இலங்கையில் அரபு நாட்டு ஏஜண்டுகள் பல தமக்குள் பிரிந்து பல கூறாகி மார்க்கத்தை குராபிகளிடம் அடகு வைத்து விட்டு, அவர்கள் ஆரம்பத்தில் எதிர்த்த அத்தனை பித்அத்களையும் வழிகேட்டையும் செய்வதற்கு பள்ளி கட்டி களம் அமைத்துக்
கொடுத்து தடம் புரண்டு கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் தவ்ஹீதைக் காக்க வேண்டும் என்ற அவாவில் இளைஞர் கூட்டம் ஒன்று
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில்
நாடலாவிய ரீதியல்
கிளை பரப்பி சத்திய மர்க்கத்தை அதன் துாய வடிவில் தயவு தாட்சண்யமின்றி பிரசாரம் செய்ய களம் இறங்கியது.
அந்தத் தொடரில் குருநாகல் தல்கஸ்பிடியவில் துாய ஏகத்துவ ஏழுச்சி ஏற்பட்டு மார்க்க
விடயங்களில் இளைஞர்களிடம் ஒரு
தெளிவு பெறப்பட
ஆரம்பித்துள்ளது. அவர்கள் அல்குர்ஆன் அதற்கு முரண்படாத ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மிகத் தெளிவாக கற்கத்துவங்கி, தமது வணக்க
வழிபாட்டைக் கூட
கலப்படமற்ற துாய நபி வழி முறையில் செய்யது வருகின்றனர்.
இந்த சத்தியப் பிரசாரத்தைத் தடுப்பதற்காக அண்மைக் காலமாக அனைத்து வழிகெட்ட
கூட்டங்களும் தமக்குள் நிகழ்த்தி வந்த
போட்டி, பொறாமை, பனிப்போரை மறந்து நம்மை எதிர்க்க ஒன்றிணைந்து அதர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதில்,
அபூபக்கர்
ஸித்தீக் மதனி, அப்துல் வதுாத் ஜிப்ரி, போன்றோரும் அற்ப கிரயத்திற்காய்
அல்லாஹ்வின் மார்க்கத்தை விற்கும் சிலரும் சேர்ந்துள்ளனர்.
இதனால் நாம் இந்தப் போலிகளை விவாதக் களத்தில் சந்தித்து இவர்களின்
பொய்களையும் போலித் தனத்தையும் இவர்கள்
தவ்ஹீதை விட்டுத்
தடம் புரண்டுவிட்ட தடயங்களையும் அம்பலப்படுத்த பகிரங்க விவாத அழைப்பு விடுத்தோம்.
அறைக்குள் அப்பாவி மக்களுக்கு முன்னால் ஆடும் இவர்கள் பகிரங்கமாக விவாதக்
களத்தில் எங்கள் மீது சுமத்தும்
குற்றச்சாட்டை
முன்வைக்க வேண்டும் என்று கேட்டு, நாம் நம்மை எதிர்போருக்கும் அவதுாறு பரப்புவோருக்கும் விவாத அழைப்புவிட்டு வருகின்றோம்.
எமது தஃவாப் பாதையில் தப்லீக் ஜமாஅத் அவர்களது கொள்கையில் நம்பிக்கை வைத்து விவாதிக்க
வந்தது. ஆனால், அரபு நாட்டு ஏஜண்டுகளுக்கு அவா்களின் கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதால்,
எமது தனித்துவ
தஃவா நகர்வால் இவர்களின் அசத்தியக் கோட்டைகள் தகர்ந்து சுக்கு நூறாகி வருவது அரபு நாட்டு ஏஜண்டுகளுக்கும் அவர்களின் ஏஜண்டுகளுக்கும் ஆத்திரத்தை
ஏற்படுத்திவிட்டுள்ளது.
அதனால், தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரமுகர்களையும் தரக்குறைவாக விமர்சினம்
செய்து, பல்வேறு அவதுாறுகளைப் பரப்பி வருகின்றனர். நபி (ஸல்) அவர்களை
மனநோயாளி எனக் கேவலப்படுத்தும்
கட்டுக்கதைகளை
நம்பும் இவர்கள் பெரும் பேடிகள் என்பதை மக்கள் தற்பொழுது புரிய ஆரமபித்தவிட்டார்கள்.
தஃவாக் களத்திலிருந்து ஒதுக்கப்ட்ட அப்துல் வதுாத் போன்றோரையும் தொண்டி விவாதத்தில் மண்டியிட்ட ரிஸ்வான் மதனியையும் இன்னும் சில காசுக்காக
மார்க்க வியாபாரம் நடத்தும் மதனிகளையும்
ஸ்ரீலங்கா தவ்ஹீத்
ஜமாஅத்திற்கு எதிராக இவர்கள் நடாத்தும் அதர்ம யுத்தத்தில் இணைத்துக் கொண்டு அறைக்குள் ஆட அன்ஸார் சுன்னா முஹம்மதிய்யா ஆரம்பித்துள்ளது.
தல்கஸ்பிடியவில் SLTJ
கிளை ஆரம்பிக்கப்பட்டு தஃவா நல்லமுறையில்
முன்னெடுக்கத் தொடங்கிய நாள் முதல்
JASM என்ற நிதி
நிறுவனம் அவர்களது மவ்லவிமார்களை அழைத்து வந்து தல்கஸ்பிடியவில் பல்வேறு அவதூறுகளை பரப்பி PJ
மீதும், SLTJ தாயிகள் மீதும்
பல்வேறு
குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதேபோல் SLTJ
விலிருந்து நீக்கப்பட்டவர்களையும் அழைத்து வந்து
எமக்கு எதிராக அவதூறுகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனவே, நாம் இவர்களின் போலித்தனத்தையும் பொய்களையும் மார்க்க அறியாமையையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்டுத்துவதற்காக கடந்த 2013 February மாதம் 23ம் திகதி விவாத அழைப்பை எழுத்து மூலமாக JASM
வகையறாக்களுக்கு விடுத்தோம். இரண்டு வாரத்திற்குள் பதில்
தருமாறு கேட்டிருந்தோம். அதற்கு
அவர்கள் இதுவரை
பதில் அளிக்க வில்லை.
இதற்கு மட்டுமல்ல இதுவரை இவா்கள் மார்க்கத்திற்காக எந்த விவாதக் களத்தையும் சந்தித்ததில்லை. அவதுாறை அள்ளிக் கொட்டுவார்கள். அதை எங்கள் முன்னால்
சொல்லுங்கள் என்றால் விவாதக் களம்
வரவே மாட்டார்கள்.
எனவே, இவர்களைவிடத் தாழ்ந்த தரத்தில் உள்ள பொய்யர்கள் வேறு யாரும் இலங்கையில்
இருக்கமாட்டார்கள். ஏனெனில், தப்லீக் ஜமாஅத்வாதிகள் கூட விவாதிக்க வந்தனர்.
தன்னைத் தக்லீத் பண்ணுவோருக்கு மத்தியில் மாவீரனாய் வேசம் காட்டும் JASMல் ஊழிய ஊதியம் பெறும் மவ்லவிகள் தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளைக் கண்டு வெருண்டு ஓடுவது ஏன்?
அவர்களின் விவாத
அழைப்புக்கு அஞ்சுவது ஏன்?!
மாற்று மதத்தினரிடம் இருக்கும் மதப் பிடிப்பின் அளவுவில் கடுகின் முனையளவு கூட JASM
க்கும் இவர்களிடம்
கூலிக்கு கூலைக் கும்பிடு போடுவோருக்கும்
அவர்களின் கொள்கையில் உறுதி இல்லை என்பது
தெளிவாகத் தெரிகிறது.
இவர்கள் வாதப்படி நாம் இருப்பது தவறான கொள்கை என்றால் அதைத் துணிவாக எமக்கு
முன்னால் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து விடை
சொல்லி விவாதிக்க முன்வரவேண்டும். அதை
விட்டுவிட்டு
எதிர்க்கேள்வி கேட்கத் தெரியாத அப்பாவி அபலைகளுக்கு முன்னால் நீங்கள் எவ்வளவுதான் ஹீரோ வேசம் போட்டாலும் நீங்கள் (0) ஸீரோதான்.
JASMல் கூலிக்கு மாறடிப்போர் போன்ற, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இன்னும் சிலர்; பதுங்கியிருந்து படம்
எடுக்கப்
பார்க்கின்றனர். இன்னும் சிலர் மதம் பிடித்து மதியிழந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். அறைக்குள் மட்டும்
அடும் இவர்கள் விவாதிக்க வராததாலும்
இவர்களின் போலித்
தனத்தாலும் பொய் அவதுாறுகளாலும் நியாயத்தை சிந்திப்போர் உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, தவ்ஹீத் என்ற போலி வேடமிட்ட புரோகிதர்கள் பல்வேறு சதி வேலைகளைச்
செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் செய்த
எல்லா சதிகளும்
சத்தியத்திற்கு முன்னால் சரணாகதி அடைந்துகொண்டே வருகிறது. அல்ஹம்தலில்லாஹ்.
தல்கஸ்பிடிய JASM
பள்ளியில் அப்துல் வதுாத் ஜிப்ரி SLTJ வை எதிர்த்துப் பேசும் போது BMICH
விவாததத்திற்கு மஹப்பத்தின் அடிப்படையில் அறிஞர் பீஜே
அவர்களை அழைத்து வந்ததாகக்
கூறுகின்றார்.
மறுநாள் ஒருவர் போனில் பேசும் போது BMICH
நடந்த விவாதத்திற்காகத்தான் அழைத்துவந்தேன்
என்கிறார். இவருக்கு விவாதம் செய்யும்
தகுதி
இல்லாதால்தான் அழைத்து வந்தார் என்பது அன்றும் அனைவருக்கும் தெரிந்தது. SLTJவுடன் விவாதிக்க தயங்குவதாலும் தெளிவாகத்
இன்றும் தெரிகிறது.
அதேபோல் பீஜே அவர்கள் அரபு மொழியிலிருக்கும் அல்குர்ஆனை இலங்கை மவ்லவிகளிடம் காட்டாமல் மொழி
பெயர்த்துள்ளார்
என்கிறார். அதே உரையின் நடுப்பகுதியில் பீஜேவிற்கு அரபு தெரியாது என்கிறார். இன்னும் அவருக்கு அரபியில் கடிதம் எழுதத் தெரியாது என்கிறார். மீண்டும் அரபியில் கடிதம்
எழுதினார் என்கிறார். இந்த முரண்பாடு
ஒன்றே இவர் சொன்ன
அனைத்தும் பொய் என்பதை அப்பட்டமாக
அம்பலப்படுத்துகிறதல்லவா? ஒருவன் தனக்குத் தானே முரண்படுவது அவன் பொய்யன் என்பதற்கான முதல் ஆதாரமாகும்.
அவர் அரபு தெரியாமல் எப்படி அல்குர்அனை மொழி பெயர்த்தார்? அரபு தெரியாது என்று அப்துல் வதுாத் தான் சொல்கிறார். அதே உரையில் மீண்டும் அரபியில் கடிதம்
எழுதினார் என்கிறார். அரபு தெரியாது
ஆனால் தெரியும்
என்று தனக்குத் தானே முரண்படும் மூளையற்ற இந்த உளரல்களையாவது நீங்கள் சிந்தித்தால்
உண்மையை
உணர்வீர்கள்!
எனவே, அப்துல் வதுாத் ஜிப்ரி போட்டுள்ள
ஜிப்பாவுக்கு
ஏமாறாமல் உண்மையை நியாயமாக சிந்தித்து உணருமாறு அன்புடன் நாம் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில்,அவரை அழத்து வருவோரும் இந்த
நிலையில்தான்
உள்ளனர் என்பது தெளிவாகிறது. அவரது உரையிலுள்ள உளரல்களையும் முரண்பாட்டையும் சிந்திப்போருக்கு நாம் பதில் சொல்லத் தேவை இல்லை.அவர்கள் தானாகவே உணர்ந்து கொள்வார்கள். சிந்திக்க
மறுப்போருக்கும் சிந்திக்க மூளையை
செலவிடக்
கஞ்சத்தனப்படுவோருக்கும் உண்மை ஒருபோதும் விளங்குவதில்லை.
Post a Comment
adhirwugal@gmail.com