அண்மைக்காலமாக என்னைப் பற்றி பல்வேறு அடிப்படையற்ற குற்றச் சாட்டுக்களை
முன்வைத்து சிலர் பிரசாரம் செய்து வருகின்றனா். அவை ஒவ்வொன்றுக்கும் இப்பகுதியில் மறுப்பு
வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் ஸலபிய்யாவில் இலவசமாகப் படித்துவிட்டு அதற்குத் துரோகம்
செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே! அது உண்மையா?
இது ஓர் அப்பட்டமான பொய். இக்குற்றச்சாட்டு தற்போது பரவலாக பேசப்படுகிறது.
தல்கஸ்பிடிய JASM கிளையின் தலைவர் நிஸார் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு எதிராக
வழக்குப் பதிவுசெய்யும் போது, மாவத்தகம பொலீஸிலும் இதே குற்றச்சாட்டை
முன்வைத்தார். (காசுவாங்காம அபுபக்கர் ஸித்திக் படித்துக்
கொடுத்தாராம்.இவர் இயக்கம் மாறிவிட்டாராம் என்று அபுபக்கர் ஸித்திக் மதனி எங்கள்
நிர்வாகத்திடம் சொன்னார் என்று அங்கு கூறினார்.)
ஒரு கல்வி நிறுவனத்தில்
பணம் கட்டிப் படித்தால் அதன் அனைத்துக் கொள்கைக்கும் உடன்படவேண்டும் என்ற எந்த விதியும்
கிடையாது. உதாரணமாக நான் நாஸ்திகக் கொள்கையுள்ள சில பேராசிரியர்களிடம்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்றுள்ளேன்.கற்றுத் தந்த ஆசானுக்கும் கல்வி
நிறுவனத்திற்கும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் இவர்களின் கொள்கைகளையும்
பின்பற்ற வேண்டும்.தவறான கொள்கையுள்ள பலரிடம் கற்றிருப்போம்.அனைவருக்கும் ஜால்ரா
அடிக்க ஆரம்பித்தால் என்னவாகும்.
நன்றி என்றால் என்னவென்று புரிந்து
கொள்ளாதவர்களின் வெற்று வாதங்களை அலட்டிக் கொள்ளத்தேவை இல்லை.
நான் ஸலபிய்யா என்ற கல்வி நிறுவனத்திற்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை.
அன்று குர்ஆனையும் சுன்னாவையும் மட்டும் பின்பற்றவேண்டும் என்று
போதிக்கப்பட்டது.அதே கொள்கையில்தான் நான் இன்றும் உறுதியாக உள்ளேன். நான்
மாறவில்லை.நன்றி மறக்கவும் இல்லை்.
JASM என்ற நிறுவனத்தின் தவறுகள் சிலவற்றை
விமர்சித்துள்ளேன். ஸலபிய்யா வேறு JASM வேறு. இரண்டிற்கும் வித்தியாசம்
தெரியாத சில குறைமதிகள் குழம்பிப் போய் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். அதனால் இதுபற்றி
விரிவாக விளக்குகின்றேன்.
நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் சேர்க்கப்படும் போது, எனது குடும்ப நிலை மிகவும் கஷ்டத்தில்
இருந்தது உண்மைதான். எனது தந்தை அங்கு சிறிய சம்பளத்திற்கு விரிவுரையாளராக இருந்தார்.
அப்போது நாங்கள் பறகஹததனிய சனூன் அதிபரின் வீட்டில் வாடகைக்கு
இருந்தோம். வீட்டு வாடகை 1500. எனது விடுதிக் கட்டணம் 500. மீதி ஆயிரத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடியது. அப்போது திருமண வயதில் எனக்கு இரண்டு சகோதரிகளும்
இருந்தனர். எங்கள் குடும்ப அங்கத்தவர்கள் 6 பேர். இந்த நிலையில் சில மாதங்கள் விடுதிக் கட்டணம் கட்ட முடியாத
சூழ்நிலை ஏற்பட்டதுண்டு.
என்னை செயலா் ஏ.எல்.கலீலுர்ரஹ்மான் விடுதிக் கட்டணம் எடுத்து வருமாறு கல்லூரியை விட்டு பல தடவைகள் அவமானப்படுத்தி விரட்டியுள்ளார். அவரை தனியே
சந்திக்கப் பயம். அதற்கு வேறு காரணங்கள் உண்டு. அப்போதெல்லாம் வீட்டுக்குச் சென்று
அழுவேன். இனி அங்கு செல்ல முடியாது என்று பலதடவைகள் அழுதுள்ளேன். அப்போது எனது தந்தை
என்னை அழைத்து வந்து அடுத்த மாதம் பணம் கட்டுகின்றேன் என்று சொல்லி சேர்த்து விட்டு
செல்வார். சிலபோது பிறரிடம் கடன்பட்டு கட்டுவார். சிலபோது இவ்வாறு அவர் சொல்லிய பின்னரும்
கலீல்ரஹ்மான் அனைவர் முன்னிலையிலும் என்னை எழுப்பி பணம் கட்டு இல்லாவிட்டால் மதுரசாவை
விட்டுட்டுப் போ என்று அவமானப்படுத்தி விரட்டியுள்ளார். அழுதழுது வீடு சென்றுள்ளேன்.
எனது குடும் நிலையை குறிப்பிட்ட போது எனது கை கோடிக்கணக்கான பணத்தை எண்ணிய கை
என்று பெருமையடிப்பார். பொதுப் பணத்தை எண்ணிய இவர் இவ்வாறு பெருமை அடித்தால் தனது சொந்தப் பணத்தை வசதி இருந்து எண்ணி இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள். இவா் மாதிரி போக்குள்ள பலரின் பந்தாக்கள் அனைத்தையும் நான்
சகித்துள்ளேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ் சோதனையை தந்தாலும் சுயமரியாதையை இழக்க வைக்க வில்லை.அல்ஹம்துலில்லாஹ்.
இத்தனைக்கும் எனது தந்தை அங்கு ஒரு விரிவுரையாளர்.
நான் இரண்டாம் ஆண்டிலிருந்து மாணவன் என்ற நிர்பந்த அடிப்படையில் Artisit ஆக இருந்தேன். அப்போது,
எனது விடுதிக் கட்டணத்தை
நான் எழுதும் பெனரில் கழிக்க வேண்டினேன். மாணவனிடம் வாங்கும் வேலைக்கு அதெல்லாம் செய்ய முடியாது என்று காட்டு நீதி பேசி விரட்டுவார்,
கலீலுர்ரஹ்மான்.
அதை எல்லாம் இலகுவில் மறக்கமுடியாது.
அதை எல்லாம் இலகுவில் மறக்கமுடியாது.
அந்த வேளையில் கலீல்ரஹ்மான் JASM முகவரியிட்ட இஸ்லாமிய வங்கி
என்ற ஒன்றை ஆரம்பித்தார். அதில் எனது தந்தையும் ஒர் அங்கத்தவர். எனது சகோதரியின் திருமணத்திற்காக
எனது தந்தையும் அதில் பணம் சேகரித்தார். அதை கலீல்ரஹ்மான் ஒருவரிடம்
தாரை வார்த்தார். இப்படியெல்லாம் செய்துவிட்டு நான் விடுதிக் கட்டணம் கட்டவில்லை என்று
ஊர் ஊராக சொல்லித் திரிந்தார். இப்போதும் தல்கஸ்பிடிய உட்பட பல இடங்களில் சொல்லி வருகின்றனர்.
இவர்கள் எனது கல்விக்கு உண்மையில் உதவி செய்திருந்தால் அதை சொல்லிக்காட்டலாமா? மாணவனுக்கு செய்த உதவியை இஸ்லாமிய ஒழுங்கைப் பேணும் நிர்வாகம் சொல்லிக் காட்டுமா?
இவர்கள் எனது கல்விக்கு உண்மையில் உதவி செய்திருந்தால் அதை சொல்லிக்காட்டலாமா? மாணவனுக்கு செய்த உதவியை இஸ்லாமிய ஒழுங்கைப் பேணும் நிர்வாகம் சொல்லிக் காட்டுமா?
ஒரு வாதத்திற்காக நான் விடுதிக்கட்டணம் கட்டாவிட்டாலும் அதற்கு நான்
பொறுப்பல்ல. அப்போது நான் படிக்கின்ற மாணவன். நானாகப் போய் சேரவும் இல்லை. என்னை சேர்த்தவர் எனது தந்தை. அவர்தான் அதற்கு
பொறுப்பு.
நான் அறிந்தவரை அவர் எல்லாம் மாதமும் பணம் கட்டியுள்ளார். அவ்வாறு இல்லை என்றால் அதை தற்போது என்னிடம் உரிய ஆவணத்துடன் நிர்வாகம் கேட்குமென்றால் அதை நான் செலுத்தத் தயாராக உள்ளேன்.
நான் அறிந்தவரை அவர் எல்லாம் மாதமும் பணம் கட்டியுள்ளார். அவ்வாறு இல்லை என்றால் அதை தற்போது என்னிடம் உரிய ஆவணத்துடன் நிர்வாகம் கேட்குமென்றால் அதை நான் செலுத்தத் தயாராக உள்ளேன்.
இதுவரை ஸலபிய்யாவுக்குரிய சரியான சான்றிதழ்
தயாரிக்கப்படவில்லை.பழைய மாணவர் அமைப்பு உள்ளே செயற்படவோ, நிர்வாக ஒழுங்கமைப்பை
சீர் செய்யவோ இடமளிக்கப்படவில்லை. சுயஇச்சைகளுக்குப் பயன்பட்ட ஜால்ராக்கள் சிலருக்கு எல்லாம்
வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான அநீதி நிலையை நான் மாணவனாக இருந்த போதும் எதிர்த்துள்ளேன்.
இன்றும் எதிர்க்கின்றேன்.
அதேவேளை
நான் 5ம் ஆண்டு படிக்கும்பொழுது கலாபீடத்தைவிட்டு 8 மாதங்கள் விலகிச்சென்றேன். கலீல்ரஹ்மான் மீண்டும்
என்னை அங்கு வந்துவிடுமாறு வீடுவந்து அழைத்தார். நான் ஸலபிய்யாவில் நுழைய முன்னர்
பறகஹதெனிய பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போது தேன்துளிகள் என்று ஓர் புத்தம்
அன்பளித்தார்.அது எனது வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்தது. நான் கற்று வெளியான பின்னர்
என்னை நுாலகத்தில் பணிக்கமர்த்தினார். அப்போது அதிகம் வாசிக்க முடியும் என்று
எண்ணினேன். அப்போதும் ஜம்இய்யா என்னை ஆட்டிஸ்டாகவும் தாயியாகவும் பயன்படுத்தியது.
இவ்வாறு நான் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள்
அனைத்தையும் இனி சொல்லப்போகின்றேன்.
என் கதை தெரியாத சிலர்தான் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர். நான் முள்ளில்
நடந்து வந்த பாதையைப் படிகுக்கும் எந்தத் தேக்கு மனதும் தேம்பும்.
என் பாதங்களுக்கு கீழே பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை முட்களே!
எனினும்
ரத்தம் துடைத்து நடந்து வந்தேன்...
பாலை வனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான் இறங்கி வந்தேன்...
என்று ஒரு கவிஞன் எழுதினான் அது
எனக்கும் பொருந்திப்போகிறது
+ comments + 3 comments
ஸலாம் ஹபீல் நானா உங்களது கவலைகளில் சில எனக்கும் தெரியும். ஆனால் உங்கள் விமரிசன முறைதான் என்னையும் பலரையும் வேதனைப்படுத்துகிறது. குறிப்பாக மானம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மௌனம் காத்திருக்கலாம். நீங்கள் அநியாயமிழைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். தயவு செய்து அதிர்வு இணையத்திலுள்ள பிறர் மானத்தோடு சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீக்கிவிடுங்கள். இது போன்ற கட்டுரைகளை வேறுபெயர்களிலும் எழுத வேண்டாம். கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எனக்குத் தெரியும். தயவு செய்து நீங்கள் அநியாயமாக விமரிசிக்கப்பட்டாலும் பிறரின் கருத்துக்களைத் தவிர வேறெதனையும் விமரிசிக்க வேண்டாம். ஏற்பீர்கள் என நம்புகிறேன் mujahid bin razeen
ஸலாம் முஜாஹித்!
ஹபீழ் நானாவின் கட்டுரைகளில் எவை மானத்தோடு சம்பந்தப்பட்டவை என்று குறிப்பிட்டுக் காட்டியிருந்தால் நல்லது.பொத்தாம் பொதுவாக குறிப்பிடாமல் குறிப்பிட்டு சுட்டிக்காட்டவும்.
mujahidsrilanki
சலாம்! முஜாஹித் அவர்களே, பீஜே அவர்களிடம் போய் பேட்டி கண்டுவிட்டு வந்து பீஜேக்கு அறிவு மட்டும் அமல் இல்லையென்று சொன்னீர்களே!அது அடுத்தவர் மானமில்லையா? கள்ளப் பெயரில் பல செய்திகள் வெளியிட்டீர்களே! அது என்ன மறந்து போய்விட்டதா?
Post a Comment
adhirwugal@gmail.com