Q: JASM ன் தவறான கொள்கையை விமர்சிக்கும் நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் ஸலபி என்று
ஏன் பட்டம் போட வேண்டும்?
A: ஒரு கல்வி நிறுவனத்தில் படித்து முறைப்படி பட்டம் பெற்று அதனுடன்
முரண்பாடு ஏற்பட்டால் அப்பட்டத்தை பெயருக்குப்
பின்னால் போடக் கூடாது என்று சில அறிவிலிகள் வாதிட்டு வருகின்றனர்.இது இவர்களின் அறியாமையைக்
காண்பிக்கிறது.
ஒரு கல்வி நிறுவனத்தில் பணம் கட்டிப் படித்தால் அதிலுள்ள அனைத்துக்
கொள்கைக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்திலும் இல்லை.உலக சட்டத்திலும்
இல்லை.
JASM வேறு ஸலபிய்யா வேறு. JASM ஒரு நிதி நிறுவனம். ஸலபிய்யா ஒரு கல்வி நிறுவனம். நான் கற்ற என்னை உருவாக்கிய
ஸலபிய்யா என்ற
கல்லி நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதை தவறாக வழி நடாத்தும் JASM ன் தவறான போக்குகளை விமர்சிக்கின்றேன்.
ஒரு நிறுவனத்தின் கொள்கைகளை விமர்சிப்பதால் அதில் படிக்கவில்லை
என்று ஆகிவிடாது. நான் மாதம்மாதம் பணம் கட்டிப் படித்து முறையாகப் பட்டம் பெற்றுள்ளேன்.
அதனால் நான் ஸலபி என்று போட்டுக் கொள்கின்றேன். இதில் எந்தத் தப்பும் இல்லை.
தல்கஸ்பிடியவில் எனக்கு எதிராக அப்துல் வதுhத் பேசும் போது ஒருவன் இடைமறித்து
ஹபீழுக்கு ஸலபிப் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்பான்.அதற்கு ஸித்தீக்
மதனி ஆம் நான் பட்டம் கொடுத்துள்ளேன் என்று கூறுவார் அந்த வீடியோவைப் பார்க்கவும்.
உதாரணமாக இப்ராஹீம் நபியின் தந்தை காபிர். அதனால் இப்ராஹீம்
நபியவர்கள், ஆஸர் எனது தந்தை இல்லை என்று சொல்ல முடியாது. கொள்கை வேறுபட்டாலும் உறவுத் தொடர்பு
இல்லாமல் போகாது.ஸலபி என்று பட்டம் போட எனக்கு முழுத் தகுதி பெறப்பட்டுள்ளது.அதனால்
போடுகின்றேன். ஸலபிய்யாவில் படித்து பட்டம் பெறாத சிலருக்கு JASM நிறுவனம் ஸலபி என்று அழைக்கிறது.அதே
போல் அரை குறை ஆலிம்கள் சிலரும் தமது பெயருக்குப் பின்னால் பட்டம் பெறப்படாமலேயே பட்டமிட்டு வருகின்றனர்.இதையெல்லாம் கண்டுகொள்ளாத
அற்பர்கள் எனது நடவடிக்கைகளை
மட்டும் கேள்விகேட்டுத் துளைக்கின்றனர்.
Post a Comment
adhirwugal@gmail.com