கேள்வி - JASM வுடைய தல்கஸ்பிடிய பள்ளியிலிருந்து இக்வான்களை நீங்கள்தான்
நீக்கியதாக இக்வான்களில் சிலரும்
மெட்கோவிலுள்ள சிலரும் கூறி
வருகின்றனரே? இவ்வாறு நீக்க மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? ஹஸ்ஸான்
பதில்-பள்ளிக்கு வரவேண்டாம் என்று
தடுப்பதற்கோ ஊர் நீக்கம் செய்வதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த நாட்டு சட்டப்படி
யாரையும் ஊர் நீக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு எந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.
பள்ளியை விட்டுத் தடுப்பவனை பெரிய
அநியாயக்காரன் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
وَمَنْ
أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي
خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ
فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (114) [البقرة :
114]
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை.
அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்,
மறுமையில்
கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் 02-114)
பள்ளியிலிருந்து நபியவர்கள் முனாபிக்குகளைக்
கூட நீக்கவில்லை.அதனால் இவ்வாறு அவர்களை நீக்கியது தப்பு என்று அன்றும் சொன்னேன். இன்றும்
சொல்கின்றேன். அதனால் JASM வகையறாக்கள் இக்வான்களை நீக்கியதில் எனக்கு
உடன்பாடு இல்லை. எனினும், இக்வான்களின் கொள்கை தவறு என்பதில் எனக்கு இதுவரை மாற்றுக்
கருத்து இல்லை. அவர்களின் தவறான கொள்கையை நான் விமர்சித்துள்ளேன்.
ரபீக்குர் ரஹ்மான் பள்ளித் தலைவனாக
இருக்கும் போதுதான் இவர்கள் நீக்கப்ட்டார்கள்.மெட்கோ குடும்பத்தை சார்ந்தவர்கள் இக்வானில்
இருக்கின்றார்கள். இவர்களால் அதைத் தட்டிக் கேட்க வக்கில்லாமல் இந்தக் கும்பலோடு எந்தத்
தொடர்பும் அற்ற என்னை இவர்கள் அநியாயமாக குற்றம்
சுமத்துகின்றனர்.
JASM பள்ளியில் நான் நிர்வாகியாகவோ
அங்கத்தவனாகவோ இருந்ததில்லை.எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை.இந்த நிலையில் நான் எவ்வாறு
இவா்களை நீக்க முடியும்? அறிவுள்ள யாரும் நான் நீக்கியதாகச் சொல்லமாட்டார்கள். கடந்த
10 வருடங்களுக்கு மேலாக இவர்களுடன் நான் கொள்கை ரீதியாக உடன்பாடு இல்லாதவனாகவே இருக்கின்றேன்.
மெட்கோ குடும்பத்தில் பலர் மவ்.
உவைஸ்வுடன் நெருக்கமாக உள்ளனர்.சிலர் அவர்களில் சிலரின் மோசடிகளை கல் பிரான்ட் விவகாரங்களைமவ்.
உவைஸ்யிடம் கூறியதாக அவர் அப்போது என்னிடம் கூறியுள்ளார்.
மவ். உவைஸ்வும்
JASM பள்ளி நிர்வாகிகளும் சேர்ந்துதான் நஜ்ரானையும் இக்வான்களையும் அநீக்கினார்கள்.
இதற்கு முன்னர் நிஸார் தலைவராக இருக்கும் போது நஜ்ரானை நீக்கும் அறிக்கையை உவைஸ் மவ்லவிதான்
தயாரித்தார். அனால் அவன் நான் நீக்கியதாக அவன் சொல்லித் திரிகின்றான்.அதை நான் கண்டு
கொள்வதில்லை.
இக்வானியக் கொள்கையோ மார்க்கமோ
தெரியாத சிலர் சில வருடங்களுக்கு முன்னர் இக்வான் இயக்க ஆசிரியர் ஒருவருக்கு அடித்தார்கள்.
அவர் குடித்திருந்தார் என்று பொய் வழக்குப் போட்டார்கள். அன்று சிறுநீர் பரீடசை செய்யுமாறு
இக்வான்கள் வேண்டியிருந்தால் பொய்க் குற்றச்சாட்டுக்காகவும் நீதி மன்ற அவமதிப்பிற்காகவும்
பலர் கம்பி எண்ணியிருப்பார்கள்.
இவற்றை அறியாத இவர்கள் அருண்டவனுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்ற மாதிரி எல்லாவற்றிக்கும் என்னைக் குற்றிம் சாட்டிப் பழகிவிட்டனர்.
பள்ளி நிர்வாகத்திற்குள்ள அதிகாரம்
என்னவென்றால் லைட் போடுவது. லைட்பில் கட்டுவது பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது. கதீப்
முஅத்தின் மார்களுக்கு சம்பளம் வழங்குவது மட்டும்தான். பதவி ஆசைபிடித்து அலையும் அறிவிலிகளுக்கு
தனது அதிகாரம் எந்தளவு என்று கூடத் தெரிவதில்லை.
ஊர் நீக்கம் செய்யவோ பள்ளி நீக்கம்
செய்யவோ பள்ளி நிர்வாகத்திற்கு கடுகளவும் அதிகாரம் இல்லை.
சில கூல்முட்டைகள் அவர்கள் மாதிரியான
மக்களால் பள்ளியில் நிர்வாகியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் ஏதோ நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி மாதிரி நினைத்துக் கொண்டு சர்வாதிகார ஆட்டம் போட ஆரம்பித்துவிடுகின்றனர்.
அது மட்டுமா? இந்தக் கும்பல் எல்லாம் என்னை எதிர்ப்பதில் ஒன்று பட்டும் விடுகின்றனர்
என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
எங்காவது பள்ளி நிர்வாகத்தினால்
ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தண்டப்பணம் கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் யாராவது
இருந்தால் வக்ப் போடில் மனுப் போடுங்கள். இவர்களின் முகத்திரை அப்போது கிழிக்கப்படும்.
தெண்டப் பணமும் மீளக் கிடைக்கும். இதற்கான ஆலோசனை தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
Post a Comment
adhirwugal@gmail.com