நீங்கள் உங்களுக்கு படித்துத்
தந்த ஒருவருக்கு நாய் என்று SMS அனுப்பியதாகவும் Phone ல் dog என்று Save பண்ணி வைத்ததாகவும்
கடந்த பல வருடங்களாக சொல்லிவருகிறார்களே! இதுபற்றி விளக்கவும். அர்ஷட்
இவ்வாறு
பலவருடங்களாக பரப்பப்பட்டுவருகிறது. நான் கண்டு
கொள்ளாமல் இருந்து வந்தேன்.இது இன்னும் தொடர்வதால் இதையும் விளக்கிவிடுகின்றேன்.
தரக்குறைவாக
விமர்சனம் செய்வதை ஸித்திக் மதனி
கும்பலே ஆரம்பித்து
வைத்தது. இவரது மாணவர்களும் சகாக்களும் அருவருப்படையும்
வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு நான் மறுப்புக் கூறும் - எழுதும் போது மட்டும் அலறுவது இவர்களுக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?
காரண காரியங்களுடன் ஒருவரை
நாம் அவ்வாறு சொல்லலாமா என்று இஸ்லாமிய மூலாதாரங்களின்
அடிப்படையில் நோக்க வேணடும்.
ஒருவன் செய்த உதவியை
சொல்லலிக் காட்டினால் அதை திரும்பப் பெற்றால் அவன் வாந்தி எடுத்ததை உண்ணும் நாய்க்கு
சமனானவன் என்று ஹதீஸ் உள்ளது. எனக்குச்
செய்யாத உதவிகளை எல்லாம் சொல்லிக் காட்டி பெருமை தேடி என்னை
அவமானப்படுத்தினார்கள்.செய்ததைச் சொல்லிக் காட்டுபவன் அதை திரும்பப் பெற்றவன் வாந்தி எடுத்ததை உண்ணும் நாய்க்கு சமனானவன் என்று ஹதீஸ் கூறுகிறது என்றால் செய்யாத உதவிகளை எல்லாம் சொல்லிக் காட்டிவந்தால்
இது அநீதியா இல்லையா?
அல்லாஹ் அல்குர்ஆனில் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள்
என்கின்றான்.
பணத்திற்காக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வழிகெட்டுப்
போனால் அவன் நாயைவிட கேவலமானவன் என்று சொல்வதில் தவறு இல்லை என்பதை அல்குாஆனின் உதாரணங்கள் உணர்த்துகின்றன.
அதனால், தீய பண்புகளுக்கு எதிராகக் கடும் சொல்லைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான். அது சரியானதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
அன்பளிப்பு கொடுத்து விட்டு திரும்பக் கேட்பவன் வாந்தி எடுத்து விட்டு திரும்பச் சாப்பிடும் நாயைப் போன்றவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது கடுமை தான். ஆனால் அது உண்மையை உரத்துக் கூறுவதற்காக இழி செயலை அதன் முழு அர்த்தத்துடன் மக்கள் விளங்குவதற்காக சொல்லப்பட்டதால் இது தரக் குறைவானதல்ல.
திருக்குர்ஆனில் கூட இதற்கு ஏராளமான சான்றுகளைக் காணலாம் .
திருக்குர்ஆனில் கூட இதற்கு ஏராளமான சான்றுகளைக் காணலாம் .
وَلَوْ
شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ
فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ
ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ
يَتَفَكَّرُونَ (176) [الأعراف : 176]
நாம் நாடியிருந்தால்
அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! திருக்குர் ஆன் 7:176
مَثَلُ
الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ
أَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ
لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (5)
[الجمعة : 5 ، 6]
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல்
(அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது
உதாரணம் ஏடு களைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். திருக்குர் ஆன் 62:5
كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ (50) فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ (51) [المدثر : 50 ، 51]
كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ (50) فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ (51) [المدثر : 50 ، 51]
அவர்கள் சிங்கத்தைக்
கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். திருக்குர் ஆன் 74:50,51
முதலில் துவக்கி வைப்பவர் தான் மார்க்கத்தில்
குற்றவாளி. இரண்டாவதாக அதற்குப் பதிலடி கொடுப்பவர்
குற்றவாளியாக மாட்டார்.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ
بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا
(148) [النساء : 148]
அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 4:148 ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவன் தீய சொற்களைப் பேசுவது கூட தவறல்ல என்று என்னைப் படைத்த இறைவன் அனுமத்தித்துள்ளான் என்பதால் நான் பொய் கலக்காமல் எவ்வளவு கடுமையாக சொற்களைப் பயன்படுத்தினாலும் நான் குற்றவாளியாக மாட்டேன். கருத்துக்களை விமர்சிப்பதோடு நிற்காமல் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்தது நானா? இவர்களா? தரக் குறைவாக எழுதுவதைத் துவக்கி வைத்தது நானா? இவர்களா? அவதுாறு பரப்பி மானத்தோடு விளையாடியது யார்?
விபச்சாரக் குற்றத்திற்காக நீக்கப்ட்ட
அப்துல் வதுாத், இவரை பிர்அவ்ன் என்று கூறிய முஜாஹிட் ரஸீன் உட்பட எல்லாக்
கேடுகெட்டவர்களுக்கும் பயான் கொடுத்து மேடை ஏற்றிக் கொண்டு எனக்கு பயான் கொடுக்க வேண்டாம்
என்று தல்கஸ்பிடியவில் தடைபோட்டார், ஸித்தீக் மதனி. இது அநீதியா இல்லையா? (இவர்களின் மேடையில் நான் 10 வருடங்களாக ஏறுவதில்லை என்பது தனி விடயம்)
ஒருவர் தனது
பெயரை டொங்கி என்று கூறுகின்றார் என்றால் நாம் அவரை மங்கி என்று கூறமாட்டோம்.டொங்கி
என்றுதான் கூறுவோம். இதுதான் அறிவுள்ளவாகளின் செயல்.
மார்க்க
சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டபோது நான் சும்மா நாய் எனக்குக் கோபம் வந்தால் விசா் நாய்
என்று கூறினார். அதே போல் இவர் ஒரு ஸஹாபியை
சுயநலவாதி என்று குத்பாவில் குறிப்பிட்டார். ஏத்தாளை உமர் அலியை விமர்சிக்கும் போது
அவரது கருத்தை விமாசிக்காமல், அவர் அமீர் அல்ல ஹமீர் (கழுதை) என்று விமர்சித்துள்ளார்.
பீஜே பீ என்று விமர்சித்தள்ளார்.
மற்றவா்களை
இவ்வாறு விமர்சிக்காத ஒருவர் நான் விமர்சித்ததாக வருத்தப்பட்டால் அதில் நியாயம் இருக்கலாம்.
இவர் சார்ந்தவர்கள் என்னையும் கடுமையான தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.
நான் முந்திச் சென்று யாரையும் விமர்சித்ததில்லை.அப்துல் வதுாத் விபச்சாரக் கேஸில்
மாட்டியது அனைவரும் அறிந்ததே! அவர் என்னை தரக் குறைவாக விமர்சித்த பின்னர்தான் நான்
பதிலடி கொடுத்தேன்.
நான் காத்தான்குடி மாநாட்டில் அறிஞர் பீஜேவுடன் உரையாற்றிவிட்டு
வந்த பின்னர் என்னைத் தரக் குறைவாக தல்கஸ்பிடியவில் ஸித்திக் மதனி விமர்சித்த பின்னர்
இவ்வாறு இவர் தன்னையே நாய் என்று சொன்னவர் என்று நான் கொழும்பில் பதில் அளித்தேன். அவ்வளவுதான்.
இவருக்கு
நான் SMS அனுப்பவும் இல்லை.எனது வாழ்நாளில் நான் அவருடன் ஒரு தடவை கூட
Phoneல் பேசியதும் இல்லை. ஏனெனில் இவரது செயலாளர் கலீல் ரஹ்மான் முன்னுக்குள்ள
அலுவலகத்தில் இருப்பார்.யாராவது கோல் பண்ணி செயலாளர் இருக்கிறாரா? என்று கேட்டால் இல்லை
என்று அவர் இருக்கத் தக்கனவே கூறி ரிஸீவரை படார் என்று வைப்பார்.இதை அப்போது கலீல்
ரஹ்மானே வர்த்தத்துடன் சொல்வார். இது போன்ற
பல காரணங்களால் அவரது மொபைல் No இதுவரை என்னிடம் இல்லை. அவரது மொபைல் No இதுவரை எனக்குத்
தேவைப்படவும் இல்லை.
நான் SMS அனுப்பியதாகச் சொல்லித் திரிபவா்கள் அதைக் காட்ட வேண்டும். இல்லாத அவரது மொபைல் No ஐ நான் எவ்வாறு சேவ் பண்ண
முடியும்? இல்லாத No வுக்கு எப்படி SMS அனுப்ப முடியும்? என்று சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Post a Comment
adhirwugal@gmail.com