அந்நிய இலக்கியத் தாக்கம்

இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் அங்கம் - 5

                      எம்.ஏ.ஹபீழ் ஸலபி
சமய சார்பற்ற சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு, தலைகால் புரியாமல் இலக்கியம் படைப்போர், மதம் - கடவுள் பற்றிய எள்ளி நகையாடலை மலினப்படுத்தியுள்ளனர். மதவாழ்வை கேள்விக்குட்படுத்தி, கொச்சைப்படுத்தும் நாவல்களும் கவிதைகளும் தற்போது, மிக அதிகமாகவே வெளிவரத் தொடங்கியுள்ளன.
இஸ்லாமிய இலக்கியம் இறைநெறிக்குட்பட்டுப் பேசும். ஆனால், அந்நிய இலக்கியங்கள் அந்தந்த சமூகம் சார்ந்த கலாசார, மரபுகளைப் பிரதிபலித்துக் கொண்டு செல்லும். அவை, அந்த இலக்கிய மரபுகளில் தவிர்க்க முடியாதவை. அங்கே, ஆண்-பெண் அந்தரங்கச் சதை வியாபார வெறியாட்டங்கள் என்பன அந்தந்த சமூக, பண்பாட்டுக் காலாசார மரபுகளின் சிந்தனைக்கேற்ப, கதைகளில், நாவல்களில், கவிதைகளில், பாடல்களில் வெளிப்படும்.
சிலபோது, வக்கிரத்தை வெளிப்படுத்துமாப்போலும் அமைந்துவிடுகிறது. பெற்ற தாய்-தந்தைக்குத் தெரியாமல், ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் சமாச்சாரங்கள் பலவடிவங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இதற்கு உடன் போக்கு என்று பெயர். உடன்போக்கு மேற்கொண்டவர்கள் பிறந்த இடத்துக்கு திரும்பி வரமாட்டார்கள். இதன் தாக்கத்தால், இன்றைய காதலர்கள் (?) சொல்லிக் கொள்ளாமல் போகிறார்கள். சொல்லாமலே வந்தும் விடுகிறார்கள் - சில பேர் ஏமாற்றப்பட்டதால் உலகத்தைவிட்டே ஓடி விடுகிறார்கள் என்பதை அன்றாடம் அறிகிறோம்.
சங்ககால இலக்கியக்காதலர்கள் மணம் முடிக்க ஓடினார்கள். அதன் இலக்கிய விரச ரசனைக்கு ஆட்பட்ட இன்றைய கால காதலர்கள் மணம் முடிக்காமல் வக்கிரத்தை வெளிப்படுத்த ஓடுகிறார்கள். இவர்கள் இதில் சேராமல் காதலர் தினம் (ஏயடநவெiநெ னுயல) என்று பெப்ரவரி 14ம் திகதியை, தமது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்த ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக் கேடு கெட்ட கலாசாரத்திற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், தூபம் இட்டு வளர்த்தும் வருகின்றன.
உண்மையை மட்டும் பேசும், உள்ளாந்த இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைக்காத போது, இஸ்லாமிய இளைஞன் பிற இலக்கியங்களில் ரசனைத் தாகம் தணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவற்றைப் படிக்கத்துவங்கும் போது, அவை வாசகன் மீது சிறுக சிறுக தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த துவங்குகிறது. எனவே, அந்நிய இலக்கியத்தில் தாகம் தீர்க்கும் வாசகன், அவற்றைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாகவே நாளடைவில் மாற்றமடைகிறான். நமது பெரும்பாலான மக்களுக்கு வழிகாட்டி தமிழ்ச் சினிப்பாடல்கள், படங்கள், சில புத்தகங்கள், சில நாவல்கள், விரசத்தைக்கக்கும் பத்திரிகைகள் என்பனவாகிவிட்டன. மிக மோசமான சினிமாப்படங்கள் அவற்றுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் பத்திரிகைகள் கல்லூரியில், கலாபீடங்களில், பல்கலைக்கழகங்களில், ஏன்? அரபு மத்ரஸாக்களில் படித்த அதிக இளைஞர்களிடம் அமெரிக்க, மேற்கத்திய ‘ஹிப்பி’ கலாசாரத்தையும், அரைகுறைபடிப்பாளர்களிடம் தமிழ்ச்சினிமாக் கலாசாரத்தையும், இலக்கியம் என்ற போர்வையில் திட்டமிட்டு இன்னும் பரப்பிவருகின்றன. இந்தப் பத்திரிகைகள்.
எனவே, அத்தகைய அந்நிய இலக்கியம் பற்றிய சில உதாரணங்களை இங்கே குறிப்பிட்டுக்காட்ட முனைகிறோம். 
அகிலன் ஒரு பிரபல்யமமிக்க எழுத்தாளன். எனினும், அவர் தனது நாவல்களில் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று உலவும் கயவர்களை அடையாளப்படுத்த முனையும் போது, விபச்சாரத்தையும் வேசிகளையும் ஆதரிக்க முனைந்து, நாவலையே நாசப்படுத்திவிடுகிறார். இதற்கு ஓர் உதாரணத்தை கீழே தருகின்றேன். 
(வேசித் தனத்தால் தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணை வேண்டுமென்றேதான் நான் இந்தக் கதைக்குத் தலைவியாக்கிக் கொண்டேன். சமுதாயப் பிரமுகர்கள் என்ற போர்வையில் உலவும் சிலர் அவளைவிடவும் சீரழிந்தவர்கள் காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா அனைத்தையும் விபச்சாரம் செய்யும் போலிகள் இவர்கள். சமுதாயத்தில் ஆங்காங்கே கயவர் இருக்கத்தான் செய்வர். ஆனால், கயவர்கள் வழிகாட்டிகளாகக் கொள்ளும் சமுதாயம் உருப்படுமா? என்பதுதான் நான் இந்த நாவலில் எழுப்பியுள்ள கேள்வி. அகிலன் (1973) நாம் எங்கே போகிறோம்? பக்கம் 05
கவிஞர் கண்ணதாசன் தனது தாயிடமும், தாரத்திடமும் அடையாத இன்ப அனுபவத்தை விலை மாதுகளிடமும் அனுபவித்ததாக தனது நூல்களில் குறிப்பிடுகிறார்.
என் அருகில் இருக்கும் பெண்கள், அவர்கள் விலைமகளிர் ஆயினும் பயபக்தியோடு என்னைக் கவனிப்பார்கள்; பணிவோடு எனக்கு சேவை செய்வார்கள்; “ஐயா” என்று தான் அழைப்பார்கள்.
விலைமாதர் உறவும், மதுப் பழக்கமும் எந்த நாட்டிலும் வேண்டாத பழக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, “தர்ம விரோதம்” என்று கருதப்பட்டதில்லை.
இந்து வேதங்களும் அப்படிக் கூறியதில்லை.
தமிழகத்து விலைமாதர்கள், தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களை தியாகம் செய்து கொண்டவர்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பெங்க;ர் ஹோட்டல் ஒன்றில் ஒரு விலைமகளைச் சந்தித்தேன்.
வெறும் ‘சேட்டைகளை மட்டுமே கண்டிருந்த அவள், இப்படி ஓர் அப்பாவியைச் சந்தித்ததில் ஆச்சரியப்பட்டாள்.
இவர்களை (வேசிகளை) எல்லாம் மனதிலே எண்ணிய போதுதான் விலைமாதர் போக்கை நியாயப்படுத்த எனக்குத் தோன்றிற்று.
விளக்குமட்டுமா சிவப்பு? அதிலே தான் பிறந்தது. வெறும் காமத்தை மட்டுமே மூலமாகக் கொண்டு, விலை மாதரை நான் நெருங்கியதில்லை. அவர்களிடம் இருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். (பார்க்க: கவிஞர் கண்ணதாசன், எனது வசந்தகாலங்கள் 1997 பக்கம்: 49-50)
கவிஞர் கண்ணதாசனின் “விளக்கு மட்டுமா சிவப்பு” “நடந்த கதை” என்ற இரு நாவல்களும் இன்னும் சில அவரது நூல்களும் விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதோடு நியாயப்படுத்தவும் முனைகின்றன.
வைரமுத்துவின் “வில்லோடு வா நிலவே” என்ற நாவல், வரலாற்றோடு காதலையும் தற்கொலையையும் நியாயப்படுத்துகிறது. “காவி நிறத்தில் ஒரு காதல்”, “வானம் தொட்டுவிடும் தூரம் தான்”, “ஒரு போர்க்களமும் இரண்டு பு+க்களும்”, “மீண்டும் என் தொட்டிலுக்கு” போன்ற வைரமுத்துவின் அனைத்து நாவல்களும் காம விரசத்தோட கலந்த காதல் கதைகளாகவே கதை நகர்த்தப்படுகிறது. அதில், ‘வானம் தொட்டுவிடும் தூரம் தான்’ என்ற நாவலில் பள்ளிப் பருவ பாலிய காதலை வலியுறுத்துவதாகவும் ஆசான்களின் அனுமதி மறைமுகமாகக் கிடைப்பதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. காவி நிறத்தில் ஒரு காதல், என்ற நாவல், காதல் கைக்கூடாதபோது, காடேகி, காவி அணிந்து, சாமியாகி அப்போதும் காதல் உணர்வை விட முடியாது, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் காதலியைத் தேடிப் பயணிப்பதையும், காதலியின் தங்கை விபச்சாரியாக மாறி இருப்பதையும் சித்திரிக்கிறது.
இதே போல், ஆணாதிக்கத்தை சமூகத்தளத்தில் நின்று, அணுகி, விமர்சிக்க முனைந்த ஜானகிராமனின் “மோக முள்” என்ற நாவல், மிகத்தவறான முறையில் தீவிர பெண்நிலைவாத சிந்தனையை பிரஸ்தாபித்து, பெண்ணை மையமாகக்கொண்டு, ஆண் வாழ்வதை எடுத்துக்காட்ட முற்படுகிறது.
இவ்வாறு, இங்கு நாம் சிலவற்றையே நாவல் இலக்கிய சமுத்திரத்திலிருந்து அடையாளப்படுத்தினோம். அவற்றுள் சில சமூக வாழ்வின் அவலங்களையும், பொருளாதார அவதிகளால் புதைந்து போன உறவுகளையும், அவசர யுகத்தில் அல்லாடும் தாய்மையினையும், நவீன இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்துப் போன நட்பையும், கால வேகத்தில் மியு+சியத்திற்கு அனுப்பப்பட்ட மனிதத்தையும் படம் பிடித்துக்காட்ட முற்பட்டாலும், சில கொடிய, சமூகத் தீமைகளை தவிர்க்க முடியாத ஒன்றாகக் காட்டி, நியாயப்படுத்த பகீரதப்பிரயத்தனப்படுகின்றன.
இதேபோன்று, ஆயிரமாயிரம் நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும், இஸ்லாத்திற்கு முரணான, எதிரான கருப்பொருள்களில் அமைந்துள்ளன. இவை, அந்நிய இலக்கியங்களில் மலிந்தும் நிறைந்தும் கிடக்கும் நச்சுத் துளிகளில் சில, பிற காவியங்களுக்குள் இழையோடும், அவற்றின் கலாசார, பாரம்பரிய சமூக மரபுகளையும் உணர்வுகளையும் புட்டுபுட்டுவைக்க நாம் முனைந்தால், பல ஆயிரம் பக்கங்களில் பல நூல்கள் எழுத நேரிடும். எனவே, நாம் சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளோம். அவை, வாசிப்போருக்கு மிகத்தெளிவாகும். நாம் குறிப்பிட்ட உதாரணங்கள் எவ்வளவு மோசமானவை, எவ்வாறு இஸ்லாமிய சிந்தனைக்கு முரணானவை என்பதையும் தெளிவுபடுத்த முனைந்துள்ளோம்.
அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இருந்து கொண்டே இஸ்லத்தை மாசுபடுத்தியும், சிதைத்தும் திரித்தும் எழுதவும், பேசவும் கூடியவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இத்தகையவர்களிடம் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். நான் அண்மையில் வாசித்த, இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு நாவல்கள் பற்றி இங்கே குறிப்பிட விளைகின்றேன்.
அவை:
1. சாய்வு நாற்காலி
2. சந்திரகிரி ஆற்றங்கரையில் (மொழிபெயர்ப்பு நாவல்)
இஸ்லத்திற்கு எதிரான, முரணான சிந்தனைப் போக்குள்ள தீவிரப் பெண்ணிய வாதியான, தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ (1995) என்ற அவரது ஐந்தாவது நாவல், சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ தஸ்லீமா நஸ்ரினின் ‘லஜ்ஜ’ கவிக்கோவின் “பசி எந்தச் சாதி? போன்றவைகளின் பின்னணியில் வைத்து நோக்கத்தக்கது.
சாய்வு நாற்காலியில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய கலாசாரத்தையும் எள்ளி நகையாடி எழுதியதற்காக - தோப்பில் முஹம்மது மீரானுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. இந்த நாவல் தமிழோடு, அதிகமான மலையாள சொல்லாடல் கையாளப்பட்டுள்ளமையால், சாமானியர்கள் அதை விளங்கிக்கொள்ள, ஒரு முறைக்குப் பலமுறை படிக்க நேரிடலாம். எனினும், இந்த நாவல் இஸ்லாமிய சிந்தனைக்குப் புறம்பான, எதிரான கருத்தியல் சார்ந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல், அண்மையில் நான் படித்த, தோப்பில் முஹம்மது மீரானின் முன்னுரையுடன் வெளிவந்த பிறிதொரு நாவல், இஸ்லாத்திற்கு விரோதமான, கன்னட மொழியில் சாரா அபு+பக்கர் எழுதிய ‘சந்திரகிரிய தீரதல்லி  ’ என்பதாகும். இதில் இஸ்லாமிய சமூகத்தின் பெண்களின் நிலைமையையும் இஸ்லாமிய குடும்பவியலையும் நகைப்புக்கிடமாக்கியுள்ளதால், தி.சு. சதாசிவம் என்பவர் உடனே தமிழில் ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்’ என்று சுடச்சுட மொழிபெயர்த்துத் தள்ளிவிட்டார். ரஷீத், முஹம்மத்கான் உட்பட பல பாத்திரங்களுடன், முஸ்லிம் பெண்கள் தொடர்பான முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான, விரோதமான, வித்தியாசமான கருவை, சாரா அபு+பக்கர் கையாண்டுள்ளார்.
நாம் முன்னர் குறிப்பிட்ட அதிதீவிரப் பெண்ணியவாதியான, தோப்பில் முஹம்மது மீரான், இந்நாவலுக்கான தனது முன்னுரையில் “நான் வாசித்த வரையில் தமிழிழோ மலையாளத்திலோ இதுவரையிலும் யாராலும் கையாளப்படாத ஒரு புதிய விசயம் இது. இந்தக் கன்னட நாவலின் மொழிபெயர்ப்பு, தமிழ் வாசகர்களுக்கு முஸ்லிம் பெண்களின் மணவாழ்க்கையில் காணப்படும் பின்னல்களை அப்பட்டமாகவே காட்டுகிறது. இந்தப் பின்னல்கள் கன்னடப் பகுதிய முஸ்லிம் பெண்களின் வாழ்வில் காணப்படும் பின்னல்தான்” என்று இஸ்லாமிய குடும்ப அமைப்பையும் அதில் பெண்களின் நிலையையும் போலியாகக் கற்பனை செய்து, பின்னல் உள்ளதாக நஞ்சைக் கக்குகிறார்.
இந்த நாவலின் கருவானது மருமகன் மீதுகொண்ட பகையினால், மகளுடைய வாழ்வையே சீர் குலைத்து, பரிதவிக்க விட்டு, பின்னர் பரிகாரந்தேட முனையும் தந்தையின் போக்கும், மத (இஸ்லா)த்தின் பெயரால் ஆணாதிக்கத்தைச் செயற்படுத்தும் (முஸ்லிம்) சமூகத்தின் நிலையையும் சித்திரிக்கிறது. உண்மைக்குப் புறம்பான பல்வேறு போலில் புனைவுகளை இந்நாவல் சுமந்துள்ளது விமர்சிக்கவும், கண்டிக்கவும் படவேண்டியது.
அதேபோன்று, எகிப்து நாட்டைச் சேர்ந்த அவசர இலக்கியவாதியான நஜீப் மஹ்பு+ழ் என்பான் முஸ்லிம்களது மார்க்க (இஸ்லாமிய) உணர்வைக் கொச்சைப்படுத்தியும், எகிப்திய முஸ்லிம்கள் மத்தியில் பாலியல் துறை சம்பந்தப்பட்ட பிரள்வுகள் அதிகம் (?) என்பதையும் போலியாக விபரித்து, அவனால் எழுதப்பட்ட அரபு நாவலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இது அரபிலக்கியத்திற்கான நோபல் பரிசின் வரலாற்றிலேயே முதன் முதலாக வழங்கப்பட்டது. அதேபோல் யு+த நிறுவனங்களான மாஸோனியா, ரோட்டரிக் கழகம் (குசநந ஆயளழசெலஇ சுழவயசல ஊடரடி)  என்பன, நஜீப் மஹ்பு+ழ் என்ற நரகல் நடை எழுத்தாளனுக்குப் பரிசு வழங்கி, முஸ்லிம் சமூகத்தின் தூய்மையான உணர்வுகளை அவமதித்துக் கொச்சைப்படுத்தின. ஏனெனில், யு+தர்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளுக்கு நஜீப் மஹ்பு+ழ் ஆதரவுக்கரம் நீட்டிவரும் கோடரிக்காம்பு.
இவ்வாறான முஸ்லிம் பெயர்தாங்கி, நரகல் நடை எழுத்தாளர்களைப் பணம் கொடுத்து, பரிசு வழங்கி, இஸ்லாத்திற்கு எதிராக எழுதவைத்து, முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பை உடைத்தெரியும் முயற்சிகளில் மேலைத்தேயவாதிகளும் அதன் அடிவருடிகளும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ என்ற நூலுக்கு மேற்குலகின் பிரசார சாதனங்கள் கொடுத்த இலவச விளம்பரத்தைக் குறிப்பிடலாம்.
உலகு எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி, சத்தியத்தையும், உண்மையையும் நேசிக்கும், மததூற்றலையும் கொச்சைப்படுத்தலையும் வெறுக்கும் அனைத்து நெஞ்சங்களும் ‘சாத்தானியக் கவிதை’ என்ற நூலுக்கெதிராக ஆர்த்தெழுந்து, தடை செய்யக் குரல் எழுப்பின. அந்த எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் 1989 மார்ச் 12ம் திகதி இஸ்ரேலில் திறந்து வைக்கப்பட்ட, ஓர் இலட்சத்திற்கும் அதிகமான நூல்களைக்கொண்ட, சர்வ தேசிய புத்தகக்கண்காட்சியில் (நுஒhiடிவைழைn)  ‘சாத்ததானியக் கவிதைகள்’ முக்கியத்துவமளிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டதானது. இந்நூலின் பின்னால் மறைந்துள்ள ‘ஸியோனிஸ’ சதிகளை மிகத் தெளிவாகப் புலப்படுத்தியது. இது ‘ஓர் ஒழுக்கக்கேடான நூல்’ என வர்ணித்து, இது இஸ்ரேலில் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கூறிய யு+த மதகுருவான யுரசாயஅ ளுhயிசைழ என்பாரின் வேண்டுகோளைக் கூட அப்போது இஸ்ரேல் புரக்கணித்தது. இவ்வாறு இஸ்லாமிய ஒழுக்க நியமங்களை துச்சமாக மதித்து எழுதவும், இறைத் தூதரின் புனிதமான ஆளுமைகளுக்கு மாசு கற்பிக்கவும் தூண்டி வருகின்றனர். தமிழ் உலகில்  ‘சாத்தானியக் கவிதை’ நுhலின் அபத்தங்களுக்கு ஆணித்தரமான பதில் அறிஞர; Pது அவர;களால் அளிக்கப்பட்டது.
அதேபோல் இஸ்லாமிய சமூகத்தினுல் தோன்றிய உட்பிரிவுகளும், வழிகெட்ட கொள்கைப் பிரிவுகளும் இலக்கியத்தினூடாக பிரசாரப் போர்தொடுத்து, நஞ்சு கலந்துள்ளன ‘கனகாபிஷேக மாலை’ யின் ஆசிரியரான கனகவிராயர் ‘ஷீஆ’க் கொள்கையில் ஊறித் திளைத்தவர் போல் எண்ணத்தோன்றுகிறது. அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது, அவர் கட்டவிழ்த்துள்ள மிதமிஞ்சிய வர்ணனைகளிலே அத்தகைய கருத்தியல்கள் மலிந்திருக்கக் காணலாம்.
“தோகாந்துருக்கி  ” வாயிலாக ‘ஷிஆக்’ கருத்தொன்றை ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “உலகிலே வாழ்ந்த ‘அமீருல் முஃமினீன்’ என அழைக்கப்பட்டவர் அலி  அவர்கள் ஒருவர் மாத்திரமேயாகும். அந்த மொழி பெறக்கூடியவர் மற்றொருவர் உளரேல், அது அவர்கள் தம் புதல்வரேயாம்.”
இதேபோல், கற்பனையில் கற்பிதம் செய்ய முடியாதவற்றையெல்லாம் உளறிவைத்த உமறுப் புலவரின் சீராப்புராணமும், அஞ்ஞான குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை நோக்குவோம்.
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger