அஸ்மீர் சிந்திய சிவப்புச் சொட்டுக்கள்

  அரபுமூலம்-  பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி
                     தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி

    
அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர்நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு….
                உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இந்த யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்க வில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு துருக்கியிலுள்ள இத்திஹாத் வத்தரக்கிஎன்ற அமைப்பின் தூரநோக்கற்ற சிந்தனைப் போக்கே காரணமாக அமைந்தது. இவ்வியக்கம் மாசோனியாவின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்து, ஜேர்மனிய ஆபாச அயோக்கியத்தனத்திற்குக் கட்டுப்பட்டு,  முதலாம் உலக மகாயுத்தத்தில் எவ்வித  நலனையும் கருத்திற் கொள்ளாது படு பயங்கரமான யுத்தத்தில் ஜேர்மன் பக்கம் தன்னை இணைத்துக் கொண்டது.

                உஸ்மானியப் படைகள் ஜேர்மன் படைகளை விட்டு விலகிய பொழுது நேசநாட்டுப் படைகள் துருக்கியின் முக்கிய நகரங்கள் மீது தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டது. இவ்வாறு, ஆக்கிரமிப்புக்குள்ளான நகர்களில் அஸ்மீர்நகரமும் ஒன்றாகும். இந்நகரினுள் கிரேக்க நாட்டுப்படைகள் நுழைந்து, அதனை ஆக்கிரமித்துக் கொண்டன.
                இவ்வாக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்க நாடு, அஸ்மீர் நகரையும் அதனைச் சூழவுள்ள மாகாணங்களையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டது. கிரேக்க நாட்டின் வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கி.பி 1920ம் ஆண்டு கைச்சாத்தான பிரபல்யமான சீபர்உடன்படிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
                எனினும்சீபர்உடன்படிக்கை அமுலாக்கப்படவில்லை. அது தொடர்பான விரிந்த விளக்கத்தை இங்கு கூறவும் முடியவில்லை. எனவே, “அஸ்மீர்நகரினுள் கிரேக்க நாட்டுப் படையினர் அந்தி மாலையில் நுழைந்த நிகழ்வின் கதையை நோக்குவோம்.
                1919-05-14 அன்று சூரியன் அஸ்தமிப்பதற்குச் சற்று முன்னர், “அஸ்மீர்கிராமத்தின் ஒரு கடைக்கோடியில் அவர்கள் வருகிறார்கள்கிரேக்க நாட்டவர்கள் வருகிறார்கள்…. இறைவன் சாபம் அவர்கள் மீது உண்டாகட்டும் என்ற பெறும் அவலக் குரல் கேட்டது.
                கிரேக்கப்படையின் முதன்மை அணி பல மைல்களுக்கு அப்பால் வரும் காட்சி தென்பட்டது. அப்பட்டாளம் அஸ்மீர் நகரை நோக்கி முன்னேறியே வந்துகொண்டிருந்தது. அந்நகருக்கு மிக அண்மையில் முகாமிட்டு, தங்கி மறுநாள் காலையில்தான் நகருக்குள் நுழைவார்கள் என்ற அபாய அறிவிப்பு காட்டுத் தீ போல் நகர் முழுவதும் பரவியது.
                உள்ளத்தின் அடியாழத்தில் கூர்மையான கத்தி இறங்குவதைப் போல் துருக்கியின் கிராமம் முழுவதும் இச்செய்தி பரவியது. அங்கு இருந்த ஒவ்வொரு குடும்பமும் தம்முடைய உயிர்த் தியாகிகளுக்காகக் கண்ணீர் சிந்தின. மகன், வன் அல்லது தந்தை ஆகிய இவர்கள் தூர இடங்களில் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர். இது, கொதிக்கின்ற வெண்மணற் பரப்பின் மேல் அல்லது குளிரான மலைகளுக்கு மேல் நிகழ்ந்திருந்தது. 
                அய்யகோ….! எதிரிகள் அவர்களின் நகரங்களை மிக மோசமான முறையில் அழித்தொழிக்கின்றனர். அல்லாஹ், அவன் ஏகன். எதிரிகளின் பாதங்களுக்குக் கீழால் வழிந்தோடும் புதிய இரத்தம் எது என்பதை அவன் ஒருவன் நன்கறிவான்.
                அஸ்மீர் நகரத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பே, கிரேக்க இன மக்கள் மகிழ்வுடனும், சந்தோசத்துடனும் வாழ்ந்து வந்தனர் என்பது உண்மைதான். இதுதான் அவர்களின் அழகான பிரதியுபகாரமாகும். அவர்கள் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் நிழலிலே பல நூறு ஆண்டுகள் பாதுகாப்பாகவும், திருப்தியோடும் வாழ்ந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கைக் கோட்பாட்டிற்கோ, மார்க்கத்திற்கோ யாரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. இராணுவப் பணியிலிருந்து மன்னிப்பளிக்கப்பட்டு, முழுமையாக வியாபார நடவடிக்கைகளில் மூழ்கிக் காணப்பட்டனர். அவர்கள் அங்கிருந்தவர்களிலேயே கொழுத்த பணமுதலைகளாகக் காட்சியளித்தனர். திருமணம், வாரிசுரிமை, சொத்து சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் சுதந்திரமாக நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தன. இறுதிவரை, இந்த சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்ட பின்னரும், அவர்கள் உஸ்மானிய சாம்ராஜ்யத்திற்கும், வளமான வாழ்விற்கு இடமளித்த மக்களுக்கும் எதிராகவே செயற்பட்டனர். காலனித்துவ பட்டாளத்தின் வருகையை முன்னிட்டு விழா எடுக்கவும் ஆனந்தக் கூத்தாடவும் தயராகிவிட்டனர்.
                பெட்டிகளிலே மறைத்து வைத்திருந்த கிரேக்கக் கொடிகளை வெளிக்கொண்டுவரத் துணிந்துவிட்டனர், நாளைய தினம் பெருநாள், கிரேக்கப் படையை வரவேற்கும் திருநாள், அதற்காகப் புத்தாடைகளை வெளியெடுத்துவிட்டனர்.
                அதே வேளை, அங்கு மற்றொரு விடயமும் ஏற்பாடாகியிருந்தது.
                கருமை இருள் படரத் தொடங்கிய வேளையில் அஸ்மீரின் இளம் இரத்தம் பாய்ச்சப்பட்ட இளைஞர்களில் சிலர், தூரத்தில் அமைந்துள்ள யூத மண்ணறைக்கு அருகாமையில் ஒன்றுகூடினர். எதிர்ப்படுகின்ற புதிய ஆபத்துக்கள் பற்றி, அவர்கள் ஆராய்ந்தனர். அவர்களிடையே ஹஸன் தஹ்ஸீன்என்ற ஓர் இளம் பத்திரிகையாளர் இருந்தார். அவர், அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் உணர்ச்சிபூர்வமான ஓர் உரை நிகழ்த்தினார். அவர் கண்கள் பனித்து, கண்ணீர் வழிந்தோடியது. இறுதியாக அவர் கூறினார்.
                என் சகோதரர்களே! அவர்கள் கிரேக்கத்துடன் அஸ்மீர் பிரதேசத்தை இணைக்க விரும்புகின்றனர். நாம் அவர்களுக்கு அஸ்மீரைக் கொடுத்துவிடக் கூடாது. சகோதரா;களே! நாம் (எதிர்த்துப்) போராடுவோம். நாம் அவர்களிடம் சரணடைந்து விடக்கூடாது. உண்மையில் போராடுவோம்.அவர்களிடம் சரணாகதியடையாதிருப்போம்.
                இரண்டாம் நாள் காலையில் கடலை நோக்கியிருந்த குர்தூன் பூயர்பகுதியூடாக, அஸ்மீர் பிரதேசத்திற்குள் கிரேக்கப் படை நுழைந்தது.
                கிரேக்க சிறுபான்மையினர் பாதையின் இருமருங்கிலும் கிரேக்கக் கொடியைத் தாங்கியவண்ணம் அணிவகுத்து நின்றனர். இளம் கன்னிகளும், சிறுவர்களும் கிரேக்கச் சின்னம் பொதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து நின்றதோடு, கிரேக்கக் கொடியை அசைத்து ஆக்கிரமிப்புத் துருப்பினரை பெரும் கோசம் எழுப்பி வரவேற்றனர்.   
                ஸைதூ பன்யஸாலூஸ்ஸைதூ பன்யஸாலூஸ் ( அப்போது, கிரேக்கத்தின் பிரதம மந்திரியாக ஸைதூ பன்யஸாலூஸ் இருந்தான்.)
                இவர்களை, வரவேற்றவர்களின் தலைவரான அஸ்மீர் கிராமத்தில் மிகவும் மதிக்கத்தக்க பாதிரியாக விளங்கிய கிறிதோஸ் தோமஸ்என்பவர் இருந்தார். இவர் உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதத்தில் இரண்டாவது தரத்தில் திகழ்ந்தார்.இவர், இஸ்தன்பூலில் காணப்படுகின்ற அல்பித்ரிக்என்பவருக்குப் பின்னர் நேரடியாக வந்தவர்.
                இக்கூக்குரல்களுக்கு மத்தியில் ஆக்கிரமிப்பாளர்கள் தமது படையைத் தொடர்ந்து நகர்த்திச் சென்றார்கள். கூக்காரியாலிஎன்ற மாகாணத்திலுள்ள அத்தாராம்வாய்என்ற இடத்தை அடையும் வரை அவலக்குரல்கள் எதிரொலித்தன. திடீரென, (அப்)பெருங் கூட்த்திற்கு மத்தியில் அம்பைப் போன்று கடுகதியில் ஒரு வாலிபன் நுழைந்து முன்னணிப் படையில் கிரேக்க கொடியைச் சுமந்து வந்த கிரேக்க படைவீரனை நோக்கி தனது துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்து கொலை செய்ய ஒரு சூடு சுட்டுவிட்டு மறைந்துவிட்டார்.
                இதைச் செய்தவர், இளம் பத்திரிகையாளர் ஹஸன் தஹ்ஸீன் என்பவராவார்.
                கிரேக்க படையினர், திடீர் தாக்குதலிருந்து விடுபட முன்னர், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அவ்விளைஞனின் பின்னால் விரட்டிச் சென்றனர். பின்னர், நகரை சுற்றிவளைத்து மிகவும் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தினர்.
                இறுதியாக, மிகவும் நெருக்கமான பாதையில் முற்றுகையிட்டனர். அவர்களின் துப்பாக்கி ரவைகள் முடியும்வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அப்பொழுது, படையினரின் ரவைகள் அவரை பதம்பார்த்தன.
                அங்கே, வயது முதிர்ந்த மூதாட்டி, அறையின் ஜன்னலூடாக, அவளுக்கு முன்னால் நடைபெறுபவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள். இளம் பத்திரிகையாளர் அவளின் ஜன்னலுக்கு அருகாமையில்தான் நின்று கொண்டிருந்தார்.
                இளம் தியாகியைத் துப்பாக்கி ரவைகள் பதம்பார்த்த போது, துக்கத்தால் அவள் கண்கள் பனித்தன. இளைஞர் ஹஸீன் அவள் சத்தம் கேட்டு அவள் பக்கம் பார்வையைத் திருப்பியபோது, அவள் தனக்காகக் (கண்ணீர் சிந்துவதை) அழுவதைக் கண்டார். அவளுக்கு அவர் பூமியில் சரிந்தவாரே சொன்னார்.
                பாட்டியே! தோட்டாக்கள் என்னைத் துளைத்து விட்டன. மறுமை நாளில் எனக்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்.
                நூற்றுக்கணக்கான ரவைகளைத் தீர்த்து, வாலிபனின் உடம்பை சின்னாபின்னப் படுத்தியதோடு போதுமாக்கிக் கொள்ளாமல் கத்தியால் கொடூரமான முறையில் குத்தி அவர்களின் வெறித்தனத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
                கிரேக்க படைகள் அஸ்மீருக்குள் நுழைந்த முதல் நாளே, முதலாவது ஷஹீதாக இளம் பத்திரிகையாளரை, வரலாறு தன்னுள் பதித்துக் கொண்டது.
                படையினர் மீண்டும் வந்து நகரவாசிகளைப் பழிவாங்க ஆரம்பித்தனர். அவர்கள், இராணுவப் பாசறைக்குச் சென்று, அதன் தலைவரான சுலைமான் பத்ஹீஎன்பவரை முகாமின் மையப்பகுதிக்குக் கொண்டுவந்தனர்.
                எனக்கு வாழ்வளிப்பவர் பன்யஸாலூன் என அவசரமாகக் கூறுபன்யஸாலூன் வாழ்வளிப்பவர் என்று விரைவாகக் கூறுஎன்று மிரட்டப்பட்டார்.
                இந்த அதிகாரி, கிரேக்க படையின் இராணுவத் தளபதிக்கு முன்னால் நிராயுதபாணியாக (அநாதரவாக)வே காணப்பட்டார். எனவே, அவர் அதிகாரமாகப் பேசவில்லை. (அவர்களை) அவலட்சனப்படுத்தி பூமியில் உமிழ்ந்துவிட்டு பன்யஸாலூஸ் வீழ்க என்றார். துப்பாக்கியின் முனைக் கத்தியினால் அவரது நெஞ்சு பிளக்கப்பட்டு ஷஹீதாக தரையில் சரிந்தார்.
                பின்னர், இராணுவ இடைத்தளபதி வைத்தியர் சுக்ரிபிக்கிடம் வந்து, அவரை அழைத்து பன்யஸாலூஸ் வாழ்க! என்று விரைவாகக் கூறப் பணித்தனர்.
                இரத்த வெள்ளத்தில் ஷஹீதாக பூமியில் கிடக்கும் தியாகியை அவர் பார்க்கிறார். இவர்களின் கட்டளைகளுக்குத் தலைவணங்கா விட்டால், தனது கதி என்னவென்பதை எண்ணிப்பார்க்கிறார். அவரது இதயத் தடாகத்தில் குடும்பம் பற்றிய சிந்தனை நிழலாடுகிறது. எனினும், தனது எதிரியான பிரதமரை வாழ்க என வாழ்த்த அவரால் முடியவில்லை.
                பன்யஸாலூஸ் ஒழிக!என்றார்.
                இராணுவத் தளபதியின் முனைக் கத்தியால் வைத்தியர் சுக்ரிபெக்உடைய நெஞ்சு தாக்கப்பட்டு, ஷஹீத் சுலைமான் பத்ஹிக்கு அருகாமையால் ஷஹீதாக சரிந்தார்.
                இவை, கிரேக்க ஆக்கிரமிப்பாளர்கள், அஸ்மீரை ஆக்கிரமித்த முதல் நாள் முடுக்கிவிடப்பட்ட கொடூர நிகழ்வுகளில் முக்கியமானதாகும்.
                அடுத்த நாளின் போது அவலங்கள் அதிகரித்தன. அவை முதல் நாளைவிட மிக அதிகமாகியிருந்தது. அஸ்மீர் நகரில் அரங்கேற்றப்பட்ட பிரபல்யமான இப்படுகொலைகளை அப்போதைய சர்வதேச பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தன. இப்போது, மிகைக்கப்பட்ட உஸ்மானிய அரசு தனக்கு முன்னால் உள்ள விடயங்களைக் கண்டு கொள்ளவில்லை. சர்வதேச அரங்கில் ஓர் ஆதாரமாகத்தான் அது கொள்ளப்பட்டது.
                எனினும், இந்த சோகமயமான, மிருகத்தமான படுகொலைகளினால், தியாகிகளின் (ஹரகதுல் முகாவமா, ஹரகதுல் பிதாய்யீன்) அமைப்பையும் அமைப்பின் செயல்பாட்டையும் தடுக்க முடியவில்லை. மேலும் அமைப்பு முறையிலான செயற்பாடுகள் எங்கும் பரந்து விட்டது.
                இன்னும், சுதந்நிர விடுதலைகாணும் போர் ஆரம்பித்தது. இறுதியாக (மவ்கிபுல் பாஸிலா) பாஸிலா எனும் இடத்தில் துருக்கிய துருப்புக்கும் கிரேக்க படைக்குமிடையில் நேருக்குநேர் சந்திக்க வேண்டியதாயிற்று. அதில், கிரேக்கப்படை படுமோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டது. கடல்வரைக்கும் அவர்கள் விரண்டோடினார்கள்.
 1922-09-09ல் துருக்கியப் படைகள் நூர்தீன் பாஷாவின் தலைமையில் அஸ்மீர் நகருக்குள் பிரவேசித்தன.  நகரம் விடுதலை பெற்றது.
                                                                                             
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger