தொடர்-1
உலகத்தில் அல்லாஹ்வுக்கு உவப்பான இடம் பள்ளிவாசலாகும்.அதனை நிர்வகிப்பவர்களும் அவனுக்கு உவப்பானவர்களாக இருக்கவேண்டும்.இறை உவப்பைப் பெறவேண்டுமானால் அவன் எதைத் தடுத்துள்ளான் எதை ஏவியுள்ளான் என்ற அறிவு வேண்டும். ஆனால், இன்று எத்தகைய அறிவும் அற்றவர்களிடம் பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டு அல்லாஹ்வின் அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.
எனவே, இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பள்ளியைப் பரிபாலனம் செய்யத் தகுதியானவர்களின் தகைமைகளை அல்குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து தெளிவுபடுத்த முனைகின்றோம்.
எனவே, இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பள்ளியைப் பரிபாலனம் செய்யத் தகுதியானவர்களின் தகைமைகளை அல்குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து தெளிவுபடுத்த முனைகின்றோம்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அத்தவ்பா : 18)
மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் அவனது இல்லங்களை நிர்வகிக்கக் கூடியவர்களிடம் ஐந்து பண்புகள் அவசியம் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடுகின்றான்.
மேற்கூறப்பட்ட ஐந்து பண்புகளும் எவரிடம் ஒருங்கிணைந்து காணப்படுகிறதோ, அவர் மட்டுமே பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் இருக்க அருகதையுடையவர் ஆவார். இப்பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவர் நிர்வாகியாக இருக்க எவ்வகையிலும் தகுதியற்றவராக ஆகிவிடுகிறார். இது, அல்லாஹ்வின் பள்ளியைப் பரிபாலிக்கவும் நிர்வகிக்கவும் அல்லாஹ் விதித்த கட்டளையாகும்.
ஆனால், இன்றைய பள்ளிவாசல்களையும் அதை நிர்வாகிகக் கூடிய நிர்வாகிகளையும் சிறிது ஆராய்ந்து பார்க்கும் போது, மேலே அல்லாஹ் கூறிய கட்டளைக்கு மாற்றமான நிலையைத்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் பார்க்க முடிகிறது.
பள்ளிவாசல்களை நிர்வகிகக் கூடிய பெரும்பாலோரிடம் அல்லாஹ் கூறிய பண்புகளில் ஒரு சிலதாவது இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதிகமானவர்களிடம் இப்பண்புகள் அறவே இல்லாமல் இருப்பது ஒரு பக்கம், மறுபக்கம் அல்லாஹ் விரும்பாத பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் நிர்வாகிகளாக இருக்கின்றனா;. அதற்குக் காரணம் அவர்களின் மார்க்க அறிவின்மையே!
எந்தவிதமான அறிவும் இல்லாமல் பதவி ஆசையும் அதிகார வெறியும் பிடித்து பள்ளியில் நிர்வாகம் செய்யவருகிறார்கள். அதன் பின்னர் நான் நினைத்ததே சட்டம் என்று சன்மார்க்க சட்டங்களைப் புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்டம் போடுகிறார்கள். இதற்கு ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டமும் கிளம்பியுள்ளது.
இதில் பொதுமக்களும் பெரிய தவறை விடுகின்றனர். அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்ற தகுதியுடையவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் என்ன தவறு செய்கின்றார்கள் என்றால் கொஞ்சம் பணம் உள்ளவனைத் தெரிவு செய்கின்றார்கள். அவனிடம் மார்க்க அறிவு இருக்கிறதா? நிர்வாகத் திறமை இருக்கிறதா? அல்குர்ஆன் - சுன்னா பற்றிய தெளிவு இருக்கிறதா? என்றெல்லாம் இன்று மக்கள் பார்ப்பதில்லை. இன்று தவ்ஹீத் என்று விளம்பரப் பலகை தொங்கவிடப்பட்டுள்ள பல பள்ளி நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தவ்ஹீத் என்றால் என்னவென்று தெரியாது.
சில ஊர்;களில் உள்ள பள்ளிகளில் தெரிவு செய்பவர்களுக்கும் அறிவில்லை. தெரிவுசெய்யப்படுபவனுக்கும் அறிவில்லை. அதனால் பள்ளி ரவுடிகளின் ராஜ்யமாக மாறிவிடுகிறது.
இன்னும் சில ஊர;களில் ரவ்டிகள், சிகரட் குடிப்பவர்கள், சிகரட் வியாபாரம் செய்பவர்கள், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டோர், கொள்ளையடித்தோர், அடுத்தவன் வீட்டுக் கூரையைக் கழட்டி உள்ளே குதித்தவன், ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ளோர், அமானித துஷ்பிரயோகம் செய்தோர், மாணவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவன் மற்றும் பாரதுhரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டோh; பள்ளி நிர்வாகத்தில் உள்ளனர்.
இவ்வாறெல்லாம் குராபிகளின் பள்ளிகளில் நடப்பதாக தப்பாக எண்ணிவிடவேண்டாம். இதுவெல்லாம் வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்களின் தவ்ஹீத் (?) பள்ளிகளில் நடப்பவை.
சில வருடங்களுக்கு முன்னர் நான் ஓர் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, பள்ளி நிர்வாகி ஒருவர் கையில் பத்திய சிகரட்டோடு வந்தார். சம்பளத்திற்காக வேலை செய்கின்ற மவ்லவிகள் இந்தத் தீமையைத் தடுப்பதில்லை. தடுத்தால் தொழில் பாதிக்கப்படும். தீமையைத் தடுக்கும் நல்ல மவ்லவிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இத்தீமைகளைத் தடுத்தால் அவரைத் துரத்திவிடுகின்றனர். அல்லது பயானை நிறுத்தி விடுவார்கள். அல்லது அவர் மீது ஏதாவது அவதுhறு கூறி விரட்டி விடுகின்ற கொடுமைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒர் ஊரில் 3 வருடங்களில் கிட்டத்தட்ட 30 மவ்லவிகள் பள்ளிக்கு இமாமாக வந்து போயிருப்பார்கள். அப்படி வந்து போன ஒரு மவ்லவி ஒருவர் என்னிடம் வேதனையுடன் : “ நான் பள்ளியில் இமாமாக இருந்த அந்த பாதித் தவ்ஹீத் உள்ள ஊரில் ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அறிவற்ற பள்ளி தலைமை நிர்வாகி அவர் என்ன பேசினார்? யாராவது ஏதாவது பேசினால் நான் சம்பளத்திற்கு வேலை செய்கின்றேன் என்று சொல்லுமாறு என்னிடம் சொன்னார்” என்று கண்ணீh;மல்கக் கூறினார்.” இப்பொழுது அவர் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.
தனது பொறுப்பு எவ்வளவு பெரிய அமானிதம் என்பதை அறிகின்ற அளவு சிறிதளவு அறிவு உள்ள ஒருவன் இவ்வாறு பேசத் துணிவானா? இத்தகைய அறிவற்ற ரவுடித் தலைவர்கள் பதவி மோகத்தால் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து, நரகம் போவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
“இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.” நூல்: அஹ்மத் (22030)
மறுமை நாள் அடையாளங்களாக இன்றைய பள்ளி நிர்வாகிகள் இருக்கின்றார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக தொப்பியையும் போட்டுக்கொள்கின்றனர். அறிவற்ற பணக்காரன்,கொள்கையற்ற பணக்காரன், படிப்பறிவற்ற சுதேசிகள், நியாயத்தை உணர முடியாத மனசு மாpத்தவன் போன்றவர்கள் தான் இன்று நிர்வாகிகளாக உள்ளர். அதனால், உண்மையான கொள்கை பின்தள்ளப்பட்டு, அசத்திய அராஜகம் கோலோச்சுகிறது. பள்ளிகள் பாழடைகிறது.
இதற்கெல்லாம் காரணமென்ன?
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும் போது, அது வீணடிக்கப்படும். தனது மனோ இச்சைக்கு ஒருவன் கட்டுப்படும் போது, அவன் எல்லாத் துஷ்பிரயோகங்களையும் செய்வான். தனக்கு விருப்பமானவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் அவனுக்கு பயான் பண்ண அனுமதி வழங்கப்படும். விருப்பமில்லாதவர் எவ்வளவு பெரிய கொள்கைவாதியாக இருந்தாலும் அவருக்கு இடம் மறுக்கப்படும். இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது அவரை “மஸ்ஜித் ஜாமிவுத் தவ்ஹீத்” என்று ஸ்டிகர் ஒட்டியுள்ள பள்ளியுள்ள ஓர் ஊhpல் உரையாற்ற விடாமல் திருப்பி அனுப்பினார்கள். இவ்வாறுதான்; இன்று பல பள்ளிகளில் சீர் கெட்ட நிர்வாக முறை நடந்து கொண்டிருக்கிறது.
அதனால், இன்று ஸ்ரீலஹ்கா தவ்ஹீத் ஜமாஅத் கோடி கொடுத்தாலும் மாற்று மேடைகளில் ஏறுவதுமில்லை. தரங்கெட்ட இந்த அமைப்பு சார் மவ்லவிகளுடன் ஒரு மேடையில் ஏறுவதுமில்லை என்று முடிவு எடுத்துவிட்டது. இருளை சகித்துக் கொண்டிருப்பதைவிட விளக்கொன்றை சுயமாக ஏற்றிக் கொள்ள வேண்டும். அதனால், குடிசையாக இருந்தாலும் தனிப்பள்ளியில்தான் தவ்ஹீத் ஜமாஅத் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும்.
இன்று இலங்கையில் தவ்ஹீத் போர்வையில் பல நிதி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் அதிகமானவை தஃவா செய்வதாக ‘சீன்’ காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பள்ளிகளை அதிகமாகக் கட்டிவருகின்றன. ஆனால், அதன் நிர்வாகம் எப்படி உள்ளது? அதன் பரிபாலனம் எந்த நிலையிலுள்ளது என்பது கவலை தரும் அளவுக்குத்தான் உள்ளது என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியுள்ளது.
ஏனெனில், சில பள்ளிகள் இன்று தொழப்பபடாமல் மூடப்பட்ட நிலையிலுள்ளன. தன்னைப் பெரிய நிறுவனமாகப் பறைசாற்றும் ஒரு நிறுவனம் அது அமைந்துள்ள ஊரிலுள்ள பாடசாலையில் கட்டிய மாடிப் பள்ளி மூடப்பட்ட நிலையிலுள்ளது. அதனால், அது குற்றச்செயலின் விடுதியாக மாறியுள்ளதாக அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் கட்டப்பட்ட பள்ளிகள் பரிபாலனமின்றி கட்டாக்காலி ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றின் சரணாலயமாக மாறியுள்ளது.
இன்னொரு நிருவனம் 3 குராபிக் குடும்பமுள்ள ஓர் ஊரில் 1 கோடிக்குப் பள்ளி கட்டுகிறது. கடந்த காலத்தில் அந்தப் பள்ளியில் விரலாட்டி நெஞ்சில் தக்பீர் கட்டித் தொழுத கொள்கைவாதிகள் தாக்கப்பட்டு, ஊர் நீக்கம் செய்யப்பட்டார்கள். இன்னும் அவர்கள் திருந்தவில்லை. எந்த சுன்னாவைத் தடுத்தார்களோ, அதைத் தொடர்ந்து செய்வதற்கும் பித்அத்தை அரங்கேற்றுவதற்கும் கந்துhரி கொடுப்பதற்கும் இந்த இரட்டைவேடப் போலித் தவ்ஹீத்வாதிகள் உதவுகிறார்கள்.துhய்மைத் தவ்ஹீத் வாதிகளுக்கு பள்ளி அமைக்க தடைவிதிப்பார்களாம். மனசு மரித்துப் போன நிறுவனங்களில் உள்ள, சம்பளத்திற்காக குராபிகளுக்குப் பள்ளி கட்டுவோரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பதற்கு இது மிகப் பெரிய ஆதா;ஷணமாக உள்ளது.
இன்னும் சிலர் இன்று சில செல்வந்தர்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் எது சொன்னாலும் செய்வார்களாம். இவ்வாறு அடிமை சாசனம் எழுதப்பட்ட ஒருவர் எனது நண்பருடன் முரண்பட்டுப் பேசிய பதிவு செய்யப்பட்ட ஓர் உரையாடலைக் கேட்டேன். இந்த ஆசாமி 3 குராபிக் குடும்பமுள்ள ஊரில் 1 கோடிப்பள்ளிகட்டுபவர். பத்துக் குடும்பமுள்ள இடத்தில் பள்ளி தேவையில்லையாம். அறிவுள்ள யாரும் அங்கு பள்ளிகட்டமாட்டார்களாம். ஆனால், ஒரு செல்வந்தர் சொன்னால் அதில் 2.2 மில்லியன் பெறுமதியான பள்ளிகட்டுவேன் என்று திமிராகப் பேசுகிறார். இவரது மடமைவாதத்தைப் பாருங்கள், செல்வந்தன் சொன்னால் மூளைவந்திடுமாம் தேவையானோர் சொன்னால் இவருக்கு மூளையற்றுப் போய்விடுமாம்.
ஏன் இந்த அவல நிலை?
சில நிதி நிறுவனங்கள் பள்ளி கட்டுவதை ஏனைய கட்டடம் கட்டுவதைப் போன்று தொழிலாகச் செய்கின்றன. கட்டி முடித்து, கொமிஷன் கிடைத்தவுடன் அந்தப் பக்கமே செல்வதில்லை.இதனால் பல பள்ளிகள் தவ்ஹீத் எதிர்ப்புக் கோட்டைகளாக மாறி உள்ளன. ஒரு நிறுவனம் பெரிதும் சிறிதுமாக 350க்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கட்டியுள்ளது. அதில் 10 வீதமானது கூட தவ்ஹீதுக்கில்லை. அங்கு இவர்களின் போலித் தவ்ஹீதுக்குக் கூட இடமில்லை. அங்கு அனைத்து பித்அத்களும் தாரளமாக அரங்கேற்றப்படுகின்றன. கந்துhரி கூட ஆர்பாட்டமாக நடைபெறுகின்றன. இத்தனைக்கும் மத்தியிலும் போலிப் பிரசாரகர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் சிற்சில பயான்களைச் செய்துகொண்டு நாங்களும் தவ்ஹீத் பிரசாரகர்கள் தான் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சம்பளத்திற்காக நிறுவனங்களில் தாயியாக இருப்போh; சிலர் இக்கொடூரத்தை ஆதரித்துப் பேசியும் வருகின்றனா;.
50 வருடங்களுக்கும் அதிக பழமைவாய்ந்த தவ்ஹீத் பள்ளி உள்ள ஊர் ஒன்றில் 2001ம் ஆண்;டு பழைய பள்ளிக்கு அருகாமையில் புதிய பள்ளி ஒன்று கட்டப்பட்டு, ஒரு வௌ;ளிக் கிழமை திறப்பு விழாவும் பயான் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பள்ளி கட்ட உதவி வழங்கியவர் வந்து நாடா வெட்டி திறக்கும் நிகழ்வும் ஏற்பாடாகியிருந்தது. ஜும்ஆவின் நேரம் கடந்தும் பள்ளிகட்ட உதவியவர் வரவில்லை. அந்த அரபி வரும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவும் இல்லை. மீறி உள்ளே சென்றோர் வெளியேற்றப்பட்ட கொடூரக் கொடுமையும் நடந்தது. அன்றைய ஜம்ஆ நாளின் மகத்துவமே மாய்க்கப்பட்டது. இதை சிலர் கண்டித்தற்காக அவர்களுக்கு அந்தப் பள்ளியில் பயான் கூட இன்றுவரை தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கொடுமையையும் அரங்கேற்றிவிட்டு, அன்றைய பயானில் அறிஞர் பீஜே அவர்களைத் திட்டிவிட்டுச் சென்றார் அந்த நிதி நிறுவனத் தலைவர். இவர்களின் நிலையை அற்ப நலனிற்காக ஒரு கூட்டம் அங்கீகரிக்கிறதே! இந்த ஆராஜகம்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான மார்க்க விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, சுட்டிக்காட்டினால் கொலை மிரட்டல் கூட விடுக்கின்றனர்.அல்லது அவதுhறு பரப்புகின்றனர்.
நபி (ஸல்) கூறினார்கள்: அமானிதம் துஷ்பிரயோகம் நடைபெற்றால் மறுமையை எதிர்பார் என்றார்கள். அப்போது, எது அமானிதத் துஷ்பிரயோகம் என்று ஒருவர; கேட்கும் போது, தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது என்று கூறினார்கள்.
மக்களே! பொறுப்பை ஒப்படைக்கும் போது, சிந்தித்து, தகுதிபார்த்துக் கொடுங்கள். இல்லை என்றால் மறுமையில் நீங்களும் அல்லாஹ்விடம் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.
நிர்வாகிகளின் தவறுகளை விமர்சித்தால், சில இடங்களில் ஊரை விட்டு நீக்குதல், மையவாடியில் அடக்க இடம் தரமாட்டோம் என்று மிரட்டுவது, மொட்டைக் கோல் பண்ணி அச்சுறுத்துவது, கருத்துச் சதந்திரத்திற்கு எதிராக புகார் செய்தல் போன்ற அராஜகங்களை செய்கின்றனர்.
பள்ளி அல்லாஹ்வின் வீடு. அதில் எவர்களிடமோ பணம் பெற்று கட்டியவனுக்கும் தற்காலிகமாக நிர்வகிப்பவனுக்கும் எந்த உரிமையும் இல்லை. அது எவனது அப்பன் வீட்டுச் சொத்துமல்ல. அது அனைவருக்கம் பொதுவான அல்லாஹ்வின் வீடு என்பதை ஏனோ இவர்கள் உணர மறுக்கின்றனர்.
அதேபோல் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் முடிந்தவுடன், மக்கள் இவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விடுவார்கள். அல்லது இவரது தரமற்ற நடவடிக்கையால், தகுதியின்மையால் மற்றவர்கள் அதிருப்திப்பட்டு, எப்படா போவான் என்று திட்ட ஆரம்பித்து, அவமான நிலை ஏற்பட்டு ஒதுங்க வேண்டிய நிலை வரும் போது, பதவியை விட வேண்டி வரும் என்பது கூட விளங்காத அளவு பதவி மோகம் தலைக்கடித்த அறிவிலிகளாக உள்ளனர்.
சிலர் பள்ளியை நிர்வகித்தால் சுவர்க்கம் சென்று விடலாம். நான் தான் பெரியாள், என்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்று மமதை கொள்கின்றனர். ஊரில் பதவி ஆசையற்ற தகுதியான வேறு சிலர் இருப்பார்கள். ஆனால், இவரின் ஆதரவாளர் சிலர் இவரைவிட்டால் வேறு ஆள் யார் உள்ளனர் என்று பிரசாரம் செய்வர். அதனால், தகுதி இல்லாத அவர்கள் எனக்கும் ஆள் உள்ளது என்று பதவி ஆசைக் கனவில் மிதப்பதைக் காண்கின்றோம். இதே கனவைத்தான் மக்காக் காபிர்களும் கண்டு வந்தார்கள்.
(இது), நீங்கள் உடன்படிக்கை செய்த இணை கற்பித்தோரிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக் கொள்ளும் பிரகடனம். (அத்தவ்பா : 01)
அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையை உணர்ந்து பள்ளிவாயில்களை நிர்வகிப்போர் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோல்பட்டையில் அடித்துவிட்டு அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் (3729)
நிர்வாகி பொய், அவதூறு, வாய்ச்சவடால் விட்டுவிட்டு மக்கள் மன்றில் நிரூபிக்க முன்வராமல் ஓடி ஒழிபவர்களாக இருக்கக்கூடாது. தகுதியற்ற தலைவர்கள் அல்லாஹ்விடம் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் வியாபாரம்
இன்று அல்லாஹ்வை வணங்கும் பள்ளிகளில் ஊனு, வட்டிக்கு விளம்பரம் செய்யும் சஞ்சிகைகள் என்பற்றை விற்கின்றார்கள். ஒவ்வொரு இயக்கமும் தாம் சார்ந்த இயக்கத்தின் கொள்கையைப் பிரசாரம் செய்யும் ஊனு, நூல்கள், சஞ்சிகைகள் என்பவற்றை விற்பனை செய்கின்றன. இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி கட்டுவதே கமிசனுக்காக எனும் போது, இந்த நூல்களில் இலாபம் உண்டு. இதை தஃவாவில் சேர்க்க முடியாது.
அதேபோல், இன்று சில சஞ்சிகைகள் மத்ஹபை ஆதரிக்கும், ஷீஆக்களின் ஆதரவு சஞ்சிகை போன்றவற்றை வாங்கிப் படிக்குமாறு ஏவி மார்க்க விரோதப் பணிபுரிகிறது. இதை பள்ளிக்குள் வைத்து விற்பது எவ்வளவு பெரிய பாவமான காரியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் (எதையாவது) விற்பவரையோ, வாங்குபவரையோ நீங்கள் கண்டால் அவரிடம் உமது வியாபாரத்தில் அல்லாஹ் இலாபத்தைத் தராமல் போகட்டும் எனக் கூறுங்கள் எனக் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி)
காணாமல் போன பொருளைக் கூட பள்ளியில் தேடுவதற்காக அறிவிப்புச் செய்யக்கூடாது. “ஒருவர் (காணாமல் போன) தனது சிவப்பு ஒட்டகத்தைப் பிடித்தவர் யார் என்று பள்ளிவாசலுக்கு வந்து அறிவித்தார். அது உமக்குக் கிடைக்காமல் போகட்டும்! நிச்சியமாக பள்ளிவாசல் எதற்காகக் கட்டப்பட்டதோ அதற்காகக்தான் (பயன்படுத்தப்பட வேண்டும் இதுபோல் காணாமல் போனவற்றைத் தேடுவதற்காக அல்ல)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: முஸ்லிம், நஸயீ)
மார்க்கத்திற்கு விரோதமான கொள்கையுடைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றை பள்ளிக்குள் விளம்பரம் செய்யவோ விற்கவோ கூடாது. ஈச்சம் பழத்திற்காகவும் உழ்ஹிய்யாவிற்காகவும் மார்க்கத்தை அடகு வைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடக் கூடாது.
இன்னும் வளரும்
Post a Comment
adhirwugal@gmail.com