புற்றுநோய் "அலை": உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கடல் அலை போல
புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால்
இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24
மில்லியனாக உயரும்
என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.
உலகைப் பாதிக்கும்
புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன்
தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார
நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளது.





