சருகைக் கொண்டு தணலை மூடலாமா?



ஒரு தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தடம்புரண்டு கொண்டுள்ள ஓர் அமைப்பு எந்தளவு நயவஞ்சகத்தனமாக உள்ளது என்பதை அவர்களின் உ.உதயத்திலிருந்தும் நுால்களிலிருந்தும் பெறப்பட்ட ஆதாரங்களுடன் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. வழிகெட்ட இக்கும்பலை அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும் என்பதால்  மருதுாரான் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் அழைப்பு 2013 ஆகஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையை சில திருத்தங்களுடன் நமது இணையதளத்தில் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தனக்கு படியளக்கும் அமைபபின் மார்க்க விரோதப் போக்குகளையும் தடம் புரண்ட தடையங்களைப் பற்றியும் கிழிகிழி என்று கிழித்ததில் கிலியெடுத்துப்போன இஸ்மாயில் சலபியார் தற்போது, தான் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்வதாக கூறிக்கொண்டு உளறிக்கொட்டுவதிலும், காழ்ப்புணர்ச்சியை கக்குவதிலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாகவும் ஈடுபட்டு வருகின்றார். அதில் தன்னிலை மறந்து தட்டுத்தடுமாறி தட்டழிந்து குதிகால்வழியே குராபாத்தை நோக்கி வேகமாக கூடாரமடிப்பதை கண்கூடாக கண்டுவருகிறோம்.


தவ்ஹீத் ஜமாஅத்தையும் சகோதரர் பீ.ஜேயையும் நான் கண்ணியமாக விமர்சிக்கிறேன். அவர்களது தவறான கருத்துக்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, காட்டு தர்பார் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன் சூனியம் தொடர்பான தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தை மட்டுமே விமர்சித்து எழுதிவிட்டு கமுக்கமாகிவிட்டார். ஏன் தெரியுமா? “நமது தஃவா வியாபாரம் பீ.ஜேயை வைத்துத்தான் ஓடுகிறது. ஆனால் நீங்களோ பீ.ஜேயை விமர்சிக்கின்றீர்கள். இதுக்கு பிறகும் பீ.ஜேயை விமர்சித்து கட்டுரை எழுதினால் உண்மை உதயத்தை விற்கமாட்டோம்என்று அவர்களது கிளையினரே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததால் உண்மை உதயத்தின் வியாபாரம் படுத்துவிடும் என்றஞ்சி பீ.ஜேவின் பெயர் குறிப்பிட்டு அதை தொடரவில்லை. அதுமட்டுமல்ல! இவரது மேற்படி சூனியம் தொடர்பான விமர்சனத்துக்கு அறிஞர் பீ.ஜே அவர்கள் கொடுத்த சவுக்கடி பதிலிற்கு இதுவரை வாயைக் கூட திறக்கவில்லை.

இந்த லிங்குகளில் அவற்றைப் பார்க்கவும்
 
தற்போது மீண்டும் மறுப்பு சொல்கிறேன் என்ற பெயரில் சார்ளி சாப்ளினை தூக்கி சாப்பிடுமளவுக்கு தமாஷ் செய்து வருகிறார்
இவர் உலக மகா காமடியென் என்று பட்டம் வாங்கும் வரை ஜோக் அடிப்பதை நிறுத்தமாட்டேன் என்னும் வைராக்கியத்தில் இருக்கிறாரா போல் உள்ளது. அந்தளவுக்கு அற்புதமாக ஜோக் அடிக்கிறார். அடித்துவிட்டு போகட்டும்! ஆனால் போகிற போக்கில் படு அயோக்கியத்தனமான வேலைகைளையும் கட்டவிழ்த்துவிடுவதையும் காணமுடிகிறது.

இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்துக்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கும் கூத்திலுள்ள அபத்தத்தை தக்க காலத்தில் நாம் வரிக்கு வரி தோலுரித்து காட்டுவோம். இன்ஷா அல்லாஹ்! ஆனால், இவர் தன்னை ஒரு சாந்த சொரூபி போன்று காட்டிக்கொண்டு செய்யும் தகிடு தத்தங்களையும் அயோக்கியத்தனங்களையும் நேர்மையற்ற முறையில் நடத்தும் காட்டு தர்பாரையும் தோலுரித்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சகோதரர் பீ.ஜே மொழி பெயர்த்த குர்ஆன் தமிழாக்கத்தில் 2:102 ம் வசனத்தில் பிஹிஎன்ற சொல் தவறுதலாக விடுபட்டுவிட்டது. இதை சலபியோ வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டார் என்று குய்யோ முய்யோ என்று தொண்டை கிழியக் கத்திக்கொண்டே இருக்கிறார்.

பிஹி என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்புத் தவறியதற்கு வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்த இக் கும்பல் கிதாபுத் தவ்ஹீத் என்ற பவ்ஸானின் நுாலில் வேண்டுமென்றே நீண்ட வாக்கியத்தையே விட்டுவிட்டு மொழிபெயர்த்துள்ளது. இரண்டாவது பதிப்பிலும் திருத்தவில்லை.
 பிஹி என்ற சிறிய சொல் கவனத்தில் படாமல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஒரு வாக்கியமே நடுவில் உருவி எடுக்கப்படுவது தற்செயலாக நடந்திருக்குமா?

அரபியையும் இவர்களது தமிழாக்கத்தையும் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரி உமிழ்ந்தால் அது கீழே விழாது. யாருடைய கையிலாவது தான் விழும். (அதவாது அந்தச் சளி கீழே விழாமல் ஒவ்வொருவரும் கையை நீட்டி அதைப் பெற முயல்வார்கள்) யார் கையில் அது விழுந்ததோ அதன் மூலம் தமது முகத்திலும் நெஞ்சிலும் அதைத் தடவிக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளுச் செய்தால் அந்தத் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள்.

இவ்வளவு பெரிய வாக்கியம் கவனக் குறைவால் விடுபட்டிருக்க முடியுமா? இந்த இருட்டடிப்பு வேலையை செய்தவர்கள் ஒரு சிறிய சொல் பிஹி கவனக் குறைவாக விடுபட்டதைப் பற்றி சொல்வதற்கு வெட்கமில்லையா?


சகோதரர் பீ.ஜேயும் அதை திருத்தி அந்த சொல்லையும் சேர்த்து அடுத்தடுத்த பதிப்புகளில் தமிழாக்கம் செய்து வந்தார் இப்போது 12ம் பதிப்பு வரை வந்துவிட்டது. பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.09வது பதிப்பின் வனசத்தைப் பார்க்கவும்.

ஒரு தவறை திருத்திய பின் அதை மீண்டும் திருத்தவில்லை என்று பொய் அவதுாறு சொல்வது ஒரு நேர்மையான மனிதனுக்கு அழகல்ல! அது சில யூத ஈனப்பிறவிகளின் நிலை.அந்த நிலையில்தான் இவர் உள்ளார் என்பதை தக்க ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.

2013 செப்டெம்பர் உ.உதயத்தில் இவ்வாறு புலம்புகிறார். 


ஒரு முஃமின் செய்யக்கூடாத வேலையை செய்து கையும் களவுமாக பிடிபட்டு தர்ம அடி வாங்கியதால் தஃவா களத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு வெளிநாட்டில் வனவாசம் புரிந்துவிட்டு தற்போது மீண்டும் இங்கு வந்து சீன் போடும் அண்டப்புழுகன் அப்துல் வதூத் ஜிப்ரி என்பவர் ஒரு நிகழ்ச்சியில் பீ.ஜேயின் தமிழாக்கத்தை தூக்கிக் காட்டி இது முதலாவது பதிப்பு! இது பத்தாவது பதிப்பு! இதில் எதிலுமே பிஹிக்கு மொழிபெயர்க்கவில்லைஎன்று பச்சையாகப் புழுகுவார். ஆனால் 10வது பதிப்பில் பிஹிக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த குருவின் வழியில் வந்த இஸ்மாயில் சலபியும் தனது ஈனப்புத்தியை காட்டும் வண்ணம் அதே வாந்தியை கக்கியுள்ளார்.

ஆனால் சொல்லிக் காட்டியும் தவறை திருத்தாத, திருத்த துணிவற்ற ஜடங்கள் இவர்கள்தான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

இவர்களது அமைப்பில் அங்கம் வகிப்போர் மொழிபெயர்த்து அதற்கு இவரது முதீர் அபூபக்கர் சித்தீக் மதனீயும் பங்களிப்பு செய்தார் என்று  முன்னுரையில் குறிப்பிடப்பட்டு சவூதி அரசினால் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில் ஒரு மாபெரும் தவறை விட்டிருந்தனர்.அதாவது அத்வைத கொள்கையை பிரதிபலிக்கும் தவறு.





ஆகவே, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள் (26:16)

இரட்சகனாகிய தூதர் என்றால் இறைவன் என்று அர்த்தம். இறைத்தூதர்களை இறைவனாக்கி மாபெரும் குப்ரான தமிழாக்கத்தை செய்திருக்கிறார்கள். அதற்கு எந்தத் தவறுமில்லாத மொழிபெயர்ப்பு என்று வேறு குப்ரான முன்னுரை வழங்கி அரபி விசுவாசத்தை அப்படியே கொட்டியிருக்கிறீர்களே என்று சுட்டிக்காட்டிய பின்னும் இதுவரை திருத்த திராணியில்லாமல் இருக்கிறார்கள். 

 இப்படிப்பட்ட கயவர்கள்தான் திருத்தப்பட்ட தவறை குத்திக்காட்டுகிறார்கள் என்றால் இவர்கள் எந்தளவுக்கு கயமைத்தனத்தில் ஊறித்திழைத்தவர்கள்! வக்கிரபுத்தி நிறைந்தவர்கள்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



 அடுத்து மேற்படியார் அடிக்கும் தமாஷ்களில் மற்றொன்றுதான் திருத்திய நிலையை சொல்ல வேண்டும் என்பது. 
இவர் சூனியத்தைப் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான (?) நிலையை விளக்குகிறேன் பேர்வழி என்று ஊருக்கூர் சென்று விளக்கக் கூட்டம், கேள்வி பதில் என்று தங்களது பக்தர்களிடம் சென்று படம் காட்டி ஏமாந்தவர்களின் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துவிட்டு வருவதை பார்க்கிறோம். யாராவது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அங்கு வந்து கேள்வி கேட்டால் அதன் பின் அந்தப்பக்கமும் தலைவைத்துப் படுக்காதளவுக்கு ஒரு மாபெரும் கொள்கைக் குன்றாக (?) காட்சியளித்துவருகிறார்.

அவர் பல இடங்களில் பின்வருமாறு உளறி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பீ.ஜே இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் என்ற ஒரு புத்தகம் எழுதினாராம். அதில் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது என்று எழுதினாராம். சில வருடங்கள் கழித்து அதே தலைப்பில் உள்ள புத்தகத்தை எடுத்து படித்துப் பார்த்தால் நபிகளாருக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று இருக்கிறதாம். ஒரே புத்தகம்; ஒரே ஆசிரியர்;; எப்படி இரு கருத்துகள் வரலாம்? தான் முந்தைய நிலையை அதாவது நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற எனது கருத்தை வாபஸ் வாங்குகிறேன் என்று டிக்லேர் (?) செய்து எழுதவில்லை! இது மோசடி! அநியாயம்! அயோக்கியத்தனம்!என்று உலகமே வியக்கும் உன்னத தத்துவத்தை உதிர்த்தததைப்போன்று எல்லா இடத்திலும் அடித்துவிடுகிறார். அதை அறிவை அடகு வைத்த இவரது பக்த கோடிகளும் தூக்கிவைத்து ஆடுகின்றனர்.

சலபியார் போர போக்கில் இந்த கேள்வியை இன்னும் சில காலங்களில் அல்லாஹ்விடமும் கேட்பார் போலுள்ளது.

அல்லாஹ் ஒரு காலத்தில் மதுவை ஆகுமாக்கியிருந்தான். பின்னர் அதை தடை செய்தான்! இதே அறிவுக்கொழுந்து இஸ்மாயில் சலபி அதே பாணியில் ஒரே புத்தகம்! ஒரே அல்லாஹ்! அது எப்படி இரு கருத்து?” என்று கேட்பாரா? “நான் மதுவை ஆகுமாக்கிய எனது முன்னைய சட்டத்தை இப்போது மாற்றிக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வுக்கே பாடம் கற்பித்துக்கொடுப்பாரா?”

அல்லாஹ் ஆரம்பத்தில் மனதால் நினைக்கும் தவறும் பாவம் என்று சொல்லியிருந்தான் பின்னர் மனதால் நினைக்கும் தவறு பாவமில்லை! அதை செய்தால் மட்டுமே பாவம் என்று சொன்னான். இப்போது நமது அறிவுக்கொழுந்து ஒரே புத்தகம்! ஒரே அல்லாஹ்! அது எப்படி இரு கருத்து?” என்று கேட்பாரா? “நான் மனதால் நினைப்பதும் பாவம் என்ற எனது சட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று அல்லாஹ் டிக்லேர் (?) செய்ய வேண்டும்என்று அல்லாஹ்வுக்கே பாடம் கற்பித்துக் கொடுப்பாரா?

இப்படி இன்னும் சில விடயங்களை அல்லாஹ் சொல்லியிருக்கிறான். அதை நாஸிஹ்-மன்சூஹ்என்பார்கள். அவை அத்தனைத்துக்கும் இப்படி கேட்க முடியும். சலபி கேட்பாரா?

ஒரு கருத்தை சொல்லிவிட்டு பின்னர் மறு ஆய்வின் போது அந்த கருத்த தவறு என்று தெரிந்தால் அதை மாற்றி சரியான கருத்தை சொல்லும் போது இது எனது பழைய கருத்து! இப்போது மாற்றிவிட்டேன் என்று அனைத்து இடங்களிலும் சொல்லியே ஆக வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. அதை காலம் உணர்த்திவிடும். அது மட்டுமல்லாமல் நமது நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் போது ஆங்காங்கே பொத்தாம் பொதுவாகவும், குறிப்பாகவும் இது சொல்லப்பட்டே இருக்கிறது! இதையெல்லாம் தெரிந்து கொண்டு தெரியாமல் கபட நாடகம் ஆடிக்கொண்டு அந்த புத்தகத்தில் இருக்கிறதா ? என்று அரைவேக்காட்டுத்தனமாக கேட்டுவிட்டு தான் எவ்வளவு பெரிய அதி புத்திசாலி என்று கொலரை இழுத்துவிட்டால் அது உண்மையாகிவிடாது.

மேலே இவர்கள் சல்லியடிப்பதற்காக மொழிபெயர்த்த தமிழாக்கத்திலுள்ள குப்ரான மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டினோம். இவர்கள் இதை தவறு என்று அதே தர்ஜமாவில் எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இல்லையென்றால் இவர்களும் அயோக்கியர்கள் என்பதை ஒத்துக்கொள்வார்களா?

இது தவறு என்று உ. உதயத்தில் ஒரு கட்டிங் போட்டார்களாம். அதனால் திருத்திவிட்டார்களாம். சூனியம் தொடர்பான நமது பழைய நிலை தவறு என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறோம். அதை தவறு என்று அதை ஆதரிக்கும் சலபிக்கு சம்மட்டியடி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும் போது அதை அதே புத்தகத்தில் டிக்லேர் (?) பண்ண வேண்டும் என்று உளறுபவர் தமிழாக்கத்தில் செய்த கொடிய தவறை உடனே திருத்த திராணியில்லாமல் அப்படி திருத்தினால் இவ்வளவு பெரிய கூழ்முட்டைகளையா நாம் அறிஞர் குழாம் லிஸ்டில் வைத்தோம் என்று அரபிகள் உஷராகிவிடுவார்கள் என்ற பீதியில் உண்மை உதயத்தில் திருத்திவிட்டோம் என்று சொல்வதை எப்படி நியாயம் என்று அவரால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது?
நாங்கள் முன்னர் மொழி பெயர்க்கப் பங்களித்த தர்ஜமா தவறானது.அதனால் 6 பேர் சோ்ந்து (மதனிகள்??!!) தற்போது கூலிக்கு  மொழிபெயர்த்துள்ளோம் என்று சொன்னீர்களா?

அதுமட்டுமல்ல! சூனியம் என்றால் அது ஒரு மெஜிக்! என்று பீ.ஜே சொல்வதை பல இடங்களில் கிண்டலடித்திருக்கறார். சூனியம் என்றால் மெஜிக்கா? மெஜிக்கைத்தான் அல்லாஹ் பெரும்பாவம் என்கிறானா? என்றெல்லாம் கிண்டலடித்திருக்கிறார்.

ஆனால் இவர்கள் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் எனும் புத்தகத்தின் தமிழாக்கத்தில் சூனியத்தை (மெஜிக்) மாயாஜாலம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

ஒரு விடயத்தை ஒரு சாரார் செய்யும் பொது பிழையாகவும் அதையே தனது சாரார் செய்யும் போது சரியாகவும் எடுத்துக்கொள்வது பாரபட்சப் பார்வை! மனநோயின் அறிகுறி! இவர் நல்ல மனநல மருத்துவரை அணுகுவது அனைவருக்கும் நல்லது. இந்த பாரபட்டசப் பார்வை பார்த்து விமர்சிப்பது யூதர்களின் வழிமுறை! அதைத்தான் இப்போது இஸமாயில் சலபி பீ.ஜே மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் செய்து கொண்டிருக்கிறார்.

இவர்கள் பீ.ஜேயையும் அவரது கருத்துக்களையும் விமர்சிப்பது மார்க்க விடயத்தில் தவறு இழைக்கிறார்கள் என்பதால் அல்ல! மாறாக இவர்களது சுய ரூபத்தை அறிந்து கொண்ட பீ.ஜே இவர்களை வெறுத்தொதுக்கியதுடன் இவர்களை அம்பலபப்டுத்தியதுதான்.

பீ.ஜே ஹதீஸ்களை மறுக்கிறார்! அதனால் எதிர்க்கிறோம் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல!

சூனியம் என்பது வித்தை! நபிகளாருக்கு செய்யப்படவில்லை என்று சொன்னது, சாலிம் (ரலி) அவர்கள் பால்குடித்ததாக வரும் செய்தி பொய்யானது என்று சொன்னது 2000 ஆம் ஆண்டில். இவர்கள் 2001 ம் ஆண்டில் நடந்த மாநாட்டுக்கு பீ.ஜேயை சிறப்பு உரையாற்ற அழைத்து வந்து கை கொடுத்து கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். அப்போது இவர்களுக்கு பீ.ஜே வழிகெட்டவராக, முஃதஸிலாவாக தெரியவில்லை!



2005 ம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது JASM இன் வண்டவாளங்களை தோலுரித்து காட்டினார். ஆஹா…! அடிமடியில் கை வைத்துவிட்டாரே என்ற கோபக் கொப்பளிப்பில் கொதித்தெழுந்தவர்கள்தான் இன்றுவரை பீ.ஜே வழிகெட்ட கருத்தை சொல்வதால் அவரை எதிர்க்கிறோம் என்று வீராவேச(ஷ)ம் போடுகிறார்கள்.

இவர்களுக்கு கொண்ட கொள்கையை விட அடிக்கும் கொமிசனைப் பேசினால்தான் கோபம் வரும். அந்தளவுக்கு கொள்கைப்பிடிப்புமிக்கவர்கள் இவர்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும் பீ.ஜேயின் மீதும் இவர்கள் கொண்ட அளவு கடந்த காழ்ப்புணர்ச்சியால் இப்படி தன்னிலை மறந்து தட்டுத்தடுமாறி தட்டழிந்து கொண்டிருக்கிறார்கள்;.

அவர்களின் வாய்களிலிருந்து பகைமை வெளியாகிவிட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதை விட அதிகம் (3:118) 

இவர்களது கருத்தை விமர்சிக்கும் நம்மைப்பார்த்து பதில் சொல்ல திராணியில்லாமல் சலபியார் நாம் பீ.ஜேயை தக்லீத் செய்வதாக கதையளக்கிறார். அனால் உண்மையில் இவரும் இவரது கும்பலும்தான் பீ.ஜேயை தக்லீத் செய்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஜூம்ஆவுக்கு ஒரு பாங்கு சொல்வதுதான் நபிவழி! ஆனால் இவர்களோ பறகஹதெனியவில் இரண்டு பாங்கு சொல்லிக்கொண்டிருந்தனர். பீ.ஜே இலங்கை வந்து இதை பார்த்துவிட்டு கண்டித்தார். மக்களிடம் எடுத்துச் சnhன்னார். ஆனால் இவரது முதீரோ எனது கருத்து இரண்டு பாங்குதான். பீ.ஜே சொன்னதால் ஒரு பாங்காக மாற்றுகிறேன்என்று அக்காலத்தில் தக்லீத் செய்தததை அவர் வாய்மூலம் ஒப்புதலளித்தார். பீ.ஜே சொன்னதற்காக மாற்றிவிட்டேன் என்று இப்பவும் சொல்கிறார். இதை சலபியார்முதீர் அவர்களே, தக்லீத் செய்யாதீர்கள்என்று கண்டிக்கவில்லை! காரணம் இவரும் தக்லீத் மாயையில் மூழ்கி இருந்தார்கள்.

பீ.ஜே தனது தமிழாக்கத்தை வெளியிட்டபோது அதை படித்து என்னபுரட்டிக்கூட பார்க்காமல் பீ.ஜே தர்ஜமா செய்திருக்கிறாரா? என்ற சந்தோஷத்தில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். இதை வெட்கமில்லாமல் அவரே சொல்லிக்காட்டுகிறார். பீ.ஜே சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற தப்பெண்ணத்தில் ஊறித்திழைத்தவர்கள் பீ.ஜே சொன்னாலும் ஆதாரம் கேட்கும் நம்மைப் பார்த்து தக்லீத் என்கிறார்கள்;. உண்மையில் தக்லீத் மாயை முற்றி பழுத்தது இவர்களுக்குத்தான் என்பதை இவர்களே வெட்கமில்லாமல் சொல்லிக்காட்டவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பீ.ஜேயையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தையும் எதிர்க்க எப்பேற்பட்டவர்களுடனும், எந்த அநியாயத்தையும், எப்பேற்பட்ட மார்க்க விரோத செயல்களையும் ஆதரிக்கும் அளவுக்கு இஸ்மாயில் சலபியார் தரம்தாழ்ந்து போய்விட்டதை அண்மைக்காலமாக அவதானிக்கலாம்.

கொள்கை வாதிகளை அழைத்து தவ்ஹீத் மாநாடு போடுகிறோம் என்று சொல்லி, ரிஸ்வி முஃப்தி, முபாரக் மவ்லவி, அகார் முஹம்மத் போன்ற வழிகெட்டவர்களையும் விபச்சாரக் கேசில் பிரபல்யமானவர்களையும் மேடையேற்றி அழகு பார்த்தார்கள்.

அது மட்டமல்ல! மார்க்கத்தை கேலிக்கூத்தாக்கி மக்களை வழிகேட்டின்பால் அழைத்துச்செல்லும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிக்கு இவர் காட்டும் நன்றி விசுவாசமும் ஜால்ராவும் தாங்க முடியவில்லை!

ஜ.உலமாவினால் வழங்கப்படும் ஃபத்வாக்கள் மத்ஹபு ஆதரங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. பெருநாள் தொழுகையை திடலில் தொழலாமா? என்ற கேள்விக்கு தொழுவது பிரச்சினையில்லை! அதற்கு மத்ஹபில் அனுமதியிருக்கறிது! ஆனால் இதற்காக ஊரைக் குழப்பக்கூடாது! பெண்களை கூட்டி வரக்கூடாது! பள்ளியில் தொழவைப்பதுதான் சிறப்பானது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள்.

பெண்கள் கட்டாயம் முகத்தை மறைக்க வேண்டும் என்றும் ஃபத்வா வழங்கியுள்ளார்கள்.

இஸ்மாயில் சலபியும் ஜ.உ வின் பத்வா குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் குர்அன் ஹதீஸை பின்பற்றுபவராக பீற்றிக் கொள்வது உண்மையானால் இந்த மார்க்க விரோத ஃபத்வாவை எப்படி ஆதரித்தார்? குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையிலுள்ள பாமரன் கூட இதற்கு உடன்படமாட்டான். இவற்றை எதிர்த்து ஒரு வரி கூட மறுப்பு எழுதவில்லை! அந்தளவுக்கு கொள்கைப்பற்று (?) இவருக்கு!

அது மட்டுமல்ல. அண்மையில் ஷவ்வால் மாத தலைப்பிறையில் இலங்கை மக்களை அப்படியே வழிகெடுக்க முயன்ற ஜ.உ விற்கு இவர் அடித்த ஜால்ரா சகிக்க முடியவில்லை!

பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வைஎன்ற தலைப்பில் இவர்கள் நடத்திய நயவஞ்சகத்தை அவர்களே வெட்கம் கெட்டு அம்பலத்துக்கும் கொண்டுவந்துள்ளார்கள்.




 இவர்களுக்கு பிறை பார்த்த தகவல் 07ம் திகதி 7 மணிக்கே வந்துவிட்டதாம். ஆனால் பெருநாள் என்று அறிவிக்கவில்லையாம். JAMMIYATUL ULAMA அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை யாரும் தவறான SMS யை பார்த்து பெருநாள் கொண்டாடிவிடவேண்டாம் என்று JASM Twitter  சேவையினூடாக உடனே SMS அனுப்பினார்களாம். பள்ளியில் தராவீஹ் தொழுகை நடத்தினார்களாம் என்று 2013 sep.உ.உதயத்தில் பெருமையாக உளறியுள்ளார்.
நாம் பிறை விவகாரத்தில் நடுநிலையான போக்கையே கைக்கொண்டிருக்கின்றோம். 07 ஆம் திகதி இரவு 7 மணியளவிலேயே கிண்ணியாவில் பிறை தென்பட்ட தகவல் எமக்குக் கிடைத்துவிட்டது. மறுநாள் பெருநாளாக அமைந்துவிடலாம் என்பதால் விரைவாக சேகரிக்கப்பட்ட பித்ரா அரிசிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டிருந்தோம். இதே வேளை பெருநாளை அறிவித்து சில SMSகள் வந்தன.
 எமது JASM Twitter சேவை மூலமாக ACJU வின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இல்லாமல் தவறாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி இரவு 8.30 இற்கு நாம் SMS அனுப்புகின்றோம்.
இதன் பின்னரும் பல பகுதிகளில் மக்கள் பெருநாள் எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை எதிர்பார்க்குமாறு நாம் மக்களுக்குக் கூறும் அதே வேளை எமது தலைமையகத்தில் தராவீஹ் தொழுகையும் நடத்தினோம்.
ACJU அறிவிக்காவிட்டாலும் நாட்டில் பல இடங்களில் பெருநாள் கொண்டாடப்படும். இது ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்தும் இலங்கை முஸ்லிம்கள் ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இல்லையென்ற தகவலை அந்நியருக்கு வழங்கும் என்று அஞ்சிய நாம் 077 680524 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிறை விடயத்தில் ஜம்இய்யதுல் உலமா மாற்று முடிவெடுத்தால் ஜம்இய்யா பலவீனப்பட்டுவிடும் என்று கூறினோம்.)
 ஆனால் நாடு பூராவும் மக்கள் பெருநாள் கொண்டாட திட்டமிட்டதால் இவர்களும் கொண்டாட முடிவு செய்தார்களாம். அடுத்த நாள் பெருநாள் உரையில் இன்று நோன்பு பிடித்தவர்களின் நோன்பை ஹராம் என்று சொல்லிவிடாதீர்கள்என்று மக்களுக்கு போதனை (?) செய்தார்களாம்.
(பெருநாள் உரை:
JASM இன் தலைமைப் பெருநாள் உரையில் மிகத் தெளிவாகப் பின்வருமாறு விளக்கப்பட்டது.


இது ஜம்இய்யதுல் உலமாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கை அல்ல. நாம் ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்த விரும்பவில்லை. ஆன்மீகத் தலைமை என்ற வகையில் ஜம்இய்யதுல் உலமாவைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எமது ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். இந்தப் பெருநாள் மூலம் இலங்கை முஸ்லிம் உம்மத்திலிருந்து நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை, இனியும் ஜம்இய்யதுல் உலமாவின் நல்ல நிலைப்பாட்டுக்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம்.
பிறை காணப்பட்டதாக உறுதியாக நாம் நம்புவதால் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். எமது ஊரில் பிறை காணப்பட்டதை நம்பாத ஜம்இய்யதுல் உலமாவின் முடிவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் நோன்போடு உள்ளனர். அவர்களது நோன்பை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நோற்ற நோன்பை ஹராமாகப் பார்க்காதீர்கள்……”
இவ்வாறான நிதானமான நடுநிலையான விளக்கத்தை மக்களுக்கு நாம் வழங்கினோம்.) செப்டெம்பர் உ.உதயம்)
பார்த்தீர்களா? நாங்கள் எவ்வளவு நயவஞ்சகத்தனமாக நடந்துள்ளோம்என்று சார்ளி சாப்ளினையே தோற்கடிக்கும் அளவுக்கு கொலரை தூக்கிவிட்டு நடனமாடுகிறார்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விட இவர்கள் அகில இலங்கை ஜம்மிய்த்துல் உலமாவுக்கு வழங்கும் சப்போர்ட் தாங்கமுடியவில்லை!
பிறை பார்த்தால் நோன்பை விட்டுவிட்டு பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நபிமொழியை உதாசீனம் செய்துவிட்டு அதை ஜ.உ அதிகாரபூர்வமாக சொல்லும்வரை அப்படி செய்யக்கூடாது என்று இருந்திருக்கிறார்கள். பார்த்த பிறையை மறந்தவிட்டு தராவீஹ் தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.
SLTJ மீதுள்ள வெறுப்பு காரணமாக நாளை பெருநாள் என்று அனுப்பிய SMS ஐக் கூட தவறான SMS என்றும் அதை நம்பாதீர்கள் என்றும்; அதற்கு முண்டியடித்துக்கொண்டு இவர்கள் SMS அனுப்பியிருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு மார்க்கத்தை விட ஜ.உ வை காப்பாற்றுவது எந்தளவுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். உண்மையான செய்தியை மக்களுக்கு அனுப்ப SMS சேவையை பயன்பபடுத்தாமல் உண்மையான SMS ஐ பொய் என்று அறிவிக்க இவர்கள் SMS சேவையை பயன்படுத்தியதாக மார்தட்டுகிறார். தனது நயவஞ்சகத் தனத்தை அப்பட்டமாக காட்டுகிறார்.
பிறை பாரத்தது தெரிந்தும் வேண்டுமென்றே தராவீஹ் தொழுகை நடாத்தியிருக்கிறார்கள்.
மறுநாள் பெருநாள் கொண்டாடாமல் விட்டுவிட்டால் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும்  கப்பல் ஏறிவிடும் என்று வேறு வழியின்றி பெருநாள் கொண்டாடிவிட்டு நாம் பெருநாள் கொண்டாடியதை ஜ.உ விமர்சித்து நம்மை தூக்கி எறிந்துவிடுவார்களோ என்றஞ்சி அவர்களது நோன்பு ஹராம் அல்ல! நோன்பை ஹராம் என்று சொல்லாதீர்கள்என்று அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமாக மக்களுக்கு சொல்லி அல்லாஹ்வை விடுத்து அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றியதை பெருமையாக எடுத்துகாட்டும் அளவுக்கு இவர்களை அல்லாஹ் வழிகேட்டில் வெகுதூர எறிந்துவிட்டான்.
அதுமட்டுமல்ல SLTJ யின் பறகஹதெனிய - தல்கஸ்பிடிய ஆகிய கிளைகளில்  JASM இயக்கவாதிகள் நுாற்றக் கணக்கானோர் பெருநாள் தொழப் போவதாக பகிரங்கமாக அறிவித்தவுடன் தமது அதரவாளர்களைத் தக்க வைக்கவே நிர்ப்ந்த நிலையில் பெருநாளை இரவு 12 மணிக்கு அறிவித்துவிட்டு ரிஸ்வி முப்தியையும் திருப்திப்படுத்த உ.உதயத்தில் ஜால்ராவும் அடித்துள்ளனர்.
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரக்த்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (4:115)
என்ற வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் இவரை மென்மேலும் வழிகேட்டில் விட்டுவிட்டான்.
சலபியிடம் மார்க்க அறிவு அற்றுப்போய் அதன் பண்புகள் இத்துப்போய் அரசியல் சாக்கடைகளின் நாற்றம் வெகுவாக வீசிக் கொண்டிருக்கிறது. இவர் இந்த நிலையில் அரசியலில் குதித்தால் முன்னனி அரசியல்வாதிகளையும் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்துவிடுவார் போல் தோண்றுகிறது.
அரசியல்வாதிகள் ஒருவரை விமர்சிக்கப்புகுந்தால் நீ திருடன் என்று சொல்ல முடியும்! ஆனால் சொல்லமாட்டேன். என்று சொல்லாமல் சொல்வதை பார்க்கலாம். அதுபோல் சகோதரர் பீ.ஜேயின் கட்டுரையை விமர்சித்து எழுதும்போது ஓரிடத்தில் பீ.ஜே எனக்கு மூளை குழம்பிவிட்டது என்று சொன்னதுபோல் இப்போது நானும் பீ.ஜேயை மூளை குழம்பியவர் என்று சொல்ல முடியும். ஆனால் நான் அப்படி நான் விமர்சனம் செய்யமாட்டேன். காரணம் இஸ்லாம் பண்பாக விமர்சிக்க சொல்லியிருக்கிறது என்று சொல்லி அரசியல் சாக்கடைகளின் பாணியில் விமர்சித்துவிட்டு அதை இஸ்லாமிய பண்பாக சித்தரித்து காட்டுகிறார். சாணியை சந்தனம் என்று விற்பனை செய்கிறார்.
அதுபோல் தனக்கு லாபம் கிடைக்கும் வரை தான் சார்ந்திருப்பவரை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் அவர் கழற்றி விட்டதும் கண்ணா பின்னா என்று திட்டுவதும் அரசியல்வாதிகளின் பண்பு! அதை அப்படியே அழகாக செய்கிறார்.
தான் சார்ந்திருப்போர் பச்சையாக தப்பு செய்யும்போது கண்டிப்பதாக சொல்லி மயிலிறகால் வருடுவது போல அறிக்கைவிடுவதும் அரசியல்வாதிகளின் பண்பு! அது சலபியிடத்தில் மிகுதியாக வந்துவிட்டது.
ஒரு கருத்தில் தான் இருக்கும்போது அதற்கு மாற்றமான கருத்திலுள்ளவர்களிடமே பச்சையாக கூட்டணி வைத்திருப்பதும் அவரது கருத்துக்கு மாற்றமாக சொன்னால் கூட அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அரசியல்வாதிகளின் நிலை! இது தற்போது சலபியின் முக்கியமான நிலை!
தனது கை எங்கு ஓங்கியுள்ளதோ அங்கு எதிர்க்கட்சியை நன்றாக வெளுத்து வாங்கி தனது கட்சித் தொ;ண்டர்களுக்கு சிங்கம் போல முழங்குவார்கள். எதிர்க்கட்சியுடன் நேருக்கு நேர் பாராளுமன்றத்தில் பேசச் சொன்னால் மூச்சுக்கூட விடமாட்டார்கள்.
அதுபோல் சலபியார் தனது பக்தகோடிகளின் நிகழ்ச்சிகளில் நமது கருத்தை நன்றாக விமர்சிப்பார். எம்முடன் நேரடியாக வாருங்கள் என்று அழைத்தால் முடியாது! 1000 தடவை அழைத்தாலும் வர முடியாது ! ஏனக்கு அனுபவம் இல்லைஎன்று ஓட்டமெடுப்பார். உங்களுக்கு எதில் அனுபவம் உள்ளது!?
 அடுத்து நாட்டில் சிங்கள இனவாதம் பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கின்றது. எனவே நிதானமாக செயற்பட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வேறு கூறுகிறார். இதிலாவது நேர்மையாக நடக்கவேண்டுமல்லவா?
பொருத்தமற்ற நாட்டுச் சூழல்:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கும். இக்காலகட்டத்தில் எமது ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று பொதுபலசேனா” (BBS) தீவிரவாதிகளும் துரோகிகளான சில முஸ்லிம் அமைப்புக்களும் கூறிவரும் சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கூட இருந்தே குழி பறிப்பவர்களின் சூழ்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். ஜம்இய்யதுல் உலமாவைப் பலவீனப்படுத்தவும், உடைக்கவும் முயற்சிக்கும் சூழ்ச்சிகள் பற்றி ஜம்இய்யதுல் உலமா அதிகம் கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்றே தோன்றுகின்றது.
  நீங்கள் எவ்வளவு அநியாத்தை செய்துள்ளீர்கள்? இஸ்லாத்திற்குச் செய்யப்படும் சூழ்ச்சி பற்றி கவலையில்லை ஜம்இய்யதுல் உலமா பற்றித்தான் இவரது கவலை தலைக்கடித்துள்ளது.
 மிகப் பெரிய இனவாதியான பிரதேசவாதியான நீங்கள் நாட்டு நிலை பற்றி நிதானம் பேசலாமா?
குருநாகல் தல்கஸ்பிடியவில் நீங்கள் ஆரம்பித்துவைத்த இனவாதம் எந்தளவு முற்றியுள்ளது.தற்பொது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது? தல்கஸ்பிடிய பகுதியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பித்தவுடன் கிளைக்கு எதிராக பல்வேறு சதி நடவடிக்கைகளை நீங்களும் உங்கள் தலைமைப் பீடமும் மேற்கொண்டீர்களே!?.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எமது கிளைக்கு எதிராக மாவதகம பொலிசில் JASM வகையறாக்கள் என்ட்ரி போட்டனர். பன்சலவில் உள்ள ஹாமந்துர்ரிடம் சென்று தொழுகையைத் தடுக்க கடிதம் வாங்கி கோட்டில் கொடுத்தனர். தொழுகையைக் கடைப்பிடிக்கும் ஒரே காரணத்திற்கா தல்கஸ்பிடியவில் SLTJ சகோதரர்களை ஊர் நீக்கம் செய்துள்ளனர். இரண்டு அப்பாவி சகோதரர்களுக்கு அடித்துவிட்டு அடித்த மாவீரர்(?!)களில் ஒருவன், SLTJ சகோரர்கள் 6 பேர் அவனுக்கு அடித்தாக பொலிசில் என்ட்ரி போட்டுவிட்டு, மாவதகம வைத்தியசாலையில் படுத்துக் கொண்டான். இது தொடர்பாக விசாரணை நடந்ததே. அடியையும் வாங்கிக் கொண்டு பொறுமையோடு உங்கள் கயவர்களை மன்னித்த பெருந்தன்மை எங்கள் ஜமாஅத்திற்குத்தான் உண்டு. நாங்கள் நிதானம் பற்றி பேச அருகதையுள்ளவர்கள். அருகதையற்ற நீங்கள் இவ்வாறு பேசலாமா? நடிக்க வேண்டாம்.
அதே போல் எங்கள் கிளையை அநாவசிய பள்ளி என்று பன்சலையில் காட்டிக் கொடுத்து ஏஜிய  விடமும் தொழுவதைத்   தடுக்கச் சொல்லி கடிதம் எடுத்து நீதி மன்றத்தில் கொடுக்கச் வைத்தீர்களே!. ஆடுமாடுகளுக்கும் தெவையற்ற இடங்களிலும் பள்ளிகட்டும் ஏஜன்டில் கூலிக்கு மாறடித்துக் கொண்டு பொலிஸ்  ஐக் கூட்டி வந்து மார்க்க நிகழ்ச்சிகளைத் தடுக்க முயன்றீர்களே? இது வெல்லாம் ஓர் இஸ்லாமிய இயக்கம் செய்யும் செயலா?யுதர்கள் செய்யும் சதியா?
கருத்தை கருத்தால் வெல்லமுடியாத  அன்ஸார் சுன்னாவாதிகள் இவ்வாறு குராபிகள் செய்யாத அராஜகங்களை எல்லாம் செய்துவருகின்றனர். குராபிகள் இவர்களிடம் பாடம்  கற்றுக் கொள்ளும் அளவு இவர்களது அயோக்கியத்தனம் உள்ளது. ஏன் பிபஎஸ் கூட இனி உங்களிடம் தான் பாடம் கற்கும் போல உள்ளது.
எங்கள் கொள்கையை விவாதித்து தவறு என்று நிரூபிக்க வக்கு இல்லாததால் இந்தக் கொள்ளைக் கும்பல் இவ்வாறு இனவாத அடிப்படையில் மிரட்டி அவததுாறுகளைப் பரப்பி வருகின்றனர். நாங்கள் கொள்கைத் தவறை விமர்சித்தால் மானம் பற்றிப் பேசுவார்கள். அடுத்தவனின் மானத்தைப் போக் அவதுாறு சிடியும் வெளியிடுவார்கள் இந்தக் கயவாகள். உங்கள் மறுபக்கத்தை நாங்கள் வெளியிட்டால் நாறும்.
தெளிவாக பிஹிக்கு மொழி பெயர்த்து அனைவரும் பார்க்கும் வண்ணம் உள்ளதையே மறைக்கும் நீங்கள் மற்ற விடயங்களில் எவ்வளவு கீழ்த்தரமாக நடப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது.
ஆக தற்கால இனவாத அரசியல்வாதிகளின் அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு அரசியலில் குதிக்காமல் மார்க்கத்தினுள் அரசியல் செய்து வருகிறார்கள்  வழிகெட்ட JASM இயக்கவாதிகள். இவரகள்; தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு  எச்சரிக்கின்றோம்.  





Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger