எம். ஏ. ஹபீழ் ஸலபி
இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்:
இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது.
உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே!
வீராண்மைமிக்க, கொள்கை முழக்கமிட்ட சில இளைஞர்களின் வரலாற்றை சூறா அல் கஹ்ஃப்; அழகாக சித்திரிக்கிறது.
'அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர் என்று நீர் நினைக்கிறீரா?
சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது 'எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'என்றனர்.
எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம்.
அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை உயிர்ப்பித்தோம்.
அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர் வழியை அதிகமாக்கினோம்.
அவர்கள் எழுந்துஇ'நமது இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம்.(அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'என்று அவர்கள் கூறிய போதுஇ அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.'(18:9-14)
நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தைஇ ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போதுஇ முதலில் விளங்கிஇ அதிகளவு விரும்பி ஏற்றுஇ செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே!
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது.
நபி யூசுஃப் (அலை) அவர்களது இளமைப் பருவ வரலாற்றை அல்குர்ஆன் அழகிய வரலாறாக விபரிக்கிறது.
'(முஹம்மதே!) இந்தக் குர்ஆனை உமக்கு அறிவித்திருப்பதன் மூலம் மிக அழகான வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன் நீர் அறியாதவராக இருந்தீர்.'(அல்குர்ஆன்:12:03)
இளமைப் பருவத்தில் தனது உடன் பிறப்புக்களால் பாழ்கிணற்றில் தூக்கிப் போடப்பட்டு, வஞ்சம் தீட்டப்பட்டார்கள்.
சுதந்திரமாகப் பிறந்த அவர்கள் அடிமையாக விற்கப்பட்டு,தனது எஜமானியால் காதலிக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் அப்பெண்ணாலேயே மேற்கொள்ளப்பட்டு, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தன்னை நோக்கி வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையுடையவர்களாக யூசுஃப் (அலை) அவர்கள் திகழந்தார்கள் என்ற உண்மையை சூறா யூசுஃப் சிலாகிக்கிறது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இளைஞராக இருக்கும் போது,ஷிர்க் எனப்படும் கொடிய தீமைக்கு எதிராக தனித்து நின்று கோராடினார்கள்.அந்த இலட்சிய இளம் போராளியை அல்லாஹ் தனது நண்பனாக்கிக் கொன்டான்.
'தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.'(03:125)
நபி மூஸா (அலை) அவர்களின் ஆளுமை,வீர உணர்வு,ஒடுக்கப்பட்டோருக்கு உதவும் இரக்க குணவியல்பு என்பன இன்றை இளைஞர்கள்பால் வேண்டிநிற்கின்ற பண்புகள்.
'அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும் கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.'(28:14)
அந்தஸ்தும் மகத்துவமும்:
நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் 3:110)
இஸ்லாம் ஆற்றல் மிக்க இளைஞர்களை எந்நேரமும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது; பண்பாடும்இ சீரிய சிந்தனையுமுள்ள வாலிபர்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது; அவர்களுக்கு உரிய இடத்தையும், அந்தஸ்தையும் வழங்கி மகிமைப்படுத்துகிறது. அதனால்தான் 17 வயதுடைய உஸாமா (ரழி) போன்ற இளம் சிங்கங்கள் பெரும் படைக்குத் தளபதியானார்கள்.
இதேபோல், சிறந்த அழைப்பாளர்களை வேண்டி நிற்கும் இஸ்லாம், நல் வழியை நோக்கி அழைக்கும் அழைப்பாளர்களை வெற்றிபெற்றோர் என்று சிலாகித்துப் பேசுகிறது.
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 03:104)
உலகிலுள்ள எந்த மதமும், சித்தாந்தமும், தலைவனும் வழங்காத இடத்தை, இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. அல்லாஹ்வின் நினைவுடன் வாழும் ஓர் இளைஞன் அவனது நிழலைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு அந்தஸ்து அதிகரிக்கிறது.
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள்:
01. நீதமிகு தலைவர்
02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்.
03. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
04. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
05. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.
06. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது, (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.' அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி) நூல்: புகாரி 6806
மனித வாழ்வின் பருவங்களைப் பற்றி அறிவுறுத்திய அண்ணல் நபியவர்கள் 'ஐந்து விடயங்களுக்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறி, முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக்கொள்ளப் பணித்துள்ளார்கள். மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாக இருக்கும் இளமையை வீணாக்கிவிடாது, மிகக் கவனமாக, அவதானத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழுமிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை:
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.
3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: நஸாயீ.
இளைஞர்களின் இன்றைய நிலை:
இன்றைய சமுதாயத்தின் குறைநிலைக் கட்டமைப்பு நியதிகளில் இஸ்லாமிய வழிகாட்டல் இன்மையால், இளைஞர் சமுதாயம் தவறான வழியில் செல்கிறது. நமது சூழலில் நஞ்சு கலக்கப்பட்ட இனிப்பே மலிந்து காணப்படுகிறது. அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள் அதிகமாக இளைஞர்களையே பாதிக்கிறது. சினிமாவுக்கும், சீரியலுக்கும் மேற்கின் சடவாத இறக்குமதிகளுக்கும் இளைஞர்கள் இலகுவில் பலியாகிவிடுகின்றனர்;. எங்கே போகிறோம், எது எமது இலக்கு என்று தெரியாமல் அலைகளின் முதுகில் சவாரி செய்யும் குமிழிகள் போன்று இஸ்லாமிய இளைஞர்களில் கணிசமான ஒரு பகுதியினர் குறிக்கோள் எதுவும் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர் சிந்தனையில் தாக்கம் செலுத்தும் காரணிகள்:
சமகால உலகில் இஸ்லாமிய இளைஞர்கள் பல்வேறு அறைகூவல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இளைய இரத்தங்களின் ஆத்மீக ஒழுக்க வாழ்விற்கு எதிரான கருத்து ரீதியான, ஒழுக்க, பண்பாட்டு ரீதியான சவால்கள் மிகப் பயங்கரமானவைகளாக உள்ளன.
இஸ்லாமிய இளைஞர்களின் ஈமானை சூரையாடுகின்ற, அவர்களுடைய உயர் ஒழுக்க மாண்புகளைத் தகர்த்து எறிகின்ற, இஸ்லாமிய இலட்சியக் கனவுகளைக் கொச்சைப்படுத்துகின்ற பல்வேறு அறைகூவல்களுக்கு நமது இளைஞர்கள் ஆளாகின்றார்கள்.ஜிஹாத் பற்றிய தவறான கருத்தை விதைக்ககும் சில்லறை இயக்கங்களின் சதித்திட்டங்கள், நவீன கல்விக் கோட்பாடு, நவீன ஆபாச இலக்கியம், தகவல் தொழிநுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள், சினிமா,சீரியல், பத்திரிகைகள், குறைநிலைக் கட்டமைப்பு சமுதாய சூழ்நிலை, தகுதியற்ற தலைவர்கள் போன்ற பல்வேறு காரணிகளை இதில் அடையாளப்படுத்தலாம்.
போலிகளின் ஜிஹாத் கோஷம்:
ஜிஹாத் என்ற போர்வையில் போலிக் கோசதாரிகள் அடுத்த சகோதர முஸ்லிமைக் கொலை செய்து, அவனது இரத்தத்தை தனது கரத்தில் பூசிக் கொள்வதற்கு வாலிபர்களுக்கு வழி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இத்தகையவர்கள் பற்றி நபியவர்களால் முன்னெச்சரிக்கையும் செய்யப்பட்டுவிட்டது.
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி, மாய்த்துக் கொள்ளும் வழி கேடர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள். (புகாரி:4406)
எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி, ஜிஹாத் என்ற பெயரால், அடுத்த முஸ்லிம் சகோதரர்களை, இக்வான் இயக்கவாதிகள் கொன்று குவிக்கின்றார்கள். இதேபோன்றுதான் ஹஸன் பன்னாவும், எகிப்தின் ஆட்சியாளர்களாக இருந்த அப்துன் நாஸர், பாரூக் போன்றவர்களை ஜிஹாத் என்ற பெயரால் அவர்களை எதிர்க்கின்றோம்; என்று பலவாயிரம் அப்பாவி இளைஞர்களை அநியாயமாகப் பலி கொடுத்தார். பன்னாவின் உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கை, முஸ்லிம் இளைஞர்களை அழிக்கக் காத்திருந்த யூத கிறிஸ்தவர்களின் சதிகளுக்குத்தான் துணை புரிந்ததே தவிர, இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பயனையும் கொண்டு வரவில்லை. முஸ்லிம் உம்மத்திற்கு அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் பன்னாவின்; இயக்கம் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அப்பாவி இளைஞர்களையும் அடுத்த முஸ்லிம் சகோதரர்களையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்று குவித்ததைத் தவிர, வேறெதனையும் இதுவரை சாதிக்கவே இல்லை என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் ஆப்கானிஸ்தானில் பல அறிஞர்களைக் கொன்றொழித்துள்ளனர். அல்ஜீரியாவில், எகிப்தில். பலஸ்தீனில், ஈராக்கில், ஈரானில், சூடானில் இது போன்று இவர்கள் எங்கெல்லாம் ஊடுறுவினார்களோ, அங்கெல்லாம் மற்ற முஸ்லிம்களைக் கொலை செய்து, முஸ்லிம் சகோதரர்;களின் இரத்தத்தை ஆறாக ஓட விட்டார்களே தவிர, இஸ்லாத்தின் பரம எதிரிகளான அமெரிக்காவுக்கோ, இஸ்ரேலுக்கோ இவர்களால் எதுவும் செய்துவிட முடியவில்லை.
இன்றுஇ உலகலாவிய அளவில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் எனப் பிரசாரம் செய்யப்படுகிறது. உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு ஆயுதம் தூக்கும் சிந்தனை வரட்சியில் சிக்கியுள்ள சில இயக்கங்களின் தவறான நடவடிக்கைகளினால், முஸ்லிம் பிரதேசங்கள் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் இக்கால கட்டத்தில், பல நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டு, பெருமளவு இன வன்முறைகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும் ஆட்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாமிய ஆட்சி, ஜிஹாத் என்று இளைஞர்களை உணர்ச்சி ரீதயாகத் தூண்டி விடுவது, அந்த நாட்டு முஸ்லிம்களை அழிக்கக் காத்திருக்கும் எதிரிகளுக்கு தமது வேலையை இன்னும் இலகுபடுத்திக் கொடுப்பதாய் தான் அமைந்து விடும். ஆயுத மோகமும், இரத்த வெறியும் பிடித்த ஒரு சமூகத்தை உருவாக்க இரகசியமாக முயற்சிப்பதென்பது, இஸ்லாத்தின் எதிரிகளுக்கு களமமைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைந்துவிடும். முஸ்லிம் இளைஞர்கள் இத்தகைய கோஷதாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வோண்டும்.
நவீன கல்விக் கோடபாடு:
இளைஞர்களின் ஆளுமையை வளர்ந்து, அவர்களது பண்புகளை பக்குவமடையச் செய்வதில் கல்வி மகத்தான பங்கை வகிக்க வேண்டும். ஆனால், நமது அமைப்பில் இத்தகைய கல்வி வழக்கில் உள்ளதா?
ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது. ஆனால், இன்று கல்வி என்ற பெயரில் அதிகமாக ஒழுகக்கேடுகள்தான்; நடக்கின்றன. அதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் கேளி கிண்டல் செய்வதும் காதலிப்பதும் பெண்கள் ஏமாற்றப்படுவதும், அதனால் தற்கொலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.
நவீன கல்வி முறை தகவல்களையும் விடயங்களையும் வழங்குகின்றதேயன்றி இளைஞர்களின் உள்ளத்தைப் பயன்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தி, ஆத்மாவிற்கு ஒளியூட்டத் தவறிவிட்டன.அதனால், பல்கலைக்கழகங்களே பலி பீடங்களாக மாறிக் கொண்டிருக்கும் காட்சிகளை தினமும் பார்;த்துக் கொண்டிருக்கின்றோம்.
'எங்கள் இளைஞர்களின் ஆண்மையை
அவர்கள் வகுப்பறையிலேயே
பறித்து விட்டார்கள்
அவர்கள் தங்களின்
தடித்த புத்தகங்களால்
எங்களின் விரைகளை
நசுக்கிவிட்டார்கள்.'
என்று கோபத்தோடு, டைபக் எனும் உகண்டா நாட்டுக் கவிஞன் கதறி அழுகிறான். நவீன கல்விக் கோட்பாடு, ஆண்மக்களின் ஆண்மையைக் கூட அபகரித்துவிட்டது. தடித்த புத்தகங்களைத் தந்து என்ன பிரயோசனம்? என இக்கவிஞன் கேள்வி எழுப்புகின்றான்.
'பல இளம் பெண்கள்
புத்தகச்சுமை பொறுக்காமலேயே
பூப்பெய்தி விட்டார்கள்.' (இன்னொரு தேசிய கீதம்இ பக்கம் : 87)
மேற்கத்தேயவாதிகள் இன்று 'அறிவு', 'கல்வி' என்ற பெயரில் பிரபல்யப்படுத்துவதெல்லாம் உண்மையிலே மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அறிவும், கல்வியுமாகும். இந்த அறிவையும் கல்வியையும் அவர்களின் பிரசாரசாதனங்களின் சக்தியினால் உலகெங்கும் பரப்பி, அதனை எல்லோருக்கும் பொதுவான, பொருத்தமான, உண்மையான அறிவு, கல்வி என்ற பிரமையை இளைஞர்களின் உள்ளங்களில் தோற்றுவித்துள்ளார்கள். 'எல்லா விடயங்களிலும் சந்தேகிப்பதுதான் அறிவு தேடுவதற்கான அடிப்படை விதி' என்ற கோட்பாட்டைத் தோற்றுவித்து. இளைஞர்களின் சிந்தனையில் குழப்ப நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளார்கள். அதன் பிரதிபலிப்பே இன்றைய இளைஞர்கள் பால் காணப்படும் ஆன்மீக வறுமை, ஏமாற்றம், விரக்தி,தற்கொலை,பகிடிவதை எனும் ராக்கிங் (Ragging) என்பனவாகும்.
புடிக்கும் பருவத்திலுள்ள இவர்கள் எத்தகைய உயர்ந்த இலட்சியமும் குறிக்கோளுமின்றி, தட்டுத்தடுமாறி, உளவியல் பாதிப்புக்குள்ளாகி, போதைப் பொருள்களிலும் சினிமா, முறைகேடான பாலியல் இன்பம் என்பவற்றில் தஞ்சமடையும் இழிநிலை! இதனை மேலும் புரிந்து கொள்ள ஒரு கவிஞனின் பின்வரும் சில வரிகள் துணைபுரிகின்றன.
'இளைஞனே! உன்னைப்பற்றி எனக்கு வருகிற தகவல்கள் என் குதூகலத்திற்கே குழி தோண்டுகின்றன.
ஒரு கல்லூரி விடுதிக்கு இரவில் விலை மகளிர் வருவதாய் என் காதுக்கு வருகிறது.
பாவிகளே! அது கல்விச்சாலையா? கல்விச்சாலையா?
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப்பையில் போதை மாத்திரைகளும், கர்ப்பத்தடை மாத்திரைகளும் சரி விகிதத்தில் இருந்ததாய்ச் சாட்சி கிடைத்திருக்கிறது.
அடி பாவிப் பெண்ணே! நீ மனதை நிரப்ப வந்தாயா? மடியை நிரப்ப வந்தாயா?'
(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் பக்கம் : 11)
உன்னதமான இலட்சியமோ, குறிக்கோளோ அற்ற நவீன கல்வி இளைஞர்-யுவதிகளை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் பயங்கரமான அறைகூவலாக தலையெடுத்துள்ளது என்பதை எவ்வளவு அழகாக மேலுள்ள கவிதையில் உணர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட வழிகாட்டிய நபியவர்கள் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்.
'இறைவா! பயனற்ற கல்வியிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி இறைஞ்சுவார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி) நூல்: முஸ்லிம்
மேற்குலகைவிட இஸ்லாம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக எழுதப்பட்ட ஓர் இறை மார்க்கமாகும். அதன் துவக்க வரலாறே 'இக்ரஃ' என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகிஇ அதன் பண்பாடும்இ கலாசாரமும், நாகரிகமும் தெளிவான இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன.
உலகில் காணப்படும் எந்த மதமும், சித்தாந்தமும் வழங்கிட முடியாத அளவு அறிவைத் தேடுமாறு வலியுறுத்துவதுடன், விவேகத்தையும் ஞானத்தையும் வரவேற்பதன் மூலம், அறிவு ஜீவிகளுக்கும் கல்விமான்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்தை வழங்கிச் சிறப்பிக்கின்றது.
அறிவு இல்லாமல் இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றவே முடியாது! அதனால்தான், 'ஓதுவீராக! யாவற்றையும் படைத்த உமது இரட்சகனின் திரு நாமத்தால்...' என்று நபித்துவத்தின் துவக்கத்திலேயே நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்டது. எனினும், இது மனித குல முழுமைக்கும் இடப்பட்ட கட்டளை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூளைச் சலவைக்கு ஆட்படுத்தப்படல்:
மேற்கத்திய நாகரிகம் இஸ்லாமிய உலகில் புகுத்தப்பட்டு, முஸ்லிம் இளைஞர்களிடம் திணிக்கப்பட்டது. முஸ்லிம் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமியத் தனித்துவத்தை இளைஞர்கள் இழந்தனர். இதன் விளைவாக மூளைச் சலவைக்கு உள்ளான ஓர் இளைஞர் முழு, முஸ்லிம் சமூகத்தில் திட்டமிடப்பட்டு இஸ்லாத்தின் எதிரிகளால் வளர்க்கப்பட்டனர். மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களினால் முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பையும், கொள்கையையும், தனித்துவத்தையும் சில போது, ஈமானியத்தையும் ஆட்டம் காணச் செய்யப்படுகிறது. இளைஞர்களின் விரக்தி நிலையை பயன்படுத்தி, இத்தகைய அழிவு நாச வேலைகளை இஸ்லாத்தின் எதிரிகள் மிகத் துள்ளியமாக, நுணுக்கமாகச் சதிகளை மேற்கொள்ளுகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறை சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாவிட்டால், எமது சமூகத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும். கருத்து மயக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ள இளைஞர் சமுதாயத்தினரை இஸ்லாமிய ஒளியின் பக்கம் மீட்டெடுக்கும், சக்தியும், ஆற்றலும் உள்ளவர்கள் இதில் மிகுந்த அர்பணத்துடன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.
சிறந்த முறையில் பயிற்றுவித்து, அவர்களின் உள்ளங்கள் இஸ்லாமிய அகீதாவிலும், ஒழுக்க மாண்புகளாலும் திருப்திப்படுத்தப்பட்ட ஆன்மீக பாசறைப் பயிற்சி வழங்கப்பட்டு, பண்பாடுள்ளவர்களாக வழிநடாத்தப்பட வேண்டும்.அதுவே சமூகத்திற்கு நன்மை தரும்.
Post a Comment
adhirwugal@gmail.com