ஜின்களுக்கு சொர்க்கம் நரகம் மனிதர்களில்
நல்லவர்கள் சொர்க்கத்திற்கும்,
தீயவர்கள்
நரகத்திற்கும்
செல்வார்களோ அது
போலவே ஜின்களிலுள்ள நல்லவர்கள் சுவர்க்கத்திற்கும், அவர்களில் கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். ஜின்களிலும், மனிதர்களிலும்
நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள்
புரிந்து
கொள்வதில்லை.
அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.
அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.
அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (அல்குர்ஆன் : 7:179)
ஜின்கள் அனைவரும்
நரகம் செல்ல மாட்டார்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோர்
நரகத்திற்குச் செல்வார்கள். ஷைத்தான் யார்? மண்ணிலிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன். ஒளியிலிலிருந்து படைக்கப்பட்டவர்கள்
மலக்குகள். நெருப்பிலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் ஜின்கள்.
அப்படியெனில் ஷைத்தான் என்பவன் யார்? இவன் தனிப் படைப்பா? இல்லை. ஷைத்தான் என்பவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் தான்.
நாமெல்லாம் மனித இனத்தைச் சேர்ந்திருந்தாலும் நம்மில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனிப்
பெயர் இருப்பதைப் போன்று, ஜின்களில் ஒரு
குறிப்பிட்ட நபருக்குப் பெயர் தான் இப்லீஸ். இந்த இப்லீஸை மட்டும் அல்லாஹ் வானவர்களுடன்
வைத்திருந்தான். என்ன
காரணத்திற்காக
வானவர்களுடன் இப்லீஸ் வைக்கப்பட்டான் என்பதற்கு தகுந்த எந்த ஆதாரமுமில்லை.
மக்களாக பல்வேறு காரணங்களைச் சொல்லுகின்றனர். அல்லாஹ் எந்த நோக்கத்திற்கு
இப்லீஸை வானவர்களுடன் வைத்திருந்தான் என்பதைச் சொல்லாத காரணத்தினால்
வானவர்களுடன் இப்லீஸ் இருந்தான் என்பதை மட்டும் நம்பினால் போதுமானது. "ஆதமுக்குப்
பணியுங்கள்!'' என்று
வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக
இருந்தான். தனது
இறைவனின் கட்டளையை
மீறினான். என்னையன்றி அவனையும்,
அவனது
சந்ததிகளையும்
பொறுப்பாளர்களாக்கிக்
கொள்கிறீர்களா? அவர்கள்
உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன்: 18:50) மேலும் இந்த
சூராவைக் கூட ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். (மினல் ஜின்னத்தி வன்னாஸ்) (இத்தைகையவர்கள்) ஜின்களிலும்
மனிதர்களிலும்
உள்ளனர்.
(அல்குர்ஆன்: 114:6)
ஷைத்தானுடைய தீங்கிலிலிருந்து பாதுகாப்பு
தேடச் சொன்ன இறைவன்,
ஷைத்தான் இப்லீஸைச்
சேர்ந்தவன் என்று கூறவில்லை. மாறாக ஷைத்தான் என்பவன் ஜின் இனத்தைச்
சேர்ந்தவன் என்று சொல்லுகிறான். இப்படிச் சொல்லுவதிலிலிருந்தே ஷைத்தான் ஜின்
கூட்டத்தில் ஒருவன் தான் என்பது நன்கு தெளிவாகி விட்டது. அப்படியெனில்
ஷைத்தான்கள் யார் என்றால் இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள்
தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம்
உருவான கெட்ட சந்ததிகள் தாம் ஷைத்தான்கள். தேவைக்குத் தகுந்த மாதரி
இப்லீஸ் தனது கெட்ட சந்ததியினராகிய ஷைத்தான்களை உருவாக்கிக் கொண்டேயிருப்பான்.
இதற்கு ஆதாரம் மேற்கூறிய அல்குர்ஆன் 18:50 வது வசனத்திலேயே இருக்கிறது. மீண்டும் நன்றாக கவனித்து
வாசிக்கவும். “ஆதமுக்குப்
பணியுங்கள்!’என்று
வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவருமே பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக
இருந்தான். தனது
இறைவனின் கட்டளையை
மீறினான். என்னையன்றி அவனையும்,
அவனது
சந்ததிகளையும்
பொறுப்பாளர்களாக்கிக்
கொள்கிறீர்களா? அவர்கள்
உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன்: 18:50) மேற்சொன்ன வசனத்தை
நன்றாக கவனித்தால்,
ஜின்களில்
நல்லவர்களும்
கெட்டவர்களும்
இருப்பார்கள். சிந்திப்பவர்களும் சிந்திக்காதவர்களும் இருப்பார்கள்.
ஆனால் ஜின் இனத்திலுள்ள கெட்டவனான இப்லீஸுக்குப் பிறக்கும் சந்ததியினரில்
நல்லவர், கெட்டவர் என்ற
இருசாரார் இருக்க மாட்டார்கள். அவனும் அவனது மொத்த சந்ததியும் கெட்டவர்களாகவே
இருப்பார்கள். அதே நேரத்தில் தனிப் படைப்புகளாகவும் இருக்க மாட்டார்கள். அவனுடைய பாதை
மனிதர்களைக்
கெடுப்பது
மட்டுமே. இப்படித் தான் இறைவன் இப்லீஸையும் அவனது சந்ததியையும் ஆக்கி
வைத்திருக்கிறான் என்று இந்த வசனம் நன்கு விளக்குகிறது. ஷைத்தான்கள்
அனைவருக்குமே நரகம்
மனிதர்களிலும்
ஜின்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பதினால், அவர்களில் அதிகமானோர் சொர்க்கத்திற்கும் குறைவானவர்கள் நரகத்திற்கும்
போவார்கள்.
ஆனால் இப்லீஸும்
இப்லீஸுக்குப் பிறக்கிற சந்ததிகள் அனைவரும் நரகத்திற்கு மட்டும் தான்
போவார்கள். அவர்களுக்கு சொர்க்கமே கிடையாது. வழி
கெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக்
கொண்டிருந்தவை எங்கே?''
அவர்கள்
உங்களுக்கு உதவுவார்களா?
அல்லது தமக்குத்தாமே
உதவிக் கொள்வார்களா?
என்று அவர்களிடம்
கேட்கப்படும்.
அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின்
படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள். (அல்குர்ஆன்: 26:91..95) உமது இறைவன் மீது
சத்தியமாக! அவர்களையும்,
ஷைத்தான்களையும்
ஒன்று திரட்டுவோம்.
பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம். (அல்குர்ஆன்: 19:68) ஜின்களின் குதிரை, காலாட்படை உனது குரல் மூலம்
அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப்
படையையும், காலாட்படையையும்
அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு
வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.)
ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
(அல்குர்ஆன்: 17:64) ஷைத்தான் என்ற
இப்லீஸின் சந்ததிகள் மனிதர்களை வழி கெடுப்பதற்காக அவர்களுக்கு
குதிரைப்படை காலாட்படை இருக்கும் என்று இவ்வசனம் கூறுகிறது. குதிரைப்படை
என்றால் நாம் விளங்கி வைத்திருக்கின்ற குதிரைப் படை என்று பொருள் கொள்ள
முடியாது. ஏனெனில் ஷைத்தான் குதிரைபடையுடன் வந்தால் நாம் ஷைத்தானைப்
பார்க்க முடியாவிட்டாலும் குதிரைகளை பார்க்க வேண்டும். ஷைத்தானைப்
பார்க்க முடியாது ஆனால் குதிரையை நாம் பார்க்க முடியும். நம் கணகளுக்கு அப்படி
எந்தப் படையும் தென்படாததால் குதிரைப்படை என்பதற்கு ஷைத்தானுக்கே உரிய
நம்முடைய கண்களுக்குத் தென்படாத படை என்று பொருள் கொள்வதே
பொருத்தமானதாகும்.
எனவே மலக்கு என்ற
ஒரு படைப்பு இருப்பதைப் போன்று ஜின் என்ற ஒரு படைப்பு உள்ளது என்று
விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் ஷைத்தான் என்ற தனி படைப்பு கிடையாது.
ஜின்னுடைய ஒரு நபர் தான் இப்லீஷ். இப்லீஷின் பிள்ளை குட்டிகள் தான் ஷைத்தான்கள்.
ஆனால் இப்லீசுக்கு பிறந்து விட்டார்கள் என்றால் அவர்கள் கெட்டவர்களாகத்
தான் இருப்பார்கள். இவர்களும் ஜின் வகையில் உள்ளவர்கள் தாம். இவர்களையும்
ஜின் என்று சொல்லலாம். இப்லீசைத் தவிர மற்ற ஜின்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் நல்ல ஜின்களும்
இருப்பார்கள். கெட்ட
ஜின்களும்
இருப்பார்கள்.
எனவே அனைத்து
ஷைத்தான்களும் ஜின்களைச் சார்ந்தவர்கள் என்று சொல்லலாம். ஆனால் அனைத்து
ஜின்களும் ஷைத்தான் என்று சொல்ல முடியாது. ஜின் என்பது பொதுவான வார்த்தை.
ஷைத்தான் என்று குறிப்பான வார்த்தை. ஷைத்தானின் ஊசலாட்டம் ஷைத்தான்கள்
மனிதனின் உள்ளத்தில் பல்வேறு வகையில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகிறார்கள்.
எப்படியெல்லாம்?.. எப்போதெல்லாம்? என்று பார்த்து அதற்குத்
தகுந்தாற்போல தடுப்பு அரண்களை அமைத்துக் கொள்ள வேண்டும். மனித கண்களுக்குப்
புலப்படாமல் கெடுப்பான்
நாம் அவர்களைப்
பார்க்க முடியாது. ஆனால் அவனும் அவனது வகையறாக்களும் நம்மைப் பார்த்துக்
கொண்டேயிருப்பார்கள். நமது முன்னால் இல்லாமலேயே நமது உள்ளத்தில்
புகுந்து நம்மை மனதளவில் எண்ணங்களை மாற்றி தவறான பாதையில் தள்ளி விட்டுவார்கள். ஆதமுடைய மக்களே!
உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன்
குழப்பிவிட
வேண்டாம்.
அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன்
கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும்
உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு
ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7:27)
ஆனால் ஆதம் (அலை) அவர்களுக்கு நேரடியாகவே
ஊசலாட்டத்தை
ஏற்படுத்தினான். அவர் ஒரு நபியாக
இருப்பதினால் நேரடியாக ஊசலாட்டத்தை ஏற்படுத்தலாம். நபிமார்களுக்கு
ஷைத்தானை இறைவன் நேரடியாகக் காட்டுவதற்கு ஆதாரம் இருக்கிறது. அவ்விருவரின்
மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும்
தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள்
என்பதற்காகவோ, நிரந்தரமாக
இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத்
தடைசெய்யவில்லை'' என்று கூறினான்.
"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். (அல்குர்ஆன்: 7:20,21,)
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை
ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான
(வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு
அறிவிக்கட்டுமா? (என்றான்.)
(அல்குர்ஆன்: 20:120)
எனவே ஆதம் நபியவர்களிடம் நேரடியாகவே
ஊசாலட்டத்தை ஏற்படுத்தினான் என்று நம்ப வேண்டும். காரணம் அவர்கள் அல்லாஹ்வின் நபி. ஆனால்
நம்மிடத்தில் (மனிதர்களிடத்தில்)
நமது கண்களுக்குத் தெரியாமலே ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஷைத்தான்
மனிதனுடனேயே இருந்து மனிதனைக் கெடுக்கிறான். மனித மனங்களில் தீய எண்ணத்தைப்
போடுகிறான். மனிதன் அதனைச் செய்து ஷைத்தானுடன் கூட்டாளியாகி விடுகிறான். அதே
நேரத்தில் மனிதனை நல்வழிப்படுத்தும் மலக்கும் ஒரு மனிதனுடனேயே
இருப்பார். அவர் நல்லதைத் தூண்டுவார். அதை அந்த மனிதன் செய்வான். அதனால்
தான் நமக்கு தொழுக வேண்டும் நல்லெண்ணமும் பிறக்கிறது. ஆபாசமான
கூத்தாடிகளின் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற கெட்டெண்ணமும் ஏற்படுகிறது.
இதற்குக் காரணம் நம்முடன் இருக்கும் ஷைத்தானும் மலக்கும் ஆவார்கள். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "ஜின் இனத்தைச்
சேர்ந்த கூட்டாளியொருவன்
(ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை'' என்று கூறினார்கள்.
அப்போது, "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்டனர். அதற்கு
அவர்கள், "என்னுடனும் தான்.
ஆயினும் அல்லாஹ்,
அவனுக்கெதிராக
எனக்கு உதவி செய்து விட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான். ஆகவே, எனக்கு அவன்
நல்லதையே கூறுவான்''
என்று
சொன்னார்கள்.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) நூல்: முஸ்லிலிம் 5421
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலிலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின்
சயீத் அவர்களது
அறிவிப்பில், "ஜின்களிலுள்ள (ஷைத்தான்)
கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல்
உங்களில் எவரும் இல்லை''
என்று
இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள்
ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களைச்
சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது
நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள்.
பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்த போது
அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர்.
அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள்,
"நில்லுங்கள்;
இவர் (என் மனைவி) ஸஃபிய்யா
பின்த் "ஹுயை ஆவார்''
எனக் கூறினார்கள்.
அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்)
"சுப்ஹானல்லாஹ்'
(அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது
நபி (ஸல்)
அவர்கள், "நிச்சயமாக
ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான்
அஞ்சினேன்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:
ஸஃபிய்யா (ரலிலி),
நூல்: புகாரி 2035,2038,2039,3101,3281,6219,7171 முஸ்லிலிம் 4386,4387
மேற்சொன்ன செய்தியை கூர்ந்து கவனித்தால், கடந்து சென்ற
நபித்தோழர்களை
நபியவர்களாகவே
அழைத்து தனது மனைவியின் பெயரைச் சொல்லி எனது மனைவியிடம்தான் பேசுகிறேன் என்று
தெளிவுபடுத்தக் காரணம்,
வெகுநேரம் கழித்து
ஷைத்தான்
அவ்விரு
ஸஹாபாக்களின் எண்ணத்தில் தவறான கற்பனையை விதைத்து நபியைப் பற்றித் தவறாக எண்ண
வைத்துவிடக்கூடாது
என்பதற்காகத்தான்.
வளரும் இன்ஷா
அல்லாஹ்
Post a Comment
adhirwugal@gmail.com