Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-18



1993-07-14 புதன்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் அவரது தலைமையில் விவாதம் நடைபெற்றது. உமரலி தம் விவாதத்தில் 'யார் பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுகிறார்' என்று முஸ்லிமில் வரும் ஹதீஸையும் ஷஅஹ்மதில்  வரும் இதே கருத்துள்ள இன்னொரு ஹதீஸையும் முன் வைத்து  பைஅத் அவசியம்  எமது ஜமாஅத்தில் பைஅத் செய்யாத ஜைனுல் ஆப்தீன் உட்பட அனைவரும் காபிர்கள் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தார்.
0 comments

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-17



உமரலியுடன் விவாதம்
பீஜே அவர்கள் முதல் தடைவ இலங்கை வந்தபோது இலங்கையில் உமர் அலியின் பிரசாரம் சூடு பிடித்திருந்தது என்பதை முன்னைய தொடரில் கண்டோம்.
 பறகஹதெனியவில் மாநாட்டில் உரையாற்றிவிட்டு பீஜே அவர்கள் ஏத்தாளைப் பள்ளியிலும் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பள்ளியும் உமர் அலியின் பள்ளியும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. எந்த இடத்தில் உமர் அலியும் அவரது குழுவும் உள்ளதோ அந்த இடத்திலும் பீஜே உரையாற்ற வந்தார்.
0 comments

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-16




பீஜே கலந்து கொண்ட மாநாடு:
 பீஜே அவர்கள் அம்மாநாட்டில் மூன்று நாட்களும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்புறையாற்றினார்கள். மூன்றாம் நாள் இறுதி அமர்வில் பைஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில்  பைஅத் என்றால் என்ன? பைஅத் யாரிடம் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? ஒரு சிலர் நம்மைக் கஃபிர் என்று குருட்டுத் தனமாக உளருவதால் நாம் காஃபிராகிவிட மாட்டோம் என்பதை ஆணித்தரமாக அவர் தெளிவுபடுத்திய போது, மக்கள் மயக்கம் தெளிந்து, உண்மையை உணர்ந்தனர். இந்த உரையின் பின்னர்தான் அன்ஸாருஸ் சுன்னா கூட பெருமூச்சுவிட்டது.
0 comments

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-15



இலங்கை வருகையும் தஃவா கள நிலையும்
இலங்கையில் ஏகத்துவப் பரம்பலில் அறிஞர் பீஜேவுடைய பணி மகத்தானது.அவரது எழுத்தும் பேச்சும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இன்றும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் தவ்ஹீத் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுச்சி பெற்று வளர்ந்து வந்தது. இதற்கு துவக்க காலத்தில் முக்கிய பங்களிப்பாற்றிய அப்துல் ஹமீத்பக்ரி அவர்களின் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைப்பாடுதான் காரணமாக அமைந்தது.
0 comments

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர் 14



 அந் நஜாத் மாத இதழ்

ஏகத்துவ எழுச்சியின் துவக்க காலத்தில் வெளிவந்த அந் நஜாத் மாத இதழ் குறிப்பிடத்தக்கது. இதன் துவக்கத்தில் அறிஞர் பிஜே அவர்கள் இதன் பிரதம ஆசிரியராக இருந்தார்கள். அப்போது அவர் தீட்டிய ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் பெரும் பங்காற்றியது. இந்த இதழில் அபூ அப்துல்லாஹ் என்பவரும் இருந்தார்.
எனது தந்தை மதீனாவிலுள்ள ஜாமிஆ இஸ்லாமியாவில் கற்றுக் கொண்டிருக்கும் போது அந்நஜாத்தை அங்கிருந்து வாங்கி வருவார். எனது  சகோதரிகள் அவற்றை அதிகம் வாசிப்பார்கள். அதன் முதல் இதழ் தொடக்கம் பீஜே அதிலிருந்து விலகும் வரையுள்ள அனைத்து இதழ்களையும் எனது மூத்த சகோதரி அவர்கள் சேகரித்து வைத்திருந்தார்கள்.
0 comments
 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger