Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மத ஒப்பீட்டாய்வு. Show all posts

மீலாதும் மவ்லிதும்

 இஸ்லாம்
  என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.  நூல்: அஹ்மத் (16519)
0 comments

மதமற்ற மதம் ஒரு வரலாற்றியல் நோக்கு

எம்.ஏ.ஹபீழ் ஸலபி
              
  ன்றைய நவீன உலகில் அறிவியலும் தொழிநுட்பமும் மாபெரும் வளர்ச்சி பெற்று, மனித வாழ்வில் மிகப் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை, பகுத்தறிவிற்கும் சுதந்திரமான சிந்தனைக்கும். ஆய்வு முயற்சிகளுக்கும். ஆராய்ச்சி வேட்கைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. இதனால், மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து, பகுத்தறிவினடியாய் எழுந்த விஞ்ஞான அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
0 comments

இஸ்லாமும் விஞ்ஞானமும்

எம். ஏ. ஹபீழ் ஸலபி
இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தைப் பெற முன்னால், நாம் விஞ்ஞானம் என்றால் என்ன? அது எத்தனை வகை போன்றவற்றை தெரிந்த பின்னர் இஸ்லாத்தை அனைத்துடனும் ஒப்பிட்டு அதன் உயர் தன்மையை அறிவது மிகவும் பயன்மிக்கதாக இருக்கும்.
விஞ்ஞானம்
பொதுவாக விஞ்ஞானம் என்பது தம்மைப் பற்றியும் தம் சூழலைப் பற்றியும் அறியும் அறிவையே ஆய்வாளர்களால் வரைவிலக்கணம் கடமைப்படுத்தப்படுகிறது. சுமகாலத்தில் விஞ்ஞானம் இருவகையாகப் பிரிந்து நோக்கப்படுகிறது.

1.            நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம்
2.            அனுமான விஞ்ஞானக் கோட்பாடுகள்.

1.விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டவை. இவை இனி ஒருக்காலும் மாற்றமடைய முடியாதவை என ஏற்றுக்கொள்ளப்பட்டவை.
2.   கோட்பாடுகள் என்பவை திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. இவை வெறும் அனுமானங்களேயன்றி உறுதியாக வரையறுத்துச் சொல்லப்பட்டவை அல்ல.
சிலவேளை இவைகள் மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் எதிர்காலத்தில் நிரூபிக்கப்பட்டு விடலாம் அல்லது அடுத்த நிமிடமே ஏற்க முடியாது என புறக்கணிக்கப்பட்டு விடலாம்.
இந்த பூமி உருண்டை என்பது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். இதை விஞ்ஞானிகள் குருட்டுத் தனமாகச் சொல்லாமல் பூமியைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டு அதனை புகைப்படம் பிடித்து வருடக்கணக்கில் ஆய்வாளர்களைப் பயன்படுத்தி உறுதி செய்து திட்டவட்டமாக உருண்டை தான் என்று கூறுகின்றனர்.

இரவும் பகலும் மாறி மாறி வரவேண்டுமானால் நிச்சயம் பூமி சுழல வேண்டும். சுழற்ச்சி ஏற்பட பூமி உருண்டையாக இருக்க வேண்டும் என்ற அறிவார்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு நிரூபிக்கப்பட்ட உண்மை. இது இனி ஒருக்காலும் இவை மாற்றமடைவதில்லை. இந்த நிருபண உண்மைகளோடு  திருமறை மோதுவதுமில்லை. அத்தோடு இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றது.
இந்தப் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? அதன் வயது என்ன? என்பது பற்றிய விஞ்ஞானம், கணித்துக் கூறப்படும் அனுமானக் கோட்பாடாகும்.
முதலில் 'நெபுலா' என்ற மேகத்திரளிலிருந்து ஆரம்பமாக நட்சத்திரங்கள் தோன்றின. அவற்றில் ஒரு நட்சத்திரம் தன் சூரியன் என்றும், பின்னர் அச்சூரியன் திடீரென வெடித்துச் சிதறிய போது அத்துண்டுகள் கோள்களாயின. அக்கோள்களிலிருந்தே துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்று அனுமானித்துக் கூறினார்கள்.
சில காலத்தின் பின்னர் இக்கோட்பாடு போதுமான அறிவியல் ஆதாரமற்ற ஒன்று என மறுதலிக்கப்பட்டது. இதற்குப் பின்னர் கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல, மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் எனவும், அண்டம் எப்போதும் உள்ளது. அதற்கு ஆதி அந்தம் இல்லை எனக் கூறினர்.
இதற்கு இயல் மாறாக கொள்கை கோட்பாடு என அறிவியல் வகுப்பினர் நாமமிட்டழைத்தனர்.
அதன் பின்னர் இது பிழையானது முன்னையதைவிட அறிவியல் முகாந்தர வலுவற்றது என நிராகரித்தும் புறக்கணிக்கப்பட்டது. நவீன யுகத்தில் பெருவெடிப்புக் கொள்கை எனும் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்கள் அனைத்தும் ஏறத்தாழ வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தால் திடீரென வெடித்து சிதறிய அண்டம் ஒரே தூசி மண்டலமாகப் பரவியது.
ஒரே புகைமூட்டமாக இருந்த அந்த தூசுத்துகள்கள், வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறுகச் சிறுகப் பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன் சந்திரன் உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.

;நதப் பெரு வெடிப்புக்கொள்கை நாளை அறிவுலக ஆய்வினடியாய் பொய் எனப் புறக்கணிக்கப்படலாம். அல்லது அதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது சரி என ஏற்கப்படலாம். டார்வின் என்பவரின் கொள்கைப்படி மனிதன் குரங்கிலிருந்து வந்ததாக வாதிட்டார், இந்தக் கடர்புக் கொள்கைக்கு அறிவுசால் ஆதாரம் இதுவரை இன்னும் முன்வைக்கப்படவில்லை. இக்கொள்கை இன்று பலத்த எதிர்ப்பையும் பின்னடைவையும் எதிர்கொண்டுள்ளது.
எனவே, உறுதி செய்யப்பட்டவைகளையும் உறுதிப்படுத்தப்படாத அனுமானக் கோட்பாடுகளையும் பொதுவாக விஞ்ஞானம் என்றே பிரயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அனுமானங்கள் உறுதியற்றவை என்பதை விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். விஞ்ஞானிகள் உறுதியற்றவை என ஒதுக்கி வைத்த ஒன்றை வேதவாக்கு போன்று தூக்கிப் பிடித்துக் கொண்டு அதனடிப்படையில் விவாதம் புரிவதும் தர்க்கிப்பதும். இஸ்லாத்தைத் தூற்ற முனைவதும் பகுத்தறிவு சார்;ந்ததல்ல. இதற்குப் பெயர் பகுத்தறிவு வாதமுமல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்றால் இறைவன் மனித சமுதாயத்திற்கு நல் வழிகாட்டுவதற்காக எந்த திருமறைக் குர்ஆனை வழங்கினானோ அதுவும், அந்த வான்மறையைத் தெளிவுபடுத்துவதற்காக எந்த நபி (ஸல்) அவர்களை அனுப்பினானோ அந்த நபியுடைய வாக்கும் வாழ்வும் தான் இஸ்லாம்.
இஸ்லாம் என்று இயம்புவதால் இது இரண்டைத் தவிர வேறு எதையும் இஸ்லாமாக ஏற்கக்கூடாது. இஸ்லாம் என்றால் இந்த குர்ஆன் சுன்னா இரண்டைத் தவிர வேறு இல்லை. இஸ்லாமிய மார்க்கம் மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும். இந்த உலகில் அவன் எப்படி வாழ்ந்தால் மறுஉலகில் வெற்றிபெற முடியும் என்பதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி.
இஸ்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை சொல்லித்தருவதற்காக விஞ்ஞானத்தின் நவீன நன்மைகளைப் போதிப்பதற்காக அறிவியலின்  அவசியத்தை பறைசாற்றுவதற்காக எந்த ஒன்றும் அருளப்பட்ட மார்க்கமல்ல.
இஸ்லாம் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக அருளப்பட்ட இறுதி இறை மார்க்கமாகும். ஆனாலும் அது வாழ்வுப் போதனை வழங்கும் பூரண வாழ்க்கைத் திட்டமாக இருந்தாலும் கூட அது வழங்கக்கூடிய போதனைகளில் ஆங்காங்கே இன்றைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், பொதிந்திருக்கின்றதை தாராளமாகக் காணலாம்.

நவீன கண்டுபிடிப்புக்கள் எவ்வளவுதான் கண்டுபிடிக்கப்பட்டாலும் திருமறைக் குர்ஆனின் எந்த ஒரு போதனைக்கும் எந்த ஒரு வழிகாட்டல் வார்த்தைக்கும் அது முரண்படவில்லை. இனிவரும் காலக்கண்டுபிடிப்புகளுடன் முரண்படப் போவதில்லை என்பதைச் சொல்லித் தெளிவுபடுத்தவே இத்தலைப்பை நான் இங்கு பயன்படுத்துகின்றேன். இத்தலைப்பின் நோக்கம் இதுதான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் வழங்கிய அந்த அருள் மறையின் போதனைகளிலும் வழிகாட்டலிலும் விஞ்ஞான யுகத்திலே கண்டுபிடிப்புக்கள் உட்பொதிந்துள்ளன.
இன்றைய விஞ்ஞான யுகம் மூக்கில் கை வைத்து ஆச்சர்யப்படத்தக்க அளவு அன்றைக்கே நபி(ஸல்) மூலமாக மிகத் தத்ரூபமாக அல்லாஹ் அறிவித்துவிட்டான். அதை நாம் உள்ளே விட்டுவிட்டு வைத்துள்ளோம். ஆகவே இஸ்லாத்தின் முதல் மூலாதாரமான அல்குர்ஆனின் நிழலில் அறிவியலை ஆய்வுசெய்துள்ளோம்.
ஆகவே, இஸ்லாம் பற்றிய அதிக விளக்கம் தவிர்க்கப்பட்டு இரத்தினச் சுருக்கமாக இங்கு கருத்துத் தரப்பட்டுள்ளது.
இஸ்லாம் ஓர் அறிமுகம்
“இன்று உலகத்தில் இஸ்லாமிய மார்க்கமாக இருந்தாலும் அல்லது ஏனைய மதங்கள், கடசிகள், சங்கங்கள், இயக்கங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் கொள்கைகளை அவற்றைச் சார்ந்த மக்களின் நடவடிக்கைகளை வைத்தே மற்றவர்கள் புரிந்து கொள்ள முனைகின்றனர்.
திருக்குர்ஆனைப் படித்து இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்குரிய வாய்பபு, வசதிகள் இல்லாமையினால் முஸ்லிம்களின் நடவடிக்கைகள், அவர்களது பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கவனித்து இது தான் இஸ்லாம் என முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் புரிந்து கொள்கின்றனர். இது போன்றே முஸ்லிம்களும் ஏனைய மதங்களைப் புரிந்து கொள்கின்றனர். இஸ்லாமும் இம்முறையில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்பது முஸ்லிம்கள் தங்களது வேத நூல் என நமபக்கூடிய புனித குர்ஆனில் கூறப்பட்டவைகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மட்டும்தான்.
இன்றைய உலகில் முஸ்லிம்களில் பெரும்பாலாவனவர்கள் திருக்குர்ஆனுடைய கட்டளைகளை மீறி நடப்பதோடு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது போதனைகளுக்கு முரணாகத் தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்கின்ற, மாற்றுமத சகோதரர்களுக்கு, இஸ்லாத்தைப் பற்றி குர்ஆன் சொல்லும் கருத்துக்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்த விளக்கங்களையும் எடுத்துச் சொல்லி அவற்றை தெளிவுபடுத்துவதற்காக நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இது இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமே.
இரண்டு விதமான மிக முக்கிய நம்பிக்கைகளுக்குப் பெயர் தான் இஸ்லாம்.
1.இஸ்லாத்தின் கடவுள் கொள்கை
    இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு கடவுள் மட்டும் தான் இருக்கிறான் என நம்பிக்கை கொள்வது.
உலகம் பல நாடுகளாக பிரிந்திருந்தாலும், அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து, பக்குவப்படுத்தி, பரிபாலிப்பவன் ஒரே இறைவன் தான் என்பது இவ்விரு நம்பிக்கைகளில் முதலாவதாகும்.
முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்திருக்கிறார்கள்ளூ சொல்லியிருக்கிறார்கள்ளூ நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனவே, 'ஒருவனே தேவன்' என்பது ஒரு புதுக் கொள்கையல்லளூ இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. இருந்தும் இஸ்லாம் கூறும் இக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
ஒரு கடவுள் தான் உண்டு என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடவுளுக்கென்று சில இலக்கணங்களை முன் வைத்து இப்படித் தான் இறைவனை நம்ப வேண்டும் என வரையறுத்து ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம்.
கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்ளூ தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் கடவுளாக முடியாது.
கடவுள் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. மனிதர்கள் கடவுளுக்கு எந்தக் காணிக்கையையும் செலுத்துக்கூடாது. அப்படிச் செய்யும் போது கடவைள பலவீனமானாவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் இருப்பதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான்ளூ நோய் நொடிகளுக்கு ஆளாகிறான்ளூ கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன. ஆனால், கடவுள் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.
'கடவுள் நேற்று இளமைத்துடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது' என்று நாம் கூறினால் நாளை வேறொரு கடவுளைத் தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கு ஏற்படுகின்ற பலவீனங்களுக்கு உட்படாதவனாக கடவுள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
நாளைக்கு திருப்பித் தருவதாக கூறி நாம் ஒருவரிடம் கடன் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சுpல நாட்களுக்குப் பின் அவர் வந்து கேட்டால் தான் அது நம் நினைவுக்கு வரும். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கும் உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?
துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'கடவுளே! என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் கடவுள் தூங்கிக் கொண்டிருந்தால் இவனது அழைப்புக்கு அவனால் எப்படிப் பதில் கொடுக்க முடியும்?
இரவில் தூக்கம் வராத ஒருவன் கடவுயே! எனக் கூக்குரலிடுவான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான். இவைகளைச் செவிமடுப்பவனாக கடவுள் இருக்க வேண்டும். எனவே, தூக்கம், மறதி, மலசலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே கடவுளாக இருக்க முடியும்.
பெண்ளுடன் இறைவன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கைக் கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. கடவுள் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று கடவுளுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்?
சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும், தேவையும் கடவுளுக்கு இருக்கவே கூடாது.
இக்கடவுள் கொள்கையைத் தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையைப் பற்றிய இரு முக்கிய நம்பிக்கைளில் முதலாவதாகும்.
ஒரே கடவைள - அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு, பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்து விடும்?
நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன் வைக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களை நம்பினால், கடவுளுக்கு எந்த இலக்கணமும் தேவை இல்லை என்று நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.
உதாரணமாக, கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நூம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை. நம்மைப் போன்ற ஒருவர் எடுத்துக் கொள்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா?
கடவுளர்கள் பலர் உண்டு என நம்புகின்ற போது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுகிறார்கள். பிரிவுக்கு இது வழிவகுக்கிறது. கடவுள் ஒருவன் தான் என்று சொல்கின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.       அல்குர்ஆன் 04:01
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்ளூ நன்பறிபவன்.  அல்குர்ஆன் 49:13
எல்லா மனிதர்களுக்கும் மூலம் ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடி தான். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து, பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப் போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியைப் படைத்தவனே இறைவன் என இஸ்லாம் இயம்புகிறது.
நம்பிக்கையின் இரண்டவது பிரிவு
மேலே சொன்ன அக்கொள்கையை இறைத்தூதர்கள் என்ற மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திரும் இப்புவியில் பரப்பினார்கள். கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், புரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தான் இக்கொள்கையை முதலில் முன் வைத்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள்ளூ நம்பவும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்கதரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்து விட்டனர். ஓரிறைக் கொள்கையை முன்மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்ளூ உதைக்கப்பட்டார்கள்ளூ நாடு கடத்தப்பட்டார்கள்ளூ பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு, மனித இனத்தை ஒரே கொள்கையின் பால் ஒரே நம்பிக்கையின் பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதர்கள் போராடினார்கள்.
இதில் வேதனை என்னவென்றால் அப்படிப் போராடிய அவர்களையே கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத்தூதர்களாக வந்தவர்களை கடவுளாகவே அம்மக்கள் மாற்றி விட்டனர்.
இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்வேல், நோவா போன்ற இறைத் தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித் தூதர் என் நம்புகின்றனர். ஏனைய தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக முஹம்மத் (ஸல்) அவர்கள் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் தான் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசுபடாமல் இருக்கிறது.
'நான் கடவுளின் தூதன், ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் கடவுள் அல்ல. என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப் போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவருந்துகிறேன்ளூ பருகுகின்றேன்ளூ உறங்குகின்றேன்ளூ குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றேன், அத்தோடு ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்றேன்' என ஓங்கி முழங்கினார்கள்
தமது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்தார்கள்ளூ என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதைக் கொடுமை என்றார்கள். கடவுளுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக் கூடாது என்றார்கள். நான் வரும் போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரிலும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தம்மைக் கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாதுளூ வடிக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.
இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திக்குரியவைகளாக ஆகிவிட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்கவிடப்பட்டு ஊதுபத்தி கொளுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. சித்திரம் உண்டு. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.
மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள், ஏமாற்றாதீர்கள்' என்பது தான் அவர்களது போதனையாக இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது புதல்வர் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதைக் கவனித்த அம்மக்கள் 'இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தம் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக 'இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம். இது கடவுள் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ, அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை' என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.
மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ஆட்டுப் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறி மக்களைச் சுரண்டவில்லை.
நாற்பதாவது வயதில் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்கள். தமது நாற்பதாவது வயது வரை தம்மை இறை தூதர் என நபிகள் நாயகம் பிரகடனப்படுத்தவில்லை. நாற்பதாவது வயதில் தம்மை இறைத் தூதர் எனப் பிரகடனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப்பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள். தம்மை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள்ளூ நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை.
முஸ்லிம்களாகிய நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்போம். எங்களைப் பெற்றெடுத்த தாய், தந்தை, உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாங்கள் மதிப்போம். அதற்காக அவர்களை கடவுள் என்றோ, கடவுளின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம்.
இறுதியில் அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அந்த சாம்ராஜ்யத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்ததென்றால் அவர்களது வாழ்வு எவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள்!
தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிறைய உணவு உண்ட வரலாறே அவர்களுக்குக் கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை. கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். 'கோதுமை கிடைக்காத நாடகளில் பேரீச்சம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழந்து வரலாறு படைத்திருப்பது தான் அவர்களது மிகப் பெரும் சாதனை.
இன்று எந்த ஒரு அரசியல்வாதியானாலும் ஆன்மீகவாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறார்கள். இதன் பெயர் ராஜதந்திரம், அதனை செய்பவர் ராஜதந்திரி, ஏமாற்றுபவருக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இல்லாமல் இந்த உலகில் 'ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்தவருக்கும் போதித்து தானும் வாழ்;ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.
அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டுகளாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது. எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்புகளாகும்.
முஸ்லிமாகிய நாங்கள் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம். எவருக்கும் கும்பிடு போட மாட்டோம். தம்மைப் போன்று மலசலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும்! அல்லது ஆன்மீகவாதியாக  இருக்கட்டும்! ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும்! ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து 'உங்களை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை' எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர், இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர் தான் இஸ்லாம் மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன.
ஆகவே, ஒரே கடவைள நம்ப வேண்டும். அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் புனித குர்ஆனில் சொல்லப்பட்டவைகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும் தான் இஸ்லாம். இவை போக மூன்றாவதான ஒரு நம்பிக்கையும் இஸ்லாத்தில் உண்டு.
3.மறு உலக நம்பிக்கை
இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய நம்பிக்கை. அதாவது என்றாவது ஒரு நாள் இந்த அகிலம் அழிந்து போகும். அதன் பின் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் அனைத்துப் படைப்பினங்களையும் உண்டாக்குவான். ஏற்கனவே ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து உயிரினங்களைப் படைத்த அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிப் படைப்பது அதை விட எளிதானதே. மனிதர்களை விசாரணை செய்து இவ்வுலகில் செய்தவற்றிற்கு நீதி வழங்குவதாகவே அன்றைய தினம் இருக்கும். நற்செயல்களுக்கு வெகுமதிகளும் தீயவற்றிற்கு தண்டனைகளும் வழங்கப்படும். அவ்வெகுமதிகள் என்றென்றும் அழியாத பெரும் பரிசுகளாகும். தண்டனைகளோ மனிதர்களால் தாங்க முடியாத கடுமையான வேதனைகளாகும்.
'இந்த உலகை ஒரு தேர்வுக் கூடமாக இறைவன் ஆக்கித் தந்திருக்கிறான். இங்கு முறையாக வெற்றி பெறவில்லையென்றால் மறு உலகில் இறைவன் தண்டிப்பான்' என இஸ்லாம் சொல்கிறது. இது மிக அடிப்படையான ஒரு நம்பிக்கை.
மேலே சொன்னவற்றில் இந்த உலகம் அழியும் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்தல்ல. ஏனெனில் இந்த அண்டத்தில் காணப்படும் கோள்கள் அனைத்துமே முட்டி மோதக்கூடிய வாய்ப்புகள் உண்டு என விஞ்ஞானமும் சொல்கிறது. சூரியன், சந்திரன் ஏனைய கோள்களுடைய ஈர்ப்புச் சக்திகள் குறைவடைந்து ஒன்றை விட்டு ஒன்று விலக நேர்ந்தால், அல்லது ஒன்றை விட்டு ஒன்று இழுக்க ஆரம்பித்தால் முட்டி மோதி பெரிய அழிவுகள் ஏற்படும்.
எனவே மேற்சொன்ன நம்பிக்கை உள்ள மனிதன் எல்லா விதமான குற்றச் செயல்களிலிருந்தும் தன்னை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உதாரணமாக திருடும் ஒருவன் அரசாங்கத்திற்குத் தெரியாமல் திருட முடியும், மாட்டிக் கொண்டால் கூட அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அக்குற்றத்திலிருந்து தப்பித்து விட முடியும். வருமான வரியை ஏமாற்றி விட முடியும். இன்னும் கொலைக் குற்றத்திலிருந்து கூடத் தப்பிவிடலாம். இவ்வாறு மனிதர்களை தராளமாக ஏமாற்றலாம்.
ஆனால், கடவுள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். அவனிடம் நான் தப்பவே முடியாது என்ற நம்பிக்கை மேலோங்கும் போது திருட்டு, மோசடி, கலப்படம் போன்ற குற்றச் செயலின் மூலம் எவருக்கும் மனிதன் துரோகம் இழைக்க மாட்டான். எந்தத் தீய காரியத்தையும் செய்ய முனைய மாட்டான். இறைவனை ஏமாற்றி குறுக்கு வழியில் அசிங்மாக நடக்க முனைய மாட்டான். அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவா விட்டாலும் காசைத் தூவி காரியம் முடிக்க முடியும். ஆனால் கடவுளிடம் எதைக் கொடுத்தும் தப்ப முடியாது.
இத்தகைய ஆன்மீகச் சிந்தனை மனிதனை ஆட்கொள்ளும் போது மோசடி, திருட்டு, இலஞ்சம், ஊழல், கலப்படம், சுரண்டல் எதுவுமே இருக்காது. அத்தோடு இந்த நம்பிக்கையால் முழு உலகும் பயனடையும்.
இதற்கு மேலும் சில சட்டதிட்டங்கள், உப விதிகள் உண்டு. சுருக்கமாக அவைகளைக் கூறி முடிக்க முடியாது. அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானது. (இது அறிஞர் பீஜே அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் ஆற்றிய துவக்க உரையின் சில பகுதிகள் சிறு மாற்றத்துடன்.) “இன்று உலகத்தில் இஸ்லாமிய மார்க்கமாக இருந்தாலும் அல்லது ஏனைய மதங்கள், கடசிகள், சங்கங்கள், இயக்கங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் கொள்கைகளை அவற்றைச் சார்ந்த மக்களின் நடவடிக்கைகளை வைத்தே மற்றவர்கள் புரிந்து கொள்ள முனைகின்றனர்.

இதற்கு மேலும் சில சட்டதிட்டங்கள், உப விதிகள் உண்டு. சுருக்கமாக அவைகளைக் கூறி முடிக்க முடியாது. அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானது. (இது அறிஞர் பீஜே அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் ஆற்றிய துவக்க உரையின் சில பகுதிகள் சிறு மாற்றத்துடன்.)
0 comments
 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger