முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவ எழுச்சியின் நவீன முன்னோடி தொடர் -01


எம்.ஏ.ஹபீழ் ஸலபி
அகில உலகிற்கும் ஒரு மைய இடமாக அமையும் விதத்தில் - இதயம் போன்ற பகுதியில் - புவியின் வட அரைப்பகுதியில் அரபுத் தீபகற்பம் அமைந்துள்ளது. இது, இன்றைய உலகில் காணப்படும் பல நாகரிகங்களின் உறைவிடமாகவும் பல இறை வேதங்களின் தாயகமாகவும் பல நபிமார்களின் பிறப்பிடமாகவும் விளங்குகின்றது.

நபிமார்களின் பின்னர், இஸ்லாத்தைப் புனர்நிர்மானம் செய்கின்ற பணியை முன்னெடுத்துச் செல்கின்ற சீர்திருத்தவாதிகள் பலாpன் தோற்றத்திற்கும் காரணமாக அரபுத் தீபகற்பம் விளங்குகின்றது. இத்தனைக்கும் மேலாய் முஸ்லிம் அனைவரும் சிந்தித்து முன்னோக்கும் முதல் இறை இல்லமும் நபியவர்களின் செய்தல் நிலத்தில் கட்டப்பட்ட பள்ளியும் சவுதி அரேபியாவிலேயே உள்ளன. இத்தகைய வரலாற்றுப் பெருமைமிக்க அரபுத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ள ஒரு நாடே ஸஊதி அரேபியாவாகும்.
                இத்தகைய ஒரு சிறப்பிற்குரிய பிரதேசம், அதன் புகழ்மிக்க பாரம்பரியத்தை இழந்து, அடிமைப்பட்டு, கொள்ளையிலிருந்து தூரமாகி, சிற்றரசுகளாகப் பிரிந்து, சிதருண்டு கி.பி 18ம் நூற்றாண்டுகளில் காணப்பட்டது.
சமயப் பாரம்பரியங்கள் மறக்கப்பட்டு, அதற்கு மாற்றமான, இஸ்லாம் அங்கீகரிக்காது, வன்மையாகத் தடுக்கும் நடவடிக்கைகள் மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. சமூக ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு, “தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்என்ற நிலையில் அனைத்து தீமைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் அறிஞர்களும் சமூக சீர்திருத்தவாதிகளும் கொலை அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் ஆட்படுத்தப்பட்டு, சமூகம் மிக விரைவாக அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.
பாமரமக்களின் அறியாமையை, ஆதிக்கசக்திகள் நன்கு பயன்படுத்தி, அதிகார வெறியாட்டங்களை மிகத் தந்திரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தன.
                அரசியல், ஆன்மீக தகிடுதத்தங்கள் புரியப்பட்ட ஒரு காலகட்டமாகவே 18ம் நூற்றாண்டு காணப்பட்டது. இத்தகைய ஒரு காலத்தில் தான் முஹம்மது இப்னு அப்துல் வவர்ஹாப்(ரஹ்) ஜனனிக்கின்றார்கள்.
அரேபியா மட்டுமல்லாது இஸ்லாமிய உலகு முழுவதும் அப்போது, “ஜாஹிலியயத் கோர இருள் சூழ்ந்திருந்தது. அந்தப் பயங்கர இருளை விரட்டியடிக்கும் ஒளி 18ம் நூற்றாண்டில், ஹிஜாஸிலிருந்து தோன்றியது நவீன இஸ்லாமிய எழுச்சியின் முதல் ஒளிக்கீற்று எங்கிருந்து தோன்றியதோ, அந்த இருள் சூழ்ந்த காலத்தை புரிந்து கொண்டால்தான், அன்னாரின் சீர்திருத்தப் பணியைப் புரிந்து கொள்ளலாம்.
 சமய, சமூக நிலைகள்


                சத்திய மார்க்கம் அசத்திய இருளால் சூழப்பட்டிருந்தது. இறுதித்தூதர் புர்நிர்மாணம் செய்த தூய ஏகத்துவக்கொள்ளை சில மௌட்டீகக் கருத்துக்களாகவும் சூபிகளின் ஆழமற்ற கதைகளாகவும் மாறிவிட்டிருந்தது. உயிரோட்டமான சமூகப்பணியாற்றம் பள்ளிகள், உண்மையான தொழுகையாளிகள் இன்றி பள்ளிகள் வெறிச்சோடிப் போயிருந்தன.
 அறிஞர்கள் என்ற போர்வையில், போலிகளை உலவவிடும் போலிகள் நிறைந்தனர். ஒரு கூட்டம் கைகளில் தாயத்துக்கயோடும் தஸ்பிஹ் மணிக்கோர்வைகளுடனும் சுற்றித் திரிந்தனர்.
 க்களுக்கு மத்தியில் அவர்கள் பொய்களையும் அசத்தியங்களையும் பரப்பியதோடு, அவ்லியாக்கள் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதைத் தூண்டினர். ஆடக்கஸ்தலங்களைத் வணங்கஸ்தளங்களாக ஆக்கத் தூண்டினர். அடக்கஸ்தலங்களில் அடக்கப்பட்டிருப்பவர்களிடம் “‘பரகத்பெறுவதை வலியுறுத்தினர். அல்குர்ஆனின் போதனைகளும் சிறப்புக்களும் மக்கள் மனதை விட்டு மறக்கடிக்கப்பட்டு, மார்க்கத்தின் பெயரால் அசத்தியங்களும் கற்பனைக் கதைகளும் பரப்பப்பட்டன. மதுவும் அபினும் ழிகுணங்களும் எங்கும் பரவியிருந்தன. ஏத்தகைய பாவமும் வெட்கமுமின்றி, மானக்கேடான பாவச்செயல்கள் நடந்தன.
                அரபுத் தீபகற்பங்களிலுள்ள நகரங்களுக்கு ஏற்பட்ட அவல நிலை மக்கா, மதீனா நகர்களுக்குப் ஏற்பட்டது. புனித ஹஜ்கடைமை கூட கேலிக்குரியதொரு விடயமாக ஸ்லாமிய நாடுகளில் மாறிப்போயிருந்தது.
ஜூமைலியா என்ற இடத்தில் ஸைத் இப்னு கத்தாப் (ரழி) அவர்களின் அடக்கஸ்தலம் காணப்பட்டது. அதனை மக்கள் வணங்கி வந்தனர். திரஇய்யாவில் ஸஹாபாக்களினது எனக் கருதப்படும் சில அடக்கஸ்தலங்கள் காணப்படன. அவை,  ஷிர்க் வழிபாடுகளுக்கு மத்தியதலமாக அமைந்துகாணப்பட்டன.
                கபீரா என்ற ஊரில் ளிரார் இப்னு அஸ்வர் அவர்களுடைய அடக்கஸ்தலம் காணப்பட்டது. அப்பகுதி பித்அத்துக்கள், ‘ஷிர்க்குகளின் சந்தையாகக் காணப்பட்டதுஎன மஸ்ஊத் நத்வி குறிப்பிடகின்றார்கள்.
                புதா என்றதொரு ஊரில் காணப்பட்ட மரத்தைப் புனிதமரமாகக் கருதி, இளைஞர்களும் பெண்களும் அங்கு நடந்துகொள்ளும் வெட்கக்கேடான நிலைகளை எழுதமுடியாது எனவும் மஸ்ஊத் நத்வி குறிப்பிடுகிறார்.  குழந்தை வேண்டி பெண்கள் அம்மரத்தையே தம் கணவனாக்கிக்கொள்ள முளன்றனர்.
திரஇய்யா என்ற நகருக்கு அருகாமையில் காணப்பட்ட ஒரு குகையில் மிகப்பெரும் பாவச்செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நடந்து வந்தன.
                அஹ்மத் அப்துல் கபூர் அத்தார் அவர்கள் தனது முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்என்ற நூலில் குறிப்பிடும் கீழ்வரும் நிகழ்ச்சி,அப்போதைய சவுதி அரேபியாவின் நிலையைப் படம் பிடித்துக் காட்டப்போதுமானது.
                “1196ஆம் ஆண்டு கசீம்என்றபகுதியின் தலைவர்கள் தமது பகுதியின் அறிஞர்கள் குறித்து, குறிப்பாகச் சீர்திருத்தம் பேசுவார் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனத்தீர்மானித்தனர். அந்தவகையில், ஒவ்வொரு கிராமத்தவரும் தமது பிரதிநிதியாக ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவித்தனர்.
                ஒரு வௌளிக்கிழமையன்று அப்பிரதிநிதிகள் அனைவரும்  கூடி, தம் பிரதேசத்தில் வாழும், தமது நடவடிக்கைகளுக்குத் தடையாக இரக்கும் அறிஞர்களை என்ன செய்வது எனத் தீர்மானித்தனர். நாடுகடத்த வேண்டும், சிறை செய்ய வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும் எனப் பல கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்பட்டன.
இறுதியாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் தம் ஊரிலுள்ள அறிஞர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இம்முடிவை மிகப்பயங்கரமாக ஒவ்வொரு ஊரும் நிறைவேற்றலாயிற்றுகப்ராஎன்ற நகரத்தினர் தமது அறிஞர், மன்சூர் அபுல்கைலை அவர் ஜூம்ஆவுக்குப் போகும் வழியில் கொலை செய்தார்கள்.
                ஜனாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள அறிஞ்ஞர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். கண்பார்வையற்ற ஓர் அறிஞரைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாது, அவரை தலைகீழாகக் கட்டித்தொங்கவும் விட்டனர் இவ்வாறு, ஒவ்வொரு ஊரும் நகரமும் தன் அறிஞர்களைக் கொன்று குவித்தது கொடியவர்கள் இவ்வளவு iதாpயமாக முடிவெடுத்து, எந்த எதிர்ப்பமின்றி, தம் கொடிய செயலை அமுல்படுத்தினார்கள்.
                கி.பி.18ம் நூற்றாண்டுகளில் ஸஊதி அரேபியாவின் நிலை எவ்வளவு மோசமாகிவிட்டிருந்தது என்பதற்கு இதைவிட வேறு ஆதரம் தேவையில்லை.
வரலாறு இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger