அவதூறு பிரசாரம்
அண்மைக்காலமாக பீஜே மீதும் ததஜ மீதும் அவதூறுகளையும் பொய்யான செய்திகளையும் பரப்பி வருகின்றது ஒன்றுக்கு மேற்பட்ட
கூட்டம். தமது அனைத்து நடவடிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எதிர்ப்புணர்வை மட்டுமே
மூலதனமாகக் கொண்டு செயற்பட்டுவரும் மனநிலை பாதிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு சில வருடங்களுக்கு
முன்னர் உணர்வுப் பத்திரிகையில் பீஜே அளித்த பதில் மீண்டும் நினைவு படுத்தப்படுவது
பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.
“மொட்டைப் பிரசுரங்கள்
மூலமும், கள்ள வெப்சைட்கள் மூலமும், போலி மின்னஞ்சல்கள் மூலமும் நமது ஜமாஅத்துக்கு எதிராக அவதூறு பரப்புவோருக்கு தங்களின்
பதில் என்ன?” என்று ஒரு உணர்வு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்குப் பீஜே இவ்வாறு பதில் அளித்தார்.
“நமது ஜமாஅத்துக்கு
எதிராக அவதூறு பரப்புவோர் அனைவருக்கும் நாம் ஒற்றை வரியில் ஏற்கனவே பலமுறை பதிலளித்து
விட்டோம். அவதூறு பரப்புவோர் அதை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த அவதூறை
நமது முன்னிலையில் மக்கள் பார்வையில் கூறி நிரூபிக்கத் தயாரா? என்பது தான் அந்தப்
பதில். இதை ஏற்கத் திராணியில்லாத கழிசடைகள் நாம் மதிக்கத் தேவையில்லை. இவர்களை நாம்
மன நோயாளிகளாகத் தான் கருதுகிறோம். உண்மையாகவே இவர்கள் ஒருவிதமான மனநோயாளிகள் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை.
மேலும் இந்த மனநோயாளிகளால் நமக்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட்டால், இவர்களின் அவதூறை மக்கள்
நம்பி நமது ஜமாஅத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டால் இவர்களின் அவதூறுக்கு விளக்கம் அளிக்க
சிறிதளவாவது முகாந்திரம் இருக்கும்.
அப்படி எந்த தாக்கத்தையும் இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
நமது ஜமாஅத் மீது அவதூறு பரப்பி, இவர்களிடம் ஃபித்ரா தொகையை வழங்காதீர்கள் என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இதன்
விளைவு என்ன? சென்ற ஆண்டை விட 33 சதவிகிதம் அதிகமான மக்கள் நம்மிடம் தான் ஃபித்ரா வழங்கினார்கள். சென்ற ஆண்டு 24 லட்சம் வழங்கிய மக்கள்
இவர்களின் அவதூறுக்குப் பின் 32 லட்சம் ரூபாய்களை வழங்கினார்கள்.
இவர்கள் அவதூறு பரப்புவதற்கு முன்னால் நமது ஜமாஅத்துக்கு என்று சொந்த கட்டிடங்களோ, சொந்த இடங்களோ இல்லாமல்
இருந்தன் இவர்களின் அவதூறு பிரச்சாரத்துக்குப் பின் தமிழகத்தில் 20 கிளைகள் சொந்தமாக
மர்கஸ் அமைக்க இடம் வாங்கும் அளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது.
இவர்களின் அவதூறுக்கு முன்னால் தலைமையின் நேரடி நிர்வாகத்தில் தலைமை அலுவலகம் மட்டுமே
- அதுவும் வாடகைக் கட்டிடத்தில் இருந்தது. இவர்களின் அவதூறுகளுக்குப் பின் ஆண்களுக்காக
இரண்டு தஃவா சென்டர்கள், பெண்களுக்காக ஒரு தஃவா சென்டர் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது. தஃவா சென்டருக்காக
சொந்த இடமும் வாங்கப்பட்டுள்ளது. மதுரையில் பல லட்சம் மதிப்பில் அல்புர்கான் மெட்ரிகுலேஷன்
பள்ளிக்கூடம், தலைமைக்கென சொந்த வாகனம் என்று மக்கள் நம்பிக்கையோடு அள்ளித் தருகின்றனர்.
கிளைகளின் எண்ணிக்கையானாலும், உறுப்பினர் எண்ணிக்கையானலும், திரட்டப்பட்ட ஜகாத் - ஃபித்ரா தொகையானாலும், இரத்தானம் செய்வோரின் எண்ணிக்கையானாலும், பிரச்சாரம் செய்யும்
தாயிகளின் எண்ணிக்கையானாலும், நடாத்தப்படும் போராட்டங்களானாலும், அதில் பங்கெடுக்கும் மக்கள் திரளானாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றனவே தவிர
எள்ளளவும் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை.
பிரச்சாரக் கூட்டங்களானாலும், துண்டுப் பிரசுரங்களானாலும், மாநாடுகளானாலும், தொலைக்காட்சி வழியாகச் செய்யப்படும் பிரச்சாரம் ஆனாலும் எதுவுமே நாள் தோறும் அதிகரிக்கிறதே
தவிர குறையவில்லை.
எனவே, இவர்களின் அவதூறு பிரச்சாரத்துக்குப் பின்னர் தான் - இத்தகைய தரங் கெட்டவர்களையா
நாம் ஆதரித்தோம் என்று அவர்களை நம்பியவர்களே உண்மையை உணரத் தலைப்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது ஜமாஅத் அதன் கொள்கைகள் மற்றும்
பிரச்சாரத்தின் மூலம் வளர்ந்ததை விட நம்முடைய எதிரிகளின் உளரல்களாலும், தரங்கெட்ட பிரச்சாரத்தினாலும்
தான் அதிகம் வளர்ந்நிருக்கிறது என்பதை எடை போட்டு அறிந்திருக்கிறோம்.
இவர்களின் முரண்பாடுகள், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கீழ்த்தரமான போக்கு நமது ஜமாஅத்தால் தூக்கி எறியப்பட்டவர்களைத்
தூக்கிப் பிடிக்கும் அரசியல் போன்ற காரணங்களால் நமது ஜமாஅத்தின் நம்பகத் தன்மை மென்மேலும்
உறுதிப்படுத்துகிறது என்பது தான் உண்மை நிலவரம்.
எனவே, நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணி இல்லாத பேடிகளை, மொட்டைகளை நாம் கண்டு
கொள்ளத் தேவையில்லை.)
இவ்வாறு பதில் அளித்துவிட்டு, பீஜே அவர்கள் தவறான விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டபோது, பீஜே மீது சேற்றை வாரி
இறைக்க இதுதான் சந்தர்ப்பம் என சிலர் ஆட ஆரம்பித்தனர்.
இந்தப் பேடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால்,அவர் பதில் அளிக்க
வேண்டும் என்று நான் கூட பல முறை வேண்டியும் உள்ளேன். புதிலடியால் பலர் அடங்கியதையும்
நேரில் பார்;தேன்.
கண்டுகொள்ளத் தேவையில்லை என்ற தனது முடிவு மாற்றத்தை, அவர் இஸ்மாயில் ஸலபிக்கு
மறுப்பளிக்கும் போது, தனது இணைய தளத்தில் இவ்வாறு எழுதியது என் நினைவுக்கு வருகிறது.
“…முடிவுகளை மாற்றுவது
கேவலமானது அல்ல.
நான் கூறும் மார்க்க விஷயங்களில் நான் தவறாகக் கூறியது தெரிய வந்தால், முடிவுகளை மாற்றிக்
கொள்ளத் தான் செய்வேன்.
அதுபோல், மார்க்கம் சம்மந்தமில்லாத விஷயங்களிலும் ஒரு செயல்பாட்டை விட இன்னொரு செயல்பாடு
சரி என்றால், அப்போதும் மாற்றிக் கொள்ளத் தான் செய்வேன்.
இது நல்ல பண்பு தான்.
எனக்குக் கர்வம் இல்லை. பெருமை இல்லை மக்களுக்கு
நான் பயப்படவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.
ஆனால், காரணம் இல்லாமல் நியாயம் இல்லாமல் முடிவுகளை மாற்றிக் கொள்வது தான் கண்டிக்கத்தக்கது.
உதாரணமாக என்னைப் பற்றி பல வருடங்களாக பலவித தாக்குதல்களும் அவதூறுகளும் வலம் வந்து
கொண்டிருந்தன.
பல வருடங்கள் பொறுத்துப் பார்த்து, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எனபதால் அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று
எனது நிலையை மாற்றிக் கொண்டேன்…” (www.
onlinepj.com)
அண்மையில்,குராபிகளுக்குப்
பள்ளி கட்டிக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் செயலர் பீஜே போஸ்டர் அடித்து
அவமானப்படுத்துகிறார் என்று கூறினார். உடனே நான் யாருக்கு எதிராக எப்போது என்ற
போது, எனக்கு நமபகமான ஒருவர் சொன்னார் என்று இவர் போன்ற கொள்ளையன் ஒருவனின் பொய்க்
கூற்றை சொல்லி அவமானப்பட்டார். இவர்களின் பொய் புறட்டுக்களை சுட்டிக்காட்டினால், இவர்கள்
தம்மைக்காக்க எத்தகைய பொய்யையும் சொல்வார்கள்.
இப்போது, இத்தகைய அசத்தியக்
கும்பல்களுக்கு பீஜே பதில் அளிக்க ஆரம்பித்துவிட்டார். அவதூறு பரப்புவோர் தகுந்த பதிலடியையும்; வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
வரலாறு இன்னும்
வளரும் இன்ஷா அல்லாஹ்...
Post a Comment
adhirwugal@gmail.com