எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இன்றைய நவீன உலகில்
அறிவியலும் தொழிநுட்பமும் மாபெரும் வளர்ச்சி பெற்று, மனித வாழ்வில் மிகப் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
அவை, பகுத்தறிவிற்கும்
சுதந்திரமான சிந்தனைக்கும். ஆய்வு முயற்சிகளுக்கும். ஆராய்ச்சி வேட்கைகளுக்கும் களம்
அமைத்துக் கொடுத்துள்ளன. இதனால், மத நம்பிக்கையின்
செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவினடியாய்
எழுந்த விஞ்ஞான அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக மனித மனங்களில்
ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதன் தாக்கம் மதச் சார்பின்மை
என்ற சித்தாந்தத்தைத் தோற்றுவித்து இறைநம்பிக்கை, விசுவாசம், ஒழுக்கப் பெருமானம், வணக்க வழிபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப் பெற்ற மதங்களின்
நிலைபற்றிய விமர்சனங்களும் வினாக்களும் எழுப்பப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.
பத்தோடு பதினொன்றாக இஸ்லாத்தையும் புறக்கணித்து, இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. எனினும், பல வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இச்சிந்தனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபணமாகிவரும் இக்காலப் பிரிவில், வளர்முக நாடுகளில் உள்ள கணிசமான ஒரு பிரிவினரும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இச்சிந்தனைக்குட்பட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
பத்தோடு பதினொன்றாக இஸ்லாத்தையும் புறக்கணித்து, இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. எனினும், பல வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இச்சிந்தனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபணமாகிவரும் இக்காலப் பிரிவில், வளர்முக நாடுகளில் உள்ள கணிசமான ஒரு பிரிவினரும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இச்சிந்தனைக்குட்பட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
இதனால், கப்ரு வணக்கம், பித்அத், மூடநம்பிக்கைகளை விட
மதச்சார்பின்மைப் போக்கு முஸ்லிம் வீடுகள், கிராமங்களுக்குள்ளேயும் நுழைந்து, ஆதிக்கம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. மிகச்சாதாரணமாகவே
இஸ்லாத்திற்குப் புறம்பான இச்சிந்தனையை உள்வாங்கும் அளவிற்கு மார்க்க பாமரத்தன்மைமிகு
முஸ்லிம்களின் பரிதாப நிலை காணப்படுவதை, நமது சமூக நிலையை, அதன் படித்த மட்டத்தை, சாதாரண மக்களின் பொது வாழ்க்கை முறையை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.
எனவே, மதச்சார்பின்மையின்
தோற்றத்திற்குரிய வரலாற்றுக் காரணியை விளக்குவது, அதன் தாக்கத்திற்குட்படுவதிலிருந்து விடுபட உதவும்
என்பதால் அதுபற்றி இங்கே விளக்க முயல்கின்றோம்.
மதநிலை பற்றிய உலவியல், சமூகவியல்
சார்பு நிலைக்கருத்து:
பதினேழாம் நூற்றாண்டின்
இருதிக் கட்டத்திலிருந்த இதுவரை விஞ்ஞானம் மனித சிந்தனையைக் கவரும் சில விந்தையான சாதனைகளை
நிலை நாட்டிற்று. இச்சாதனையால் அதிர்ந்து போன பல மேலை நாட்டவர்களும், சில கீழைத் தேசத்தவர்களும்
“மதம் காலத்தால் வெற்றி
கொள்ளப்பட்டு, விஞ்ஞானத்தின் பாதங்களின்
கீழ் மடிந்துவிட்டது. மதக்கொள்கை இனி மீட்சி பெறப் போவதில்லை” என மனப்பால் குடித்துவருகின்றனர்.
“மதம் என்பது மனித
நாகரிக வளர்ச்சியின் மிக
ஆரம்ப கட்டத்தில் மனிதனின் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி உணர்வும், தொழில்நுட்ப விருத்தியும் போதிய வளர்ச்சியைக் காணாத காலப்பிரிவில்
அவனது சில உள, உணர்வு ஆன்மீகத் தேவைகளைப்
பூர்த்தி செய்யத் தோன்றிய நிறுவனமாகும்” என பிரஞ்சுத் தத்துவ ஞானியான August
comte (1758-1857) கூறுகிறார். “சமயக் கருத்துக்களை
பரப்பிடுவான் வேண்டி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றவையே, மனித வாழ்க்கை மூடநம்பிக்கை, மதம், அறிவியல் அல்லது விஞ்ஞானம்
எனத்திட்டவட்டமான மூன்று மனவியல் கட்டங்களைக் கடந்து சென்றுள்ளது. இது அறிவியல் விஞ்ஞானத்தின்
உலகம். ஆகவே, எல்லா மதங்களும் வழக்கற்றுப்
போய்விட்டன என புகழ்பெற்ற உளவியலாளர் சிக்மண்ட் புரொய்ட் (1881-1939) கருதுகிறார்.
இவ்வாறு உளவியலாளர்களும், சமூகவியலாளர்களும், விஞ்ஞானிகளும் சமயக்
கொள்கைகளின் மீது வெறுப்பும், எதிர்ப்பும் கொண்டு மதச்சார்பின்மையை சிபாரிசு செய்வதற்குச்
சில வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதைப் புரிந்துகொள்வது, இதுபற்றிய தெளிவை
மேலும் அதிகப் படுத்தும் என்பதால் அதுபற்றிய வரலாற்றை சுறுக்கமாக நோக்குவோம்.
மதச்சார்பின்மையின் தோற்றமும்
காரணமும்:
“மதம் அறிவியலுக்கு
எதிரானது, மதச்சார்பின்மையே
சுதந்திரமான சிந்தனை” என்ற கருத்து ஐரோப்பிய
வரலாற்றில் நடைபெற்ற சில கொடூர நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஐரோப்பிய நோக்காகும்.
மத்திய காலப்பிரிவில் ஐரோப்பாவில் கிறஸ்தவ கோயில்கள்(Churches) மிக சக்தியும், அதிகாரமும் பெற்று, சுதந்திர சிந்தனை, அறிவு முயற்சி, ஆராய்ச்சி வேட்கை
போன்ற விஞ்ஞான முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டது. இந்த உண்மையை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்
H.A.
Fisher தனது History of Europe எனும் நூலில் “அறிவியலானது நிலைபெற்று
வளர்ச்சியுறத் துணைபுரியும் சுதந்திரமான ஆய்வுக்கு எதிரான ஒரு சூழல்” எனக் குறிப்பிடுகிறார்.
அறிவியல் எந்த முன்னேற்றமும்
காணாமல் ஐரோப்பா இருட்டுக்குள் உழன்ற இந்த வரலாற்றுப் பின்னணியில், 16ம் நூற்றாண்டின் மத்திய
காலத்தில் தோன்றிய அறிவியல் மேதைகளான Copernicus (1473-1543),
Kepler (1571-1630)ஆகியோர் அறிவியல் ஆராய்ச்சியுடாக Aristotle
B.C.370-286) லின் “Earth Center Theory” யை மறுத்து அல்குர்ஆனின்
கூற்றான “பூமி சுழல்கிறது” என்ற கருத்தை வலியுறுத்தினர்.வந்தது வினை அன்று படாடோபத்தில் திழைத்திருந்த புரோகிதக் கும்பல் “புபூமி சுழல்கிறது” என்ற கருத்து எங்கள்
பைபிளுக்கு முரணானது எனக்கூறி அவர்களைக் கொடுமைப்படுத்தி, எரித்து விஞ்ஞானிகளின்
குரலை ஒடுக்கியது. இந்தக் கொடூர நிகழ்வின் போது, திடீரென ஒலித்தது அக்கருத்தை பிரதிபலித்துக் கொண்டு
மற்றொரு குரல், தொலை நோக்கியைச் சீரமைத்துப்
பல அரிய கண்டுபிடிப்புகளை வழங்கிய அறிவியலாளர் Galileo
(1564-1642) அவர்களின் குரல்தான் அது. “சுற்றவில்லை சூரியன் பூமியை! சுற்றுகிறது
பூமி சூரியனை” என்று “Solar
System” என்ற தனது நூலில் குறிப்பிட்டதற்காக, இது எங்களது வேத நூலுக்கு
விரோதமானது என்று கூறிக் கிறிஸ்தவ மதகுருமார்கள் 69 வயதை அடைந்திருந்த, தளர்ந்த நிலையில்
இருந்த இவரை ரோமில் விசாரணை செய்து, சிறைவைத்து பின்னர் தூக்கிலிட்டனர். இவ்வாறு விஞ்ஞானிகளைத் தண்டித்து
அறிவியலுக்குத் தடைவிதித்த இச்சூழலில் ஐரோப்பா அறிவியல், பண்பாட்டுத் துறைகளில்
பின்னடைந்து இருட்டில் மூழ்கியிருந்தது.
ஐரோப்பா அறியாமைக்
கருவறைக்குள் இமைமூடி, பண்பாட்டில் மிருக
நிலையில் இருந்தபோது முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் பல பாகங்களிலும் ஏற்றிவைத்த அறிவுத்தீபம்
சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. “முஸ்லிம்கள் அறிவின் அனைத்துத் துறைகளுக்கும் அளப்பாpய பங்களிப்பைச் செய்த
புகழ்மிக்க காலப்பிரிவாகவும், ஆய்வுகூடங்கள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள், அவதான நிலையங்கள், கலாசார மையங்கள் முதலியவற்றைக் கட்டி எழுப்பிய ஒளிமிக்க காலமாகவும்
விளங்கியது” என Thanks Giving
என்ற நூலில் ரொபட் கிரீன் இங்கெர்சால் விபாpக்கிறார்.
“கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்திய
பகுதிக்கும் 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும்
இடைப்பட்ட காலப்பிரிவில் உலகம் முழுவதுத் முஸ்லிம்களே கலாசாரத்தினதும், நாகாpகத்தினதும் ஒளியை
ஏற்றி நின்றனர் என பேராசிரியர் P.K.Hitty குறிப்பிடுகிறார்.
“மேற்கத்திய உலகம்
ஆழமான அறிவைப்பெற விரும்பிய போதும், புராதன சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முற்பட்ட
போதும் முதலில் அது அறபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது” என்று பேராசிரியர்
George
Sarton தனது “Introduction to History of Science” எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு கூறும் பல வரலாற்றாசிரியர்களின் கருத்து நிழலில் ஐரோப்பாவில் நிலவி வந்த வாழ்க்கை
முறைக்கும் இஸ்லாமிய உலகில் நிலவி வந்த வாழ்க்கை முறைக்கும் இடையே எண்ணற்ற வேறுபாடுகள்
உண்டு என்பதை உணரமுடிகிறது.
இதுபற்றிய தெளிவற்றோரும், வரலாற்று உண்மையை
இருட்டடிப்பு செய்வோரும், புனிதமான இஸ்லாத்தை
விரும்பாதோரும், முஸ்லிம் உம்மாவினுள்
இருந்து கொண்டே மதச்சார்பின்மை சிந்தனையை முன்வைக்கின்றமை வேதனைமிகு விடயமாகும்.
காலனித்துவத்திற்கு
அடிமைப்பட்ட இஸ்லாமிய நாடுகளிலும், ஏனைய முஸ்லிம் சிறுபான்மை நாடுகளிலும் ஐரோப்பிய கலாசாரப் பண்பாட்டின்
எச்சங்கள் விதைக்கப்பட்டன. முஸ்லிம்களில் ஒரு சாரார் முன்னேற்றத்திற்கு ஒரே வழி தம்மை
அடிமைப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடுகளின் நாகாpக, கலாசாரத்தைப் பின்பற்றுவதுதான்
என்றும், அவர்கள் போல் மதநம்பிக்கையை
விட்டு வெளியேறுவதுதான் வளர்ச்சியுடைய முதிர்ச்சியான வழி என்றும் சிந்திக்கலாயினர்.
ஆனால், அபிவிருத்தி வளர்ச்சியுற்ற
நாடுகளிலுள்ளவர்களில் கணிசமான ஒரு பகுதியினாpன் சிந்தனையும், எழுத்தும், பேச்சும் இப்போக்கை மறுதலிக்கின்றன என்பதை இவர்கள் உணரத் தவறிவிட்டனர்.
அங்குள்ள பல உளவியல், அறிவியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும் “மனித குலத்தின் மாண்புக்கு
அத்தியவசியமானது மதம்” என்ற முடிவுக்குத்
திரும்பி, இஸ்லாத்தில் நுழைந்தவண்ணமுள்ளனர்.
வானவியல் அறிஞர்களில் புகழ்பெற்ற ஜேம்ஸ் ஜீன்ஸ் நாஸ்திகராகத் தன் அறிவியல் ஆய்வுப்
பயணத்தை துவங்கி ஆஸ்திகராக முடித்துக் கொண்டார்.
உலகியலை ஆன்மீகத்துடன்
இணைத்து நடைமுறைக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை நெறியை அமைப்பதில் வெற்றி கண்டமைக்கான இஸ்லாத்தை, புகழ்வாய்ந்த சமூகவியலாளர்
ஜீன்ஸ் பிரிட்ஸ் மனமாரப் புகழ்ந்துள்ளார். மதநம்பிக்கை, சமயநெறி பற்றிய இன்றைய
ஐரோப்பியாpன் எண்ண ஓட்டத்தை
பிரபல சமூக எழுத்தாளர் ஸோமர் இயட்மாகம் “இன்றைய
ஐரோப்பா பழைய தெய்வத்தைப் புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் எனும் புதிய கடவுளைக் கண்டுபிடித்து
விட்டது” என்று குறிப்பிடுகிறார்.
நாம் மேலே, வரலாற்றின் நிகழ்விலிருந்து
எடுத்துக்காட்டிய ஐரோப்பிய உலகினதும், இஸ்லாமிய உலகினதும் நிலை, மதச்சார்பின்மை என்ற சிந்தனையின் தோற்றம் ஐரோப்பிய
வரலாற்றில் நடைபெற்ற சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக
உணர்த்துகிறது. உண்மையில் நோக்கும் போது, மதத்திற்கும், அறிவியலுக்கும் இடையிலான போராட்டத்தின் விளைவாக “மத எதிர்ப்புணர்வு
நிலை” உலகில் வேறு எங்கும்
நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. உலகில் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிக்கும்
தடையாக ஐரோப்பா தவிர எங்கும் அமைந்ததில்லை. ஐரோப்பாவிலேயே நிகழ்ந்த இவ்வரலாறு இன்று
உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு, எமது நாட்டையும் ஆக்கிரமித்து முஸ்லிம் புத்தி ஜீவிகளிடத்திலும்
திணிக்கப்பட்டுவிட்டது.
மதச்சார்பின்மை
என்பதன் கருப்பொருள்:
மதச்சார்பற்ற நிலை
என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது. (இறைவன் இல்லை என்ற
மலட்டு வாதத்திற்கும், பல கடவுள்கள் இருக்க
முடியாது, ஒரு கடவுள்தான் இருக்க
முடியும் என்பதற்குரிய பகுத்தறிவுபுபூர்வமான விளக்கத்தை “இஸ்லாத்தில் இறைக்கோட்பாடு” என்ற மகுடத்தில் அடுத்தடுத்த
இதழ்களில் இன்ஷாஅல்லாஹ் நாம் விளக்கமளிப்போம்.)
“உலகிலுள்ள அனைத்துமே
பகுத்தறிவுக்கு உட்பட்டதே! இயற்கையின் யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் விளங்கவும்
முடியும் என்ற விடயத்தில் மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கின்றான். இதனடிப்படையில்
மறுமை வாழ்க்கை என்ற ஒன்று இல்லை என்பதோடு, மறு உலகவாழ்க்கை நிலையிலிருந்தோ பெறப்பட்ட எல்லாக் கருத்தியலையும்
தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வில் மனித இனத்தின் சுயநலனைக் குறித்த வகையில் மட்டுமே
ஒழுக்கம் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.
உலக வாழ்வில் சடப்பொருட்களின்
அடிப்படையில் சுயநலத்திற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் அடைந்து கொள்வதே மனிதனின்
மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் முக்கியமானதொரு சாதனம் என்பது மதச்சார்பற்ற தத்துவ ஞானிகளினதும்
லோகாயதவாதிகளினதும் அடிப்படைக் கருதுகோளாகும். இதுவே, அவர்களின் தற்போதைய
இலட்சியமாகவும் ஆகிவிட்டது.
உண்மையில், மதச்சார்பின்மை என்பதன்
பொருள் ஒரு மதக் கொள்கையையோ,
இனத்தையோ பிரதிநித்துவப்படுத்துவதில்லை
என்ற நிலை மட்டுமல்ல. நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று ஆன்மா, கடவுள், மறுமை வாழ்வு அனைத்தையும்
மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப்போக்கையே அது குறித்து நிற்கிறது. இது உலக வாழ்வில்
எல்லையற்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும் தோற்றுவித்துள்ளது. இதனால், மேற்கத்தேய நாடுகள்
மன அமைதியின்மையால் வாடுகின்றன. அங்கே பெரும் எண்ணிக்கையானோர் நரம்புத் தளர்ச்சிக்கும், மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை பெரும் மனப்போராட்டத்திலும் விரக்தியிலும், வறுமை உணர்விலும், அர்த்தம், இலட்சியம், கொள்கையின்றிக் கழிகிறது.
மதச்சார்பின்மை என்ற கோட்பாடு மனித வாழ்விற்க்குப் பொருளையும், கருத்தையும், குறிக்கோளையும், இலட்சியத்தையும் வழங்கமுடியாது
தோற்றுவிட்டது. எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில்
சிக்கித்தவிக்கும் மேற்கு நாட்டவர்கள் ஆறுதலும், தேறுதலும், ஆதரவும், மன நிம்மதியும் தேடி இஸ்லாமிய மடியை நாடி அடைக்கலம் புகும்போது, இங்குள்ளவர்கள் அந்தக்
குப்பைக்குள் விழுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
மதச்சார்பின்மை மனித
மனங்களில் அன்பை, கருணையை, பாசத்தை, தீமையைத் தடுக்கும்
உணர்வை ஏற்படுத்த முடியாது தோற்றுவிட்டது. இது இன மதப்பற்றை ஒழிப்பதில் மட்டுமல்ல நவீன
மனிதனின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மனிதனின்
ஆன்மீக உணர்வைச் சிதைத்து,
ஆன்மாவை அழித்து, மிருக நிலைக்கு கொண்டுவந்து
வனங்களில், அதனோடு மட்டுமே வாழக்கூடியவனாக
மாறிவிட்டது. இத்தகைய நிலையில் சிற்றின்ப ஆசைகளே மேலோங்கி நிற்கின்றன. குருட்டு ஆசைகளும், திருட்டு வழிகளும்
அதிகரித்துள்ளன. இந்த அடிமைத்தனத்தையும், போலித்தனத்தையும்
கட்டுப்படுத்தும் சக்தி இச்சிந்தனையிடம் இல்லை.
கிறிஸ்தவ பாதிரிமார்களின்
கடும்போக்கு நிலை காரணமாகவே நவீன மனிதன் மதத்தையே வெறுத்து விட்டான். இதனால், அவனது இறைநம்பிக்கையும்
விசுவாசமும் ஆட்டம் கண்டது. கிறிஸ்தவ மதப்பிடியிலிருந்து விடுபடும் பொருட்டு மனிதன்
அனைத்து மதக் கொள்கையையும் புறமொதுக்கிவிட்டு தனிப்பாதை (மதச்சார்பின்மை)யில் தனது
பயணத்ததை விஞ்ஞான ஒளியில் தொடர்ந்தான். இந்தப்
பயணப்பாதையில் மனிதன் மகத்தான வளர்ச்சி கண்டான். எனினும், ஆத்மீக ஒளியற்ற இவ்வளர்ச்சியினால்
மனிதன் போரிலும், சோதனையிலும், நஷ்டத்திலும் தமது
வாழ்வைக் கழிக்கின்றான். மதத்தைப் புறக்கணித்ததனாலேயே அவனுக்கு இந்நிலை ஏற்பட்டது.
அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிக்கும்
எதிராக அறிவியல் விளக்கங்கள், கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை மறுக்கும் வகையிலும் கிறிஸ்தவ
திருச்சபையும், அதனைப் பிரதிநிதித்துவப்
படுத்திய மதகுருமார்களும் செயற்பட்டதானது மதத்திற்கெதிரான சிந்தனைப் போக்கை தோற்றுவித்தது.
‘ஓர் இறைத்தூதர் தனது
சமூகத்தைக் கணக்கெடுக்க (senses) முனைந்ததால் இறைவன்
அச்சமூகத்தையே அழித்துவிட்டான்.” எனவே,
ஆய்வு செய்தால் அழிவு
வரும் என்ற பைபிளின் போதனைதான் உலகில் மதபோதனைக்குப் புறம்பான எண்ணக்கருவை சமூகமயப்படுத்தியது
என Religion
and Science என்ற நூலில் Bertrund Russel கருதுகின்றார்.
கிறிஸ்தவ போதனை போன்று
மனித வாழ்விற்குரிய தெளிவான,
வரையறுத்த, பகுத்தறிவுபுபூர்வமான, அறிவியலைப் புறக்கணிக்காத
சட்டங்களும், கொள்கைகளும் பல மதங்களில்
தெளிவாகவும், வெளிப்படையாகவும்
காணப்படாமைதான் மதச்சார்பின்மை என்ற இச்சிந்தனை வளர்ச்சியுறத் துணைபுரிந்துள்ளன. இச்சிந்தனையின்
கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் அதே மனப்பதிவோடு, இஸ்லாத்தையும் மேலோட்டமாக, அல்லது இஸ்லாத்திற்குப் புறம்பான முஸ்லிம் உம்மாவினுள்
இருந்துகொண்டே அதை விமர்சிக்கும் நவீனத்துவவாதிகளின் சிந்தனையை நோக்கும் போதுதான் தவறிழைத்து
விடுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த ஊடுருவலும் இடம்பெறல் முடியாது.
அது தெய்வீக வழிகாட்டல்; அதன் பாதுகாப்புப்
பொறுப்பை இறைவன் எடுத்துக்கொண்டு விட்டான். இங்கு மனித ஊடுருவலோ, கையாடல்களோ நினைத்தவுடன்
அரசியல் யாப்புப்போன்று பெரும்பான்மை பெற்று மாற்றுவதற்கோ யாருக்கும் அதிகாரமில்லை.
எனினும், அது சில விடயங்களில்
நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுடன் பகுத்தறிவுபுபூர்வமாகக் காணப்படுகிறது.
2012ம் ஆண்டு அல்ல, 5000ம் ஆண்டு கழிந்தாலும்
அன்றும் அது மிகுந்த பொருத்துப் பாடுடையதாகவே இருக்கும் என்பதை காய்தல் உவத்தலின்றி
பகுப்பாய்வுக்குட்படுத்தும் அனைவருக்கும் தெளிவைத் தரும். இதன் வெளிப்பாடு யதார்த்த
புர்வமாக இன்று உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
விடியலை நோக்கி
மனிதன் வெறும் சடப்பொருளன்று, அவனின் புறத்தேவைகள்
புபூர்த்தியாக்கப்பட்டிருப்பது போன்று, ஆத்மாவின் தேவைகளும் அவசியமாகப் புபூர்த்தியாக்கப்படல் வேண்டும்.
இதனைப் புறக்கணித்து விட்டு எழுந்த சிந்தனையினால் நிலைத்து நிற்க முடியாது போய்விட்டது.
அடிப்படையில் மனித
உள்ளத்தில் இறைவன் பற்றியும் மதம் பற்றியும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இறைவனைப்
பற்றிய நம்பிக்கை ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்றை வரலாற்றில் கற்பனை செய்யவும்
முடியாது என்பதை உணர்ந்துள்ள இதற்குப் புறம்பான சிந்தனையின் பாற்பட்டவர்கள் அதற்கே
மீண்டுள்ளனர். எங்கு இவ்வெண்ணக்கரு துளிர்விட்டு வளர்ச்சியுற்றதோ, அங்கேயே அது சாத்தியப்படாது
என்று புரிந்து கொண்டு இன,மத, மொழி, கலாசாரப் பாரம்பாரியங்களை நோக்கி மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது. எனவே, உலகில் மதச்சார்பின்மைச்
சிந்தனை படுதோல்விகண்டு படிப்படியாகப் பின்வாங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
இக்கருத்தியல் மனித
இனத்தின் இன, மத, குள, நிற மாச்சரியங்களை ஒழிக்கத் தவறியதோடு சமாதானத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்த
முடியாது தவிக்கிறது. மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு, கறுப்பு வெள்ளையன் என்ற நிறவெறி, பிறறை ஒழித்துக்கட்டும்
வக்கிர புத்தி, பலமுற்றவர்களின் அதிகார
வெறியாட்டங்கள் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் நவகாலனித்துவம் போன்றன, மிகக் கொடூரமான நோய்களாகும்.
இக்கொடூர நோய் மனித வாழ்க்கை முழுவதற்கும் நஞ்சூட்டிவிட்டது. சமுதாயம் பிரிந்து பிளவுண்டு
ஆதிக்கமுள்ளவன், பலவீனனை ஒடுக்கும்
அயோக்கியத்தனம், சாந்தி, சமாதானம், தனிமனித சுதந்திரம்
கிடைத்தற்குரியனவாகி விட்டன.
இவற்றையெல்லாம் உலகில்
நிலை நாட்டிக்காட்டிய சாதனைக்குரிய ஒரே ஒரு வழிதான் எஞ்சியிருக்கிறது. அதுதான் இஸ்லாம்.
பதிநான்கு நூற்றாண்டுகள் கழிந்தும் அது இன்னும் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. அப்படியே
உயிரோட்டமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த நெறியின் பால் முழுமனித இனமும் மீண்டாக
வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் உண்மையான சாந்தி, சமாதானம் சகவாழ்வு
கிட்டும். உலகப்பற்றிலும்,
ஆன்மீக வறுமையிலும்
பாpதவிக்கும் மனிதனுக்கு
அன்பை, அரவணைப்பை, பாசத்தை, கருணையை, குற்றம் செய்யாது
தடுக்கும் உணர்வை ஏக இறைநம்பிக்கையால் மட்டுமே அவனில் ஏற்படுத்த முடியும்.
இஸ்லாம் காட்டிய உண்மைப்
பாதையில் மனித இனம் செழித்து, வளர்ந்து கிழக்கேயும், மேற்கேயும் ஓர் உயிh;த்துடிப்புமிக்க ஆன்மீக நெறி நின்று அறிவியக்கம் செயல்படத் தொடங்கியது.
தீய சக்திகளாலும், வஞ்சக கிளர்ச்சியாலும், வக்கிர உயர்வாலும், கட்டவிழ்த்துவிட்ட
பொய்மைகளாலும், அதன் முன்னேற்றத்தை
தடுத்து நிறுத்த முடியவில்லை. இனியும் முடியாது. மனித வாழ்க்கை பற்றிய அதன் கண்ணோட்டம்
முற்றிலும் வித்தியாசமானது,
யதார்த்தமானது. இஸ்லாம்
மனித இனத்தின் மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகவே என்றும்
இலங்கும். அது வழங்கும் நேர்வழியின் பேரொளி வியாபித்துப் பரவுவதை உலகத்தின் எந்த ஒரு
சக்தியாலும் தடைசெய்ய இயலாது. ஆகவே, இஸ்லாம் தவிர்ந்த சிந்தனைகள், அதன் ஏக இறை கோட்பாட்டிற்குப் புறம்பான பல தெய்வ
வழிபாடு, மனித உணர்வுகளின்
அடித்ததளத்தில் கட்டி எழுப்பப்பட்ட கொள்கை, கோட்பாடுகள் அனைத்தும் காலத்தால் தோற்கடிக்கப்பட்டு வருவது போன்று, மதச்சார்பின்மையின்
நவீனகால வரலாறும் தற்போது அதே நிலைக்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.
நாம் இதுவரை மதச்சார்பின்மையின்
தோற்றம் அதன் நிலை பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டோம். எனினும், இச்சிந்தனையின் தோற்றம்
ஐரோப்பாவில் குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் 17ம் நூற்றாண்டின் பின்னர் கிறிஸ்தவ மதத்தினரின் அறிவியல் விரோதப் போக்கினால் எழுந்தது என்ற கருத்திற்கு மாற்றமான
ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது, வரலாற்றின் எல்லாக் காலகட்டத்திலும் இச்சிந்தனை ஏதோ ஒருவடிவத்திலிருந்து
வந்தது. அதன் வளர்ச்சியின் உச்ச கட்டமாக ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்தின் விஞ்ஞான விரோத
நடவடிக்கை அமைந்தது என்றும் கூறப்படுகிறது. இக்கருத்திற்கு வரலாற்றின் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.
எது எவ்வாறாயினும், சமூக வாழ்விற்கு மதப்
பின்னணிக் கருத்துக்கள் பொருத்தமற்றது என்ற எண்ணக்கருவை ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தின்
பெயரால் நடந்த அநியாயங்கள் தோற்றுவித்தது. அங்கே 18-19ம் நூற்றாண்டுகளில் மிகுந்த செல்வாக்குப் பெற்று, 20ம் நூற்றாண்டின் அரைப்பகுதியில்
உலகம் முழுவதும் பரவலாயிற்று. இன்று அச்சிந்தனை எதனைச் சாதித்தது என்ற கேள்விகளுக்கும்
விமர்சனங்களுக்கும் உட்பட்டாலும் முற்றாக அழிந்துவிடவில்லை. இது கம்யுபூனிஸ உலகில்
மத எதிர்ப்பு வடிவத்தைப் பெற்றுள்ளது. இது அதன் அழிவு காலத்தை நெருங்குகிறது என்பதற்கான
முன்னடையாளங்களாகும்.
அதேவேளை, இஸ்லாமிய சிந்தனையில்
கொள்கையில் வார்த்தெடுக்கப்படாதவர்கள், ஷிர்க்கில் மூழ்கி, தர்காக்களிலும், சாவியாக்களிலும் தஞ்சமடைவதால், அது இஸ்லாமியப் பாரம்பாpயம் என்று பலர் எண்ணிவிடுகின்றனர்.
எனவே, சில முஸ்லிம்களின்
நடவடிக்கை இஸ்லாமாகாது. அதன் மூல ஊற்று அல்குர்ஆனும், சுன்னாவுமே. எல்லா
வணக்க வழிபாடுகளும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானவை; அனைவருக்கும் பொதுவானவை, நடைமுறைப்படுத்த எளிமையானவை; இதுவரை எந்த மாற்றமும்
நிகழவில்லை, அதற்கான அவசியமும்
இல்லை. அதுவே, மனித இனம் ஈருலக ஈடேற்றம்
பெற ஏக வழி. அதுதவிர வேறு எதுவும் இருளில் தவிக்கும் மனித சமூகத்திற்கு விடியலை வழங்கவியலாது.
“(ஏக இறைவனை) மறுப்போpன் செயல்கள் பாலைவனத்தில்
(தெரியும்) கானல் நீர் போன்றது.
தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும்
காணமாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான்.
அல்லாஹ் விரைந்து விசாரிப்பான்.
அல்லது ஆழ்கடலில்
உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன்
மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்
போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ
அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. (அல்குர்ஆன்
24:39,40)
Post a Comment
adhirwugal@gmail.com