நயவஞ்சகன் பேசும் நாணயம்


அன்புள்ள உவைஸ் மவ்லவிக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும்
அண்மையில் உங்களை உங்களால் கட்டப்பட்ட பண்டாரவலைப் பள்ளியில் துறத்திவிட்ட ஆத்திரத்தில் நீங்கள் அங்கு போனில் சகோ.நப்லியிடம் என்னைப் பற்றி உங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்ததை அவர் பதிவு செய்து எனக்கு அனுப்பி பதில் அளிக்க வேண்டினார். அதனால் இந்த மடலை எழுதுகின்றேன்.
நான் பள்ளிக்காக வாங்க முயற்சி எடுத்த (தற்போது 20 இலட்சம்) 28 பேச்சர்ஸ் காணியை நான் சவுதியில் இருந்த போது எனக்குச் சொல்லாமல் திருட்டுத் தனமாக உங்கள் பெயரில் எழுதி வைத்துக்கொண்டு, அது பற்றி நான் ஊர் வந்தபோது கேட்ட வேளை அது எனது பிள்ளைக்குரிய வாரிசுச் சொத்து என்று ஆணவம் பேசிய ரெகோட் என்னிடம் பத்திரமாக உள்ளது. நான் இதுவரை அதை வெளியிடவில்லை. இதை மறைப்பதற்காக ஊர் ஊராய் நீங்கள் எனது மாமிசத்தை சாப்பிட்டு வருகின்றீர்கள். என்னை அவமானப்படுத்த சீடி வெளியிடவும் உதவியுள்ளீர்கள்.
உங்களை கள்ளன் என்று சொன்ன அஜ்மல் அஸ்வர்புரோக்கர் ஆகியோர் எடிட் செய்து வெளியிடும் கிளிப்களை தக்க சந்தர்ப்பத்தில் வெளியிடுவோம் என்று அதில் மிரட்டவும் செய்கின்றீர்கள். தாராளமாக சீடி போடுங்கள். மூஸா நபி பிர்அவ்னிய சூனியக்காரக் கூட்டத்திற்கு சொன்ன அதே பதிலை நானும் சொல்கின்றேன். நீங்கள் முதலில் போடுங்கள். அதன் பின்னர் நானும் போடுகின்றேன்.
என்னோடு சம்பந்தமில்லாத ஒன்றை மட்டும்தான் நீங்கள் காட்டுவீர்கள். நீங்கள் நாடு பூராகவும் தவ்ஹீதுக்கு துரோகம் செய்து கட்டிய 350க்கும் அதிகமான பள்ளிகளின்  போட்டோக்கள் வீடியோக்கள் என்னிடம் உள்ளன.


அது ஒவ்வொன்றிலும் நீங்கள் என்ன திருவிளையாடல் செய்துள்ளீர்கள் என்று நானும் பட்டியல் போடுகின்றேன். அந்த விவகாரங்களுக்கு வருவதற்கு முன்னர் முக்கிய சில விடயங்களை உங்களுக்கு நினைவூட்டுவது நல்லது.
சகோ. நப்லியிடம் உரையாடும் போது, நான் மார்க்கத்திலும் தனிப்பட்ட முறையிலும் தவறுசெய்ததாகச் சொல்கின்றீர்கள்.
நான் உங்களுடன் (2012 ஜனவரி வரை) 15 வருடங்களுக்கு மேலாக நட்புப் பாராட்டியுள்ளேன். அந்த வேளை நான் உங்களுடன் பல பயணங்கள் வந்துள்ளேன். பள்ளி திறப்பு நிகழ்வில் கலந்துள்ளேன். உங்கள் ஊர் மஸ்ஜித் தாரிக்கில் பல வருடங்கள் மாதத்தில் ஒரு ஜும்ஆ செய்துவந்துள்ளேன். கொடுக்கல் வாங்கள் செய்துள்ளேன். நான் உரிய நேரத்திற்கு முன்னர் திருப்பித் தந்துள்ளேன். நீங்கள் அதில் தவறியுள்ளீர்கள். இதன் போதெல்லாம் நீங்கள் என்னிடம் எந்த மார்க்கத் தவறோ தனிப்பட்ட தவறோ எதையும் சுட்டிக் காட்டியதில்லை. ஆனால் நான் உங்கள் திருவிளையாடல்களை சுட்டிக் காட்டியிருக்கின்றேன்.அவை தேவை என்றால் இப்போதும் சுட்டிக்காட்ட முடியும்.
அந்த சகோதரரிடம் வழமைபோன்று உங்களுக்கு நீங்களே முரணாகப் பேசுகின்றீர்கள். SLTJ மாதிரி நாங்கள் மற்றவர் குறை தேடி அலைவதில்லை, பேசுவதில்லை என்கிறீர்கள். (என்னைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டே) குறை சொல்வதில்லை என்று சொல்கின்றீர்கள். அந்த சகோ. இப்போ நீங்கள் குறைதானே பேசுகின்றீர்கள் என்று இடைமறித்த போது, தேவை ஏற்பட்டால் பேசுவோம் என்கிறீர்கள். அதற்கு அந்த SLTJ சகோ. நாங்களும் உங்களை மாதிரி ஏமாற்றுப் பேர்வழிகளை அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாலே பேசுகின்றோம் என்ற போது, வாயடைத்துப் போனீர்கள்.
நீங்கள் உண்மையான நேர்மையான மவ்லவியாக அல்ல மனிதராக இருந்திருந்தால், எனது குறை ஏதும் இருந்தால் என்னிடம் நேரில் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.
பள்ளிக் காணியை நீங்கள் சுருட்டியதை நான் சுட்டிக் காட்டியது உங்களால் பொறுக்க முடியவில்லை. அதனால் நீங்கள் ஒரு நயவஞ்சக நாடகத்தை ஆடுனீர்கள்.அஜ்மல் அஸ்வர் மூலம் அதை அரங்கேற்றினீர்கள்.
அந்த நாடகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் உங்கள் உண்மை (?) முகத்தை அடையாளப்படுத்த வேண்டுமல்லவா?
2011ம் ஆண்டு ரமழானில் நாஸிக் வீட்டில் இரவு ஒரு மணிவரை ஒரு கூட்டம் வைத்தீர்கள். அதில் நீங்கள் அவிழ்த்த பொய்கள் இன்னும் பதிவுகளாக பலரிடம் இன்னும் உள்ளன.
1.      SLTJ வில் சேர்வதாக இருந்தால் தாடியை வழிக்க வேண்டும்.
2.      பாக்கருக்கு எதிராக பீஜே அசிங்கமாகப் போஸ்டர் அடித்தார்.
3.      ஸைபுல்லாஹ், ஹாமித் பக்ரி பிரிந்துவிட்டார்கள்.
4.      SLTJ வுக்குள் எத்தனையோ ஜாதி ஃ பிரிவு உள்ளது.
5.      எனக்கு அபுபக்கர் ஸித்தீக் மதனியை பிடிக்காது. ஆனால் அவரின் இயக்கத்தை நேசிக்கின்றேன்.
6.      மஹிந்த நம்மை வஹாபி என்கின்றான்.அதனால் நாம் கொள்கையை விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இப்படி பொய்யை அடுக்கிக் கொண்டே போனீர்கள் நான் உங்களிடம் இது ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கேட்டேன். இதுவரை தரவில்லை.
SLTJ வில் இணைய தாடி மழிக்க வேண்டும் என்கிறீர்களே! உங்களை IIROவில் இணைத்துவிட்ட சகோ. முயீன் மற்றும் ஹஸன் இருவரும் உங்களைவிட பெரிய தாடி வைத்துள்ளார்களே! இவர்கள் தாடியை வழித்துவிட்டு சேரவில்லையே? இன்னமும் பெரிய தாடிவைத்துள்ளார்களே!
பீஜே அடித்த போஸ்டர் ஐக் காட்டுங்கள் என்ற போது வெட்கிக் தலை குனிந்தீர்களே! அது மறந்துவிட்டதா? எங்களுக்கு மறக்கவில்லை.
பாக்கர் - ஸைபுல்லாஹ் போன்றவர்கள் TNTJ விலிருந்து பிரியவில்லை. IIRO வில் நடந்த மோசடிக்காக இரண்டு பணிப்பாளர்கள் நீக்கப்பட்டார்களே! (அவர்களை யார் சதி செய்து நீக்கினார்கள்?) அதே போன்று இவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று நான் பதில் அளித்த போது உங்கள் பொய் அம்பலமானதே!
SLTJ வுக்குள் எத்தனையோ ஜாதி என்றீர்கள். SLTJ உலமாக்கள் ஒத்த கருத்தில் தான் உள்ளனர். கருத்துவேருபாட்டை அகற்ற நாங்கள் ஆய்வு முறையை வைத்துள்ளோம்.
முன்னாள் உங்கள் பணிப்பாளர் இப்போதுள்ள இம்ரான் கபுரி எல்லாம்; ஒத்த கருத்தில் தான் இருக்கின்றார்களா? ஒருவனுக்குப் பெருநாள் மற்றவனுக்கு நோன்பு.ஒருவனுக்கு கூட்டுதுஆ இன்னொருவன் கூட்டு துஆப் பள்ளி கட்டும் ஏஜண்ட்.
பெருநாள் அன்று நோன்பு நோற்பது ஹராம் என்று உள்ளது. தல்கஸ்பிடியவில் லோகல் பிறை. இங்கு பெருநாள் இல்லாவிட்டால் சவுதிப் பிறைக்கு பெருநாள். மறுநாள் இங்கு பெருநாள் இப்படி டபள் கேம் ஆடும் நீங்கள்தான் நேர்மை வேடமும் போடுகின்றீர்கள்.
உண்மையில் நீங்கள் ஒரு பொய், அவதூறு சொல்லும் மனிதர் என்பது இந்த நிகழ்வுகளிலிருந்து புலனாகிறது.
நேர்மையற்ற நீங்கள் மற்றவர்களின் குறை தேடித்தேடி பரப்பியும் வருகின்றீர்கள். படிப்பறிவற்ற சிலரை பக்கத்தில் வைத்துக்கொண்டு காய்நகர்த்துகின்றீர்கள்.  عدو عاقل خير من صديق جاهل என்ற அறபுப்பழமொழியை மறக்க வேண்டாம். உங்களோடு இருக்கும் பலரின் வண்டவாளங்கள் என்னிடம் உள்ளன.அவர்கள் உள்நாட்டில் வெளிநாட்டில் என்ன செய்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். மற்றவர்களின் மானத்தோடு விளையாடக் கூடாது என்பதால் நான் அமைதியாக இருக்கின்றேன். தெரியாது அதனால் மவ்னமாக இருக்கின்றேன் என்று எண்ணிவிடவேண்டாம். அடுத்தவனின் மனைவிக்கு ஆபாச SMS அனுப்பியவன் முதல் செலப் ஆடவும் ஒழுகவும் பள்ளிகட்டி மோசடி செய்தவன் வரை எனக்கு நன்கு தெரியும். ஹவுஸ்மெட்டை காம வேட்டையாடியவன் முதல் கெரட் மோசடி செய்தவன் வரை எல்லாத் தரவுகளும் பத்திரமாக உள்ளன. தற்போது காடு மூடியுள்ள தேவையற்ற கிணறு  கட்டியவன் முதல் பல்கலைக் கழகம் போகாமலே டிகிரி செடிபிகேட் அடித்து பிழைப்பு நடத்தும் அந்தர் பெல்டி ஆசாமிகள் வரை தெரிந்துதான் வைத்தள்ளேன்.
பள்ளிக்காணி சம்பந்தமாக நீங்கள் சொன்ன ஆணவப்பொய்கள். அம்மம்மா அவற்றை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நான் நம்பிக்கையானவன். இம்தியாஸ் ஹாஜியார் எனது பெயரில் பல சொத்துக்களை எழுதியுள்ளார் என்று பெருமை அடித்தீர்கள். இது பெருமைக்குரிய விடயமன்று. உங்கள மாதிரி ஓர் இழிச்சவாயன் கிடைத்ததற்கு அவர்தான் பெருமைப்பட வேண்டும். பெரிய செல்வந்தர்கள் மிதமிஞ்சிய சொத்து சேகரிப்புக் குற்றத்தை மறைக்க அரசாங்கத்திற்கு துரோகம் செய்வர். தமது வருமானத்தை மறைக்க யாராவது இழிச்ச வாயன் கிடைத்தால் அவர்களின் தலையில் கட்டிவிடுவார்கள். அப்படி இம்தியாசுக்குக் கிடைத்தவர்தான் நீங்கள். என்னிடம் சொன்னமாதிரி மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்பட வேண்டாம் Income Tax ல் போட்டுக்கொடுத்துவிடுவார்கள். அற்ப 50 ஹலலாவுக்கு சவுதி வந்தபோது போன்கடை Salesman னிடம் சண்டைபோட்ட இம்தியாஸ் கோடி சொத்தை உங்கள் பெயரில் சும்மா எழுதுவாரா?அதற்குக் கிடைத் இழிச்சவாயன்தான்  நீங்கள்.???!!!
Income Tax ல் வந்தால் அவர் தப்பிவிடுவார்.மாட்டுவது யார்?
ஸித்தீக் மதனியை நான் முஷ்ரிக் என்று குத்பா செய்ததாக ஒரு புருடாவை விட்டீர்கள். நான் குத்பாவில் எந்த மனிதரையும் பெயர் குறிப்பட்டு விமர்சித்த வரலாறே இல்லை. உங்கள் காணி மோசடியை மறைக்க ஸித்தீக் மதனியை சதீக் ஆக்க போட்ட அருமையான நாடகம் அது.
தல்கஸ்பிடியவில் ஒருவர் தனது மகனை ஸலபிய்யாவில் சேர்க்கக் கேட்டபோது அது சரியில்லாத மதுரசா என்று கூறி அவரது மகனை வேறு மதுரசாவில் சேர்த்தார்.
அர்ஷாதுக்கு பரகஹதெனியவில் அடித்துவிட்டார்கள் அதனால் பள்ளி கட்ட காணி தேடுகிறீர்கள் என்றீர்கள். நான் அந்தக் காரணத்திற்காகக் கேட்கவில்லை. அர்ஷாதுக்கு அடித்தார்கள் என்று சொன்னதும் பச்சப்பொய். இதையும் இதுவரை நீங்கள் நிரூபிக்கவில்லை.இவ்வாறு நடந்ததாக நீங்கள் சொல்வதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் அந்தக் காணி வாங்க முயற்சி எடுக்கப்ட்டது.
எதுன்கஹகொடுவவில் 100 மீட்டரில் பள்ளி கட்டினார்கள் என்று வர்த்தப்படுகின்றீர்கள். அங்கு நான் கட்டவில்லை. மேசன்தான் கட்டினான்.
பண்ணவையில் உள்ள பள்ளியைப் பாருங்கள். ஒட்டிப் பள்ளி கட்டி சம்பாதிக்கும் ஏஜன்டாக இருக்கும் நீங்கள் அதை சுட்டிக் காட்டலாமா,,,,?
அன்புடன்
எம்.ஏ.ஹபீழ்


Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger