அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் தொடர்-6


எம்.ஏ.ஹபீழ் ஸலபி
 
சமகால சீர்திருத்தவாதி
றிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்துக்களையும் உரைகளையும் ஆழ்ந்து நோக்கும் போது, அறபு, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் அவ்வப்போது சில துறைகளில் மட்டும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முனைந்தவர்களையோ, அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, நபி வழியை விட்டு விலகி, கிலாபத் கனவு கண்ட இயக்கவாதிகளையோ அவர் பின்பற்றவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்களது பணியைக் குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கமல்ல. ஆனால், பீஜேவுடைய பணி பன்முகத் தன்மையுடையது என்பதை மறுக்க முனைபவர்களுக்கு  தக்க பதிலைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு மதம் பிடித்த மதனியும் இன்னும் சில சீழ் நிறைந்த காழ்ப்புணர்வாளர்களும் தொடர்ந்து தூற்றி வருகின்றனர்.ஏனெனில் இவர்களுடைய உப்புச் சப்பற்ற பேப்பர் வாசிக்கும் பயானை யாரும் கேட்பதில்லை.அதனால் ஆத்திரமடைந்த இவர்கள் ஆத்திரத்தை வக்கிரங்களாக வெளிப்படுத்துகின்றனர்.அவரது தர்ஜமாவை கொபி பண்ணிய ஒரு மதனியும் இன்னொருவரும் இரால் ஸ்டைலில் விமர்சித்திருந்தனர்.
இந்த விமர்சனங்கள் சிறந்த சமகால சீர்திருத்தவாதியாக இருக்கின்ற அறிஞர் பீஜே அவர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ஏன் காசுக்காக மாறடிக்கின்றவர்களிடம் கூட எந்த தாக்கத்தையும் விளைவிக்கவில்லை.மக்கள் இவர்களை விட்டும் தூரமாகி  சத்தியத்தின் பக்கம் அலை மோதுகின்ற காட்சியை உலகம் கண்டுகொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால அரசியல், பொருளியல், சமூக, சமயப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன் - ஹதீஸ் என்பன மட்டடும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முன்வைக்கும் காத்திரமான தீர்வை ஆழமான ஆய்வுத் தேடலினடியாய்க் கிட்டும் அதன் முடிவுகள் மூலம் தானாக முகம் கொடுக்கின்றார்.

  நவீன பிரச்சினைகளுக்குரிய பல்துறை சார்ந்த சிக்கல்களுக்கு அவர் நல்ல பல தீர்வுகளையும் தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். ஒரு புதிய பிரச்சினை தலை தூக்கும் போது, இது பற்றி பீஜே என்ன கருத்துச் சொல்லியுள்ளார் என்று அவரை எதிர்ப்பவர்கள் கூட ஆவலுடன் கூர்ந்து அவதாணிக்கும் நிலையை அவரது பத்வாக்கள் ஏற்படுத்தியுள்ளன.
உலக அதிசயங்களைப் பற்றி அதிசயத்தில் இருந்த போது, உலக அதிசயம் எது? என்று அவர் ஆற்றிய உரை  விழிப்புருவங்களையும் வியப்படைய வைத்தது.அவரை எதிர்ப்பவர்கள் கூட இவ்வுரையைக் கேட்டு விட்டு எப்படி அவரால் மட்டும் இவ்வாறு வித்தியாசமாக சிந்திக்க முடிகிறது என்று என்னிடம் வியந்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.
உலக அதிசயம் எது? என்ற உரை ரியாதிற்கு வரத் தாமதமானதும் எத்தனை பேர் அதை சீக்கிரம் அழைப்பித்துத் தாருங்கள் என்று ஜாலியாத் மவ்லவிமார் உட்பட பலர் பல முறை முறையிட்டதை நான் ரியாத் மண்டலத்தில் அவதானித்தேன்.  

   இந்நிகழ்வுகள் எல்லாம் அவரது சிந்தனைகளும் பத்வாக்களும் காத்திரமான சுதந்திர சிந்தனைப் பள்ளிக்கு உரிமை கோரக் கூடியனவாக இருக்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் புலப்படுத்துகின்றன. எனவே, பழைமைவாதிகளால் இதைப் பொறுத்துக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.அதனால், அவர்கள் பொறாமைப்பட ஆரம்பித்து, நிலை தடமாற்றத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.

  நவீன பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் இஸ்லாமிய மூலாதார  ஆழியில் ஆய்வினடியாய் அவர் எடுத்து வைக்கும் காத்திரமான தீர்வுகள், அல்குர்ஆன் - சுன்னா என்பனவற்றின் மீதுள்ள அவரின் உறுதியான நம்பிக்கையையும் விரிந்த புலமையையும் உறுதிப்படுத்துகின்றன.

 இஸ்லாத்தின் மீது வசைபாடுவோரின் மாற்று மதங்களின் உறுதியற்ற நிலை பற்றிய தெளிவான பார்வையும் அவருக்கு உண்டு. இதற்கு நிறைய ஆதாரங்களைத் தரமுடியும். இவை பற்றி பின்னர் விரிவாகப் பேசவுள்ளேன். இப்போது, ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட ஆசைப்படுகின்றேன்.
 சில வருடங்களுக்கு முன்னர் 'வுhந டீiடிடந யனெ ஞரசயn' எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியட்டது. அதில,'பைபிளும் - அல் குர்ஆனும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன. இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இவ்வாறு இரண்டிற்கும் ஒற்றுமை இருக்க மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்?' என்று 'நியூஸ் வீக்' இதழில் அல்குர்ஆனையும் - பைபிளையும் ஒப்பிட்டு சில தவறான கேள்விகளை எழுப்பி ஒரு கட்டுரையை வெளிளிட்டது.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம். புடித்துவிட்டு பீஜேவுடைய பதிலைப் படித்துப்பாருங்கள்.
'பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக் அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள்தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆகஇ கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி. ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் – ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத்தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை.அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பதுதான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் குரானை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்ற கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.'
மேற்கண்ட 'நியூஸ் வீக்' இதழின் தவறான கருத்துப் பற்றி அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீனிடம் கல்கி வார இதழ் நிருபர் சித்தார்த் பேட்டி எடுத்தார். இது மத ரீதியான போராட்டம் அல்ல! 'பைபிளும் - அல் குர்ஆனும் அடிப்படையில் ஒன்றல்ல என்பதை அவர் ஆணித்தரமாக நிறுவினார்.
'பைபிளிலும், திருக்குரானிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு.
             கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது.
             கிறித்துவம் பிதா - சுதன் - பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
             மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
             எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
             பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் ஊழகெநளளழைn செய்வதன் மூலம் பாவ நிவர்த்தி அடையளாம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால், இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
பைபிளிலும், குரானிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லர்hட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (குரானில் தாவூத்) லோத்து (குரானில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. குரான் இதை மறுக்கிறது.
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள்தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல் அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே! எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை; அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக  குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் - அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் 'வெட்டுங்கள்; கொல்லுங்கள்' என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக்கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190-191)
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.கல்கி (03.03.2002)
வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்...

 

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger