்கே அங்கம் வகித்தனர். 1916ம் ஆண்டு லக்கோவில் நடைபெற்ற காங்கிரஸ் முஸ்லிம் லீக் மாநாடுக்ளின் போது இரு கட்சிக்கிடையிலும் ஹிந்து முஸ்லிம் பிரச்சினை குறித்து ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்ட்து.
ஜின்னா தனது விடுமுறையில் லண்டன் செல்லும் போதெல்லாம் இந்திய மாணவர்கள் பிரச்சினை பற்றி கவனம் செலுத்தினார். லண்டன் இந்தியர் சங்கம் என்று ஒன்று ஜின்னாவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
1912
ம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் ஜின்னா பம்பை நகரிலிருந்து மத்திய சட்டசபைக்கு தேர்தெடுக்கப்பட்டார். இந்த சட்டசபைக்கு திருச்சியைச் சேர்ந்த மெளாலா செய்யது முர்தஸா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லைப்புர மாகாண மக்களுக்காக இவர் இரு மசோதாக்களை தாக்கள் செய்தார். இதை ஆதரித்து 1926ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி ஜினனா சட்டசபையில் உரையாற்றினார்.
ஜின்னா ஓர் உண்மையை அடிக்கடி கூறி வந்திருக்கின்றார். எனக்கு வாழ்க்கையில் இரண்டு விடயங்கள் தான் தெரியும் ஒன்று சட்டம் மற்றொன்று அரசியல். இந்த இரண்டிலும் தான் வெற்றிபெற்றார். மற்ற துறைகளில் அவர் இறங்கவுமில்லை. சோபிக்கவுமில்லை. அவரது முழு கவனத்தையும் சட்டமும் அரசியலும் அங்கீகரித்து கொண்டன. ஜின்னா தனது சொத்துக்கள் தொடர்பான உயிலை 1939 மே மாதம் 30 அன்று எழுதிவைத்துவிட்டார். அவர் தனது தங்கை பாதிமாவுக்கு ம் உடன்பிறப்புகளுக்கு ஓரளவு ஒதிக்கிவிட்டு அலிக்கார் முஸ்லிம் சர்வகலாசாலை பெக்ஷாவரில் உள்ள முஸ்லிம் கல்லூரி கராச்சியிலுள்ள சிந்து மத்ரஸா உயர்நிலை பள்ளி பம்பாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் பகிர்ந்தளித்துவிட்டார். 1936ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுவதும் ஜின்னா வங்களா மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். முஸ்லிம் லீக்கின் அவசியத்தை செல்ல்லும் இடங்களில் எல்லாம் வழியுறுத்தினார். அவர் எடுத்துவைத்த வாதங்கள் முஸ்லிம் பொதுமக்களின் மனதில் ஆழப்பதிந்தன. அன்றைய அரசியல் நிலவரங்களை பாமர மக்களும் புரிந்துகொண்டனர். இதே ஆண்டு அக்டோபர் மாத்த்தில் ஜின்னா பஜ்ஜாப் மாகாணத்தில் சிற்றுப்பயணம் மேற்கொண்டு முஸ்லிம் லீக்கை வலர்க்குமாறு ஆக்கபூர்வமான பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பலன் கைமேல் கிடைத்த்து. முஸ்லிம் லீக் அணியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டன. ஜின்னா ஒரு முழுமையான அரசியல் வாதி. என்று சத்தியமூர்த்தி கூறும் நிலை உறுவானது.
இந்த நிலையில் 1942 ஜீலை 18ம் திகதி இந்தியா பற்றிய ம்சோதா இந்திய பாராளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேறியது. இந்தியாவுக்கு மவுண்ட் பேட்டன் பிரபுவும் பகிஸ்தானுக்கு ஜின்னாவும் கவர்னர் ஜெனரல்களாக நியமிக்கப்படுவதாக அந்த ம்சோதாவில் வாசகங்கள் காணப்பட்டன. பல தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் மத்தியில் ஜின்னா பகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உறுவாக்கினார். அன்றை தினத்தில் உலகில் அறுவதாவது பெரிய நாடாக பகிஸ்தான் காணப்பட்ட்து. அப்போது சுமார் ஒன்பது கோடி மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர்.
ஜின்னா பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக ஓராண்டு காலமே பதவி வகித்தார். 1948 செப்டம்பர் மாதம் 11ம் திகதி அவர் உயிர் நீத்தார். காந்தி கோவானத்தைக் கட்டிக் கொண்டிருக்காவிட்டால் சற்று முன்பாகவே இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும். ஆனால் ஜின்னாயின்றி பாகிஸ்தான் உறுவாகியிருக்காது என்று வரலாறு கூறுகின்றது. Sir செய்யது அஹமதுகான் ஆரம்பித்துவைத்த பணியை அதனுடைய இயல்பான முடிவுக்குள் கொண்டுவந்தவர் ஜின்னாவேதான்.
பாராளுமன்றத்தில் தனித் திறமை பெற்றவர் ஜின்னாஇ அதை பார்த்து நான் புரிந்தும் வியந்திருக்கின்றேன். அரசியலில் சதுரக்காய்களை நகர்த்தி விளையாடுவதில் அரசியல் வானில் அவருக்கு ஒப்பான மற்றவர்களை கண்டுபிப்பது மிகவும் சிரம்மான காரியமாகும் என சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
பண்டித ஜவஹர்லால் நேரு குறிப்பிட்ட குறிப்பிட்ட போது அவரது வாழ்க்கையை மிகவும் பிந்திய வெற்றி அவரை பார்த்து சிறித்த்து. அவரது வயதுவரை அரசியலில் அவர் சாதாரணமான ஒருவராகத் தான் இருந்தார். அவர் ஒரு பிரபலமான வழக்கறிஞர்தான். ஆனால் அவ்வளவு நல்லவர் என்று கூறமுடியாது.
சரத் சந்திர பொஸ் கூறும் போது அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஒருகாலத்தில் ஒரு சிறந்த காங்கிரஸ்கார்ராகவும் திகழ்ந்தார். முஸ்லிம் தலைவர் உலக அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். எல்லாவற்றையும் விட செயல்திறன் மிக்க தலைவர் ஜின்னா சாதித்துக்காட்டினார்’.
ளுசை.சு.சு சன்முகம் செட்டி கூறும் போது; தமது கொள்கைகளிலிருந்து அனு அளவு கூட அசைத்து கொடுக்கமாட்டார். சுதந்திரமாகவே ம்முடிவு எடுப்பார். தன்மான உணர்வு அவரிடம் மிகவும் அதிகம். அவர் தேசபற்றுமிக்கவர்.
ஜின்னாவின் கொள்கை இஸ்லாமிய வழிமுறை பற்றிய மாறுபட்ட கருத்தியல்கள் காணப்படுகின்றன. எனினும் பாகிஸ்தானின் தந்தையாக கொள்ளப்படுகின்றார். திறமைவாய்ந்த புத்திசாதூர்ரியத்தினூடாக சாதித்தவர். சமூக பணிகள் ஊடாக அரசியல் பிரவேசம் செய்து அரசிலில் நிலைநின்று சமூகத்தொண்டு செய்தவர்களில் ஜின்னாவும் ஒருவர்.
ஒருமுகத்தினூடாகவே அரசியல் சமூக இருமுகப் பணியையும் மேற்கொண்டவர் என்றும் கருதப்படுகின்றார். ஜின்னா பற்றி எனக்குக் கிட்டிய தகவல்களைவைத்தே இக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. ஜின்னாவின் கொள்கை பற்றி கடுமையான விமர்சனங்கள் உண்டு. அவை தனி ஆய்வுக்குரியவை.

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger