வளங்கொழித்த ஈராக் ஒரு வரலாற்றுக் கவனயீர்ப்பு


எம்.ஏ.ஹபீழ் ஸலபி
லக வரைபடத்தில் ஈராக் ஒரு முக்கிய செல்வாக்குப் பெற்ற நாடாகத் திகழ்கிறது. அது,வரலாற்றுக் காலந் தொட்டு பல ஆதிக்க வெறியர்களின் அதிகார ஆக்கிரமிப்புச் செல்வாக்கிற்கு உட்பட்டே வந்துள்ளது.
யூப்ரிடிஸ்இ தைக்ரீஸ் என்ற இரு நதிகளைப் பெற்ற ஒரு வளமான நாடாக ஈராக் உள்ளது. அதேபோல், ஈராக்கில் 112 ஆயிரம் கோடி எண்ணெய்ப் பீப்பாய்கள் உள்ளன. இது, சவூதி அரேபியாவுக்கு அடுத்த நிலையாகும். அதனிடம் 265 ஆயிரம் கோடி பீப்பாய்கள் உள்ளன. மற்றும் வட கடற்கரையின் நோர்விஜியன் பகுதியில் உள்ள எண்ணெய் வளங்களைவிட ஏழு மடங்கு அதிகமான எண்ணெய் வளம் ஈராக்கிடம் உள்ளது. தெற்கு ஈராக்கில் மூன்று பெரிய எண்ணெய் வயல்கள் உள்ளன. அவை: மஜ்னூன், மேற்கு குர்னா மற்றும் நஹ்ர் உமரில் உள்ளது. இவை குவைத்தின் எண்ணெய் உற்பத்திக்கு இணையாக எண்ணெய் தரும் வயல்களாகும். இவற்றில் முதல் இரண்டு வயல்களின் உற்பத்தி, கட்டாரின் தினசரி உற்பத்தியான ஏழு இலட்சம் பீப்பாய்களுக்கு இணையானதாகும். உலகில் வேறு எங்கும் இதுபோல் இல்லை.
எனவே, அமெரிக்கா அனைத்தையும் தன்வயப்படுத்த எடுத்த முயற்சியாகவே ஈராக்கை உயிரியல் ஆயுதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி ஈராக்கை ஆக்கிரமித்து சதாமைத் தூக்கில் போட்டது. ஒரு சதாமை தூக்கிலிட அமெரிக்கா இதுவரை 7 1/2 இலட்சம் மக்களைக் கொண்டு குவித்துள்ளது.
1400 ஆண்டுகளைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாற்றில் மிகச் சிக்கலான காலகட்டத்தில் உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு தலைவணங்காமல் சதாம் வாழ்ந்தார் என்பது அவர் பற்றி வருங்கால வரலாறு மரியாதையோடு பேச உதவும்.

நண்பாக நடித்து, சதாமை அமெரிக்கா கவிழ்த்தது. அந்த வரலாற்றுச் சுவடுகள் சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.
நண்பனாக இருந்து பகைவனாக மாறிய காலச்சுவடு
1920 பிரிட்டனின் மேற்பார்வையின் கீழ் வருகின்றது ஈராக்.
1932 சுதந்திர நாடாக ஈராக் உதயம்.
1937 சலாஹுத்தீன் மாகாணத்தில் டெக்ரீத் என்ற இடத்தில் சதாம் பிறந்தார்.
1959 ஜெனரல் அப்துல் கரீம் காஸிமை கொல்வதற்கு நடந்த தோல்வியுற்ற முயற்சிக்காக சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நாடடை விட்டு தப்பித்து ஓடுகிறார்.
1963 ஈராக்கிற்கு திரும்புகிறார் சதாம். அரப்-பாத் சோஷியலிசக் கட்சியின் உறுப்பினராக தேர்வுச் செய்யப்படுகிறார்.
1967 சதாம் சிறையிலிருந்து தப்பித்து தலைமறைவாகச் செயற்பட்டார்.

1968 பாத் கட்சி நடத்திய அதிரடி புரட்சியில் அஹ்மத் ஹஸன் அல்பக்ர் அதிபராக பொறுப்பேற்கிறார்.
1970 களின் தொடக்கத்தில் புரட்சிகர அதிகார அமைப்பின் துணைத் தலைவரானார்.
1972 ல் எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கினார்.
1975 அல்ஜியர்ஸில் நடைபெற்ற எண்ணை ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் எல்லை தகராறுகளை முடிவுக்குக் கொண்டு வரும் உடன்பாட்டில் ஈராக்கும், ஈரானும் கையொப்பம் இட்டன.
1979 ஈரானில் நடைபெற்ற புரட்சி மூலமாக அதன் மன்னர் ஷா பெஹ்லவியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஈராக்கின் அதிபர் அல்பக்ர் பதவி விலக, சதாம் புதிய தலைவராக பொறுப்பேற்றார்.
1980 ஈரான் –  ஈராக் போர் –  சதாமிற்கு அனைத்து வகையான உதவிகளையும் இப்போரின் போது அமெரிக்கா செய்துகொடுத்தது.
1988 ஹலப்ஜா என்ற குருது மக்கள் வாழும் நகரில் இரசாயன ஆயுதங்களை ஈராக் பயன்படுத்துகிறது. ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்படுகிறது.
1989 ஈராக்கிற்கு ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் சில உதிரிபாகங்களை வழங்குகின்றது. இதன் துணை கொண்டு இஸ்ரேலை தாக்கும் வல்லமைக் கொண்ட ஆயுதங்களை ஈராக் தயாரிக்கின்றது.
1990 ஆகஸ்ட் 2 குவைத்தை ஆக்கிரமிக்கிறது ஈராக்.
ஆகஸ்ட் 8 குவைத் தன் நாட்டுடன் இணைந்து விட்டதாக அறிவிக்கிறது ஈராக்.
நவம்பர் 29 ஈராக்கை வெளியேற்ற அதற்கான அனைத்து வழியிலும் குவைத்திற்கு உதவிடுவது என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது.
1991 வளைகுடா போர்
1991 ஜனவரி 16 ஆப்ரேசன் டெஸர்ட்ஸ்டிராம் என்ற பெயரில் ஈராக் மீது விமானத் தாக்குதல்கள் தொடங்கின.
பிப்ரவரி 24 தரைவழி யுத்தம் தொடங்கியது.
பிப்ரவரி 27 குவைத் மீட்கப்பட்டது.
மார்ச் 3 சண்டை நிறுத்தத்திற்கு ஈராக் இசைவு தெரிவித்தது.
1991 குர்து மக்களை பாதுகாக்க வடக்கு ஈராக்கில் ஐ.நா. பாதுகாப்பு மண்டலம் அமைப்பு
1992 தெற்கு ஈராக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகள் அறிவிப்பு
1993 குவைத் சென்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை (சீனியர்) கொல்ல முயற்சி நடந்ததின் எதிரொலியாக பக்தாதில் உள்ள ஈராக்கின் உளவுத்துறை தலைமையகம் மீது அமெரிக்காவின் ஏவுகனைத் தாக்குதல்.
1995 சதாம் மீண்டும் ஜனாதிபதியானார்.
1995 உணவு மற்றும் மருந்திற்காக ஈராக் எண்ணை ஏற்றுமதி செய்ய ஒரு குறிப்பிட்ட  அளவு ஐ.நா. அனுமதி வழங்கியது.
1995 ல் சதாமின் மருமகன்கள் விவகாரம் பரபரப்பானது. சதாம் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக சதாமின் மருமகன்கள் வெளி உலகிற்குத் தெரிவித்தனர் என்ற குற்றச்சாட்டிக்காக இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1998 ஈராக்கின் ஆயுதங்களை பரிசோதிக்க ஐ.நா. பரிசோதகர்களை அனுப்பும் திட்டத்துடன் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை என்று ஈராக் அறிவிப்பு. அமெரிக்காவும், பிரிட்டனும் டெஸர்ட்பாக்ஸ் என்ற பெயரில் ஈராக்கின் அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத்த திட்டத்தை அழிக்க குண்டுகளை வீசின.
2000 புதிய ஆயுத பரிசோதனைத் திட்டத்தை ஈராக் நிராகரித்தது.
2001 ஈராக்கின் விமானப்படைத்தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தாக்குதல்.
2001 பல அரபு நாடுகளுடன் ஈராக் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்கிறது.
2002 ல் சதாமை அகற்ற அமெரிக்கா சகல உலவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
2003 மார்ச் 19ம் திகதி 48 மணி நேரத்திற்குள் சதாமை ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அறிக்கை விட்டார் புஷ்
2003 ஏப்ரல் 9ல் ஈராக்கில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. சதாம் தலைமறைவானார். சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்தது.
2003 மே 3ம் திகதி ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றுவதாக புஷ் அறிவித்தார்.
2003 ஜுலை 22 அன்று மொகோல் நகருக்கு வடக்கே உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து சதாமின் மகன்களான உதஸ்யும், குஸையும் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
2003 டிசம்பர் 13ம் திகதி ஒன்பது மாத கால தேடலுக்கு பிறகு அமெரிக்கா கூட்டுப் படைகள் சிலருக்கு இலஞ்சம் கொடுத்து, சதாமின் பதுங்கு குழியைக் கண்டுபிடித்தனர். சதாமின் சொந்த ஊரான திக்ரித்துக்கு 9 மைல் தொலைவிலுள்ள ஓர் இடத்தில் ஒன்பதுக்கு ஆறு அடியிலுள்ள ஆறு அடி ஆழமுள்ள ஒரு பதுங்கு குழியிலிருந்து 64 வயது நிரம்பிய சதாமை மயக்க மருந்தை செலுத்தி மண்ணப்பிய தலைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனும் கைது செய்தனர்.
2004 ஏப்ரல் 29ம் திகதி ஈராக்கிய ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு நடுவர் நீதி மன்றத்தில் சதாம் மீது வழக்குத் தொடரப்பட்டது
2004 ஜுலை முதலாம் திகதி சதாம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு தான ஈராக்கின் ஜனாதிபதி என்று கர்ஜித்தார். என்னை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று முழங்கினார்.
2005 மே மாதம் பிரித்தானிய இதழ்  சதாமின அரை நிர்வான போட்டோவை வெளியிட்டு, இழிவுபடுத்தியது.
2005 ஜுலை 17ம் திகதி ஈராக்கின் விஷேட நடுவர் மன்றம் சதாமுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டை முன் வைத்தது.
2005 ஒக்டோபர் 20ம் திகதி சதாமின வழக்கறிஞர் சடோன் ஜனபீ முகமூடி அணிந்த நபர்களால் கடத்திக் கொல்லப்பட்டார்.
2005 நவம்பர் 8ம் திகதி சதாமின் மற்றோரு வழக்கறிஞரான ஆதில் முஹம்மத் அல் ஜுலைதி பக்தாதில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005 டிசம்பர் 4ம் திகதி சதாமின் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவர் 'சதாம் ஒரு சர்வாதிகாரி அல்ல' என்று சொன்னதற்காக நீக்கப்பட்டார்.
2006 ஜனவரி 15ம் திகதி குர்து இனத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி றிஸ்கர் அமீன் என்பார், நீதிமன்றில் தன்னை ஷீயா மற்றும் குர்து அமெரிக்க கைப்பொம்மைகள் கடுமையாக நடந்து கொள்ள நிர்பந்தித்தனர் என கூறி தனது பதவியை ராஜினமாச் செய்தார்.
2006 ஜனவரி 23ம் திகதி குர்து இன ரதுப் ரஷீத் அப்துர் ரஹ்மான் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2006 ஜுன் 21ம் திகதி சதாமின மற்றொரு வழக்கறிஞர் கஸீம் அல் ஜுலைதி பலவந்தமாக கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
2006 நவம்பர் 5ம் திகதி 13 மாதகால விசாரனைக்குப் பின்னர் நீதிபதி ரவூப் அப்துர் ரஹ்மான் என்பவரால் அமெரிக்க எழுதிக் கொடுத்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 30 நாடகளுக்குள் சதாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கேட்ட சதாம் 'அல்லாஹு அக்பர்' என்று முழங்கினார்.

2006 டிசம்பர் 30ம் திகதி அதிகாலை முஸ்லிம் உலகில் கணிசமான ஒரு பகுதியினர் ஹஜ் பெருநாளை கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த போது 69 வயதான சதாம் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிராக உலகில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger