லஹப் அத்தியாயத்தின்
விரிவுரை
நபிகளாரின் பகிரங்க அழைப்பு
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
தொடர்-1
லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோன்று மஸத் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் கடைசி
வார்த்தையாக இடம் பெறுவதால் மஸத்
என்றும் இந்த
அத்தியாயம் குறிப்பிடப்படுகிறது.
சில
அத்தியாயங்களுக்குத்தான் நபியவர்கள் பெயர் வைத்தார்கள். குர்ஆனிலுள்ள அனைத்து அத்தியாயங்களுக்கும் நபியவர்கள்
பெயர் வைக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டாமல் அடுத்த தலைமுறையினரால் பெயர் சூட்டப்பட்ட
அத்தியாயங்களில் இந்த அத்தியாயமும் ஒன்றாகும். அந்தந்த
அத்தியாயத்தில் இடம்பெறுகிற சொற்களில்
ஏதாவது ஒரு
சொல்லைத் தேர்ந்தெடுத்து அதை அத்தியாயத்தின் பெயராக ஆக்கினார்கள். இந்த அத்தியாயத்தில் லஹப் எனும் சொல் இடம்பெற்றதால் லஹப் என்றும் மஸத் என்ற சொல் இடம்பெற்றதால்
சிலர் மஸத் என்றும் இந்த அத்தியாயத்துக்கு பெயரிட்டுள்ளனர். இக்லாஸ் (112)
ஃபலக் (113), நாஸ் (114) போன்ற அத்தியாயங்களை நபிகள் நாயகம் சிறப்பித்துக் கூறியது போல் இந்த
அத்தியாயத்தைச் சிறப்பித்து எதுவும்
கூறவில்லை. ஆனாலும் இந்த அத்தியாயம் இஸ்லாம்
உண்மையான மார்க்கம் என்பதற்கும்
திருக்குர்ஆன்
இறைவேதம் என்பதற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. அதை விளக்குவதற்கு முன்னர் இந்த அத்தியாயம் அருளப்படக் காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதைப் பார்ப்போம். அருளப்பட்ட காரணம் நபியவர்கள் எந்த அத்தியாயத்தைக் குறித்தும் மக்கீ மதனீ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தக்க
காரணத்துடனும் எந்தக் காரணமில்லாமலும்
பிற்காலத்தவர்கள்
தான் மக்கீ மதனி என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதிக் கொண்டனர். ஆனால் இந்த லஹப் அத்தியாயம் நபியவர்களின் மக்கா வாழ்க்கையின் போதுதான் அருளப்பட்டது
என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபியவர்கள் ஹிரா குகையில் இருக்கிற போது
அல்லாஹ்வினால் நபி என்று தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். ஹிரா
குகையில் இருக்கும் போது 96 வது அத்தியாயமான அலக் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப ஐந்து வசனங்கள் இறங்கின. இதன் மூலம் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக
நியமிக்கப்பட்டார்கள். படைத்த உன் இறைவனின் பெயரால் ஓதுவீராக!
என்று துவங்கும் இவ்வசனங் களில் மக்களுக்குப் பிரச்சாரம்
செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடவில்லை. மாறாக
நீங்கள் ஓதுங்கள்
என்று தான் கட்டளையிட்டான்.
எனவே நீங்கள்
ஓதுங்கள், நீங்கள் படியுங்கள், நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
என்கிற
கருத்தில்தான் முத-ல் வசனமே இறைவன்
புறத்திலி-ருந்து
அருளப்பட்டது. நபியவர்களுக்கு இது புதிய
அனுபவமாக
இருந்ததால் பயந்தார்கள். இப்படி பயந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு ஹதீஜா (ரலி-) ஆறுதல் சொன்ன விசயங்களையெல்லாம் ஆதாரப்பூர்வமான நபிகள் நாயகத்தின்
வரலாறுகளில் நாம் படித்திருப்போôம். அதன் பிறகு போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! என்ற 73,74 வது
அத்தியாயங்கள்
அருளப்பட்டன. அந்த அத்தியாயங்கள் நபியவர்கள் தம்மளவில் கடைபிடிக்க வேண்டிய சில செய்திகளைச் சொல்வதற்காகவும் அவர்களின் அச்சத்தைப் போக்கவுமே அருளப்பட்ட வசனங்களாகும். இந்த
காலகட்டத்தில் மக்களுக்கு பிரச்சாரம் செய்யுமாறு எந்தக் கட்டளையும்
பிறப்பிக்கப்படவில்லை. அதன் பிறகுதான் மக்களுக்குப் பிரச்சாரம்
செய்வதற்காக அல்லாஹ் விடமிருந்து
பின்வரும் வசனம்
அருளப்பட்டது. (முஹம்மதே!) உமது நெருங்கிய
உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
(அல்குர்ஆன் 26:214) இதுதான் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று வந்த
முதல் கட்டளையாகும். இந்தக் கருத்தில்
ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள்
எச்சரியுங்கள்'' எனும்
(26:214 ஆவது) இறைவசனம்
அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா'
மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார் கள். அங்கு
வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்)
வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்)
அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று
உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று
நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள்
நம்புவீர்களா?'' என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால்,
நான் கடும்
வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்'' என்று (தமது மார்க்கக் கொள்கையைச்)
சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?'' என்று கூறினான். அப்போதுதான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும்
நாசமாகட்டும்......'' என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-லி), நூல் : புகாரி 4770 இந்த ஸஃபா என்ற குன்று ஊருக்குள் மக்கள்
வசிக்கும் பகுதியில் இருந்தது.
அதனால்தான் அதில்
ஏறி மக்களை நபியவர்கள் அழைக் கிறார்கள்.
நபியவர்கள்
எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டவுடன்,
நபியவர்களின் குரலைக் கேட்ட அந்தக் கோத்திரக்காரர்கள்
அனைவரும் வந்துவிட்டார்கள்.
எந்தளவுக்கு
நபியவர்களின் அழைப்புக்கு அந்த மக்கள் செவிசாய்த்தார்களெனில், தன்னால் வரமுடியா விட்டாலும் தன்
சார்பாக ஒரு
தூதுவரை அனுப்பி முஹம்மது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்பதற்காக அனுப்பி வைத்து செய்தியைத்
தெரிந்து கொண்டார்கள். நாற்பது வருடங்களாக பொய் சொல்லாமலும்
நாணயமாகவும் ஆபாசமில்லாமலும் அற்பமாக
நடக்காமலும்
இருந்தவர் அழைப்பதால் அவர்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தார் அனைவரும் குழுமினார்கள்.
இந்த அத்தியாயத்தில் கூறப்படும் அபூலஹபும்,
குறைஷிக்
கூட்டத்தாரும் வந்தார்கள். அனைவரும் வந்ததும், அந்த மக்களைப் பார்த்து
அல்லாஹ்வின் தூதர்
முஹம்மத் ஸல் அவர்கள், இந்த மலைக்குன்றின் பின்புறமிருந்து உங்களைத் தாக்குவதற்கு ஒரு குதிரைப் படை வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னை
உண்மைப்படுத்துவீர்களா? என்று கேட்பதின் மூலம் தனது நாணயத்தை முத-லில் நிரூபிக்கிறார்கள். நபியவர்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்று
அவர்களின் குடும்பத்தார் பதிலளித்தார்கள். நபியவர்கள்
சொன்னதையெல்லாம் சோதித்துப் பார்க்காமலேயே
நம்பினார்கள்.
அதற்குக் காரணம், நபியவர்கள் பொய் சொல்லாமல் நாற்பது வருட காலம் அந்த மக்களுக்கு மத்தியில்
வாழ்ந்து காட்டியதுதான். அதையும் அந்த
மக்கள் தங்கள்
வாய்களாலேயே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். நீங்கள் பொய் சொல்லி ஒருக்காலும் நாங்கள் அனுபவத்தில் பார்த்ததே இல்லை. அதாவது நீங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறவர்களாகத்தான்
நாங்கள் உம்மை அனுபவத்தில்
கண்டிருக்கிறோம்
என்பது அந்த மக்களின் பதிலாக இருந்தது.
இது நபிகளாரின்
தனிச் சிறப்புமிக்க பண்புகளிலுள்ளதாகும். உலகத்தில் எந்தப் பிரச்சாரகனுக்கும் எந்த சாமியாருக்கும் எந்த ரிஷிக்கும் எந்த மகானுக்கும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைச் சொல்லி
பிரச்சாரம் செய்ய முடியுமா? என்றால்,
முடியவே முடியாது. உதாரணத்திற்கு நான் என்னுடைய கடந்த கால
வாழ்க்கையைப் பார் என்று சொன்னால், யாரிடம் வந்து சொல்லுகிறாய்? உன் வண்டவாளங்கள் எங்களுக்குத் தெரியாதா?
என்று நறுக்கென்று
கேட்டுவிடுவார்கள். எனவே எனக்கோ உங்களுக்கோ உலகத்திலுள்ள எவருக்குமோ என் கடந்தகால வாழ்க்கையைப் பார் என்று சொல்லவே முடியாது. எந்த மனிதனுக்கும் கடந்த காலம் சுத்தமாக
இருக்கவே இருக்காது. யாராக இருந்தாலும்
தவறு செய்துதான்
இருப்பார்கள். கொஞ்சம் என்றும் கூடுதல் என்றும் சொல்லிக் கொள்ளலாமே தவிர தவறே செய்யாத ஒருவனையும் காட்டவே முடியாது. எனவே நான் கடந்த காலத்தில் தவறே செய்யவில்லை என்று ஒருவன்
நாக்கின் மீது பல் போட்டுப்
பேசமுடியவே
முடியாது. அப்படிப் பேசினால் அவன் பொய் சொல்லுகிறான் என்றே பொருள். அதனால்தான் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்று பழமொழி சொல்லுவார்கள். நதியில் குளித்துவிட்டு
போகவேண்டியதுதான். அதனுடைய மூலத்தைப்
பார்த்துவிட்டுத்தான்
குளிக்கவேண்டும் என நினைத்தால் ஒருக்காலும்
ஒருவனாலும்
குளிக்கவே முடியாது. அதில் பன்றிகூட செத்துக் கிடக்கும். கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின்
யாராவது மலம் கழித்திருப்பார்கள்.
அல்லது சிறுநீர்
கழித்து இருப்பார்கள். இன்னும் கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின் குப்பைக் கூளங்கள் கிடக்கும். இன்னும் கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின் எருமை மாட்டைக்
கழுவுவார்கள். அதையெல்லாம்
பார்த்தால்
நதியில் குளிக்கவே முடியாது. ஆற்றுக்கு மூலம் பார்த்தால் தண்ணீரில் இறங் கவே முடியாது. இது சரியான கருத்துதான். அதுபோல் ரிஷிக்கும் மூலம் பார்க்கக் கூடாது என்கிறார்கள். ரிஷி என்றால் மகான். ஒருவரை மகான் என்று நம்பினால்
இப்போது என்ன சொல்லுகிறார்? எப்படி நடக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர,
நேற்று
எப்படியிருந்தார்? என்று பார்க்கவே கூடாது. எந்த
மகானுக்கும் உருப்படியான பழைய பதிவுகள்
இருக்கவே
இருக்காது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நம் காலத்தவர்களும் முந்திய காலத்தவர்களும்தான் நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்கிறார்கள். ஆனால்
முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள்
மட்டும்தான்
தம்மைப் பொருத்தவரை ரிஷி மூலமும் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள். என்னுடைய நாற்பது வருட காலங்களையும்
ஆய்வு செய்து பார் என்று மக்களிடம்
கூறி பிரச்சாரம்
செய்கிறார்கள். இது நபிகளாரின் பெரும் சிறப்பாகும். அதையும் அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சொல்-லிக் காட்டுகிறான். "அல்லாஹ் நாடியிருந்தால் இதை நான் உங்களுக்குக் கூறியிருக்க
மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க
மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல
வருடங்கள்
வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?''
என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:16) நான் உங்களுடன் இவ்வளவு காலங்கள் வாழ்ந்திருக்கிறேன்.
அதைக் கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? ஏதேனும் குறைகளை என்னிடம்
கண்டிருக்கிறீர்களா? என்று நபியவர்கள் தமது நாணயத்தை எடுத்துச் சொல்-லி, மக்களிடம் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்கள். பொதுவாக உள்ளூரில் யாருடைய போதனையும் எடுபடாது. அவருடைய கடந்த கால நண்பர்கள் இருப்பார்கள். அவனது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்தவர்கள் இருப்பார்கள். சொந்த
பந்தங்கள் இருப்பார்கள். இவன் சிறு
பிராயத்தில்
இருந்து மக்களால் கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதினால், இவனெல்லாம் சொல்லி- நாம் கேட்பதா?
என்று
சொல்லி-விடுவார்கள். அதே நேரத்தில் வெளியூர்க்காரன் எடுத்துச்
சொல்லும் போது, அவனது கடந்த காலத்தையெல்லாம் தெரிந்து இருக்க மாட்டார்கள். அவனது நிகழ்காலத்தை மட்டும்தான் பார்ப்பார்கள். ஆம்! இவர்
பெரிய தாடி வைத்திருக்கிறார். பெரிய
ஜுப்பா
போட்டிருக்கிறார். நன்றாகப் பேசுகிறார். என்று மரியாதை கொடுத்து கேட்பார்கள்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான் நபியவர்கள் சிரியா
போன்ற நாடுகளுக்கு வாணிபத்திற்குச் சென்றிருப்பார்கள். மற்றபடி
நபியவர்கள் எப்போதுமே, உள்ளூரில்தான் வசித்துள்ளார்கள். ஒருவன் நல்லவனாக ஒரு
நாள் நடிக்கலாம். இரண்டு நாட்கள் நடிக்கலாம். ஆனால் 25 வருடத்திற்கு நடிக்க
முடியுமா? என்றால், முடியாது.
நபியவர்களின் சிறு வயதுப் பருவத்தைக்கழித்து விட்டு பார்த்தால் அவர்கள் தம்மை
நபி என்று வாதிடும் முன் அம்மக்களுடன் 25 ஆண்டுகள்
வாழ்ந்துள்ளனர். 25 வருடங்களாக ஒருவரால் அனைவரிடமும்
அனைத்து நேரங்களிலும் நல்லவராக நடிக்கவே முடியாது. எனவே நபியவர்கள்
இயற்கையாகவே அவர்களின் சுபாவத்திலேயே நல்லவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களைத் தூதராக ஆக்குவதற்காகவே அப்படி
வார்த்தெடுக்கிறான். அதனால்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது இதற்கு
முன் உங்களுடன் உண்டு, உடுத்தி, உறங்கி
குடும்பமாக வாழ்ந்திருக்கிறேனே நான் பொய் சொல்-லியோ நேர்மை
தவறியோ நடக்கக் கண்டீர்களா என்று
அவர்களால் கேட்க முடிந்தது. அதனால்தான்
அந்த மக்களிடம் மலைக்குப் பின்னால் ஒரு படை தாக்க வருகிறதென்று சொன்னால்
நம்புவீர்களா? என்று கேட்டதும் ஆம் என்று ஒத்துக் கொண்டு, உண்மையைத்
தவிர தங்களிடம் எதையும்அனுபவித்ததே கிடையாது என்று சொல்லுகிறார்கள். அப்படியாயின், இதுவரைக்கும்
உண்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கிற நான் சொல்லுகிறேன், உங்களுக்கு
முன்னுள்ள கடும் வேதனையை எச்சரிக்கிறேன் என்கிறார்கள். அப்போது
அந்த சபையில் இருந்த எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அபூலஹப் என்பவன் எழுந்திரித்து, தப்பன் லக ஸாயிரல் யவ்ம், அலிஹாதா
ஜமஃ(த்)தனா - நீ காலமெல்லாம் நாசமாகப் போ! இதற்காகத்தான் எங்களையெல்லாம்
இங்கே ஒன்றுகூட்டினாயா? என்று நபியவர்களைப் பார்த்துச் சபிக்கிறான்.
அப்போதுதான் இந்த அத்தியாயம் இறங்கியது என்று இப்னு அப்பாஸ் அறிவிக்க
புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு
அறிவிப்பில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா' மலைக்குன்றின்
மீது ஏறி, "யா ஸபாஹா!''
("உதவி! உதவி! அதிகாலை
ஆபத்து!'') என்று
கூறினார்கள். உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, "உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?'' என்று
கேட்டனர். நபி (ஸல்) அவர்கள்,
"எதிரிகள், காலையிலோ
அல்லது மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால்
என்னை நீங்கள் நம்புவீர்களா?''
என்று கேட்டார்கள். "ஆம் (நம்புவோம்)' என்று
அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான்
ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை
செய்பவனாவேன்'' என்று சொன்னார்கள்.
உடனே அபூலஹப், "உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை
(இங்கே) ஒன்றுகூட்டினாயா?''
என்று கேட்டான். உடனே அல்லாஹ், "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்...'' எனும்
(111:1ஆவது)
வசனத்தை அருüனான். அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ர-லி), நூல்: புகாரி 4801 இன்னும்
சில வார்த்தை வித்தியாசங்களுடன் புகாரியின் 4801, 4971, 4972 ஆகிய எண்களைக்
கொண்ட செய்திகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த
ஆதாரப் பூர்வமான செய்தியிலி-ருந்து இந்த வசனம் மக்காவில் அருளப்பட்டது என்பது
விளங்குகிறது. இந்த அத்தியாயம் மக்கீ என்று சொல்வதற்குரிய ஆதாரத்தைப்
பெற்றிருக்கிறது. மக்காவில் அருளப்பட்டது என்று பொதுவாகச் சொல்வதை
விட மக்காவின் நபித்துவ ஆரம்பத்திலேயே அருளப்பட்டது என்றும் குறிப்பிட்டே
சொல்லலாம். வளரும் இன்ஷா அல்லாஹ
Post a Comment
adhirwugal@gmail.com