அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-16




பீஜே கலந்து கொண்ட மாநாடு:
 பீஜே அவர்கள் அம்மாநாட்டில் மூன்று நாட்களும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்புறையாற்றினார்கள். மூன்றாம் நாள் இறுதி அமர்வில் பைஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில்  பைஅத் என்றால் என்ன? பைஅத் யாரிடம் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? ஒரு சிலர் நம்மைக் கஃபிர் என்று குருட்டுத் தனமாக உளருவதால் நாம் காஃபிராகிவிட மாட்டோம் என்பதை ஆணித்தரமாக அவர் தெளிவுபடுத்திய போது, மக்கள் மயக்கம் தெளிந்து, உண்மையை உணர்ந்தனர். இந்த உரையின் பின்னர்தான் அன்ஸாருஸ் சுன்னா கூட பெருமூச்சுவிட்டது.

பீஜே கலந்து கொண்ட இம்மாநாடு பற்றி உண்மை உதயத்தில் அப்போது எழுதப்பட்டவற்றை இங்கு தருகின்றோம். (இந்திய நாட்டிலிருந்து சிறப்புப் பேச்சாளராக வருகை தந்நதிருந்த அல்ஜன்னத்இஸ்லாமிய கொள்கை விளக்க மாத இதழின் ஆசிரியர், இஸ்லாமிய உலகில் பீஜே என அழைக்கப்படும் மவ்லவி பீ. ஜைனுலாப்தீன் (உலவி) அவர்களின் குத்பாப் பிரசங்கத்துடன் முதன் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாயின. சமூக ஒற்றுமைஎன்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட பேருரையில், முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகளும் குழுக்களும் தோன்றியுள்ளதனால் சமூகம் எவ்வாறு நலிவடைந்து செல்கின்றது என்பதையும் இன்றைய கால காட்டத்தில் வேற்றுமைகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்பதையும் அழகு தமிழில் விபரித்தார்கள். அல்லாஹ்வின் அடியார்கள் இப்பிரசங்கத்தை உன்னிப்பாகக் கவனித்ததை அவதானிக்க முடிந்தது.
முதலாம் நாள் இறுதி அமர்வில்:
அறிஞர் பீஜே அவர்கள், “பித்அத் ஓர் ஆய்வுஎனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் தமது உரையில் பித்அத்துக்கள் தோன்றக் காரணம், அவற்றை மக்கள் நம்புவதனால் ஏற்படும் தீய விளைவுகள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் என்பன பற்றி அல்குர்ஆன், சுன்னா ஆதாரங்களுடன் ஹாஸ்யங்களைக் கலந்து கவர்ச்சிகரமாக விளக்கினார்கள். இச்சொற்பொழிவு அங்கு கூடியிருந்த  அடியார்களின் உள்ளத்தில் சுருக்கெனப் பாய்ந்து பு+ரண தெளிவை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. அங்கு கூடியிருந்த அரபிக் கலாசாலைகளிலிருந்து சமூகமளித்திருந்த மாணவர்கள் இந்த நூற்றாண்டில் இப்படியானதொரு அறிஞர் பெருமகனைக் காண்பதரிது என வாய்விட்டுக் கூறினார்கள். (இந்த உரை, உரை நடையிலேயே நுhலாக்கப்பட்டு, புத்தக வியாபாரியால் வேறு ஒருவரின் பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த உரையும் நுhலும் 18 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை சவுதி ஜாலியாத்களில் வினியோகிக்கப்பட்டுவருகிறது.)
இரண்டாம் நாள்:
 காலை உணவின் பின்னர் அறிஞர் பீஜே அவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஒரு விளக்கம்எனும் தலைப்பில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் எனும் பெயர் யாருக்குரியது? அது எப்பொழுது தோன்றியது? அப்பெயர் தோன்றுவதற்குக் காரணம் என்ன? எனும் கேள்விகளுக்கு வரலாற்று ரீதியாக விளக்கமளித்தார்கள். இன்று இப்பெயரைத் தாங்கிப் பிடித்திருப்பவர்களெல்லாம் ஷியாக்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவர்களாகவே காணப்படுவதற்கான ஆதாரங்களை அவரது உரையின் போது அடுக்கிக் கொண்டே சென்றார்கள். இறுதியாக, அல்குர்ஆனையும், சுன்னாவையும் அதன் தூயவடிவில் விளக்கி அமல் செய்பவர்களே சுன்னத் வல் ஜமாஅத்பெயருக்குத் தகுதியானவர்கள் எனக் கூறித் தமது பிரசங்கத்தை முடித்தார்கள்.
மூன்றாம் நாள்:
பேரறிஞர் அல்ஜன்னத்ஆசிரியர் பி.ஜேஅவர்கள் இன்று இலங்கை முஸ்லிம்கள் சிலர் மத்தியில் தினவெடுத்துள்ள பைஅத்பிரச்சினை பற்றி பைஅத் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டம்என்ற தலைப்பில் உருக்கமான - தெளிவானதொரு உரையை நிகழ்த்தினார்கள். அவர் தமது உரையில் பைஅத் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? பைஅத் யாரிடம் செய்ய வேண்டும்? ஒரு தலைவருக்குரிய பண்புகள் யாவை? என்பன பற்றி உருக்கமாக விளக்கினார். இவ்வுரை, சில இளைஞர்களின் மத்தியில் படர்ந்திருந்த பைஅத்பற்றிய மாயத்திரையை அடியோடு சுருட்டி வீசியதை அவதானிக்க முடிந்தது.)
    நாங்கள் தான் பீஜேவுக்கு இலங்கையில் அறிமுகம் கொடுத்தோம் என்று அன்ஸாருஸ் சுன்னா சார்ந்தவர்கள் அடிக்கடி பெருமை பேசுவதுண்டு. இது மிகப் பெரிய ஆகாசப் புழுகு மூட்டை. ஏனெனில், அந்நஜாத், அல்ஜன்னத் மூலமும், வளகுடா நாடுகளில் தொழில் புரியும் சகோதரர்கள் அங்கிருந்து கொண்டு வரும் பீஜே வுடைய நூல்கள், ஆடியோ-வீடியோ கேஸட்டுகள் ஆகியன மூலமும் பீஜே இலங்கை வருமுன்னரே இலங்கையில் மட்டுமல்ல இஸ்லாமிய உலகிலும் அறிமுகமாகி இருந்தார். அல்ஜன்னத்இஸ்லாமிய கொள்கை விளக்க மாத இதழின் ஆசிரியர், இஸ்லாமிய உலகில் பீஜேஎன அழைக்கப்படும் மவ்லவி பீ. ஜைனுலாப்தீன் (உலவி)…” என்று அவர்களின் பத்திரிகையே கூறியதால் இவர்களின் அறிமுகம் பீஜேவுக்குத்  தேவைப்படவில்லை. முன்னரே இஸ்லாமிய உலகில் அறிமுகமாகி இருந்தார் என்பதை இந்த அதிக பிரசங்கிகள் அறிந்த கொள்ள வேண்டும்.
   அவரது ஆளுமையை இவர்களும் அறிந்திருந்தனர். அதனால்தான்  அவருடன் பல தென்னிந்திய உலமாக்கள் வந்திருந்தபோதும்  இலங்கையில் 50 வருட பழைமைவாய்ந்த பழுத்த - மூத்த உலமாக்கள்பலர் இருந்தபோதும், உமர; அலியின் உளரல்களைத் தோலுரித்துக் காட்டும் பைஅத் ஓர் ஆய்வு என்ற உரையை பீஜேவுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அது உண்மைப்படுத்தப்பட்டது.
இலங்கையில் 1990 களில் உமர் அலிவுடைய பிரச்சினை ஏற்பட்ட போது, அவரது வாதங்களை முறியடிக்க முடியாத ஒட்டாண்டி நிலையில்தான் இங்குள்ள மூத்த உலமாக்கள் இருந்தனர். அப்போது இவர்கள் பைஅத் பற்றிப் பேச பீஜேயைத்தான் நாடினர். அவர் அறிவுப்பு+ர்வமாகவும் பைஅத் பற்றிய வரலாற்றுப் பு+ர்வமாகவும் உரையாற்றி, உமர் அலியின் பக்கம் திரண்ட மக்களை தடுத்து நிறுத்தினார். விவாதமும் செய்து, உமர் அலியை அவர் வாயாலேயே தோல்வியை ஒத்துக்கொள்ளச் செய்தார்.விவாதத்தின் போது, இடைநடுவில் இதற்கு நான் பதில் அளித்தால் மாட்டிக்கொள்வேன் என்று உமர்அலி கூறினாh;. அப்போது,அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இதுதான் பீஜேயின் அறிவுப்பு+ர்வமான தஃவா அணுகுமுறை என்பதை உலகமே அறியும்.
  உமர் அலி அன்ஸாருஸ் சுன்னாவிலிருந்து பிரிந்து போனபோது,  அவர் வைத்த பைஅத் வாதங்களுக்கு பதில் அளிக்கத் தகுதியான எந்த உலமாவும் இலங்கையில் அப்போத இருக்கவில்லை என்று நான் துணிந்து சொல்லுவேன். உமர் அலி  அனைவரையும் காஃபிர் என்று பகிரங்கமாகக் கூறியபோது,  அதை முறியடிக்க யாரும் அவருடன் விவாதிக்க முன் வரவில்லை. பீஜே பைஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றி தெளியவைக்கும் வரை அனைவரும் மயக்கத்திலேயே இருந்தனர்.
வரலாறு இன்னும் வளரும் - இன்ஷா அல்லாஹ்
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger