அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர் 14



 அந் நஜாத் மாத இதழ்

ஏகத்துவ எழுச்சியின் துவக்க காலத்தில் வெளிவந்த அந் நஜாத் மாத இதழ் குறிப்பிடத்தக்கது. இதன் துவக்கத்தில் அறிஞர் பிஜே அவர்கள் இதன் பிரதம ஆசிரியராக இருந்தார்கள். அப்போது அவர் தீட்டிய ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் பெரும் பங்காற்றியது. இந்த இதழில் அபூ அப்துல்லாஹ் என்பவரும் இருந்தார்.
எனது தந்தை மதீனாவிலுள்ள ஜாமிஆ இஸ்லாமியாவில் கற்றுக் கொண்டிருக்கும் போது அந்நஜாத்தை அங்கிருந்து வாங்கி வருவார். எனது  சகோதரிகள் அவற்றை அதிகம் வாசிப்பார்கள். அதன் முதல் இதழ் தொடக்கம் பீஜே அதிலிருந்து விலகும் வரையுள்ள அனைத்து இதழ்களையும் எனது மூத்த சகோதரி அவர்கள் சேகரித்து வைத்திருந்தார்கள்.

தமிழ் நாட்டிற்கு அப்பால்  தமிழ் பேசும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் வளைகுடா நாடுகளில் அதன் தாக்கம் விரிவடைய ஆரம்பித்த போது, அபூ அப்துல்லாவின் துரோகங்கள் அந்த இதழை கோமா நிலைக்கு ஆக்க்கியது. இன்று அபூ அப்துல்லா என்பவரினால் அந்த இதழ் தரம் தாழ்ந்து ஒரு நூறு கூட விற்பனையற்ற  பொறம்போக்கு நிலைக்கு மாறிவிட்டது. பீஜே என்ற ஒரு தனி மனிதரை விமர்சிப்பதைத் தவிர அதில் வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு தரம் கெட்ட அபூ அப்துல்லா அதையும் தரம் தாழ்த்திவிட்டார்.
 அபூ அப்துல்லா என்பவர் எழுத்தில், பொருளாதாரத்தில் நேர்மையற்றவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
இலங்கையில் சிலர் இவரை சிறந்த ஆலிம் என அவரை தவறாக எண்ணிக்கொண்டுள்ளனர். அவர் அறபு தெரிந்த ஆலிம் அல்லர். எனவே சட்டவியல் தொடர்பான விடயங்களில் அவரது ஞான சூனியத் தனத்தை இப்போது அந்நஜாத்தை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஆஷிக் சுக்ரியா அவர்கள் அபூ அப்துல்லா பற்றி ஏகத்துவத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். (இவர் அன்று முதல் இன்று வரை பிஜே என்கின்ற தனி மனிதரை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர். அதற்காகவே பல்லாண்டுகளாக ஒரு பத்திரிகையை வைத்து பிழைப்பு நடத்துகிறார். இயக்கப் பெயர்கள் வழிகேடு என்று கூறும் இந்த அதிமேதாவி பிஜே எதிர்ப்பு என்று வந்து விட்டால் எந்த இயக்க வாதிகளுடனும் கைகோர்க்கத் தயங்க மாட்டார். சிலரை வழிகேடு என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களுடனேயே கைகோர்த்தால் இவர் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.) (ஏகத்துவம் மார்ச் 2009 பக்கம் 31)

தொண்டியில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்திற்கு இவரை முஜீப் அணியினர் அழைத்துவந்திருந்தனர். அப்போது இவர் யாருடன் வந்திருந்தாரோ அவருக்கு எதிராகவே பேசினார் என்பதை பீஜே அவர்கள் அந்த இடத்திலேயே சுட்டிக் காட்டினார்கள். இதை அறிய தொண்டி விவாத ஒப்பந்தத்தைப் பார்க்கவும்.
ஏதோ இவரை கூட்டிவந்தால் பீஜே பயந்துவிடுவார் என்ற நப்பாசையில் இருந்தனர் முஜீப் குழுவினர். முஜிபுடனான விவாதம் பற்றி பீஜே சந்தித்த விவாதங்கள் என்ற தனித் தலைப்பில் நாம் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
எனினும் இந்த விவாத ஒப்பந்தம் அவர்களுக்கு முதல் அடியாக அமைந்தது என்பதை விவாத ஒப்பந்தத்தைப் பார்க்கும் யாரும் உணரலாம். தரமற்ற அபூ அப்துல்லாஹ்வை முஜீப் ஏன் அழைத்து வந்தார் என்பதிலிருந்தே முஜீபின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அண்மையில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்திற்கா ஜமாஅத்திலிருந்து துாக்கி எறியப்பட்ட கீழைப் பொய்யன் பாக்கர் ''.... அந்நஜாத் பத்திரிகை ஆசிரியர் மீது அவதூறு பேசிவிட்டு அவர் வழக்குத் தொடர்ந்தவுடன், வீரத்தோடு, தான் சொன்னது உண்மைதான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லத் திராணியற்று வக்கற்று, வகையற்று, கோழையாக ''அப்படிச் சொல்லவில்லை'' என்று சொன்னது வீரமா? புறமுதுகா? இவ்வாறு பரப்பிய அவதுாறுகளுக்கு பீஜேவுடைய பதில்கள் அவரது இணைய தளத்தில் வெளியானது. அதில் அபூ அப்துல்லாஹ் தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தருகின்றேன்.

''....இந்தப் பொய்யனுக்கு வழக்கு என்ன என்று தெரியவில்லை. ஒரு மனநோயாளி எழுதியதை நம்பி என்னைப் பொய்யன் என்கிறார். அந்த வழக்கு குறித்தும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
கோவை குண்டு வெடிப்புக்கு நான் தான் இரண்டு லட்சம் பணம் கொடுத் தேன் என்று கோவை பாஷா சிபிசிஐடி போலீஸாரிடம் பொய் வாக்கு மூலம் கொடுத்தார். (அவருக்கும் தமுமுகவுக்கும் முன் விரோதம் இருந்தததே இதற்குக் காரணம். பின்னர் அதற்காக அவர் என்னி டம் மன்னிப்பு கேட்டு விட்டார்.) அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் என்னை நான்கு நாட்கள் கோவை அழைத்துச் சென்று விசாரித்தார்கள். பாஷா கூறியது பொய் என்பதைத் தக்க ஆதாரத்துடன் நான் நிரூபித்தேன். இத னால் என்னை வழக்கில் அவர்கள் சேர்க்க முடியவில்லை. (எப்படி நிரூபித் தேன் என்பதை தேவைப்பட்டால் எழுதுவேன்)
நான்கு நாட்கள் விசாரணை நடத்திய அவர்கள் நான் பேசியதை அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினார்கள். அதில் கூடுதல் குறைவாக சில விபரங்களை எழுதியிருந்தார்கள். நான் அதில் கையெழுத்திட மறுத்து விட்டேன் நான் கையெழுத்துப் போட்டால்தான் அது என்னுடையதாகும். என் பெயரைப் பயன்படுத்தி அவர்களாக எழுதிக் கொண்டது என்னுடையதாகாது.
ஜோடிக்கப்பட்ட அந்த வாக்குமூல த்தை அந்த நேரத்தில் விடியல் வெள்ளி இயக்கத்தினர் பல பிரதிகள் எடுத்து நான் காட்டிக் கொடுத்ததாகப் பரப்பினார்கள். பாஷா என்பவர் (கோவை பாஷா அல்ல) இதைத் துண்டு பிரசுரமாகவும் வெளியிட்டார். இதற்காக அவர் மீது நானும் ஹைத ரும் வழக்குப் போட்டோம். பின்னர் அவரது முதுமை காரணமாக அந்த வழக்கைத் தொடரவில்லை.
இந்தச் சமயத்தில் இது குறித்து உணர்விலும் விளக்கினோம். நான் எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை. கூடு தல் குறைவாக போலீஸார் எழுதிக் கொண்டனர் என்றும் தெளிவுபடுத்தி னேன்.
அந்த விசாரணையின்போது எனது பிறப்பு முதல் இன்றுவரை உள்ள அனைத்தைப் பற்றியும் கேட்டார்கள்.
திருச்சியில் அபூ அப்துல்லா என்பவர் நஜாத் பெயரில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரச்சினை வந்தது. அதுவும் நஜாத் பத்திரிகையில் இருந்து விலகக் காரணமானது என்று தெரிவித்தேன்.
இதைக் காவல் துறை எழுதும்போது அபூ அப்துல்லா நஜாத் சொத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டார் என்று நான் கூறியதாக எழுதிக் கொண்டனர். சொத்து வாங்கியதில் பிரச்சினை வந்தது என்பதற்கும் அவர் பெயரில் எழுதிக் கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்ட அடிப்படையில் அப்படி எழுதிக் கொண்டனர்.
இதன் பின்னர் கோவை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று முறை விசாரணைக்கு அழைக்கப்பட் டேன். அந்த விசாரணயின்போது நான் எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை என்பதையும் நான் சொன்னதையும் சொல்லாததையும் போலீஸார் எழுதிக் கொண்டனர் என்பதையும் கோவை தடா நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். அப் போது வழக்கறிஞர் குறுக்கு விசாரணை யின்போது அபூ அப்துல்லா விஷயமாக நான் கூறியது பற்றி கேட்டார். சொத்து வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டது என்று கூறியது உண்மை. நஜாத்துக்கு வாங்கிய சொத்தை தன் பெயரில் எழுதிக் கொண் டார் என்று நான் வாக்கு மூலத்தில் கூறவில்லை என்று நீதிமன்றத்தில் கூறினேன். அது பதிவுசெய்யப்பட்டது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.
இது விஷயமாகத்தான் அபூ அப்துல்லா வழக்கு போட்டார். நஜாத் சொத்தை என் பெயரில் எழுதிக் கொண்ட தாக பீ.ஜே. கூறியுள்ளார். எனவே அவரை தண்டிக்க வேண்டும் என்பதுதான் அந்த  வழக்கு.
பீ.ஜே. கையெழுத்து போடவில்லை. தடா நீதிமன்றத்திலும் இதைக் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது பீ.ஜே. சொல்லாததைச் சொன்னதாக எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் இது பொய் வழக்கு என்று கூறி நீதிமன்றம் அவரது வழக் கைத் தள்ளுபடி செய்து விட்டது. அதாவது அவர் பொய்யர் என்பது இதன் கருத்து.
பொதுவாக கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு சத்தியப் பிரமானம் வாங்குவது வழக்கம்.
பீ.ஜே. நாளை குற்றவாளிக் கூண்டில் ஏறப்போகிறார் என்று நீதிமன்றத்தால் பொய்யர் என்று அறிவிக்கப்பட்ட அபூ அப்துல்லாவும் ஜாக் இயக்கத்தினரும் எஸ்.எம்.எஸ். பரப்பினார்கள். அவரது நோக்கம் குற்றவாளிக் கூண்டில் நான் நிற்க வேண்டும் என்பதுதான்.
அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்காத வகையில் எனக் குப் பேரருள் புரிந்துள்ளான். அதுபோல் இப்போதும் பேரருள் புரிந்தான். அன்று முழு நேர பவர் கட் என்று திருச்சி மின் வாரியம் அறிவித்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் வழக்கு நடத்த முடிய வில்லை. சிறிய வராந்தாவில்தான் வழக்கு நடந்தது. அங்கே குற்றவாளிக் கூண்டு வைக்க முடியாது. மேலும் சத்தியப் பிரமாணம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துத்தான் எடுக்க வேண்டும்.
கூண்டு இல்லாததால் சத்தியப் பிரமாணமும் எடுக்கப்படவில்லை. அபூ அப்துல்லா நின்ற அதே இடத்தில்தான் நானும் நிற்கும் அதிசயம் நடந்தது. இந்த அற்ப சந்தோஷத்தைக் கூட அல்லாஹ் அவருக்குக் கொடுக்கவில்லை.
உங்கள் வழக்கறிஞர் சொல்வதை பதிவு செய்யலாமா என்று மட்டும்தான் நீதிபதி கேட்டார். ஆம் என்றதும் அவரே வார்த்தைகளைச் சொல்ல ­ பதிவு செய்தார். அபூ அப்துல்லாவின் இந்த ஆசை கூட நிறைவேறவில்லை. தடா நீதிமன்றத்தில் நான் சொன்னதைத்தான் நீதிமன்றம் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் எத்தனை பொய்கள் அவர் சார்பில் சொல்லப்பட்டன என்பதை முழு விசாரணையையும் வாசிப்பவர்கள் உணர முடியும்.
நான் அபூ அப்துல்லாவை அப்பழுக்கு இல்லாதவர் என்று நீதிமன்றத்தில் கூறவில்லை. அவர் பரிசுத்தவான் என்றும் கூறவில்லை. சொத்து விஷயத்தில் பிரச்சினை இருந்தது என்று நான் கூறியிருக்கிறேன். நான் சொல்லாத ஒரு வார்த்தையைச் சொல்லவில்லை என்று கூறுவது கோழைத்தனமா?
என்னுடைய கையெழுத்து இல்லாமல் போலீஸ் எழுதிக் கொண்டதை நம்பி மூளையுள்ள எவராவது வழக்குப் போடுவார்களா? அதை இந்த அரை வேக்காடு வாந்தி எடுக்கலாமா?
நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்ட ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்து சொன்னதற்கும் கடுமையான பிரிவின் கீழ் வழக்கு போட முடியும். பொய் பெயரில் இந்த அரை வேக்காடு ஒளிந்து கொண்டிருந்தால் அதுவும் அப்போது அம்பலமாகும் என்று எச்சரிக்கிறேன். அபூ அப்துல்லாதான் பொய்யர் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதற்கு மாற்றமாக எழுதுவது கடும் குற்றம் என்பதைத் தெரிவிக்கிறேன்.(பார்க்க ஆன்லைன்பீஜே)

தமிழ் உலககத்தில் தவ்ஹீதின் எழுச்சிக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்த ஒரு பத்திரிகையை தரமற்றதாக ஆக்கியதன் காரணமாக அபூ அப்துல்லாஹ் என்பார் கிட்டத்தட்ட காணமல் போன ஒருவராகிவிட்டார். இதை நான் கற்பனையாக எழுதவில்லை.

ஒரு நாள் நான் ஒரு பயான் நிகழ்ச்சிக்காக  நண்பர் ரஸ்பியின் அழைப்பில் சிலாபம் சென்றிருந்தேன், அப்போது அங்கு குழுமியிருந்த ஜம்பதுக்கும் மேற்பட்ட பல தரப்பட்டவர்களிடம் ரஸ்மி ஒரு கேள்வியை முன்வைத்தார்.
உங்களில் அபூ அப்துல்லாஹ்வை தெறிந்தவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார்.
 யாரும் உயர்த்தவில்லை.
கமாலுத்தீன் மதனியைத் தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள் என்ற போது. ஒரு சில நபர்கள் உயர்த்தினர். அடுத்து பீஜேவைத் தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள் என்ற போது அனைத்துக் கைகளும் உயர்ந்தன.
பீஜேவுடைய ஆளுமை எந்தளவு மக்களிடம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதைப் புத்தியுள்ளவர்கலால் இங்கும் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் விரிவாக அறிந்து கொள்ள அந் நஜாத் பத்திரிகை பற்றி லுஹா அவர்கள் எழுதியவற்றை இங்கு தருகின்றோம்.

தமிழகத்தில் சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.
சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களை ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நேரிலும், தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.
''உங்கள் எழுத்தாற்றலை பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பீ. ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பீ.ஜே., சொன்னபோது ''மாதா மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதரஸாவை விட்டு வெளியேறி பத்திரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.
''எழுதுகின்ற பணியை மட்டும்தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத்துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே., திட்ட வட்டமாகக் கூறி விட்டார்.
அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நியமித்தனர்.
ஐ.ஏ.சி.யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே. யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.
இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஐ.ஏ.சி.,க்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே. நின்றார். ஆனாலும் அபூ அப்துல்லாஹ் நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக்கூடாது என்று பீ.ஜே. நஜாத் பத்திரிகையி­ருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்து அபூ அப்துல்லாஹ் அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார்.
அதே காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்தவர்கள் கூட்டாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. (பார்க்க தமிழகத்தில் தவ்ஹீத் வரலாறு ஆன்லைன்பீஜே)

 வரலாறு இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger